சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர் கட்டுரை.. பாகம் 41)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே -  பாரதியார்.. முன்னொரு காலத்தில் அந்நியர்கள் இலங்கைத் தீவில் கால் பதிக்கும் முன்னே சிங்களவர் தமிழர் என்ற பாகு பாடில்லாமல் ஒன்று பட்டு ஒரு தாய் மக்களாய் சகோதர உணர்வுடன் வாழ்ந்த நம் சமுதாயத்தை நம் நாட்டின் வளங்களை கொள்ளையிட வந்த பிரிதானியர்கள் நம்மை முரண்டுபட வைத்து நம்மை இரண்டாக்கி நம் நாட்டை பிரித்தாண்டு அனுபவித்து விட்டுப் போனார்கள். அந்தக் கொடுமைகளின் விளைவாக மீண்டும் ஒன்றுபட்ட நாம் அவர்கள் ஆட்சிக்கு எதிராக திரண்டெழுந்து நம் தேச விடுதலைப் போராட்டத்தினால் அவர்களை நம் தாய் நாட்டை விட்டுத் துரத்தியடித்தோம். அந்த வீர சுதந்திரத்தை எங்கள் மண்ணில் முழுமையாக வாழ்ந்து அனுபவிக்கு முன்னே தங்கள் சுய நலத்திற்காக ஒரு தாய் மக்களாகிய எங்களை மீண்டும் இனபேத அடிப்படையில் முரண்டுபட வைத்து கூறுபோட்டு எங்களை ஆண்டு அனுபவிக்க எத்தனிக்கும் சுயநலம் கொண்ட இனவாத அரசியல் சூதாட்டக்காரர்களை தூக்கியெறிந்து விட்டு மீண்டும் சகோதரர்களாய் நாம் ஒன்றிணைந்து நம் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது… தமிழர்களாகிய நாம் அர்த்தமில்லாத கோரிக்கைகளை நமது அரசாங்கத்திடம் முன் வைக்கு முன் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வடக்கே தமிழர் பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிக்க முற்படுகிறார்கள் என்று கூறுமுன் தெற்கே சிங்களவர்கள் பூமியை ஆக்கிரமித்து வீடு வாசல் வசதிகளுடன் வாழும் தமிழர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வடக்கில் உள்ள புத்த விகாரைகளை எண்ணிக் கணக்கெடுக்கு முன் தெற்கில் மூலை முடுக்குகளில் நிறைந்திருக்கும் இந்துக் கோயில்களை எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும் அதன் பின் புத்த விகாரைகளைப் பற்றி நாம் பேச வேண்டும் . கொழும்பு நகரத்தில் வசிப்பவர்களில் ஐம்பது சத வீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழர்கள்தான் என்பது வெளிப்படை ஆகவே முதலில் அதை அறிந்து கொண்டு பின்னர் எத்தனை சத வீதமான சிங்களவர்கள் யாழ்ப்பாண நகரத்தில் வீடு வாசல்களுடன் வசிக்கிறார்கள் என்னும் புள்ளி விபரத்தை சேகரிக்க வேண்டும். அதை விடுத்து குதர்கவாதம் பேசுவதில் அர்தமில்லை. தமிழர்கள் இலங்கையில் எங்கும் வாழ உரிமை உண்டு என்றால் சிங்களவர்களுக்கும் இலங்கையில் எங்கும் வாழ உரிமையில்லையா? தமிழர்களின் தாயக பூமியாகிய வட பகுதியில் கால் பதிக்க சிங்களவனுக்கு உரிமையில்லை என்று எண்ணுபவர்கள் இலங்கையின் கடந்தகால சரித்திரத்தை சற்று ஆராய்ந்து பார்த்தார்களேயானால் சிங்கள மன்னன் ஒருவனால் யாழ்ப்பாணம் இராச்சியம் அரசாளப் பட்டபோது தமிழர்கள் எப்படி மகிழ்சியாக வாழ்ந்தார்கள் என்றும் அதே சமயத்தில் ஒரு தமிழ் அரசனால் யாழ்ப்பாண இராச்சியம் அரசாளப் பட்டபோது அவர்கள் எப்படிப் பட்ட கொடுமைகளை அனுபவித்தார்கள் என்றும் தெரியவரும்.. இலங்கையில் பிரித்தானியர் காலூன்றி அதை தங்களுக்கு அடிமைப் படுத்தி தமிழ் சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் காலம் வரையிலும் நமது இலங்கைத் திரு நாட்டில் இனபேதமற்ற ஒரு சூழ்நிலை நிலவியது உண்மை மேலும் தமிழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாண இராச்சியத்தில் ஒரு சிங்கள மன்னனை ஆட்சி செய்ய அனுமதிக்கும் மனபான்மையும் நமது தமிழ் இனத்திற்கு அன்று இருந்தது… அதேபோல சிங்களவர்கள் செறிந்து வாழ்ந்த கண்டி இராச்சியத்தில் ஒரு தமிழ் மன்னனை அரசனாக ஆட்சி செய்ய அனுமதிக்கும் மனப்பான்மையும் சிங்கள மக்களுக்கு அன்று இருந்தது. . இதற்குரிய காரணம் நாங்கள் தமிழர்கள் என்றும் நாங்கள் சிங்களவர்கள் என்றும் எண்ணும் இனபேத மனப்பான்மை அன்று வாழ்ந்த இலங்கை மக்களிடம் இருந்ததில்லை மாறாக இது எங்கள் தேசம் நாங்கள் அனைவரும் சகோதரர்களே என்ற எண்ணம் மட்டும்தான் அவர்கள் மனதில் குடியிருந்தது. அதேபோல அவர்களை ஆட்சி செய்த மன்னர்களும் தங்கள் இனத்திற்காக மட்டுமே தாங்கள் செயல்பட வேண்டும் என்ற பாராபட்ச மனப்பான்மை இல்லாதவர்களாகவே ஆட்சி செலுத்தி வந்தார்கள் என்பதற்கும் இலங்கைச் சரித்திரத்தில் ஆதாரங்கள் உள்ளன… பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தெற்கில் கோட்டே இராஜதானியின் மன்னனான ஆறாம் பராக்கிரமபாகுவின் வழர்ப்பு மகனான ஆறாம் புவனேகபாகு என்னும் சிங்கள மன்னன் கி.பி 1447 ற்கும் 1450 ற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றி சுமார் 17 ஆண்டுகள் வரையில் நல்லூரை பிரதானியாக்கி வட பகுதியை ஆட்சி செய்தான். இவன் யாழ்பாணத் தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு மன்னனாவான். அவர்கள் தன்னை நேசிப்பதுபோல் தானும் அவர்களை நேசிக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் மனங்களை வெல்வதற்காகவே தனது சிங்களப் பெயராகிய சம்புவா என்பதை “செண்பகப் பெருமாள்” என்று மாற்றியமைத்தவன் அவன். இவனது ஆட்சிக் காலத்தில்தான் இந்துக்களின் வழிபாட்டிற்காக நல்லூர் கந்தசுவாமி கோயிலை இவன் கட்டிக் கொடுத்தான் என்று சரித்திரம் கூறுகிறது. 16ம் 17ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட கைலாய மாலையில் இறுதிச் செய்யுள் இப்படிக் கூறுகிறது … “லக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை யலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே” மேலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள கீழ்வரும் கட்டிய வரிகளும் இதை ஊர்ஜிதம் செய்கிறது.. “சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா”‘. தமிழில் இதன் அர்த்தம்… கீர்த்தியுள்ள தெய்வானையுடனும் வள்ளியுடனும் சமேதரராய் சேர்ந்திருக்கும் முருகனின் திருப் பாதங்களை பணிந்து கொள்பவரும்இ இ மன்னர்களுக்கு மன்னரும் மிகுந்த செல்வங்களுடையவரும் இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவரும் மக்கள் தலைவனும் பதினாறு பெருந்தானங்களைச் செய்பவரும்இ சூரிய குலத்தில் உதித்தவருமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு வாழ்த்தப் படுவராகும்.. செண்பகப் பாண்டியனென்னும் ஆறாம் புவனேகபாகு தமிழர்களை அரசாண்ட அந்தப் 17 வருட காலப் பகுதியில் தமிழர்களுக்காக தனது பெயரை மாற்றியமைத்ததோடல்லாமல் தான் கட்டிக் கொடுத்த நல்லூர் முருகன் ஆலயத்தில் அவனும் இந்து மத வழிபாடுகளில் பங்குபற்றியது மட்டுமின்றி இந்துக்களின் தான தர்ம சடங்குகளையும் அவன் பின் பற்றினான் என்பதற்கு இந்தக் கட்டியம் ஒரு சிறந்த சாட்சியமாகும். பௌத்த மதத்தில் நம்பிக்கையுள்ள ஒருவனாக அவன் இருந்த போதிலும் தன் பிரஜைகளின் மகிழ்ச்சிக்காக அவர்கள் வழிபாடுகளையும் அவன் பின் பற்றினான் என்பது அவன் பரந்த மனப்பான்மையையும் பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. மேலும் இவனது அரசாங்கத்தில் மந்திரிகளாக இருந்தவர்கள் பெரும்பாலானாவர்கள் தமிழர்களே. தமிழ் மக்கள் போற்றிப் புகழும் ஒருவனாக அவன் இருந்ததற்கு தமிழ் மொழியை பேசக் கூடிய ஒருவனாகவும் அவன் இருந்திருக்க வேண்டும்…. பின்னர் இந்தச் சிறந்த மன்னன் கோட்டேயிலுள்ள தனது வழர்ப்புத் தந்தையாகிய ஆறாம் பராக்கிரமபாகுவின் மரணத்தின்பின் அவனது வழர்ப்புத் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாண இராச்சியத்தை தமிழர்களிடம் ஒப்படைத்து விட்டு தெற்கு நோக்கி மீண்டும் சென்று விட்டான் அவன். தமிழர்கள் வாழ்ந்த யாழ்ப்பாண இராச்சியத்தில் சிறிது காலமே தோன்றி மறையும் ஒரு விடி வெள்ளியைப் போல் 17 வருடங்கள் கறைபடியாத ஆட்சி நடத்தி மக்கள் மனதிலும் இலங்கைச் சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டு விடை பெற்றுச் சென்றான் அந்த மன்னன்… அதேபோல கி.பி. 1798 ம் ஆண்டு தனது 18 வயதில் கண்டி இராச்சியத்தின் அரசனாக முடி சூடப்பட்டு அரியணையேறிய சிறீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் தமிழ் மன்னன்தான் இலங்கையின் கடைசி மன்னனாவான். (இலங்கையின் தற்போதய தேசிக் கொடியை உருவாக்கியதுகூட இவன்தான் போன்ற விபரங்களுடன் இவனது தேசப் பற்று வீரம் போன்றவற்றை சித்தரிக்கும் எனது 17 வது பாகம் அதிரடியின் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது..) இவனது அரசாங்கத்தில் இடம் பெற்ற சேனாதிபதிகள் மந்திரிகள் போன்ற பலர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மேலும் இவன் கண்டியிலுள்ள தலதா மாளிகையைப் புதிப்பித்துக் கொடுத்தான். பௌத்த மதத்தவர்களுக்காக குகைச் சித்திரத்திரங்களை வடித்ததோடல்லாமல் பல புத்த விகாரைகளையும் அவர்கள் வழிபாடுகளுக்காகக் கட்டிக் கொடுத்தான். இவன் இந்து மதத்தை பின்பற்றுபவனாக இருந்த போதிலும் தன் பிரஜைகளின் மகிழ்சிக்காக அவர்கள் பௌத்த வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் இவன் தயங்கியதில்லை. இவன் வசித்த இல்லம்கூட தலதா மாளிகைக்கு மிக அருகிலேயே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவனது இந்த பரந்த மனப்பான்மையால் சிங்கள மக்களின் பெருமதிப்பையும் பெற்றிருந்தான்.. அப்படி அவர்களுடன் உறவாடும் ஒருவனாக இவன் இருப்பதானால் அவர்களுடன் உரையாடும் ஒருவனாகவும் இவன் இருந்திருக்க வேண்டும். அதற்காக இவன் சிங்கள மொழியை கற்று அதில் தேர்ச்சியும் அடைந்திருக்கலாம்… இப்படி தமிழர்களை ஒரு சிங்கள அரசனும் சிங்களவர்களை ஒரு தமிழ் அரசனும் நீதி வழுவாது ஆட்சி புரிந்த அதே சரித்திர காலப் பகுதியில் வடக்கே தமிழர்களை ஒரு தமிழ் அரசன் அரசாண்டு மக்கள் வதைபட்ட கதையும் சரித்திரத்தில் பதியப்பட்டுத்தான் இருக்கிறது… கி.பி. 1519 ம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தில் நல்லூரை பிரதானியாக்கி அரசாண்ட செகராசசிங்கன் என்ற மன்னன்தான் சங்கிலியன். இவன் அன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களால் வெறுக்கப்பட ஒருவன். கி.பி. 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை அரசாண்ட கனகசூரிய சிங்கையாரியனின் மகனாவான். இவனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களை புறந் தள்ளி அரசை முறையற்ற விதத்தில் இவன் கைப்பற்றினான் என்றும் சரித்திரம் கூறுகிறது. இவனது காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிக் கொடுமை கொடூரமாகத் தலை விரித்தாடியது. உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் முன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தோளில் துண்டு போடக் கூடாது வீதிகளில் உயர் சாதியினர் வரும்போது அவர்கள் வழிவிட்டு தலை வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டும் அவர்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கப்படக் கூடாது என்று இப்படி எத்தனையோ மனித உரிமைகளை தகர்தெறியும் சட்ட திட்டங்கள். இவைகள் எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட எவருமே எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் அனுமதிக்கப் பட்டதில்லை. உயர் சாதியினரின் பக்க சார்பாயிருந்த சங்கிலியன் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டதில் சிறிதளவும் ஆச்சரியமில்லை… இந்தக் காலகட்டத்தில் ஏற்கெனவே கி.பி. 1505 ம் ஆண்டில் இலங்கையின் மன்னார் பகுதியில் கால் பதித்திருந்த போத்துக்கேயருடன் வந்திருந்த கிறிஸ்தவ பாதிரிகள் இந்தச் சாதிக் கொடுமைக்கு பலியான இந்த பாவப்பட்ட சனங்களை கண்டு கொண்டனர். அவர்களுக்கு கிறிஸ்தவத்தின் சாதி பேதமற்ற கொள்கைகளை எடுத்துக் கூறி அவர்களும் கடவுளின் பிள்ளைகள்தான் என்றும் அவர்கள் அனைவரும் இறைவன் முன்னிலையில் சமமே என்றும் பிரசங்கம் செய்தார்கள். கொதித்துப் போயிருந்த அவர்கள் உள்ளங்களில் றோஜாக்களின் பன்னீர் துளிகளின் இதமாக இருந்திருக்க வேண்டும் அந்த வார்த்தைகள். அத்துடன் வெறும் வார்த்தைகளால் மட்டும் நின்று விடாது அவர்களை தங்களுக்கு சமமாக்கி தேவாலத்தில் தங்களுடன் சமமாக உட்காரச் செய்வதும் திருப்பலி பூசைகளில் ஒரே கிண்ணத்தில் அவர்களுடன் திராட்சை ரசம் பருகுவதும் மேலும் அவர்களுடைய வீடுகளுக்கு விஜயம் செய்து அவர்ககளின் சுக துக்கங்களில் பங்கு கொள்வது அவர்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவது என்று அவர்களை தங்களுக்கு நிகராக்கினார்கள் போத்துக்கேயர். அட நமது மொழியைப் பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த தடித்த தோலுடைய தமிழன் நம்மை கேவலப்படுத்தி அலட்சியப்படுத்தும் போது வெள்ளை தோல் மனிதர்கள் நம்மீது அன்பைப் பொழிகிறார்களே என்று அவர்களில் பலர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார். வேகமாக கத்தோலிக்க மதம் பரவத் தொடங்கியது. இதையறிந்த சங்கிலி மன்னன் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று விட்டான். உடனே தன் படையைத் திரட்டிக் கொண்டு மன்னாருக்கு விரைந்தான். அது 1954 ம் ஆண்டின் நடுபகுதியில் ஒரு நாள் மன்னார் தோட்டவெளிக் கிராமத்தில் காலை வேளையில் அந்த தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இந்த மக்கள். திபு திபு என்று சங்கிலி மன்னனின் தலைமையில் அங்கு நுழைந்த அவன் படை வீரர்களின் வாள்கள் துரிதமாக செயல் படத் தொடங்கின போத்துக்கேயருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருமே அந்த இறைவன் சந்நிதியில் கண்டதுண்டமாக வெட்டியெறியப்பட்டனர். இந்த நிகழ்வின்போது அங்கே திருப்பலி பூசை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்த போத்துக்கேய பாதிரியார் உட்பட பல போத்துக்கேய கிறிஸ்தவர்களும் பலியானார்கள் என்பது கூடுதல் கொடூரமாகும். அத்துடன் அடங்கிவிடவில்லை அந்த கொடூர மன்னனின் கொலை வெறி. தேவாலயத்தில் இருந்து வெளியேறி தோட்ட வெளிக் கிராமத்தில் நுழைந்தது அவன் படை அங்கே வீடுகளில் புகுந்து குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் துடிக்கத் துடிக்க கண்ட துண்டமாக வெட்டியெறியப் பட்டார்கள். மொத்தமாக பத்தாயிரம் பேர்வரையில் அன்று சங்கிலியனின் கொலை வெறிக்குப் பலியானார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.. மன்னார் நிர்வாகத்திற்காக சங்கிலியனால் நியமிக்கப் பட்டிருந்த இளஞ்சிங்கன் என்ற மனிதாபமுள்ள நிர்வாகி இந்த பாவப்பட்ட மனிதர்கள் இப்படியாவது மகிழ்சியாக இருந்து விட்டுப் போகட்டுமே என்று இந்த மத மாற்றத்தை கண்டும் காணாதவர்போல் இருந்தார். இதையும் யாரோ சங்கிலியனுக்கு போட்டுக் கொடுத்ததன் விளைவாக அந்த மனிதரும் சிரச்சேதம் செய்யப்பட்டார் இன்றுவரை இந்தப் படு கொலைகளுக்குச் சாட்சியாக “வேத சாட்சிகளின் தேவாலயம்” என்னும் பெயரால் போத்துக்கேயரால் கட்டப்பட்ட கிறிஸ்தவ கோயில் மன்னாருக்கும் பேசாலைக்கும் இடைப்பட்ட கிராமமாகிய தோட்டவெளியில் ஒரு துயரத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது. சங்கிலியனின் இந்தக் கொலைகளை தொடர்ந்து சங்கிலித் தொடராக பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. அவனுடைய மூத்த சகோதரனாகிய பரநிரூபசிங்கனும் சங்கிலியின் மகனும் சங்கிலியுடன் வெறுப்புற்று கிறிஸ்தவ மதத்தை விரும்பித் தழுவியதாகவும் பின்னர் தனது மகனை சங்கிலி சிரச்சேதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சங்கிலியனின் இளைய மகனும் சகோதரியின் மகனும்கூட மதம்மாறி கிறிஸ்தவம் யாழ்மண்ணில் பரவுவதற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது… இவன் ஆட்சிக் காலத்தில் எந்த சிங்கள மன்னனுக்கும் எதிராக போர் தொடுத்ததாக வரலாற்றில் இல்லை மாறாக தென்னிலங்கை அரசுகளில் ஒன்றான சீதாவாக்கை அரசனான மாயாதுன்னைக்கு 1564 ஆம் ஆண்டில் சங்கிலி படை உதவி செய்ததாக சரித்திரம் கூறுகிறது.. அக்கிரமம் என்றுமே நிலை நின்றதில்லை. சங்கிலியன் தனது மக்களாலும் உறவினர்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு போத்துக்கேயரால் கைது செய்யப்பட்டு இந்தியாவின் கோவா மானிலத்திற்கு கைதியாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தூக்கிலிப்பட்டான் என்று சரித்திரம் கூறுகிறது. அவன் கைது செய்யப் படுவதற்கு முன் அவன் சந்தேகித்த சில சேனாதிபதிகளை கோப்பாயில் வைத்து சிரச் சேதமும் செய்தான். மேலும் அவனை வெறுத்து கிறிஸ்தவ மதத்தை தழுவிய அவனது மகள் போத்துக்கேயரால் அவர்கள் தேசமாகிய போத்துக்கலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே பெயர் மாற்றமும் செய்யப்பட்டு அவர்கள் ராஜ பரம்பரையில் ஒரு இளவரசனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள் என்று இன்னொரு பதிவேடு கூறுகிறது. கி.பி 1565 ல் சங்கிலியின் ஆட்சி அஸ்தமித்தது.. மெதுவாக உதித்து பின்னர் பலமாக சுட்டெரிக்கும் சூரியன் முடிவில் அஸ்தமன இருளில் மறைந்துதான் போக வேண்டும் என்பது நீதி தேவனின் நியதியோ!…. (தொடரும்) . -சித்திரெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர் கட்டுரை.. பாகம் 41)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. -சித்திரெஜினா (தொடர்கட்டுரை பாகம் -40)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

அன்று அந்த அரசனின் அரண்மனை அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. மந்திரிகள் முதற் கொண்டு அங்குள்ள எடுபிடிகள் வரை மன்னனின் ஒரே வாரிசான அந்த மூன்று வயதுக் குழந்தையின் அழுகையை நிறுத்தி எப்படி சமாதானப்படுத்துவது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள்… அண்டை நாட்டு மன்னனின் மகளை திருமணம் முடித்து பல வருடங்கள் கழித்து தவமிருந்து பெற்ற தன் ஒரே வாரிசை எக் காரணம் கொண்டும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அங்கேயுள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று அந்த மன்னன் திட்டமாக கட்டளை இட்டிருந்தான்… ஆனால் இன்று அதன் அழுகையை நிறுத்த அவன் அரண்மனையில் ஒருவராலும் முடியவில்லை என்பதை அறிந்த மன்னன் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று விட்டான்… என்ன நடக்குமோ.. ஏது நடக்குமோ.. என்று அஞ்சி நடுநடுங்கிப் போனார்கள் அனைவரும்…. அந்த மூன்று வயதுக் குழந்தையின் அழுகைக்குக் காரணம் வழமை போலவே அந்தக் குழந்தைக்கு அதன் செவிலித் தாயார் வண்ண நிலாக் காட்டி பால் சோறூட்டிக் கொண்டிருக்கும்போது வானத்தில் தெரியும் அந்த வட்ட நிலவைப் பிடித்து தன் கையில் தா என்று திடீரென்று அடம்பிடித்து அழுதது அது… முடிகிற காரியமா இது? எனவேதான் அன்று அனைவருமே திக்குமுக்காடிப் போனார்கள்…ஆனால் ஒரு புத்திசாலி மந்திரியின் சிந்தனையில் திடீரென்று ஒரு பொறி தட்டியது.. பரபரவென்று அரண்மனை நிலா முற்றத்திற்கு விரைந்தார் அவர்… ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை உடனே கொண்டு வரும்படி அங்கிருந்த வேலையாட்களுக்கு கட்டளையிட்டார்… கண்ணாடியும் வந்தது.. குழந்தையின் கையில் கொடுத்தார் அதை.. அதுவும் குனிந்து கண்ணாடியில் பார்த்தது .. என்ன ஆச்சரியம்!.. வானத்து வண்ண நிலா தன் கையிலிருந்து கண் சிமிட்டிச் கொண்டிருந்ததைப் பார்த்து கெக்கலித்து சிரித்தது அந்தக் குழந்தை. மகிழ்ந்துபோன மன்னனோ அந்த புத்திசாலி மந்திரிக்கு பல பரிசில்கள் கொடுத்து பதவி உயர்வும் கொடுத்தான்… அன்றும் இப்படித்தான் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த புலம் பெயர்ந்த மக்களுக்கு வெகு தூரத்திற்கு அப்பால் உள்ள இலங்கைத் தீவின் வன்னி நிலப் பரப்பில் பிரபாகரன் என்ற புலிகளின் அரசனின் நிழல் ஆட்சியில் நடந்து கொண்டிருந்த தமிழ் ஈழம் என்ற நிலவை காட்டி களிப்பூட்டி தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்டிருந்தது புத்திசாலிப் புலிப் பினாமிகளின் கூட்டமொன்று… இலங்கையில் வடக்கென்றும் தெற்கென்றும் இல்லாமல் தினம் திக்கெட்டிலுமிருந்து வெளியாகும் திக்கென்ற செய்திகள்.. புலிகளின் மனிதக் குண்டுகளின் மாயாஜாலத்தால் வெடித்துச் சிதறிக் கிடக்கும் பிணக் குவியல்கள்.. பொது இடங்களென்றும் பள்ளிக்கூட பஸ்களென்றும் புகை வண்டிகளென்றும் பொது இடங்களென்றும் பகிரங்கத் தெருக்களென்றும் எங்கும் எதிலும் பராபட்சம் பாராது தங்கள் கைவரிசையக் காட்டி அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தனர் அந்த மனித நேயமற்ற விடுகாலிப் புலிகளின்… இதில் பிஸ்டல் குழுவேறு தெருவில் பேப்பர் விற்கும் சிறுவன் முதல் அப்பாவிக் குடும்பஸ்தர்வரை தங்கள் பங்கிற்கு புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்… இவைகள் எல்லாம் ஏன்? எதற்காக? புலிகளின் பிரச்சாரங்களால் இன வெறியேற்றப்பட்டு இரத்த வெறியூட்டப்பட்ட இந்தப் புலம் பெயர்ந்த புலிப் பித்தம் பிடித்தவர்களை களிப்பூட்டுவதற்காக.. காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் தங்கள் வீட்டு சோபாவில் சாய்ந்தபடி புலிகளின் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் அந்தக் கிலிக் காட்சிகளை பார்த்துக் கொண்டோ அல்லது புலிகளின் வானொலிகளில் கொலைச் செய்திகளை கேட்டுக் கொண்டேதான் அவர்களால் தங்கள் மாலை உணவை ரசித்துப் புசிக்க முடிந்தது.. நாள் முழுவதும் வேலை செய்த களைப்பையும் அவர்களால் தீர்க்க முடிந்தது… இரத்தக் களரிகளை ரசிப்பதென்பது ஒரு கொடுமையான மனோ வியாதி என்பதை அறியாமலேயே அவர்கள் இந்த கொடூரமான காட்சிகளுக்கும் செய்திகளுக்கும் அடிமையாகிப் போனார்கள். . ஆம் இவைகள்தான் அவர்கள் மாலை உணவை மகிழ்விக்கும் வண்ண நிலா..இவைகள்தான் அவர்கள் அறிய விரும்பும் தமிழ் ஈழ செய்திகள்.. இந்தக் காட்சிகளுக்கும் செய்திகளுக்காகவும் தான் மாதா மாதம் தங்கள் சம்பளத்தில் ஒரு விழுக்காடை கட்டணமாக செலுத்தி வந்தனர் அவர்கள். தேச விடுதலைக்கான நிதி என்ற பெயரில் அவர்கள் கொடுக்கும் இந்த நிதிக்கு வஞ்சகம் செய்யாமல் புலிகளும் தங்கள் பங்கிற்கு தினம் தினம் கொலைக் காட்சிகளை இலங்கைத் தீவென்னும் மேடையில் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்… உலகில் உயிரினங்கள் தோன்றிய காலப் பகுதியில் அவைகள் மாமிச பட்சணிகள் தாவர பட்சணிகள் என்று இரண்டாக வகுக்கப்பட்டன. இதில் தாவர பட்சணிகளாக மாடு மான் மரை யானை என்பவைகள் அடங்கும் மேலும் இவைகள் இயற்கையிலேயே சாந்த குணமுடையவைகள். அவைகளுக்கு தங்கள் உணவை தேடியலைந்து வேட்டையாடி உண்ண வேண்டிய அவசியமும் இருந்ததில்லை. ஆனால் மாமிச பட்சணிகளில் வரிசையில் அடங்கும் சிங்கம் புலி ஒனாய் மனிதன் போன்றவைகள் குரூர குணமுள்ளவைகளாகவும் தங்கள் உணவை தேடியலைந்து அவைகளை வேட்டையாடி உண்ண வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அவைகள் இருந்தன.. ஆம்…விலங்கியல் கூற்றுப்படி மனிதனும் ஒரு மிருகம்தான் மேலும் அவன் இந்த மாமிச பட்சணிகளின் வரிசையில்தான் அடங்குகிறான். அதனால்தான் ஆதி மனிதன் தன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி வந்தான் என்று உயிரின வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையின் நியதிப்படி உயிரினங்களுக்கு தங்களுடைய உணவு இதுதான் என்பதை நிர்ணயிக்க அவைகள் தோன்றிய காலங்களில் அவற்றின் இன்ஸ்ரிங்ட் என்று கூறப்படும் உள்ளுணர்வுதான் அவைகளுக்கு உதவியது. இதன் அடிப்படையிலேயே அவைகள் தங்கள் உணவையும் தெரிவு செய்து கொண்டன. மனிதன் உட்பட வேட்டையாடிப் புசிக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பசி ஏற்படும்போது கூடவே இரத்த வெறியும் ஏற்பட்டு விடுகிறது. இந்த இரத்த வெறியின் உந்துதால்தான் தன்னுடைய வேகத்திற்கு நிகராக ஓடும் ஒரு மிருகத்தைக்கூட அவைகளால் வீழ்த்த முடிகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.. மேலும் அவைகள் தங்கள் உணவாக தெரிந்தெடுத்த மிருகங்கள் யாவுமே சாதுவான தாவர பட்சணிகளே. ஆதி காலத்தில் மிருகங்களுடன் மிருகங்களாக வாழ்ந்த மனிதன் மற்றைய எந்த ஜீவராசிகளுக்கும் இல்லாத ஆறறிவாகிய தன்னுடைய பகுத்தறிவினூடாக படிப்படியாக முன்னேறி மிருகங்களில் இருந்து பிரிந்து இன்றைய நாகரீகமடைந்த மனித சமுதாயமாக மாற்றமடைந்தான்…எனினும் மிருகங்களுடன் மிருகமாக அவன் வாழ்ந்தபோது அவனுள் இருந்த சில உணர்வுகள் அவனது மரபணுக்கள் மூலமாக இன்றைய சமுதாயம்வரை தொடரத்தான் செய்தன…ஆனால் அவற்றை தன் மன உறுதியாலும் சமூகக் கட்டுப்பாடுகள் மூலமும் அவன் அடக்கியாண்டு வந்திருக்கிறான் என்பது உண்மையாகும்.. எப்படித்தான் அவன் தனக்குள் பதிந்திருக்கும் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் அவனுக்குள் ஆதி முதற் கொண்டு பதிந்துபோன் இரத்த வெறி உணர்வு மட்டும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் தலை காட்டத்தான் செய்தது. உதாரணமாக வீதி விபத்தொன்றில் அலங்கோலமாக சிதறுண்டு இரத்த வெள்ளத்தில் ஒரு மனிதன் இறந்து கிடந்தால் அந்தக் கோரக் காட்சியைப் பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஒரு கூட்டம் அந்த இடத்தில் கூடி விடும். ஏன் இன்றைய திரைப்படங்களில் கூட கோரக் கொலைகளுடன் கூடிய வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப் படங்களுக்குத் தான் மவுசு அதிகம். அவைகள் தான் போட்டி போட்டுக் கொண்டு பல நாட்கள் திரையரங்குகளில் ஓடுகின்றன. இதற்குரிய காரணம் மனிதனுக்குள் புதைந்திருக்கும் இரத்த வெறி இரத்த தாகம் போன்றவைகள் இந்தக் கோரக் காட்சிகளால் கிளர்சியடைந்து அவனை களிப்பூட்ட எத்தனிக்கிறது என்று மனோ தத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். மனிதனின் வன்முறை உணர்வுகளுக்கு தங்கள் திரைப்படங்கள் மூலம் தீனி போட்டு பல கோடிகளை அள்ளிக் கட்டுகிறார்கள் அவைகளின் தயாரிப்பாளர்கள். தற்போது பல மனித நேய அமைப்புகள் இப்படிப்பட்ட திரைப்படங்கள் மனித உணர்வுகளை பாதிப்பதால் அவைகளைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன… இந்த சூழலில் தன் உணவிற்காகக்கூட பிறிதொரு உயிரினத்தை கொல்வது பாவம் என்று எண்ணத் தலைப்பட்ட மனத குலத்தின் ஒரு பிரிவினரும் இருக்கிறார்கள் அவர்கள் அவர்கள் மாமிச உணவைத் தவிர்த்து மரக்கறிவகைகளை தங்கள் பிரதான உணவாக தேர்ந்தெடுத்தனர். ஏன் திருவள்ளுவர்கூட “கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும்” என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்.. மனிதனுக்குள் புதைந்திருக்கும் இந்த வன்முறை உணர்வுகளைப் பற்றி எவர் சரியாகப் புரிந்து கொண்டார்களோ இல்லையோ பிரபாகரன் கோஸ்டியினர் அதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அதையே பயன்படுத்தி வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்து விட்டுப் போனார்கள். அவர்களின் பிழைப்புக்கு பண முதலீடு செய்த புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் பல கொலைச் சாகசங்களைச் செய்து காட்டி அவர்களுக்குள் தலை விரித்தாடிய இரத்த தாகத்தை தினமும் தணித்து வந்தார்கள் அவர்கள். மனிதன் மிருகமாக இருந்தபோது எப்படி தாவர பட்சணிகளாக இருந்த சாதுவான மிருகங்களை தன் உணவாக்கிக் கொண்டானோ அதே போல தான் நாகரீக வழர்சியடைந்த காலத்திலும் சாதுவான மனிதர்களையே தனது சுயநல எண்ணங்களை பூர்த்தி செய்து கொள்ளும் கருவிகளாக அவன் உபயோகித்து வந்தான்.. அப்படியே புலிகளும் தங்கள் சுயநல எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு பலி கொடுக்க தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான் இலங்கையில் வாழும் அந்த பாவப்பட்ட நமது அப்பாவித் தமிழர் சமூகத்தின் பிள்ளைகள். முதலில் இது உண்மையான உரிமைப் போராட்டம் என்று நம்பி அதில் இணைந்து மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் போக மிகுதியாய் எஞ்சி இருந்தவர்களை அடித்து வதைத்து துன்புறுத்தி இந்த இயக்கத்தில் பலோத்காரமாக இணைத்து பலி கொடுத்துப் பலனடைந்தார்கள் அவர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் வன்னியில் இருந்து வந்தவர்கள் அளித்த வாக்கு மூலங்களில் பதிந்திருக்கின்றன… கௌரவமாக மனித நேயத்துடன் வாழ வேண்டிய தமிழர் சமுதாயத்தை..மனித நாகரீகத்தில் இருந்து புறந்தள்ளி.. சுயசிந்தனை அற்றவர்களாக்கி.. இனவெறியர்களாகவும்.. சமாதானத்தை எதிர்ப்பவர்களாகவும்.. போர் பிரியர்களாகவும்.. பிணக் குவியலகளை ரசிப்பவர்களாகவும்.. நன்மையை வெறுத்து தீமையை தெரிவு செய்பவர்களாகவும்..மாற்றியமைத்து அவர்களை ஒரு கற்காலத்திற்கு தள்ளிச் சென்று ஒரு மிருகத்தைவிடக் கேவலமாக வாழ வைத்துவிட்டுப் போன பெருமை பிரபாகரனையும் அவன் கூட்டத்தாரையுமே சாரும்.. இலங்கையில் மகிந்தாவின் ஆட்சியில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு இங்கே கொலைகளோ குண்டு வெடிப்புகளோ இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்வது அங்கேயுள்ள புலம் பெயர்ந்த புலிப் பினாமிகளுக்கும் புலி ஆதரவாளர்களுக்கு பெரும் எரிசலூட்டும் விடயமாக அமைந்து விட்டது. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் அது கிடைக்காத பட்சத்தில் எப்படித் பரிதவித்துத் துடித்து எரிச்சலைடைவானோ அதேபோல இவர்களின் நிலையும் இன்று ஆகிவிட்டது… எப்படி கைக்கெட்டாத வானத்து நிலவை தன் கையில் பிடித்து விளையாட அந்த அரசனின் குழந்தை ஆசைப் பட்டபோது அந்தப் புத்திசாலி மந்திரி ஒரு கண்ணாடியை அதன் கையில் கொடுத்து நிலவு அதன் கையில்தான் இருக்கிறது என்று நம்பச் செய்தாரோ அதே பாணியில் புலிப் பினாமிகளும் நடை முறைக்கு ஒவ்வாத எவராலுமே எட்ட முடியாத கைக்கெட்டாத தூரத்திலுள்ள தமிழீழமென்னும் மோக நிலவை ஒரு குழந்தையைபோல் சிந்திக்கும் இந்த புலம்பெயர் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழமென்னும் கண்ணாடியிலும் வட்டுக் கோட்டை தீர்மானமென்னும் கண்ணாடியிலும் காட்டி அவர்களுக்கு களிப்பூட்டி தங்கள் தமிழீழப் பிழைப்பைத் தொடர நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காட்டும் அந்த கண்ணாடித் தமிழ் ஈழம் என்பது வெறும் மாயத் தோற்றம்தான் என்பது இந்தப் புலன் பெயர்ந்த பாப்பாக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் விடுதலைப் புலிகள் என்ற மனிதப் பேரளிவிற்கான இயந்திரத்தின் தலைப்பகுதி மட்டுமே இன்று பிளக்கப்பட்டு அதன் உள்ளிந்திரியங்கள் அகற்றப் பட்டுள்ளன ஆனால் அதன் உதிரிப் பாகங்கள் இன்னும் செயலிழந்து போகவில்லை அவைகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இழந்துபோன தலைப் பகுதிக்குப் பதிலாக இன்னொரு தலைப் பகுதியைப் பொருத்தி அதை மீண்டும் செயல்படுத்தி பலனடைவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு புலிப் பினாமிகள் மீண்டும் களமிறங்கியிருக்கின்றனர். தலைதான் போய் விட்டது இனி ஒன்றுமில்லை என்று சும்மா அலட்சியப் படுத்தக் கூடிய காரியமா இது? கடந்த காலங்களில் எவ்வித முதலீடுகளுமில்லாமல் ஜஸ்ட் வீட்டுக் கதவுகளைத் தட்டுவதன் மூலம் கரன்சி நோட்டுகளை கொட்ட வைத்த அலாவுதீனின் அற்புத விளக்கிற்கு நிகரான வியாபாரமல்லவா அது? அதை அம்போ என்று கைவிட யாருக்குத்தான் மனம் வரும்? இந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்துவதானால் அதற்கு தேவையானவைகள் இரண்டு. ஒன்று தணிந்து கொண்டிருக்கும் இனவாதச் சிந்தனைகளை புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மீண்டும் தூண்டி அவர்களை இன வெறியர்களாக்கி சிங்கள இனத்தை வெறுக்கச் செய்வது. மற்றது எந்தவித பேச்சு வார்த்தைகளோ அல்லது எந்தவிதத் தீர்வுகளோ தமிழர்களுக்கு விமோசனம் அளிக்கப் போவதில்லை என்று அவர்களை நம்பச் செய்து அவர்களை தங்கள் பக்கம் தங்க வைத்துக் கொள்வது என்பதுதான் அவைகள். தமிழீழமொன்று என்றுமே அமையப் போவதில்லை என்பது இந்த புலிப் பினாமிகளுக்கு நன்கு தெரிந்த விடயம். அப்படியிருந்தும் இந்த சுய சிந்தனையற்ற புலன் பெயர்ந்த தமிழர்கள் வெளி நாடுகளில் உள்ளவரை தங்களால் இயன்றவரை அவர்களிடமிருந்து கறக்கக் கூடியதை கறந்து கொண்டு அவர்கள் கண்கள் திறக்கும் வரை தங்கள் காலத்தை சிவனே என்று ஓட்டி விடுவது என்று அவர்கள் தீர்மானித்திருப்பது பாவம் இந்தக் கண்மூடித் தூங்கும் கண்ணாடிப் பாப்பாக்களுக்கு தெரியவா போகிறது? புரியவா போகிறது?? (தொடரும்…) -சித்திரெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. -சித்திரெஜினா (தொடர்கட்டுரை பாகம் -40)

நிர்வாணமான சமூகமும்.. கள்ளத்தனமான, தீர்க்கதரிசனமற்ற கட்சிகளும்..!! –சமரன் (கட்டுரை)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

இலங்கைத் தமிழ் சமூகம் ஒரு நிர்வாண நிலையிலேயே இருக்கிறது. பெரும் பாலும் முழுச் சமூகமும் நிர்வாண நிலையில் இருப்பதையே விரும்புகிறது. நிர்வாண நிலையே மேன்மையானது என்ற ஒரு குருட்டு நம்பிக்கை பொதுவாக முழுத் தமிழ் சமூகத்திலும் பரவிக்கிடக்கிறது. தமிழன் என்றாலே நிர்வாணமாகத் தான் இருக்க வேண்டும், நிர்வாணமாக இருப்பவன் தான் தமிழன் என்ற சமூக நீதி உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆடை அணிந்து இருப்பவனுக்கு சமூக அந்தஸ்தே கிடைப்பதில்லை. இந்த நிர்வாண சமூகத்தின் முன் ஆடை அணிந்து இருப்பவன் சமூக விரோதியாகக் கணிக்கப்படுகிறான். இந்த கேடுகெட்ட சமூகத்தில், தமக்கும் ஏதாவது அந்தஸ்து தேவை என எண்ணுபவர்கள், அவர்களும் ஆடை களைந்து நிர்வாண அவதாரம் எடுத்தே ஆக வேண்டும். ஆடையற்று இருப்பதை கேவலம் என்று நினைப்பவன் கூட, தமிழ் சமூகத்தினால் தான் மறுதலிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், ஆடை அணிந்திருந்தும், நானும் நிர்வாணமாகத்தான் இருக்கிறேன் என ஊரையே ஏமாற்றிக் கொள்ளுகிறான். ஆமாம் ஆமாம் அவன் நிர்வாணமாகத் தான் இருக்கிறான் என்று அவனுக்காக சாட்சி சொல்லவும் ஆட்கள் வருவார்கள். இந்த நிர்வாண சமூகத்துடன் இணையாமல் விலகி இருப்பவர்களின் ஆடையை வலுக்கட்டாயமாக உரிந்து விட்டு நிர்வாணமாக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி நிர்வாணமாக்கப்பட்டவர்கள் பலர். ஆக மொத்தத்தில் தமிழ் தேசியம் என்ற நிர்வாணத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிபவன் மட்டும் தான் தமிழன் என்னும் பிரமை எல்லா மட்டத்திலும் பரவிக் கிடக்கிறது. இங்கு தமிழ்த் தேசியம் என்பது புலிப்புராணம் தான். இந்த நிர்வாண சமூகத்தின் மத்தியிலே, பதவி ஆசை பிடித்து, வலிய உட்புகுந்து தாமாகவே ஆடையகற்றி நிர்வாணமானவர்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இனி அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்கவேண்டிய கட்டத்தில் என்ன சொல்லி இந்த நிர்வாண சமூகத்தை சுத்தலாம், ஏமாற்றலாம் என முழிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதில் சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக எதிரணியில் சங்கமித்திருந்த கட்சிகள் அதிலும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலில் ஓர் எதிர்பார்ப்புடன் எதிர்க் கட்சிக் கூட்டணியில் இணைந்திருந்தாலும், அதனால் தமக்கோ, மக்களுக்கோ எந்தவித நன்மைகளும் கிட்டவில்லை என்பதை உணர்ந்து கொண்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் யாரை ஆதரிப்பது என்பதைப் பற்றிய தீர்மானத்தை உடனடியாகவே எடுக்க முடியாத நிலையில் இருந்தன. இந்த அரசியல் சூனியம் தமிழ் கட்சிகள் எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. ஈபிஆர்எல்எவ் நாபா அணி மகிந்தாவை ஆதரிப்பதாக அறிவித்த பின் அதில் திடமாக நின்றது. சில கட்சிகள் தழும்பல் போக்கை கடைப் பிடித்ததை காணக்கூடியதாக இருந்தது. இதற்கு அவர்களின் அரசியல் தீர்க்க தரிசனமின்மை மட்டுமல்ல, அதிகாரத்துக்கு வருபவருடன் ஒட்டிக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்ற சுயநல சிந்தனையும் காரணம் எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் சென்று கருத்துக் கேட்டு அதன் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்தது. புலிப் பயங்கரவாதிகளின் அழிவுக்குப் பின், புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவ உரிமை தங்களுக்கே என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இறுமாந்திருக்கின்றனர். மக்களை வழிநடத்தி தலைமைதாங்க வேண்டிய அரசியல் கட்சி, முப்பது வருடமாக அரசியலில் சுய சிந்தனை மறுக்கப்பட்டிருந்த நிர்வாணிகளின் எழுந்தமான கருத்துக்களை வைத்து எதிரணியை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்தது. புலிகளுக்கு அடங்கி ஒடுங்கி நடப்பதாக நெஞ்சில் கை வைத்து சத்தியப் பிரமாணம் செய்த போது மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டதா? கடந்த காலங்களில் மக்களின் எண்ணங்களை உதாசீனம் செய்து, புலிக்குச் சேவகம் செய்த கூட்டமைப்பினர், இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் மீது பழியைப் போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் கட்சிக்கும் மக்களுக்கும் பாதகமாய் அமையும் முடிவை எடுத்தார்கள். இவர்களின் முடிவு இன்று பலரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பக்கச் சார்பான நேர்மையின்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேசியச் சொத்து. இவர்களின் இந்தத் தவறான முடிவு தமிழ் மக்களைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் சேர்த்து தற்போதைய சூழலில் படுபயங்கரமான நிலை தோன்றியுள்ளது. எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும், அவர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நிர்வாண சமூகத்தின் அரசியல் தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஒரு நிலையான கொள்கையைக் கைக்கொள்ள வேண்டும். நிர்வாணத்தை நிராகரித்து விட்டு ஆடை தர்pத்து, தெளிவான சிந்தனையுடன் மக்களை வழி நடத்த முன் வரவேண்டும். ஆளுந்தரப்பை எதிர்த்துச் செயற்படுவது என்பது மட்டும் தமிழர்களின் அரசியல் தீர்வை எட்டுவதற்கு சரியான மார்க்கமாக இருக்கும் எனக் கொள்ள முடியாது. . தேர்தலுக்கு முன்பாக மகிந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கூட்டணியினர், பிரச்சனைக்குரிய சில கோரிக்கைகளை முன்வைத்தனர். • வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு • உயர் பாதுகாப்பு. பிரதேசங்களை நீக்குதல். • அவசரகால சட்டத்தை நீக்குதல். • தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிப் பயங்கரவாதிகளை உடனடியாக விடுவித்தல். • இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள் குடியேற்றல். உடனடியாக நிறைவேற்ற முடியாத, சட்டச் சிக்கல்களுக்கும் உட்பட்ட இந்த நிந்தனைகளை முன்வைத்து மகிந்தாவுடனான பேச்சு வார்த்தையை கூட்டமைப்பு முறித்துக் கொண்டது. ஆனால்.. • சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த. • புலிகள் என்று சொல்லி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்ற. • யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவத்திற்கு ஒரு லட்சம் பேரை சேர்க்க விரும்பிய. • வன்னியில் சிங்கள இராணுவத்தினரை குடியமர்த்தச் சொன்ன. • இடம் பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தக் கூடாதென வலியுறுத்திய. • தமிழ் பிரதேச கடற்கரைகளில் மேலதிக இராணுவ முகாம்களை அமைக்க வேண்டிய. • தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாதென வலியுறுத்திய. இராணுவ ஜெனரல் சரத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது. இது தமிழ் மக்களை ஏமாற்றத் துணியும் கூட்டமைப்பினரின் அரசியற் கள்ளத்தனம், போக்கிரித்தனம். வன்னியில் சுமார் இருபதினாயிரம் மக்களைப் புலிகள் கொல்லக் கொடுக்கப் போவது தெரிந்திருந்தும், அந்த மக்களுக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முற்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலுக்காக மக்களிடம் வருகிறார்கள். பாராளுமன்ற பதவி மீது தீராத மோகம் கொண்ட இந்த சந்தர்ப்பவாத பச்சோந்திகளை, நிர்வாணத்தையே மேலான நாகரீகமாக கருதி இறுமாந்திருக்கும் இந்தக் கேடுகெட்ட தமிழ்ச் சமூகம் நிராகரிக்குமா? ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே கூட்டமைப்புக்குள் குத்து வெட்டு ஆரம்பித்து விட்டது. இனி பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. தமிழரசுக் கட்சி, தமிழ்காங்கிரஸ், ஈபிஆர்எல்எவ் சுரேஸ் குழு, ரெலோ என்ற சந்தர்ப்பவாதிகள் சேர்ந்தது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் குதிரை கஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பமாகிவிட்டது. கிஷோர் தனி வழி தேடுகிறார். தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார் சம்பந்தனுடன் முரண்படத் தொடங்கி விட்டார். செல்வத்துக்கும் சிவாஜிலிங்கத்துக்கும், ஸ்ரீகாந்தாவுக்கும் இடையேயும் தொடங்கிவிட்டது. (செல்வம் அடைக்கலநாதன் 1994 ல் ரெலோ தலைமையால் தனது உயிருக்கு ஆபத்து என, இந்தியாவுக்கு ஓடிவந்து ஈஎன்டிஎல்எவ் காரியாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.) தேர்தல் நெருங்க நெருங்க மேலும் மேலும் வேடிக்கைகள் காத்திருக்கின்றது. ரிக்கற் கேட்டு அடிபாடே நடக்கலாம். பொறுத்திருப்போம். பயங்கரவாதத்தைத் தமது வேதமாகக் கொண்டதால், எமது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட இவ்வளவு பேரழிவுகளுக்குப் பின்னரும், இந்த இனம் இன்னமும் திருந்தவில்லை என்னும் போது, இந்த இனத்தை எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. -சமரன்.  Read More »

நிர்வாணமான சமூகமும்.. கள்ளத்தனமான, தீர்க்கதரிசனமற்ற கட்சிகளும்..!! –சமரன் (கட்டுரை)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர்கட்டுரை.. பாகம் 39)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

(ஒருவரைப் பற்றி சரிவர அறிந்து ஆராய்ந்து பாராமல் அவருடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாமல் அவர் மீது அவதூறு கூறி சேற்றை வாரி இறைப்பது மனிதப் பண்பாகாது. ஒரு மனிதனின் குண நலன்களும் அவன் பழக்க வழக்கங்களும் அவன் வாழ்க்கை முறையும் அவன் பிறந்து வழந்த சூழ்நிலையிலும் அவன் குடும்பத்தின் பின்னணியிலும் தான் தங்கியுள்ளது. ஆகவே ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள அவர் வரலாற்றை ஆராய்ந்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்…சற்று அறிந்து கொள்ளுங்கள்!… கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்!!…) நமது இலங்கைத் தீவில் தென்னிலங்கையை எடுத்துக் கொண்டால் அதன் நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில்தான் இயற்கையின் அழகை தரிசிக்க முடியும். பிரதான தார் சாலைகளிலிருந்து உள்வாங்கிச் செல்லும் செம்மண் கிறவல் சாலைகள் அதன் ஓரங்களில் நெளிந்தோடும் தெளிந்த சிறிய நீரோடைகள் அவற்றிற்கு அப்பால் தெரியும் நெடிதுயர்ந்த தென்னை மரத் தோப்புகள் அதன் நடுவே வெப்பத்தை தணித்து வீசும் மென் தென்றல் அதைக் கடந்து அப்பால் சென்றால் கண்களைக் குளிர வைக்கும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள் என்று இயற்கை விரிந்து சிரிக்கும் ரம்மிய அழகு இந்தக் கிராமங்களில்தான் கொட்டிக் கிடக்கிறது…. நகர் புறத்து சுறுசுறுப்பான சம்பிரதாய வாழ்க்கையை கடந்து இந்தக் கிராமங்களில் நுழைந்து விட்டால் நமது மனங்கள் கூட இலகுவாகி ஒரு குழந்தையைப் போல் ஆகிவிடுமென்றால் இங்கேயே பிறந்து வழர்ந்தவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் நம்மைப் போல் அல்லாமல் நகர்ப்புறத்து சூதுவாது மனப்பான்மையைக் கடந்து அன்பையும் நட்பையும் பாசத்தையும் மதித்து வாழும் உன்னத மனப்பான்மை உள்ள மனிதர்களாகவே பெரும்பாலும் காணப்படுவார்கள் . இயற்கையுடன் ஒட்டி வாழ்வதாலோ என்னவோ அவர்கள் மற்றவர்களின் மன உணர்வுகளை மதித்து அவர்கள் துன்பங்களில் பங்கு கொள்ளும் இயல்பான மனப்பாங்கும் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தென்னிலங்கைக் கிராமமாகிய வீரகட்டியாவில் பிறந்தவர்தான் மகிந்த ராஜபக்ச அவர்கள். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது அந்தக் கிராமத்து வாசனை அவர் வாழ்க்கையிலும் வீசுவது தெரிகிறது… இன்று மகிந்தா அரசியல் மேடைகளில் “குரோதம் கொண்ட அரசியல் பரப்புவதைக் கைவிட்டுஇ அன்பைப் பரப்பும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்” என்று பேசி வருவது வெறும் பிரச்சார வார்த்தைகள் அல்ல. அது அந்தக் கிராமத்து மனிதரின் மனதின் ஆழத்திலிருந்து வரும் மானசீகமான வார்த்தைகள் . அவர் மனதின் ஆழத்தில் என்றோ பதிந்துபோன ஒரு எண்ணத்தின் எதிரொலி அது . தன் நாட்டையும் தன் மக்களையும் ஆத்ம பூர்வமாக நேசிக்கும் ஒருவன் இதைத்தான் கூறுவான். தன் நாட்டில் அமைதியும் தன் மக்களின் மனதில் மகிழ்ச்சியும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு நாட்டின் தலைவன் இதைவிட கூறுவதற்கு வேறு வார்த்தைகள் இருக்க முடியாது. அவர் கூறுவதுபோல் நமது நாட்டில் அப்படி ஒரு அன்பைப் பரப்பும் அரசியல் கலாச்சாரம் உருவாகுமேயானால் இலங்கையைப் போல் ஒரு சுபீட்சமான நாடு உலகில் வேறெங்குமே இருக்க முடியாது… மகிந்தாவின் வாழ்க்கையும் அவர் நடத்தும் அரசியலும் அவருடைய தந்தையாகிய அல்வின் ராஜப்பக்சவிடமிருந்து அவருக்குக் கிடைத்த பரிசுகள். வீரக்கட்டிய கிராமத்து மனிதராகிய அல்வின் ராஜபக்ச பரம்பரை வழிவந்த பல தென்னந் தோப்புகளுக்கும் வயல் நிலங்களுக்கும் மிராசுதராக இருந்தார். வீரக்கட்டிய கிராமத்து மக்களால் “அல்வின் மாத்தயா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் 1947ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு விஜயானந்தா தகநாயக்காவின் அரசாங்கத்தில் காணி மற்றும் விவசாய அமைச்சராக பணியாற்றினார்… இந்தக் கால கட்டத்தில் அரசுக்குக் சொந்தமான சுமார் 2000 ஏக்கர் காணி நிலத்தை குருவாபிட்டியா ஏழை விவசாயிகளுக்கு 99 வருட கால குத்தகை என்ற ஏற்பாட்டின் பேரில் குடும்பத்துக்கு தலா 5 ஏக்கர் வீதம் பகிர்ந்தளித்தார் அவர். இதன் மூலம் குருவாபிட்டியாவில் நெற் செய்கை என்றுமில்லாதபடி அதிகரித்தது என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. பின்னர் பண்டாரநாயக்கா அரசாங்கத்திலும் இதே பதவியை வகித்த அவர் விவசாயிகளுக்கும் இல்லிடமற்றோருக்கும் பலவிதத்திலும் ஆவன செய்தார்… விருந்தோம்பலிலும் ராஜபக்ச குடும்பம் சிறந்து விளங்கியது. வீரக்கட்டியாவில் வசித்த சில வசதியற்ற குடும்பங்களின் மதிய உணவு பெரும்பாலும் இந்த வீட்டில்தான். மேலும் தினமும் அல்வின் ராஜபக்ச வீட்டிற்கு உதவிநாடி வருபவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு விருந்தளித்த பின்தான் விடை கொடுப்பது அவர் வழக்கமாக இருந்தது. சில நாட்களில் அந்த வீட்டில் சுமார் பதினைந்து இருபது பேர்வரை கூட உணவருந்திச் சென்றிருக்கிறார்கள் என்று அந்தக் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகிறார்கள்.. தன்னுடைய பதவிக் காலங்களில் மற்ற அரசியல்வாதிகள் போல் அரசியலை வியாபாரமாக்கி பணம் பண்ண அவர் என்றுமே முயற்சித்ததில்லை. இப்படி மனித நேயத்துடன் வாழந்ததாலோ என்னவோ பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு அவருடைய பரம்பரைக் சொத்துக்கள் சிலவற்றை அவர் விற்கவேண்டிய கட்டாயமும் ஒரு கால கட்டத்தில் ஏற்பட்டது… கமல்இ மகிந்தாஇ பாசில்இ கோத்தபாயாஇ டட்லி என்று ஐந்தும் ஆண் குழந்தைகள் இவர்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய தன்னிடம் இருந்த ஒரே மோட்டார் வண்டியை விற்றும் இருந்த மிச்ச சொச்ச தென்னந் தோப்புகளை குத்தகைக்கு விட்டும்தான் அவர்களுக்கு கல்வியூட்ட அவரால் முடிந்தது. தன்னுடைய பொருளாதாரக் கஸ்டமான சூழ்நிலையிலும்கூட தன்னால் இயன்றவரை வசதியற்றோருக்கு உதவுவதையை தன் இறுதி நாள்வரை கடமையாகக் கொண்டிருந்தார் அந்த கண்ணியமான மனிதர்… முடிவில் நவம்பர் 7 ந் திகதி 1967ம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட இருதய வலியினால் அவதிப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் சொந்தமாக ஒரு வண்டி இல்லாததால் ஒரு வாடகை வண்டியை தேடி அலைந்து அமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்து விட்டது. சிறிது நேரம் முன்னதாக வைத்திய சாலைக்கு கொண்டு வந்திருந்தால் தங்களால் அவரைப் பிழைக்க வைத்திருக்க முடியும் என்று டாக்டர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் என்ன செய்வது விதி முந்திக் கொண்டு விட்டது…. கணவர் உயிருடன் இருந்தவரை வீட்டு வேலை பிள்ளைகள் என்று வெளி உலகம் தெரியாமல் வாழ்ந்து வந்த திருமதி பாலதுவ ராஜபக்சவுக்கு கணவரின் மறைவு பேரிடியாக வந்து அவரை நிலை குலையச் செய்தது எனினும் அவர் சுதாரித்துக் கொண்டார் முழுக் குடும்பப் பொறுப்பையும் ஏற்று நடத்த தன்னைத்தானே திடப்படுத்தியும் கொண்டார். தன் பிள்ளைகளை மேற் கொண்டு கல்வியூட்டுவதென்று முடிவு செய்து அவர்கள் தங்கள் கல்வியைத் தடையின்றி தொடர்வற்காக கணவனால் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை ஒவ்வொன்றாக விற்க வேண்டிய சூழ்நிலைகூட அன்று ஏற்பட்டது. ஆனால் அந்தப் பெண்மணி மனம் தளராமல் தான் நினைத்தபடியே தனியொருந்தியாக தன் பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர அவரால் முடிந்தது என்றால் அது அவரது மனோ பலம்தான் காரணம் என்றுதான் கூற வேண்டும். சிறீமாவோ பண்டாரனாயக்காவின் ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டைத் தொகுதிக்கு அவரைத் தன் கட்சியின் அமைப்பாளராக இருக்கும்படி சிறீமா பல முறை வற்புறுத்தியும் அந்தப் பெண்மணி அதற்கு திடமாக மறுத்து விட்டார்.. தந்தையார் உள்ளவரை மகிந்தாவுக்கு வானம்பாடிப் பறவையாக இருந்தது வாழ்க்கை. அந்த உல்லாசமான நாட்களில் ஜாலியாக ஒரிரண்டு சிங்களப் படங்களிலும் நடித்திருக்கிறார் மகிந்தா. ஆனால் தந்தையின் மறைவிற்குப் பின் தனக்கிருக்கும் பொறுப்புகளை அவர் உணரத் தவறவில்லை. பௌத்த வித்யோதய சரிவகலாசாலையில் லைப்பிரேனியனாக கடமையேற்றார்… அங்கு சில காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது 1970 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்காவின் வேண்டுகோளின் பேரிலும் அம்பாந்தோட்டைத் பகுதி மக்களின் வற்புறுத்தலின் பேரிலும் பாலித தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியபோது அவரது வயது என்னவோ இருபத்தி நான்குதான். பாராளுமன்றத்தில் புன்சிரிப்புடன் நுழையும் மகிந்தா என்ற அந்த இளைஞனை வியப்புடன் அண்ணாந்து பார்த்தனர் அங்கிருந்த பழுத்த அரசியல்வாதிகள்… பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977ல் ஒரு சட்டத்தரணியென்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் மகிந்தா. ஆனால் இவர் ஆஜரான பெரும்பாலான வழக்குகள் வசதியற்றோரின் உரிமைகளுக்காக வாதாடும் மனித உரிமை வழக்குகளே. இதற்காக கொழும்பு பல்கலைக் கழகம் கடந்த வருடம் செப்ரம்பர் 6 ந் திகதி இவருக்கு சட்டத் துறையில் டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது… இந்தப் பாகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி மகிந்தா அமோக வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த இனிப்பான செய்தி எங்கள் இலங்கைத் தாயின் சுதந்திரத்தையும் அவள் பிள்ளைகளாகிய எங்கள் அனைவரது ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் சமாதானத்தையும் நேசிக்கும் நம் அனைவருக்கும் பேருவகை அளிக்கும் செய்தி என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தன் நாட்டையும் தன் மக்களையும் பாகுபாடில்லாமல் நேசிக்கும் அவள் மூத்த குமாரன் மகிந்தாவை நாமும் நம் சகோதரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் தலைவனாக தெரிவு செய்ததைப் பார்த்து அவள் நிட்சயம் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பாள். வேறொருவருக்கு தன்னை அடிமையாக விற்கத் திட்டமிட்ட தேசத் துரோகிகளின் சதி முயற்சி முறியடிக்கப்பட்டதை கண்டு அவள் நின்மதிப் பெருமூச்சு விட்டிருப்பாள்… என்னுடைய முந்திய பாகத்தில் எழுதியதுபோல அமெரிக்காவை நம்பி அது போடும் எலும்புத் துண்டுகளுக்காக தன் நாட்டைக் காட்டிக் கொடுத்த குற்றத்திற்காக பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்க்கோஸ்இ ஈரான் மன்னராக இருந்த ஷா போன்றோர் எப்படி ஒரு அனாதைப் பிணமாக ஹவாய் தீவில் செத்தழிந்து போனார்களோ அப்படியே சரத்தின் தலைவிதியும் எங்கோ ஒரு கண் காணாத தேசத்தில் முடியத்தான் போகிறது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்… தனது உயிர் பாதுகாப்புக்காக தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக இன்று சரத் ரீல் விடுவதை சில முட்டாள்கள் நம்பத்தான் போகிறார்கள் ஆனால் சரத் வென்றால் தங்கள் ஆட்சி அவர் தோற்றாலோ அது அவரின் தனிப்பட்ட வீழ்ச்சி என்று அதைக் கண்டு கொள்ளாது அமெரிக்கா விட்டு விடும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவர் நாட்டை விட்டு வெளியேறும் உண்மைக் காரணம் நிட்சயம் புரிந்திருக்கும்! .. அமெரிக்காவினால் கைவிடப்படும் கதை தெட்டத் தெளிவாகத் தெரிந்திருக்கும்!!… சரத்திற்கும் பிரபாவிற்கும் அப்படி என்னதான் வித்தியாசம் இருந்திருக்கும்? இருக்கும்வரை இருந்து ஆண்டு அனுபவித்து விட்டு எம் மக்களை கொன்று குவித்து விட்டு தங்கள் உயருக்கு ஆபத்து என்றவுடன் எங்காவது காடு மேடுகளைத் தேடி ஓடி ஒளிந்து கொள்ளும் எண்ணங் கொண்ட பேடித் தனமான கேடிகள் இவர்கள்.. தான் இலங்கையை விட்டு வெளி நாடொன்றிற்குச் சென்றாலும் இலங்கையிலுள்ள மக்களின் தொடர்பு தனக்கு என்றுமே இருக்குமாம் என்று சரத் கூறியிருப்பதை பார்க்கும்போது வெளி நாடுகளில் இருக்கும் புலிப் பினாமிகள் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்காக நாடு கடந்த தமிழ் ஈழம் ஒன்றை அமைக்கப் புறப்பட்டிருக்கும் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. போதாதற்கு சுட்டாலும் மணவாத கட்டாக் கருவாடாகிக் கிடக்கும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தைவேறு தூசு தட்டி இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள் புலன் பெயர்ந்த் மக்களின் வீட்டுக் கதவுகளை மீண்டும் காசு கேட்டுத் தட்டுவதற்காக! அண்மையில்தேர்தலுக்கு முன் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்காக பிரபல அரசியல் ஆய்வாளரும் நிருபருமான ராஜ்பால் அபேயநாயக்க மகிந்த ராஜபக்சவை பேட்டி கண்டிருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் ஆணித்தரமாக அளித்திருக்கும் பதில்கள் அவர் நேர்மையையும் குணநலனையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.. உதாரணத்திற்கு சில…. கேள்வி: நீங்கள் அரச்சாங்க ஊழியர்களுக்கு இலவச மதிய உணவளிதீர்களாமே?. அது சட்ட விரோதமானதல்லவா? அது அனுமதிக்கப்படாத ஒன்றல்லவா? பதில்: மக்களுக்கு உணவளிப்பது இன்று மட்டுமல்ல நான் பிறந்த காலம் முதற் கொண்டே எங்கள் வீட்டிலே மற்றவர்களுக்கு உணவளித்துத்தான் வந்திருக்கிறார்கள். கேள்வி: நான் வீட்டுக்கு வருபவர்களைப் பற்றி கேட்கவில்ல ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு உணவளித்ததைப் பற்றிக் கேட்கிறேன்… பதில்: இல்லையில்லை..நான் அரசாங்க ஊழியர்களுக்கு விருந்தளிக்கவில்லை. நான் என்றுமே எந்தவொரு அரசாங்க ஊழியருக்கும் உணவளித்ததில்லை..அவர் ஒரு அரசாங்க ஊழியராக இருந்தால் என்னால் அவரது கடமைக்கு பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்புவதும் இல்லை..அவர் ஒரு அரசாங்க ஊழியராகவோ அல்லது உங்களைப் போன்ற ஒரு நிரூபராகவோ அல்லது வேறு எவராகவோ இருந்தாலும் எனது வீட்டிற்கு வருபவர்களுக்கு நான் விருந்தளிப்பேன்… அரசியலுக்காக எனது குடும்பப் பாரம்பரியங்களை நான் மாற்ற முடியாது… கேள்வி: இது தமிழ் தேசிய கூட்டமைப்பினரைப் பற்றியது..உங்கள் எதிர்க் கட்சி அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் அரைவாசியையோ அல்லது அதற்குக் குறைவானதாகவோ சில வாக்குறுதிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்கி அவர்களை உங்கள் பக்கம் தங்கவைத்திருக்க முடியும் என்று நீங்கள் எண்ணவில்லையா? பதில்: இது பிரச்சனைக்குரியது. இந்தத் தேர்தலுக்காக நான் பொய் கூற விரும்பவில்லை. என்னால் ஒன்றைக் கொடுக்க முடியுமாயிருந்தால் மட்டுமே நான் முடியும் என்று கூறுவேன்.. அப்படி முடியாதிருந்தால் முடியாதென்று மட்டும்தான் கூறுவேன். நான் என் வாழ் நாளில் அப்படிப் பட்டவனாகவே இருந்திருக்கிறேன். என்னால் முடியாதிருந்தால் முடியும் என்று கூறி மக்களை தவறாக வழி நடத்த என்னால் முடியாது. வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பது பற்றிய பிரச்சனையையும் இராணுவ முகாம்களை அகற்றுவது பற்றிய பிரச்சனையையும் சுயாட்சி பற்றிய பிரச்சனையையும் என்னிடத்தில் கொண்டு வந்தால் இவைகளைச் செய்ய முடியாது என்று மட்டுமே நான் கூறுவேன். சம்பந்தன் அடைக்கல நாதன் போன்றோர்க்கு இதுதான் தேவைப்படுகிறது… அப்படியான ஒரு ஒப்பந்தத்தை தாங்கள் சம்பந்தனுடன் கையெழுத்திட்டுள்ளதாக இப்போது சரத் சில்வா கூறுகிறார்.. கேள்வி: தமிழர்களுக்கான உங்கள் அரசியல் தீர்வுக்கான அறிகுறியை எப்போது நீங்கள் தருவீர்கள்? பதில்: தேர்தல் முடிந்த பின்னர் இதில் ஈடுபடுவேன்..இது சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்கள் செய்திருக்கிறேன்…இதற்காக பல வருடங்களாக நான் முயற்சித்தும் அவர்கள் எனக்கு ஒதுழைப்புத் தரவில்லை. கேள்வி: முடிவாக தமிழர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி? பதில்: நானும் தமிழ்தான் பேசுகிறேன் அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள் ஆகவே எவ்வித பிரச்சனைகளும் இடையில் இல்லை என்பதே தமிழ் பேசும் மக்களுக்கு நான் கூறும் செய்தியாகும்… ஆம் உள்ளதை உள்ளபடியும் முடிந்ததை முடியும் என்றும் முடியாததை முடியாதென்றும் கூறும் வெளிப்படையான திறந்த மனம் படைத்த ஒரு சிறந்த கிராமத்து மனிதர்தான் நமது ஜனாதிபதி மகிந்த ராஜ்பக்ச அவர்கள்…(தொடரும்) -சித்திரெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர்கட்டுரை.. பாகம் 39)

ஏனைய செய்திகள்

குருநாகல் பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விசமிகளால் தீவைப்பு! // காலியில் வீட்டில் தனிமையில் வசித்தவர் படுகொலை! // சிசுவின் சடலம் பம்பலப்பிட்டியில் மீட்பு!

குருநாகல் பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விசமிகளால் தீவைப்பு! // காலியில் வீட்டில் தனிமையில் வசித்தவர் படுகொலை! // சிசுவின் சடலம் பம்பலப்பிட்டியில் மீட்பு!

காலி மாவட்டம் ஊருகல்மங்கந்திய பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கல்பொத்தாவல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த 54வயதான பெண்ணொருவர் கோரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் வீட்டின் சமையல் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக ஊருகஸ்மங்கந்திய பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர் வங்கிக் கிளையொன்றில் உதவியாளராக பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தததும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடனும், கைரேகை நிபுணர்களுடனும் சென்ற பொலீசார் தீவிர பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு [...]

படையினரின் ஊதியங்களையும் ஏனைய கொடுப்பனவுகளையும் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்! // ஜனாதிபதி ரஸ்யாவில் 300மில்லியன் டொலர் ஆயுதக் கொள்வனவு! // இடம்பெயர்ந்தோர் வாழும் பகுதிகளிலேயே வாக்களிக்க முடியும்-

படையினரின் ஊதியங்களையும் ஏனைய கொடுப்பனவுகளையும் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்! // ஜனாதிபதி ரஸ்யாவில் 300மில்லியன் டொலர் ஆயுதக் கொள்வனவு! // இடம்பெயர்ந்தோர் வாழும் பகுதிகளிலேயே வாக்களிக்க முடியும்-

ஜனாதிபதியாக இரண்டாவது முறையும் தேர்தெடுக்கப்பட்ட பிறகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள நிலையில், அவர் இந்த பயணத்தின்போது 300 மில்லியன் டொலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் நடைபெற்ற யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு படையினரின் ஊதியங்களையும் ஏனைய கொடுப்பனவுகளையும் மேலும் [...]

தங்காலை அம்பாந்தோட்டை வீதியில் விபத்து இளைஞர் பலி, யுவதி படுகாயம்! // ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றன-அமைச்சர் டியூ குணசேகர

தங்காலை அம்பாந்தோட்டை வீதியில் விபத்து இளைஞர் பலி, யுவதி படுகாயம்! // ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றன-அமைச்சர் டியூ குணசேகர

ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக அரச சாசன அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரச சாசனமொன்றை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய அரசியல் சாசனம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகோலியுள்ளது. ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றன. வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என குற்றம் சுமத்துவதன் ஊடாக [...]

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைபெற வருகை தரும் நோயாளர்களுக்கு வசதிகள்! // கிண்ணியா பெரியாற்றுமுனை கண்கா ஆற்றுப்பகுதியிலிருந்து சடலம் மீட்பு! // வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பில் ஆய்வு!

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைபெற வருகை தரும் நோயாளர்களுக்கு வசதிகள்! // கிண்ணியா பெரியாற்றுமுனை கண்கா ஆற்றுப்பகுதியிலிருந்து சடலம் மீட்பு! // வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பில் ஆய்வு!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்று நாடுதிரும்பியவர்கள் தொடர்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் விமானநிலையத்தினூடாக பெற்றுக் கொள்ளப்படுவதுடன் தகவல்களை பெறுவதற்காக பரவலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பியதும் குறித்த இலக்கின்றி தமது பணத்தை வீண்விரயம் செய்கின்றனர். இதனால் அவர்கள் உழைக்கும் பணத்தை சிறப்பான முறையில் எப்படி முகாமைத்துவம் செய்யலாம், எந்தத்துறைகளில் அதனை முதலீடு செய்வதன்மூலம் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர் கட்டுரை.. பாகம் 41)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர் கட்டுரை.. பாகம் 41)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே -  பாரதியார்..
முன்னொரு காலத்தில் அந்நியர்கள் இலங்கைத் தீவில் கால் பதிக்கும் முன்னே சிங்களவர் தமிழர் என்ற பாகு பாடில்லாமல் ஒன்று பட்டு ஒரு தாய் மக்களாய் சகோதர உணர்வுடன் வாழ்ந்த நம் சமுதாயத்தை நம் நாட்டின் வளங்களை கொள்ளையிட வந்த பிரிதானியர்கள் நம்மை முரண்டுபட வைத்து நம்மை இரண்டாக்கி நம் நாட்டை பிரித்தாண்டு அனுபவித்து விட்டுப் போனார்கள். அந்தக் கொடுமைகளின் விளைவாக மீண்டும் ஒன்றுபட்ட நாம் அவர்கள் [...]

யாழ் காரைநகர், கசூரினா கடற்கரைக்கு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! // யாழ். வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள்! // யாழ். சாவகச்சேரி 200மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் -வடமாகாண ஆளுநர்

யாழ் காரைநகர், கசூரினா கடற்கரைக்கு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! // யாழ். வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள்! // யாழ். சாவகச்சேரி 200மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் -வடமாகாண ஆளுநர்

யாழ். வரணியிலிருந்து மந்துவில் ஊடாக யாழ் செல்லும் மினி பஸ்சில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் வைத்தியசாலை பின்புறத்தில் உள்ள டச் வீதியில் இறக்கப்படுவதால் 700மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டச்சு வீதியில்இருந்து வைத்தியசாலைக்கு செல்லும்பாதை புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டதால் தற்போது டச்சு வீதியில் மினி பஸ்சிலிருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளதென்றும், சிகிச்சை பெற்ற நோயாளர்கள் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றே இதே மார்க்கமாக மினி பஸ்சில் பயணிக்கிறார்கள் [...]

நல்லகுட்டியாறு முஸ்லிம் பாடசாலை பெரும்பான்மையின பாடசாலையாக மாறும் ஆபத்து! // வடக்கிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட ஏற்பாடு

நல்லகுட்டியாறு முஸ்லிம் பாடசாலை பெரும்பான்மையின பாடசாலையாக மாறும் ஆபத்து! // வடக்கிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட ஏற்பாடு

வடக்கிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிடுவதற்காக நிதியொதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் திருமதிஎம்.எஸ்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்துவதில் [...]

வன்னியில் கைவிட்ட வாகனங்கள் சொத்துக்களை ஆவணங்களைக் காண்பித்து பெற்று கொள்ள முடியும் -யாழ். ஆயர்! // விடுதலைப்புலி சந்தேகநபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி (இணைப்பு-2)

வன்னியில் கைவிட்ட வாகனங்கள் சொத்துக்களை ஆவணங்களைக் காண்பித்து பெற்று கொள்ள முடியும் -யாழ். ஆயர்! // விடுதலைப்புலி சந்தேகநபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி (இணைப்பு-2)

இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிடமிருந்து இலங்கை கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இலங்கைக்கு சொந்தமான 24கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த விடுதலைப்புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பா ஜானகி ராஜரட்ணநேற்று முன்தினம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கினர் சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் [...]

ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் 15ம் திகதி பூர்த்தி! // ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் கூட்டம்

ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் 15ம் திகதி பூர்த்தி! // ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் கூட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அக்கட்சியின் தெரிவுக்குழு இன்றும் நாளையும் கூடவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயம்ப, வடமத்திய, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வட மாகாணங்களின் தேர்வுக்குழு இன்று கூடுமென்றும், சப்பிரகமுக மாகாண தேர்தல்குழு நாளை கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமையில் மேல், மத்திய, ஊவா மாகாண தெரிவுக்குழுவும், அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் சப்பிரகமுவ குழுவும் கூடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் [...]

பொன்சேகாவை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளவில்லை -பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு! // வவுனியா வடக்கில் மீள்குடியோர்க்கு 8900வீடுகள் அமைக்க ஏற்பாடு-

பொன்சேகாவை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளவில்லை -பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு! // வவுனியா வடக்கில் மீள்குடியோர்க்கு 8900வீடுகள் அமைக்க ஏற்பாடு-

சரத்பொன்சேகாவை கைது செய்வதற்கான முயற்சிகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் சரத்பொன்சேகா இராணுவத்தினருக்கு பிழையான உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதற்காகவும் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளுக்காகவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிராக போரிட்ட ஏராளமான [...]

ஜனாதிபதி நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார்..! // இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் இலங்கையின் 62வது சுதந்திரதின நிகழ்வுகள்- (புகைப்படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார்..! // இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் இலங்கையின் 62வது சுதந்திரதின நிகழ்வுகள்- (புகைப்படங்கள் இணைப்பு)

மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடுதிரும்பியதும் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. அவர் நாளைமறுதினம் அல்லது வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது கடந்த 26ம்திகதி நடத்தப்பட்ட ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார் இதனையடுத்து தனது இரண்டாவது தவணைக்காலம் எப்போது ஆரம்பமாகி [...]

மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை அமைப்பாளர் பாரதிதாசன் மனோகணேசனுடன் இணைவு! // அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க தமிழ்மக்கள் நடவடிக்கை!

மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை அமைப்பாளர் பாரதிதாசன் மனோகணேசனுடன் இணைவு! // அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க தமிழ்மக்கள் நடவடிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் இவ்வாண்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க அங்குள்ள தமிழ்மக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். இம்முறை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத் தரப்பில் இனியபாரதியும், ஈரோஸில் லால் என்பவரும், ரி.எம்.வி.பியும் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்), ஈ.பி.டி.பி, தமிழரசுக்கட்சி என்பன போட்டியிடவுள்ளன. இதேவேளை கடந்த தேர்தலில் 55,553 வாக்குகளைப் பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட 20ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

1லட்சம் தொழிலாளர்களின் தொழிலை பாதுகாக்க அரசின் திட்டம் என்ன?- ரவி கருணாநாயக்க எம்பி! // ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் -இலங்கை அரசு

1லட்சம் தொழிலாளர்களின் தொழிலை பாதுகாக்க அரசின் திட்டம் என்ன?- ரவி கருணாநாயக்க எம்பி! // ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் -இலங்கை அரசு

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படவுள்ளதாக தெரிகிறது அவ்வாறெனின் சுமார் 1லட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இலங்கைக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரவி கருணாநாயக்க எம்பி இதுதொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தை [...]

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு! // பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானம்..

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு! // பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானம்..

பாராளுமன்றம் கலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடுபிடித்துள்ளன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத்தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்ற வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதேவேளை கடந்த 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் [...]

புலிகளை ஏமாற்றிய சம்பந்தரும் ஐக்கியப்பட மறுக்கும்  தமிழ்கட்சித் தலைவர்களும்.. (வாசகர் கருத்து)

புலிகளை ஏமாற்றிய சம்பந்தரும் ஐக்கியப்பட மறுக்கும் தமிழ்கட்சித் தலைவர்களும்.. (வாசகர் கருத்து)

தேர்தல் தெருக்கூத்துக்கள் யாவும் முடிந்து விட்டது மீண்டும் அடுத்த தேர்தலுக்கான சமிஞ்சைகள் வெளிவரத்தொடங்கிவிட்டது தமிழ்கட்சிகளின் தலைவர்கள் தமது வெற்றிக்காக வியுகங்களை நெறிபடுத்த தொடங்கிவிட்டார்கள் யாரும் தமிழ்ர்களின் ஐக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை கூட்டமைப்பும், ஈபிடிபியும் தனித்துபோட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர்கள் ஏனைய தமிழ்கட்சிகளின் நிலைப்பாடுகளை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம். இத்தேர்தலிலாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவார்களென எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே எஞ்சியுள்ளது கூட்டமைப்பை வழிநடத்திச் செல்லும் மிதவாத போக்குடைய தலைவர்களினால் எமது மக்களின் அரசியல் அங்கீகாரம் [...]

புளொட் ஜேர்மன்கிளையின் அறிவித்தல்..

புளொட் ஜேர்மன்கிளையின் அறிவித்தல்..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம் 6.2.2010அன்று Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்து கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில் வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்கு Germanyயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்திய அமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகால [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளிகோயில் அரசமரத்தின் கீழ் திடீரென புத்தர்சிலை ஒன்று முளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளைநிற சிறிய புத்தர்சிலை நேற்றுமுன்தினம் இரவோடிரவாக வைக்கப் பட்டுள்ளது. எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என தகவல்கள் ஒன்று தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாதாந்த சபைக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நாகூர் ரம்லானுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் க.அருமைநாயகத்துக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்து பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. [...]

காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! // பாடசாலை மாணவர்களிடையே கல்விப் பிரச்சினையை விட தனிப்பட்ட பிரச்சினைகளே அதிகரிப்பு

காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! // பாடசாலை மாணவர்களிடையே கல்விப் பிரச்சினையை விட தனிப்பட்ட பிரச்சினைகளே அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே கல்விப் பிரச்சினையை விட தனிப்பட்ட பிரச்சினைகளே அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டதாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஞானதாஸ் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் பல மாணவர்கள் பாடசாலைகளிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 5வருடங்களுக்கு முன்னர் அநேக பிள்ளைகளிடம் ஞாபக மறதி, கவனயீனம், ஆத்திரமடைதல், அச்சம் போன்ற பிரச்சினை காணப்பட்டதாகவும், எனினும் அண்மைக்காலமாக இந்நிலைமை மாற்றமடைந்து தனிப்பட்ட பிரச்சினைகளை வலுவடைந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார். [...]

தமிழ்மக்களின் வாக்குகளை சிதறச்செய்து தமிழ் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றில் குறைக்கும் சதி தொடர்கிறது –ரெலோ வினோநோகராதலிங்கம் எம்.பி! // நுவரெலியா மாவட்டப் பகுதிகளில் காட்டுத்தீ

தமிழ்மக்களின் வாக்குகளை சிதறச்செய்து தமிழ் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றில் குறைக்கும் சதி தொடர்கிறது –ரெலோ வினோநோகராதலிங்கம் எம்.பி! // நுவரெலியா மாவட்டப் பகுதிகளில் காட்டுத்தீ

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாவட்ட தமிழ்மக்களின் வாக்குகளை சிதறச்செய்து, நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமானளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதியொன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் ஒன்றுபட்டு, ஓரணியாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதை ஜீரணிக்க முடியாதவர்களும், கூட்டமைப்புடன் தமிழ்மக்கள் சங்கமித்துப் போவதை தடுக்க முனைபவர்;களுமே என்னவிலை கொடுத்தேனும் இவ்இரகசிய திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனர். இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற [...]

மன்னார் மீனவர்களுக்கான கெடுபிடிகள் யாவும் நீக்கப்பட்டுள்ளது -அமைச்சர் ரிசாத் பதியுதீன்! // மன்னார் மாவட்டத்தில் 15 கிராமங்களுக்கு நிதியொதுக்கீடு

மன்னார் மீனவர்களுக்கான கெடுபிடிகள் யாவும் நீக்கப்பட்டுள்ளது -அமைச்சர் ரிசாத் பதியுதீன்! // மன்னார் மாவட்டத்தில் 15 கிராமங்களுக்கு நிதியொதுக்கீடு

மன்னார் மாவட்டத்தில் மீள் எழுச்சித் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யும் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான இந்நிகழ்வுகள் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்றையதினமும் இடம்பெறுகின்றது. முதற்கட்டமாக இந்தத் திட்டத்திற்கு 12கோடிரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த நிகழ்வுகளில் மன்னார் அரச திணைக்கள மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மீனவர்கள் தொழிலுக்கு [...]

ஐ.தே.கட்சி, ஜே.வி.பி மற்றும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் -வெளியுறவமைச்சர்! // பொத்துவில் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருந்த மாணவரின் சடலம் தேடப்படுகிறது

ஐ.தே.கட்சி, ஜே.வி.பி மற்றும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் -வெளியுறவமைச்சர்! // பொத்துவில் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருந்த மாணவரின் சடலம் தேடப்படுகிறது

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக புலிளுக்கு ஆதரவு வழங்கிவரும் வெளிநாட்டு தரப்பினருடன், ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் உறவுகளைப் பேணிவருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். அண்மையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கை தேசியக்கொடி எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்கள் அம்பலாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள சில கடும்போக்குடைய குழுக்கள் நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்வகையில் செயற்பட்டு [...]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு! // ஜனாதிபதியின் ரஷ்ய விஜயமும் சந்திப்புகளும்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு! // ஜனாதிபதியின் ரஷ்ய விஜயமும் சந்திப்புகளும்..!

ரஷ்யாவுக்கு மூன்றுநாள் விஜயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர் முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர்செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார். ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின்மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது. பலமாத [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

சுதந்திர தினத்திற்காக மூடப்பட்ட சில பாடசாலைகளை திறக்க ஏற்பாடு- சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி நகரின் முக்கிய பாடசாலைகள் சில மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளையதினம் திறக்கப்படவுள்ளன. சுதந்திரதினக் கொண்டாட்டங்களின்போது கண்டி நகரின் பாதுகாப்புக்காக வெளியிடங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் கண்டி நகரின் முக்கிய பாடசாலைகளில் தங்கியிருந்ததன் காரணத்தினால் அப்பகுதியின் 53பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இவ்வாறு மூடி வைக்கப்பட்டிருந்தவற்றில் சில பாடசாலைகளே நாளை திறக்கப்படவுள்ளன.
பொகவந்தலாவை தோட்ட ஆலயங்களில் கொள்ளை- நுவரெலியா [...]

உலகத் தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் -சிங்கப்பூர் சிவகாமிதேவி! // யாழ்ப்பாணம் காரைநகரில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள்..!

உலகத் தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் -சிங்கப்பூர் சிவகாமிதேவி! // யாழ்ப்பாணம் காரைநகரில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள்..!

யாழ்ப்பாணம் காரைநகரில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் நடைபெற்றதாக பரவிய செய்தியை அடுத்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, காரைநகர் மேற்கு வீதியில் வேம்படிப் பகுதியில் பாடசாலைவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கடத்தும் முயற்சி நடைபெற்றதாகவும் சிறுவர்கள் கூக்குரலிட்டதனால் அம்முயற்சிகள் தோல்விடைந்ததாகவும் தெரியவருகின்றது. இதேவேளை சம்பவம் தொடர்பாக எவரும் கிராம சேவையாளரிடமோ அல்லது வேறு எவரிடமோ முறையிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் மேற்படி சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறியாத நிலையிலும் அச்சமடைந்த [...]

வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன -யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம்! // பணிகளை முன்னெடுக்க சீனா 350மில்லியன் டொலர் நிதியுதவி

வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன -யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம்! // பணிகளை முன்னெடுக்க சீனா 350மில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரான உட்கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு, 350மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா நிதியதவியாக வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி கூ ஜின்ரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள சுதந்திரதினச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் எங்களின் நல்ல பங் காளிகள். அந்த நாட்டுடன் அடுத்த வருடங் களில் உறவுகளை அதிகரிக்கவுள்ளோம். இலங்கையின் வளர்ச்சிக்கு சகல விதமான ஒத்துழைப்பையும் சீனா வழங்கும். யுத்தகாலத்தில் சேதமடைந்த வீதிகள் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை புனரமைக்க 350மில்லியன் [...]

யாழ். கே.கே.எஸ் வீதி விஸ்தரிப்பு தொடர்பில் சகல தரப்புடனும் கலந்துரையாடிய பின்பே தீர்மானிக்கப்படும் -வடமாகாண ஆளுநர்! // தற்போதைய நிலையில் அவசரகால நீடிப்பு தேவையற்றது -பவ்ரல்!

யாழ். கே.கே.எஸ் வீதி விஸ்தரிப்பு தொடர்பில் சகல தரப்புடனும் கலந்துரையாடிய பின்பே தீர்மானிக்கப்படும் -வடமாகாண ஆளுநர்! // தற்போதைய நிலையில் அவசரகால நீடிப்பு தேவையற்றது -பவ்ரல்!

நீண்டகாலமாக இருந்துவரும் அவசரகால சட்டத்தை நாடாளுமன்றம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. நபர்களை பிடித்து வைத்திருப்பதற்கு இந்த அவசரகால சட்டம் பெரும் அதிகாரத்தை கொடுக்கிறது. புலிகள் மீண்டும் உருவாகாமல் இருக்க இந்த சட்ட நீட்டிப்பு அவசியம் என பிரதமர் கூறியுள்ளார். இந்த சட்டம்மூலம், தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியை கொல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் எதிர்கட்சி ஆதரவாளர்களையும் அரசு பிடித்து வைத்துள்ளது. ஆனால் அரசின் குற்றச்சாட்டை எதிர்கட்சியினர் நிராகரித்துள்ளனர். நாடாளுமன்றத்தால் அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளதை பெப்ரல் எனப்படும் நியாயமான நேர்மையான [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

கண்டி பல்லேகலயில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் நான்காம் நாளான இன்றையதினம் 3லட்சத்து 20ஆயிரம் பேர்வரை கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப் படுகின்றது. கண்டியில் இடம்பெற்ற கண்காட்சிகளில் அதிகூடிய மக்கள் கலந்து கொண்ட கண்காட்சி நாளாக இன்றையதினம் பதிவாகியுள்ளதாக கண்டி கலை, கலாச்சாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாட்சியைப் பெற்றுக் கொள்வதற்கு தந்திரோபாயமான வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது. [...]

லசந்தவின் படுகொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கைதான சந்தேகநபருக்கு அழுத்தம் -சரத் பொன்சேகா குற்றச்சாட்டு! // ஆளும்கட்சி சரத் பொன்சேகாவை தடுத்து வைக்க முயற்சி -எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

லசந்தவின் படுகொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கைதான சந்தேகநபருக்கு அழுத்தம் -சரத் பொன்சேகா குற்றச்சாட்டு! // ஆளும்கட்சி சரத் பொன்சேகாவை தடுத்து வைக்க முயற்சி -எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

இலங்கையின் இராணுவநீதிமன்றம் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவின் மீது பலகுற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை தடுத்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளது இந்த முயற்சி குற்றப்புலனாய்வுப் பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையைப்பெற்ற பின்னர் இலங்கையின் சாதாரண சட்டத்தின் கீழ் சரத்பொன்சேகாவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமையை அடுத்து மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தை கவிழ்ப்பது மற்றும் ஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சரத்பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ளன எனினும் இதனை மறுத்துள்ள சரத்பொன்சேகா அரசாங்கம் தன்னை பழிவாங்கவே இவ்வாறான [...]

ரிஎம்விபி பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சாத்தியம்..! // ரிஎம்விபி கட்சியில் இணையப் போவதில்லை -சிவகீதா அறிவிப்பு! // ரிஎம்விபி கட்சியின் கூட்டம் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் நிறைவு! // வெற்றிலையா? படகா?? -ரி.எம்.வி.பியின் நிலைப்பாடு விரைவில் வெளிவரும்..

ரிஎம்விபி பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சாத்தியம்..! // ரிஎம்விபி கட்சியில் இணையப் போவதில்லை -சிவகீதா அறிவிப்பு! // ரிஎம்விபி கட்சியின் கூட்டம் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் நிறைவு! // வெற்றிலையா? படகா?? -ரி.எம்.வி.பியின் நிலைப்பாடு விரைவில் வெளிவரும்..

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கூட்டம் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சரும், கட்சியின் தலைவருமான பிள்ளையானின் தலைமையில் நேற்றையதினம் கூட்டம் நடைபெற்றது. தேர்தலில் சுயாதீனமாக களமிறங்குவதா அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதா என்ற முக்கிய பிரச்சினைக்கு நேற்றைய கூட்டத்தில் தீர்வு காணப்படவில்லை. அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென கட்சியின் [...]

யானை - அன்னம் சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே முரண்பாடு!! // ஐ.தே.முன்னணி சரத்பொன்சேகா பேச்சு தீர்மானமின்றி நிறைவு!

யானை – அன்னம் சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே முரண்பாடு!! // ஐ.தே.முன்னணி சரத்பொன்சேகா பேச்சு தீர்மானமின்றி நிறைவு!

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்ததாகத் தெரிய வருகிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதித் தலைவராக அந்த முன்னணியில் இணைத்துக் கொள்வதற்காக இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையின்போது ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்த யோசனைகளை சரத்பொன்சேகா நிராகரித்துள்ளதுடன் அதுகுறித்து ஜே.வி.பியுடனும் பேசவேண்டுமெனக் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அதன்தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் கரு [...]

தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வரும் பெரும்பான்மையின வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாட்டம்! // யாழ். மாநகர முதல்வர் ஊடகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல்!

தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வரும் பெரும்பான்மையின வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாட்டம்! // யாழ். மாநகர முதல்வர் ஊடகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல்!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் உதயன் சுடரொளி ஆசிரியர் வித்தியாதரனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழப்பாணத்திலிருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஊடகச் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் தென்னிலங்கை வீதியோர வர்த்தகர்களை ஊக்குவிப்பதில் யாழ் மாநகரசபை நிர்வாகம் முழுஅளவில் செயற்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் குடாநாட்டிலிருந்து வெளிவரும் உள்ளுர் நாளிதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதனையடுத்து ஆளும் [...]

இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக வெளியான குற்றச்சாட்டை மறுக்கிறார் அமைச்சர் முரளிதரன்! // ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை சட்டத்திற்கு முரணான வகையில் இடைநிறுத்த முடியாது

இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக வெளியான குற்றச்சாட்டை மறுக்கிறார் அமைச்சர் முரளிதரன்! // ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை சட்டத்திற்கு முரணான வகையில் இடைநிறுத்த முடியாது

தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மறுத்துள்ளார். தம்மை ஐ.நா.சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மேட் அவர்களைச் சந்தித்தபோது, இனியபாரதி அவ்வாறான சிறுவர்களை படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை அவருக்கு தெரிவித்ததாக அமைச்சர் முரளீதரன் குறிப்பிட்டுள்ளார். தாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், சிறுவர்களை தமக்கு [...]

பொதுத்தேர்தலில் ஆளும் அரசுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்! // மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு வாக்களித்த அனைவருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு!

பொதுத்தேர்தலில் ஆளும் அரசுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்! // மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு வாக்களித்த அனைவருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு!

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்கீழ் நேற்று மன்னார் சென்றிருந்த அமைச்சர் வாக்களித்த அனைத்து மக்களிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதன்போது நேற்றுக்காலை 10 மணிமுதல் இரவு 11மணிவரை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. உப்புக்குளம், பள்ளிமுனை, பனங்கட்டிக்கோட்டு, மூர்வீதி, தோட்ட வெளி, புதுக்குடியிருப்பு, காட்டாஸ்பத்திரி , பேசாலை முருகன்கோவில், துள்ளுக்குடியிருப்பு, தலைமன்னார் ஆகிய கிரமங்களுக்குச் சென்று மக்களுக்கு அமைச்சர் [...]

கண்டி பள்ளேகலயில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்றுவரை சுமார் 20லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளிப்பு! // கண்காட்சி பார்க்க வந்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

கண்டி பள்ளேகலயில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்றுவரை சுமார் 20லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளிப்பு! // கண்காட்சி பார்க்க வந்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

கண்டி பள்ளேகலயில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்றுவரை சுமார் 20லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனரென நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி சுதந்திர தினத்தன்று (4ம் திகதி) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விளக்கும் சுமார் 1000 காட்சிக்கூடங்கள் அமைக் கப்பட்டுள்ளன. மக்கள் முண்டியடித்து கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர். பாதுகாப்பு தொடர்பான காட்சிக்கூடங்களில் மக்களின் ஆர்வம் கூடுதலாக [...]

இலங்கையுடனான அமெரிக்காவின் உறவுகள் தொடர்ச்சியாக பேணப்படும் -ஜனாதிபதி பரக் ஒபாமா! // பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமனம்!

இலங்கையுடனான அமெரிக்காவின் உறவுகள் தொடர்ச்சியாக பேணப்படும் -ஜனாதிபதி பரக் ஒபாமா! // பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமனம்!

இலங்கை அரசாங்கத்துடனான அமெரிக்காவின் உறவுகள் தொடர்ச்சியாக பேணப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1789ம் ஆண்டுமுதல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் [...]

மூடப்பட்டுள்ள கண்டி பிரதேச பாடசாலைகளில் 14இனை திறப்பதற்கு ஏற்பாடு! // சக்தி ரிவி சிறீரங்கா பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்ட விடயமாக பிரதான சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை!

மூடப்பட்டுள்ள கண்டி பிரதேச பாடசாலைகளில் 14இனை திறப்பதற்கு ஏற்பாடு! // சக்தி ரிவி சிறீரங்கா பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்ட விடயமாக பிரதான சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை!

சக்தி ரிவி மின்னல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜே.சிறீரங்காவின் பாதுகாவலர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பான பிரதான சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து வெளியேறி மறைந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சரணடைந்தவர் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹற்றன் நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜே.சிறீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கண்டி பிரதேச பாடசாலைகளில் 14பாடசாலைகளை திங்கள்முதல் [...]

கம்பளை குண்டுத் தாக்குதல் பிக்குட்பட இருவர் கொலை விடயமாக மேலுமொருவர் கைது! // சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை எரிக்க முயன்றவர் லண்டனில் கைது

கம்பளை குண்டுத் தாக்குதல் பிக்குட்பட இருவர் கொலை விடயமாக மேலுமொருவர் கைது! // சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை எரிக்க முயன்றவர் லண்டனில் கைது

இலங்கையின் சுதந்திர தினமாக கடந்த 04ம் திகதி லண்டனிலுள்ள இலங்கை உயர்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் தேசியக் கொடியினை எரிக்க முயன்ற குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் லண்டனில் புலி ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். கொடிகளை எரிக்க முயன்ற நிலையில் பிரித்தானியப் பொலீசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கம்பளை தெம்பிலிகலை பகுதியில் தேர்தல் தினத்தன்று அன்றுகாலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவர் [...]

ஏழாலை பாடசாலை மாணவரைக் காணவில்லையென முறைப்பாடு! // கேகாலை ரம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

ஏழாலை பாடசாலை மாணவரைக் காணவில்லையென முறைப்பாடு! // கேகாலை ரம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

கேகாலை ரம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். இவர் இன்றுமுற்பகல் உயிரிழந்துள்ளதாக ரம்புக்கனை பொலிசார் தெரிவித்துள்ளனர். ரம்புக்கணையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர் காயமடைந்த ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் ரம்புக்கனை பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த [...]

ரஸ்ய விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு! // ஜனாதிபதி இன்று மூன்றுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா பயணம்! // எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும்கட்சி அழைப்பு

ரஸ்ய விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு! // ஜனாதிபதி இன்று மூன்றுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா பயணம்! // எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும்கட்சி அழைப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9ம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடெவ்வைச் சந்திக்கும் ஜனாதிபதி அந்நாட்டின் கடன்திட்டம் ஒன்று குறித்து பேச்சு நடத்தவுள்ளார். மகிந்த ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைகிறது. பிரத்தியேக விமானம் ஒன்றில் இவர் இன்று காலை [...]

கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல்நிலை உக்கிரம்! // இடைவிலகிய மற்றும் பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்து வெளியெறிய இளைஞர்களின் நன்மை!

கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல்நிலை உக்கிரம்! // இடைவிலகிய மற்றும் பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்து வெளியெறிய இளைஞர்களின் நன்மை!

தேசநிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை மேலும் உக்கிரமடையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இரகசியமாக எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளதாக கருணாதரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். இம்முறை பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்து போட்டியிடக் கூடிய சாத்தியம் [...]

வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை! // இராணுவத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசசார்பற்ற அமைப்புகள் தடை செய்யப்படும்.. -அரசாங்கம் தெரிவிப்பு

வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை! // இராணுவத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசசார்பற்ற அமைப்புகள் தடை செய்யப்படும்.. -அரசாங்கம் தெரிவிப்பு

இராணுவத்திற்கு எதிராக போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் உள்நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது சரணடைந்த விடுதலைப்புலிகளை படையினர் படுகொலை செய்ததாக சில அரசசார்பற்ற நிறுவனங்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு;க்களின் காரணமாக இராணவத்திற்கு வழங்கப்படவிருந்த வெளிநாட்டு பயிறிசிகள் ரத்து செய்யப்படவுள்ளன. ஒவ்வொரு வருடமும் இலங்கை படையினருக்கு வெளிநாடுகளில் பயிற்சிகளுக்காக அழைப்பு விடுக்கப்படும் அதேவேளை இம்முறை அவ்வாறன எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது சில அரசசார்பற்ற [...]

கோபத்தலாவை மிருக வளர்ப்பு பண்ணையாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்! // அவுஸ்திரேலியா சென்ற 45இலங்கைத் தமிழர்கள் படகுடன் மீட்பு!

கோபத்தலாவை மிருக வளர்ப்பு பண்ணையாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்! // அவுஸ்திரேலியா சென்ற 45இலங்கைத் தமிழர்கள் படகுடன் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச்சென்ற நிலையில் 45 இலங்கைத் தமிழ் அகதிகள் இன்றுபகல் காப்பாற்றப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகாமையில் படகொன்றில் சென்ற நிலையில் படகில் எரிபொருள் தீர்ந்ததுடன், உணவு மற்றும் நீர் அன்றி அவலக்குரல் எழுப்பிய நிலையில் காப்பாற்றப் பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த இலங்கையர்கள் கடந்தமாதம் 20ம் திகதி இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டுள்ளதுடன், நான்கு நாட்களுக்கும் மேல் உணவு மற்றும் நீரின்றி அவதியுற்றுள்ளதாகவும், அவர்களுக்கு [...]

கருணாவின் தளபதி இனியபாரதி சிறுவர்களை படைகளில் சேர்க்கிறார்.. -ஐ.நா பிரதிநிதி தெரிவிப்பு (விரிவான செய்தி)! // ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்காத நிலை!

கருணாவின் தளபதி இனியபாரதி சிறுவர்களை படைகளில் சேர்க்கிறார்.. -ஐ.நா பிரதிநிதி தெரிவிப்பு (விரிவான செய்தி)! // ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்காத நிலை!

கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் கருணாவின் தலைமையில் இயங்கும் அணியினரின் தளபதி இனியபாரதி சிறுவர்களை படைக்கு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி மேலும் தெரிய வருகையில் சிறுவர்களும் ஆயுத பயன்பாடும் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பற்றிக் கம்கேட் தமது இலங்கை விஜயம் நிறைவுற்று இரண்டு மாதங்களுக்கு பின்னர் தற்போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உபகுழுவுக்கு தமது அறிக்கையை சமர்பித்துள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இதில் கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் [...]

இளைஞர்களை எதிர்காலத்தில் அரசியல் தலைவர்களாக்க வேண்டும்- பிரசாந்தன்! // ரி.எம்.வி.பி உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்! // அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08பேர் காயம்

இளைஞர்களை எதிர்காலத்தில் அரசியல் தலைவர்களாக்க வேண்டும்- பிரசாந்தன்! // ரி.எம்.வி.பி உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்! // அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08பேர் காயம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும் இக்கலந்துரையாடலில் கட்சியின் முக்கஸ்தர்களும், புத்திஜீவிகளும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எடுக்க வேண்டிய இறுதித் தீர்மானங்கள் தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இளைஞர்களுக்கே அதிக வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களாக ஆக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட [...]

சீனாவில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட யாழ்வாசி கைது! // ஜனாதிபதியின் மகனும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட வேண்டும்.. ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை!

சீனாவில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட யாழ்வாசி கைது! // ஜனாதிபதியின் மகனும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட வேண்டும்.. ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை!

சீனாவிலிருந்து இரு கொரிய நாட்டவர்களுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை இலங்கை குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ராஜேந்திரன் கருணாகரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார். சந்தேகநபர் சீனாவிடமிருந்து விடுதலைப்புலிகளின் கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்றும் அவரை தொடர்ந்து விசாரணை செய்து கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் நீதவானிடம் தெரிவித்த குற்றப்புலனாய்வு துறையினர் சந்தேகநபரை தொடர்ந்தும் [...]

ஈபிஆர்எல்எப் தோழர் இளங்கோ மறைவு!!

ஈபிஆர்எல்எப் தோழர் இளங்கோ மறைவு!!

கடந்து வந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோ சாவக்கச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ(கணபதிபிள்ளை ரவீந்திரன்) தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர். யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர் அவர். மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை வடிவங்களின் ஊடான பிரச்சாரங்களை தனது சக தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர். வீதி நாடகங்களை நடாத்தியவர். தனது நெஞ்சுக்கு நீதியாக [...]

இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்கள்! // மன்னாரில் மீள்குடியேறியோரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்கள்! // மன்னாரில் மீள்குடியேறியோரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப் பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் மன்னார் மாவட்ட அதிகாரிகளுக்குமிடையில் இன்றுமுற்பகல் மன்னார் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கென [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

கொழும்புத்துறை கொலை தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவர் கைது- யாழ் கொழும்புத்துறையில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற கொடுரமான கொலைச் சம்பவம் தொடர்பாக கொலையுண்ட எஸ்.சிவராசாவின் மனைவி உட்பட இருவரை யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இக்கொலையினால் கொழும்புத்துறையே கதிகலங்கியதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10வயதான சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணம்- யாழ் குடத்தனைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பட்டம்விட்டு விளையாடியபோது 10வயதான வரதராசா வசந்தராஜ் எனும் சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் நிதியுதவியின்கீழ் மன்னார் சமாதானப்பாலம் [...]

தேர்தலைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சியை அரங்கேற்றும் முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டார் -அரசாங்கம்! // எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள் பழிவாங்கப்படக் கூடாது -பவ்ரல்-

தேர்தலைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சியை அரங்கேற்றும் முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டார் -அரசாங்கம்! // எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள் பழிவாங்கப்படக் கூடாது -பவ்ரல்-

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சியை அரங்கேற்றுவதற்கான முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரின் சகோதரர்களான கோதாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் படுகொலை செய்த பின்னர் சகல அரசாங்க நிறுவனங்களிலும் போல்ஷேவிக் குழுக்களை நியமிக்கும் திட்டத்தை பொன்சேகா கொண்டிருந்ததாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அநுர பிரியதர்சன யாப்பா நேற்று செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோஷலிசக் கட்சியிலிருந்த கடும் [...]

பிரபாகரனின் காலத்தில் கூட மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை.. தற்போது அரசிடமிருந்து மரண அச்சுறுத்தல் வருகிறது -ஜே.வி.பி! // யாழ். போதனா வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையத்தை புனரமைக்கவென 5லட்சம் ரூபாய் நிதியுதவி

பிரபாகரனின் காலத்தில் கூட மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை.. தற்போது அரசிடமிருந்து மரண அச்சுறுத்தல் வருகிறது -ஜே.வி.பி! // யாழ். போதனா வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையத்தை புனரமைக்கவென 5லட்சம் ரூபாய் நிதியுதவி

பிரபாகரனின் காலத்தில்கூட அவரிடமிருந்து மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாத அரசியல்கட்சித் தலைவர்களுக்கு தற்போது அரசிடமிருந்து மரணஅச்சுறுத்தல்கள் வருவதாகத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பிரசாரச்செயலரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி சிறப்புரிமைகளை அனுபவிப்பதற்காக தற்போது அரசு முன்னெடுத்துள்ள இனவாத கலாசாரத்தை முறியடிப்பதற்கான சவாலை ஜே.வி.பி. கையிலெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தேர்தலுக்கு முன் அரசஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட இடி அமீன், ஹிட்லர் ஆட்சி தற்போது ஆரம்பமாகியுள்ளது. மடமைத்தனமானவர்களிடம் [...]