பட்டிருப்புப் பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்தில் பெரும் சிரமங்கள்
புலிகளின் பகுதிக்குள் செல்லும் அம்பாறை மாவட்டத்தின் பட்டிருப்புப் பாலம் இன்றுமுதல் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புலிகளின் பகுதிக்கு செல்லும் அனைத்து பாலங்களும் மூடப்பட்டபோதிலும் பட்டிருப்பு பாலம் இதுவரை போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலிட உத்தரவின்பேரில் அதுவும் இன்றுமுதல் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரியவந்துள்ளது.