இந்தவாரம்… புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களுடன்… ஓர் அலசல்!! (PART-4) –உண்மைவிளம்பி

கடந்த 13.01.2008 அன்றில் புலியாதரவாளர்களால் இயக்கப்படும் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு ப.நடேசன் ஐயா அவர்கள் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார் அதன் தொடர்ச்சி.. பகுதி-4 (இவரின் செவ்வியை புதினம் இணையம் வெளியிட்டுள்ளது)
கேள்வி: அரசியல் அமைப்பின் 13வது திருத்தசட்டத்திற்கு உற்பட்ட ஒரு அதிகார தீர்வுதிட்டம் என்று ஒரு புதிய அத்தியாயம், புதுக்கதை சோடிக்கப்படுகிறது. இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு இது சரியான வழியா?
ப.நடேசன் பதில்கள்: உண்மையில் இனப்பிரச்சனையை தீர்பதற்கு அவர்கள் இன்னும் சரியான வழிக்கு வரவில்லை 13வது சரத்தின் அடிப்படையிலான தீர்வு என்பது தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்று முழுவதாக நிறைவுசெய்ய கூடிய வகையில் இருக்காது. அது மட்டுமல்ல, 13வது சரத்தின் அடிப்பiயிலான தீர்வு விடயத்தில் ஒரு சுமூகமான முடிவை எடுப்பதற்கு கூட அங்கே முடிவெடுக்கின்ற அனைத்து கட்சிகளிடம் ஒருமித்த கருத்துக்கள் இல்லை. முரண்பாடுகள் ஏராளம் இருக்கின்றன.
நமது விளக்வுரை- புலிகளை பொறுத்தவரை எப்பொழுதுமே தமிழர்களுக்கு கிடைக்கக் கூடிய எந்தவொரு அரசியல் தீர்வு திட்டத்தையுமே எதிர்த்து தான் கொடி பிடிப்பார்கள். இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு சரியான வழிக்கு அவர்கள் வரவில்லையாம் என்று ப.நடேசன் சொல்லுகிறார். அப்படி என்றால் இவர்கள் சொல்லுகின்ற சரியான வழிமுறை தான் என்னவென்று எடுத்து சொல்லலாமே?
இலங்கையரசினால் முன்வைக்கின்ற தீர்வுதிட்டங்களை பற்றி கதைப்பதற்கு இவர்கள் யார்? இதில் இவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது, 13வது சரத்தின் அடிப்படையிலான தீர்வுதிட்ட நகல் சர்வகட்சி குழுவினரால் சமர்பிக்க முன்பே இந்த தீர்வுதிட்டம் முற்று முழுதாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்யாதாம் என்று புலம்பும் ப.நடேசன் அவர்கள் இந்த தீர்வுதிட்டத்தில் தமிழர்களை திருப்தி செய்யக் கூடிய அம்சங்கள் என்னென்ன உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தவரா? இல்லையே அப்படியிருக்க இவர் எப்படி இப்படிபட்ட கருத்தை கூறுவார்??
தமிழர்களின் அபிலாசைகள், தமிழர்களின் அபிலாசைகள் என சதாகாலமும் புலி பிரமுகர்களும், புலி பினாமி கூத்தமைப்பாரரும், புலிபினாமி ஊடகங்களும் சொல்லிக் கொண்டும், அறிக்கைகளாக பிரசுரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழர்களின் அபிலாசைகள் எவைகள் என்பதை இவர்கள் எப்பொழுதாவது குறித்து காட்டியுள்ளார்களா? புலிகளின் அபிலாசைகள் தமிழர்களின் அபிலாசைகள் அல்ல என்பதை இந்த பயங்கரவாத புலிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகள் வேறு தமிழர்கள் எதிர்பார்கின்ற அபிலாசைகள் வேறு.
தமிழர்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகள் என்பது பேச்சுரிமை, ஐனநாயகம், உரிமையுடன் கூடிய சுதந்திரமாக நடமாடக்கூடிய, கல்விகற்க கூடிய, தொழில் செய்யக் கூடிய, என்று எல்லாவித அடிப்படை மனிதவுரிமைகளுடன் கூடியதான ஓர் தன்னாட்சி அதிகார, நிர்வாக அலகுகளை தன்னகத்தே கொண்டதான ஓர் ஆட்சியமைப்பு முறையை தான் தமிழர்கள் விரும்புகிறார்கள். அது மாகாண சுயாட்சி அமைப்பு முறையாக இருந்கலாம் அல்லது மாநில சுயாறட்சியமைப்பு முறையாக இருக்கலாம்.
ஆனால் புலிகளின் அபிலாசைகள் என்பது பிரபாகரன் என்கின்ற ஒட்டுமொத்த பயங்கரவாத உருவமைப்பின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்தமான ஈழத் தமிழர்களையும் அடிமைப்படுத்தி வைத்து கொண்டு, பேச்சுரிமையையோ, ஐனநாயக உரிமைகளையோ, அல்லது எந்தவிதமான அடிப்படை மனித உரிமைகளையோ தமிழர்களுக்கு கொடுக்காமல், ஓர் பயங்கரவாத காட்டாச்சியை தமிழர்களின் மேல் பிரயோகித்துக் கொண்டு தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும். இதுதான் புலிகளின் அபிலாசைகள் ஆகும். இந்த வகையான ஓர் ஆட்சியை அமைப்பு முறையை பகுத்தறிவுள்ள எந்த ஒரு தமிழனும் அவனுடைய உடலில் உயிர் இருக்கும்வரை விரும்ப மாட்டான் என்பதை புலிப்பினாமிகளும் புலியூடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஐந்தறிவு படைத்த கூட்டங்கள் வேண்டுமானால் இந்த பயங்கரவாத ஆட்சி அபிலாசைகளை விரும்புவாhர்கள்.
கேள்வி- இன்னும் ஒருவிடயத்தை புலம்பெயர்பெயர்ந்த மக்களின் சார்பில் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதாவது வன்னியில் வான் குண்டுவீச்சுக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வான்படையின் வானூர்திகள் அங்கு வட்டமிட்டபடி யிருக்கின்றன இத்தைய தாக்குதலின் போது தான் தமிழ்செல்வன் அண்ணாவையும் நாம் இழந்துள்ளோம். எனினும் அண்மைக் காலங்களில் கிளிநொச்சி பகுதிகளில் நடைபெறும் வைபவங்களின் நிழல்படங்களை பார்க்கும்போது தலைவர்கள், தளபதிகள் ஒன்றுகூடி நிற்கின்றனர் என்கின்ற ஆதங்கம் புலம்பெயர் தமிழர்களிடம் எழுந்துள்ளது. இதுதொடர்பில் தங்களின் கருத்து என்ன?
ப.நடேசன் பதில்- நாங்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே இவ்வாறான நிகழ்சிகளில் கலந்து கொள்கிறோம். அது மட்டுமல்ல நாங்கள் ஒரு விடுதலை இயக்கம், மக்கள் இயக்கம், மக்களை பிரதிநித்துவப் படுத்துபவர்கள் அதனால் மக்களிடையே சென்று ஏராளமான விடயங்களை மக்கள் மத்தியிலே செய்ய வேண்டியுள்ளது. ஆகையால் தான் பிரதான பொறுப்பாளர்கள் தளபதிகள் வெளிப்படையாக வந்து நிகழ்வுகளில் பங்குபற்றி மக்கள் தொடர்பான சில உரைகளை ஆற்றுகின்றனர்.
நமது விளக்கவுரை- நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் கேள்விகேட்பவர் புலம்பெயர் மக்கள் சார்பில் கேள்வி கேட்பதற்கு இவர் யார்? புலம்பெயர் சார்பில் இவர் கேள்வி கேட்பதற்கு இவர் என்ன புலம்பெயர் வாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியா? அதைவிட புலித்தலைவர்களும், புலித்தளபதிகளும் விமானபடைக் குண்டுவீச்சால் செத்துப் போயிருவார்கள் என புலம்பெயர் வாழ் மக்கள் ஆதங்கப்படுகிறார்களாம் என்று சொல்லுகிறார் இதுதான் உலகமகா Nஐhக். தான் என்ன நினைக்கறாரோ அதை புலம்பெயர் மக்கள் எல்லோரும் நினைப்பதாக எண்ணி ஆதங்கப்படுகிறார்.
அண்ணா உங்களுக்கு ஒன்று தெரியுமா? உண்மையான தமிழர்கள் நீங்கள் குறிப்பிடுகின்ற தலைவர்களும், தளபதிகளும் எப்ப சிறிலங்கா விமானபடையின் குண்டுத் தாக்குதல்களுக்கு உட்பட்டு இறந்து, ஈழதமிழர்களுக்கு ஓர் விடிவு வராதா? என்று எண்ணி ஒவ்வொரு நாளையும் நகாத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிஞ்சுக்கோங்கோ அண்ணா.
முக்கியமாக வன்னி பொந்துகுள் நச்சு பாம்புகளான பிரபாகரன், பொட்டம்மான், ப.நடேசன் போன்றவர்கள் வாழும் இடங்கள் விமான படையினரின் விமான குண்டுவீச்சுக்கு உட்பட்டு இறந்தால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சந்தோசப்படுவார்கள். ஆனால் உங்களை போன்ற தமிழனையழிக்க பிறந்தவர்கள் தான் இறந்தால் ஆதங்கப்படுவார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறோம்..
அடுத்ததாக ப.நடேசன் அவர்கள் சொல்கிறார், தாங்கள் மக்கள் பிரதிநிதிகளாம் அதனால் தாங்கள் மக்களிடையே வெளியே வந்து மக்களுக்கு ஏராளமான விடயங்களை செய்ய வேண்டியுள்ளதாம் என்கின்றார். அப்படி என்ன விடயங்களுக்களை அங்குள்ள மக்களுக்கு இவர்கள் செய்கிறார்கள் அரிசி, மா, சீனி, பருப்பு போன்ற சாமான்களை மக்களுக்கு கொண்டு போய் கொடுக்கிறாரோ? அப்படி எதாவது மக்களுக்கான விடயங்களை இவர்கள் செய்திருந்தால் புலிபினாமிகளின் ஊடகங்களில் பெரிய படத்தோடு அதை பிரசுரித்திருப்பாளர்களோ!
சில நேரங்களில் இப்படியிருக்கலாம் அரசாங்கம் கொடுக்கின்ற உலர்உணவுப் பொருட்களை மக்களிடம் இருந்து பறித்துக் கொண்டு போக மக்களிடையே வெளியே வந்திருப்பார்கள் அல்லது யாற்றையாவது பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போக மக்களிடையே வெளியே வந்திருப்பார்கள் அந்த விடயங்களை தான் அவர்கள் செய்வார்கள் வேறு என்ன செய்தவர்கள்..
அதோடு தாங்கள் தகுந்த பாதுகாப்பை ஏற்பாடு செய்து போட்டு தான் வெளியில் வருகிறார்களாம் என்கிறார். அப்படி என்றால் இவர்கள் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பை செய்து வைத்திருப்பவர்கள். அங்கு வாழும் மக்களுக்கு இவர்கள் என்ன பாதுகாப்பை கொடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை கேள்வி கேட்ட புலிபினாமி கேக்கவில்லையே? மக்களாவது மண்ணாங்கட்டியாவது எங்கேயாது மக்கள் குடியிருப்பு பகுதிகளில், மக்கள் கொஞ்சபேரை கட்டாயமாக வரவழைத்து தங்களுக்கு பாதுகாப்பாக அரண் அமைத்துக் கொண்டு அவர்களின் பயங்கரவாத கொடியை ஏற்றி வைத்து விட்டு, தலைவர் அதை சொன்னார், தலைவர் இதை சொன்னார் என்ற எதையாவது புழுகி, புலம்பி விட்டு அதைபடம் பிடித்து புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படுகின்ற புலியூடகங்களுக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டியது தான்.
புலியூடகங்கள் அதை ஏதோ செவ்வாய் கண்டத்திலிருந்து வந்த புதினம் மாதிரி பிரசுரிப்பார்கள். அதை புலம்பெயர் புலிப்பினாமிகள் பார்த்து விட்டு புளங்காகிதம் (மகிழ்ச்சி) கொள்வார்கள். இவர்கள் மக்கள் பிரதிநிகள் என்றால் இவர்களின் தலைவர் மட்டும் ஏன் மக்களிடையே தோன்றுவதில்லை என்பதை நாங்கள் அறியலாமா? அவர் வெளியே வராமல் இருப்பது தான் நல்லது ஏன்என்றால் பொந்துக்கள் இருந்து கொண்டே அவர் கக்குகின்ற நஞ்சே நாளாந்தம் எத்தனையோ உயிர்களை பலி எடுக்கிறதென்றால், தப்பிதவறி அவர் வெளியில் வந்து அவர் நஞ்சை கக்க வெளிக்கிட்டால் சிலநேரம் ஒரேநேரத்தில் ஆயிரம் பேரளவில் சாக வேண்டி வரும் அதனால் அவர் வெளியில் வராமல் இருப்பதே மேல்.
கேள்வி- கிழக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. யாழ்பாண பகுதி தொடர்ச்சியாக படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மன்னாரில் கடுமையான மோதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. வன்னியையும் கைப்பற்றுவதற்கும் இராணுவத்தினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஏன் பாரிய தாக்தலை ஒன்றையும் நடத்தவில்லை? அல்லது ஏன் வன்னிபெரும் நிலப்பரப்பை படையினர் கைப்பற்றும் முன்னெடுப்புக்களை முறியடிக்கும் சமரைகூட நீங்கள் நடத்தவில்லை என்ற கவலை தமிழ் மக்களிடம் காணப்படுகிறது. இது சரியான ஆதங்கமா?
கேள்விக்கு நமது விளக்கவுரை- வெளிநாட்டில் வாழும் இந்த கேள்வி கேட்பவர் போன்ற புலிபினாமிகள் போன்றவர்களால் தான் நாட்டில் சண்டை நடந்து கொண்டிருக்கிறது இந்த மாதிரியன மனிதர்களுக்கு புலிகள் நாட்டில் பயங்கரமான செயல்களை செய்து பயங்கர உயிர்சேதங்களை சிங்கள இராணுவத்தினருக்கு ஏற்படுத்த வேண்டும். அப்பதான் இவர்கள் நிம்மதியாக நித்திரை கொள்வார்கள்.
கேள்வியை உற்று கவனியுங்கள் நாட்டில் உள்ள தமிழ்மக்கள், சிங்களவர்கள,; முஸ்லீம்கள் போன்ற மூவினத்தவரும் எவ்வளவோ துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டு வாழ்க்iயை ஓட்டி கொண்டிருக்கிறார்கள் புலிகள் நாளாந்தம் மக்கள் பயணம் செய்யும் பேரூந்துக்களில் குண்டு வைத்து பயணம் செய்யும் பொதுமக்களை பலி எடுக்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து கொண்டு திண்டு கொழுத்து கொண்டு திரியும் பிணம்தின்னிக் கூட்டங்களுக்கு புலிகள் அனுராதபுர அற்றாக்கில் கொண்டு போய் 21பிள்ளைகளை பலி கொடுத்தது போன்று பலபிள்ளைகளை பலி கொடுத்தது இன்னும் பல அற்றாக்குகளை நாட்டில் நடத்தி காட்ட வேண்டும்.
அப்பொழுது தான் ப.நநேசனிடம் கேள்வி கேட்ட மனிதர்கள் போன்ற கேடுகெட்டு மனிதர்கள் சந்தோசம் கொண்டு வாழ்வார்கள். இதையே தான் புலிகளின் வராற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.யோகியவர்கள் அனுராதபுர அற்றாக் நடத்திய பிற்பாடு நிலவரம் நிகழ்ச்சிக்கு செவ்வி கொடுக்கும் போது சொன்னார். நாளாந்தம் எமது போராளிகள் வீரச்சாவு அடைந்து கொண்டிருக்கிறார்கள் (முன்னரங்க காவல் பகுதிகளில்) ஆனால் புலம்பெயர் மக்கள் ஏன் புலிகள் இன்னும் அடிக்காமல் இருக்கிறார்கள் என ஆதங்கம் கொள்கிறார்களாம் அதையிட்டு தான் அனுராதபுர அற்றாக்கை தாங்கள் செய்தவர்களாம் என்கின்றார். அதாவது புலம்பெயர் புலிபினாமிகளுக்காக எதையாவது ஒரு பயங்கரவாத அற்றாக்கை மாதம் ஒருமுறையேனும் செய்து காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் வன்னிப்புலிகள் இன்று இருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் இருந்து ப.நடேசனிடம் கேள்வி கேட்கும் கிரிமினல்கள் ஏன்; தங்களுடைய பிள்ளைகளை கொண்டு போய் வன்னியில் விட்டு பலிகொடுத்து இவர்கள் விரும்புவதை செய்து கொள்ளலாமே? இவற்றுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டினர் தான். பெயருக்கு புலி இயக்கத்தை தடை பண்ணிவிட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலிபினாமிகளான நச்சு பாம்புகளுக்கு பால் ஊட்டி கொண்டிருக்கிறார்கள்.
ப.நடேசன் பதில்- அந்த ஆதங்கம் உண்மையிலேயே எல்லாருக்கும் இயல்பாக வரக்கூடிய ஒன்று தான். போர்நிறுத்த காலத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதற்காக நாங்கள் பொறுமை காத்து வருகிறோம். அது மட்டுமல்ல நாங்கள் எமது மக்கள் மீது பாரிய இராணுவ நடைவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அவற்றை முறியடித்து தகுந்த பாடத்தை புகட்டுவதற்கான பலமான நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை நான் இந்த கட்டத்தில் உங்களுக்கு கூறிகொள்ள விரும்புகின்றேன்.
நமது விளக்கவுரை- ப..நடேசன் அளித்த பதிலை பார்த்தால் நாட்டில் பலபேர் குண்டு வெடித்து சாக வேண்டும் என எல்லாரும் இயல்பாக விரும்புகிறார்கள் என்பது போல் ப.நடேசன் அவர்கள் சொல்ல வருகிறார் போல் தெரிகிறது. பயங்கரவாதிகளும் படிப்பறிவில்லாதவர்களும் தான் இவற்றை விரும்புவார்கள் இந்த வகைப்பட்ட மனிதர்கள் தான் இந்த புலிபயங்கரவாத இயக்கத்தை இயக்குகிறார்கள், இதே வகைக்கு உள்பட்டவர்கள் தான் வெளிநாடுகளிலிருந்து புலிக்கு பணம் கொடுக்கிறார்கள்.
அர்த்தத்தோடு தாங்கள் போர்நிறுத்த காலத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதால் தான் பெரிய தாக்குதல்கள் ஒன்றையும் தாங்கள் நடத்தாமல் இருந்தது மாதிரி சொல்லி கொள்கிறார். இப்படிபட்ட பொய்களை சொல்வதற்கு இவர்களை தவிர வேறு யாருக்குமே வரவே வராது. போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் தான் அனுராதபுர விமானதளத்தை தாக்கினார்கள், கட்டுநாயக்கா விமானதளத்தை தாக்கினார்கள், கொழும்பு புறநகர் பகுதியான நுகேகொடையில் மக்கள் நடமாடும் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்துக்குள் குண்டு வைத்தார்கள், பலாலி விமானப்படைதளம் மீது ஆட்டிலெறி அடித்தார்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மட்டகிளப்புக்கு சென்ற போது அங்குள்ள விமானத்தளத்தின் மீது ஆட்டிலெறி அடித்தார்கள், இப்படி எத்தனையோ தாக்குதல்களை செய்தார்கள் இவைகள் எல்லாம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல்கள் இல்லை தானே? இவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு விழுங்குபவர்களுக்கு பொய் எது உண்மை எது என்று புரிந்து கொள்ளகூடிய அறிவில்லை அவ்வளவே தான்.
ப.நடேசன் அவர்கள் சொல்லுகிறார் நமது இலங்கை இராணுவத்தினர் எம்மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவற்கான ஒரு பலமான நிலையில் தாங்கள் இருக்கிறார்களாம் என்கின்றார். இலங்கை இராணுவம் வன்னியில் உள்ள மக்களை பயங்கரவாதிகளின் பிடிகளிலிருந்து மீட்பதற்கான இராணுவ நடைவடிக்கைகளை தான் மேற்கொள்கிறார்களே ஒழிய, மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை முதலில் ப.நடேசன் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் தான் மக்களை வைத்து தங்கள் பாதுகாப்புக்காக போராடி கொண்டிருக்கிறார்கள். மக்கள் தான் முன்னரங்க காவல் நிலையங்களில் நாளாந்தம் பலியாகி ப.நடேசன் போன்றவர்களை இன்றைக்கு காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். கிழக்கை போன்று புலிகள் விட்டுவிட்டு எங்கேயாவது ஓடிப் போவர்களாயிருந்தால் கிழக்கு மாகாண மக்கள் போல் வன்னிமக்களும் தப்பித்து கொள்வார்கள் என்பதை ப.நடேசன் புரிந்து கொள்வாரா?
தாங்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கான பலத்துடன் இருக்கிறார்களாம் அப்படி என்றால் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடைவடிக்கைகளை எதிர்த்து தாக்கி முறியடித்திருக்கலாமே? இப்பொழுது மட்டும் என்ன நடக்கிறது. இராணுவத்தினரின் வன்னி நிலப்பரப்பின் மீதான இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் அப்பாவி பொதுமக்களை தாக்கும் கோழைத்தனமான நடவடிக்கைகளையும், அப்பாவி பாடசாலை சிறுவர்களை கொண்டு போய் பலி கொடுக்கிறார்கள். இதுதான் அவர்களின் பலமான நிலையாகும்.
உண்மையான தமிழர்கள் இந்த தமிழனையழிக்க பிறந்த புலிக்கிரகங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி… முற்றும்
–புலம்பெயர் தேசத்து அகதியான “உண்மைவிளம்பி”!!