மதவாச்சி சோதனைச் சாவடியினூடாக வடக்கே செல்லும் வாகனங்களை சரியான முறையில் சோதனை செய்யவில்லை…
அனுராதபுரம் மதவாச்சி சோதனைச் சாவடியினூடாக வடக்கே செல்லும் வாகனங்களை சரியான முறையில் சோதனை செய்யவில்லை என்ற காரணத்திற்காக அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை பரிசோதகர் மற்றும் நான்கு காவல்துறையினர் ஆகியோரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வத்தளை மாபொலயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணை செய்த போது கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வத்தளையில் கைதானோர் வந்த வாகனம் மேற்படி சோதனைச் சாவடியின் ஊடாக வெடிபொருட்களுடன் வந்த நிலையிலும் அவை மதவாச்சி சோதனைச் சாவடியில் அல்லாது வத்தளைப் பகுதியில் வைத்தே பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.