கொழும்பில் வாகன விபத்து: பத்துப்பேர் காயம்
கொழும்பின் இருவேறு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பத்துப்பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு பாலத்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டியும் பாலத்துறை பகுதியில் வைத்து மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்