தபால்மூலம் வாக்களிப்பதற்கு 51ஆயிரத்து 311பேர் தகுதி

வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணசபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறுகின்றது என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு 51ஆயிரத்து 311பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அநுராதபுரம் மாவட்டத்தில் 25ஆயிரத்து 897வாக்காளர்களும், பொலநறுவை மாவட்டத்தில் 7ஆயிரத்து 528வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6ஆயிரத்து 825வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் 11ஆயிரத்து 62வாக்காளர்களும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூலம் வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான சந்தர்ப்பம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ளது. இதேவேளை இன்றும் நாளையும் தபால்மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் தினங்களில் தமது வாக்குகளை அளிக்க முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு பி.சுமணசிறி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>