இலங்கையில் பெண்களின் இறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி கண்டுள்ளது

இலங்கையில் பெண்களின் இறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 193நாடுகளின் சுகாதார நிலைமைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளின் 15வயதிற்கும் 65வயதுக்குமிடையிலான 1000பெண்களில் குறைந்தளவு இறப்புவீதம் காணப்படுவது இலங்;கையிலேயே என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பங்களாதேசில் 1000பெண்களில் 256பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000பெண்களில் 213பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இலங்கையில் இந்த எண்ணிக்கை 1000ற்கு 95ஆக குறைந்துள்ளது. இலங்கையின் சுகாதார துறையில் நிலவும் மேம்பட்ட நிலையே இதற்கு காரணமென்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>