அன்புக்கோர் அன்னை! (கவிதை)

அன்பு தந்தாள்
அரவணைத்து காத்திட்டாள்! – அவள்
அருமைதனை
அருகிருந்து அறியவில்லை
பிரிந்திருந்தும் புரியவில்லை – நீ
பிரிந்திருந்தும் புரியவில்லை!
தெய்வமாய் அவளை நீ
வணங்கிடத் தேவையில்லை
உன்னில் ஓர்
அங்கமாய் வைத்து விடு – ஓர்
அங்கமாய் வைத்து விடு!

கண்ணாக உனைக் காத்தாள்

கண்ணீர் தான் சுமந்து

கருணையால் உனை அணைத்தாள்

தேகம் மெலிந்தாலும் – தன்

தேகம் மெலிந்தாலும்

சோகம் தான் சுமந்தாலும்

சோர உன்னை விடமாட்டாள்

சுகமாய் வாழ வழிவகுத்தாள் – நீ

சுகமாய் வாழ வழிவகுத்தாள்!

அறிவில் நீ உயர்ந்திட்டால்

ஆனந்தம் தான் கொள்வாள்

ஆறு பிள்ளை பெற்றாலும் – அவள்

ஆறு பிள்ளை பெற்றாலும்

வேறுபாடு காட்டமாட்டாள்! -அங்கே

வேறுபாடு காட்டமாட்டாள்!

பிள்ளை உன்னை வளர்த்தெடுக்க

கண்களில் நீர் சுமந்தாள்

மெய்யினில் வலி சுமந்தாள்

பயிராய் நீ வளர

உரமாய் அவள் இருந்தாள்!

சான்றோனாய் நீ உயர

சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்! -தன்

சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்!!

உதிரத்தில் சுமந்தவளை – உன்னை

உதிரத்தில் சுமந்தவளை

பதறவே வைக்காதே!

கதறி அவள்

கலங்கவே வைக்காதே!!

கண்ணீரில் மிதந்தவளை – தினம்

கண்ணீரில் மிதந்தவளை

தண்ணீரில் ஒரு தாமரையாய் – இனி

தண்ணீரில் ஒரு தாமரையாய்

தலைநிமிர்ந்து அவள் சிரிக்க

தண்டாய் நீ இருந்து – தாமரைத்

தண்டாய் நீ இருந்து

தாயவளைக் காத்து விடு! – நல்ல

தனயன் என்று வாழ்ந்து விடு!

-பத்மெஐகன்..

One Response to “ அன்புக்கோர் அன்னை! (கவிதை) ”

  1. நல்ல கருத்து
    நயமாக எடுத்தரைக்கப்பட்டுள்ளன.

    rammalar.wordpress.com

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>