இந்தியாவின் ரைட்ஸ் நிறுவத்திற்கு வழங்கிய உடன்படிக்கையை உடனடியாக நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும் -ரயில்வே ஊழியர் சங்கம்
கரையோர ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகளை இந்தியாவின் ரைட்ஸ் நிறுவத்திற்கு வழங்கிய உடன்படிக்கையை உடனடியாக நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென ரயில் சேவையின் பொது ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு வெளிப்படுத்தாது போனால் ரயில் ஊழியர்கள் பாரிய போராட்டமொன்றில் ஈடுபடுவர் என சங்கத்தின் செயலாளர் சுமதிபால மாணவடு எச்சரித்துள்ளார். இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரையில் உரிய பதிலெதுவும் அளிக்கப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்