புலிகளுக்கு பொருட்கள் கடத்த உதவிய நால்வர் கைதாகி மதுரை சிறையில்
புலிகளுக்கு பொருட்கள் கடத்த உதவிய நால்வரை விழுப்புரத்தில் வைத்து பொலீசார் பொலீசார் கைது செய்துள்ளனர். புலிகளுக்கு கடல் மார்க்கமாக கடத்துவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சியிலிருந்து மாருதி வேனில் கொண்டுவந்த பொருட்களுடன் இலங்கையை சேர்ந்த நான்கு பேரை திருப்பாலைக்குடி பொலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் தகவலின்படி மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த புலிகள் பிரிவில் பயிற்சிபெற்ற நிக்சன் என்பவரை ராமநாதபுரம் பொலிசார் கைது செய்தனர். இதனிடையே இவர்களுக்கு கடற்கரைப் பகுதியிலிருந்து பொருட்களை இலங்கைக்கு கடத்த உதவிய திருபாலைக்குடியைச் சேர்ந்த சுமன் வயது 30, காளை வயது 28, ரஜினி வயது 32, பாலா வயது 25 ஆகியோரை பொலீசார் தேடிவந்தனர். தலைமறைவான இவர்களை கடந்த புதன்கிழமை இரவு விழுப்புரத்தில் வைத்து பொலீசார் கைதுசெய்து திருப்பாலைக்குடி கொண்டுவந்தனர். இவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்