இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கின் பொருளாதார கவுன்சிலின் தலைவர் இராஜினாமா
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கின் பொருளாதார கவுன்சிலின் தலைவர் பதவியிலிருந்து தி.ரங்கராஜன் நேற்று திடீரென இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாவுக்கான காரணம் எதனையும் அவர் குறிப்பிடவில்லை. இதேவேளை கடந்த 13ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக இந்தியாவின் பணவீக்கம் கடந்தமாதம் 26ம் திகதியுடன் 12 சத வீதத்தை தாண்டியுள்ளது. பணவீக்கம் அதிகரித்திருந்த போதும் பொருட்களின் விலை ஸ்திரமாக இருப்பதாகமத்திய நிதியமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ரங்கராஜன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதற்குமுன் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் ஆந்திர மாநில கவர்னராகவும் பதவி வகித்தவர் ரங்கராஜன். இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் இவர் செயற்பட்டுள்ளார். இவரது பொருளாதார அறிவின் காரணமாக தனது பொருளாதார ஆலோசனைக்குழு தலைவராக பிரதமர் மன்மோகன்சிங் இவரை நியமித்தார். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆலோசனைக்குழு தனது பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கும் நிலையில் ரங்கராஜன் இராஜினாமா செய்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்