தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்2
“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின் பக்கங்களும்…” தொடர் பக்கங்கள்….பாகம்2
-
சுரேந்திரன்,
-
அசுரேந்திரன்,
-
இச்சயம்பன்,
-
யாளிமுகன்,
-
ஏதி,
-
வித்துகேசன்,
-
சுகேசன்,
-
மாலியவான், (இலங்காபுரி என்னும் பெயர் இவன்காலத்தில்
-
உதயமானதெனலாம்),
-
சுமாலி, (சூரியப் பிரகாசம் விமானம் இருந்த காலம்) ,
-
வச்சிரவாகு,
-
வைச்சிரவாணன்(குபேரன் புட்பக விமனமம் வைத்திருந்தான்),
-
குபேரன்
-
இராவணன்
-
விபீஷணன் (பசுபதி)
-
இந்திரஜித்
-
ஆதிசகாயன்
-
… …
போன்ற வரலாற்று நபர்களையும் புரட்டிப்பார்க்க வேண்டும். இவர்கள் வெறும் கதாபாத்திரமல்ல. அத்தோடு எல்லாளன் சரித்திரம் கி.மு. 205- 161 என சிங்கள மிகப்பெரிய வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் எடுத்துக்காட்டும் வரலாறு எங்கே போனது? துட்டகைமுனு என்னும் மன்னனால் எல்லாளன் கொல்லப்பட்டதும் எல்லாளனுடைய சமாதியின் இடத்தை (தகனம்செய்த) மரியாதைக்குரிய இடமாக தூபி அமைத்து, அனுசரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது ஆனால் காலப்போக்கில் சிங்கள இனவாத சமுகம் அதனை மாற்றி அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஆதாரம் மகாவம்சம், “The Pali Literature of Ceylon”p.34 ).
யாழ்ப்பாணத்துச் சரித்திரம் என்று பார்க்கும் போது சரித்திரத்தில், கூழாங்கைச் சக்கரவர்த்தி என்பவனில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் அது முற்றுமுழுதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அதற்குமுதல் வரலாறுகள் (மேற்குறிப்பிட்டவர்கள்) வெளிவராமல் போனதும், மக்கள் தொடர்பு குறைந்து காணப்பட்டதும், பலங்குறைந்து காணப்பட்டதும் காரணமாக இருந்திருக்கலாம். அதன் விபரங்கள் புராணங்கள் மூலம் நாம் புடம்போட்டுக் காட்டக்கூடியதொன்றாகும். இந்த இலங்கையானது, “இராவணனின் இராஜதானியாக விளங்கியது. விசுவ கர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது. இது தென் சமுத்திரத்திலே திரிகூட பர்வதத்திலே அமைக்கப்பட்ட பட்டணமாகும்” என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார் என்பதை மேலே எடுத்துக்காட்டினேன். இந்த அரசானது ஆரம்பத்தில் “மால்யவானுக்கு” இராஜதானியாக இருந்தது. காலப்போக்கில் பெரும் செல்வந்தராக விளங்கிய குபேரனுக்கு இராஜதானியாக அமைந்து அதன்பின், பெரும் பலம் கொண்டவனும், வரம் பெற்றவனுமான இராவணனால் அபகரிக்கப்பட்டது.
இந்த இராவணனின் தம்பிகளுள் ஒருவன் விபீசனன். வசிர வசுவுக்கு கையேசியிடத்தில் பிறந்த மூன்றாவது புதல்வன். இந்த
விபீசனன், இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது, சீதையை மீண்டும் இராமனிடத்தில் கொண்டு போய் விடும்படி பலமுறை பலவகையில் எடுத்து உரைத்தவன். ஆனால் இவனுடைய எந்தப் பேச்சுக்களுக்கும் தமையனான இராவணன் செவி கொடுக்கவில்லை! இராவணனின் தவறைச் சுட்டிக் காட்டி எந்தப் பிரதிபலிப்பையும் அறியாத விபீஷனன், தன் தமையனை விட்டு விட்டு, இராமனிடம் போய்ச் சரணாகதி அடைந்தான். இராமனும் அவனுக்கு அபயம் அளித்தான். இராவணனைச் சங்காரம் செய்து அழித்தபின்னர் இந்த விபீஷணனுக்கு இராவணனின் அரசாக இருந்த இந்த இலங்காபுரி என்னும் ஈழமண்டலத்தை உரிமையாக்கி, அவனை அரசாளச் செய்தார் இராமர். (இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் தொடர்பு கருதி மீட்டுள்ளேன்) இந்த விபீஷணன் (சிலர் வேறு அரசனைக் காட்டுகின்றனர்) அரசாண்ட காலத்தில் அவனது சபையில் “யாழ்”வாசித்து அவனை மகிழ்வித்த “பாணன்” ஒருவனுக்கு தனது அன்பளிப்பாக “மணற்தீடை” என்ற பரப்பை வழங்கினான்.
அது காடு நிறைந்த பகுதியாகக் காணப்பட்டது அதன்பின்னர் அப்பகுதி “யாழ்ப்பாணம்” எனப்பெயர்பெற்றது. இதன்கால வரைகள் நிற்சயித்துக்கூறமுயாது உள்ளது. எனினும் இக்காலத்தில் மக்கள் இந்தியாவில் இருந்தும் சிலர் விஸ்தரிப்புக் காரணமாக வந்து குடியமற்றப்பட்டார்கள் என்பது வரலாறு. மக்கள் அதிகரிப்பின் பின்னர் பதிவுகள் வரலாற்றில் வெளிப்படதொடங்கியது. அதன்படி வெளிப்பட்ட அரச வம்சங்களாக… கூழாங்கைச் சக்க்கரவர்த்த்தி (கோளுறு கரத்துக் குரிசில், கூ.ஆரியச்சக்கரவர்த்தி ) இலங்கையில் பொதுவாக பலசிற்றர்கள் இருந்தும் யாழ்ப்பாணத்தை பெற்ற யாழ்ப்பாணனின் காலமுடிவில் அவன் தனக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆழ பிரபல்யாமன வரலாறுகளின் தோற்றப்படி, இவ்வரசன் இந்தியாவில் இருந்த அழைக்கப்பட்டதாகவும், தசரதனின் மைத்தினனின் வம்சாவழித்தோன்றலில் ஒருவன் என்றும், சோழ வம்சத்தில் ஒருவன் என்றும், சிக்கல்ப் படுத்துகின்றனர்.
இன்னும் சிலர் 11ம் நூற்றாண்டளவில் இரஜேந்திர சோழனின் படையெடுப்பில் ஆரம்பித்தது என்றும், 13ம் நூற்றாண்டில் கலிங்கச் சக்கரவர்த்தியின் போரெடுப்பில் உதயமானதென்று சிலரும், மட்டுமல்லாது, “பாண்டிவளவன்” என்றொருவன் யாழ்ப்பாணப்பகுதி தகுந்த அரசாட்சி இல்லாததால் அண்மையில் உள்ள பெருந்தேசத்தில் இருந்து ஒருஅரசனை அழைத்ததாகவும், இன்னொரு பக்கம் செல்லப் படுகிறது. மேலும், தமிழ்ப் படைகளின் உதவியுடன், பெருங்கூட்டு ஆட்சிநடத்திய சிங்களவருடன் அப்போதைய தலைநகரான பொலநறுவையை கலிங்கத்து சக்கரவர்த்தி போர் செய்து, அவன்மூலம் தனி ஆட்சி நடத்தப்பட்டதாகவும், தனது பெயரை யாழ்ப்பாணத்தின் ஆட்சிக்காக “கூழாங்கைச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு ஆண்டதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர், மற்றும் செ.இராசநாயகம் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.
எனினும் அக்காலத்திற்கு முன்னிருந்தே ஆட்சிகள் நிலவியது என்பது இதில் இருந்து தெரிகிறது. இவனது காலக்கணக்கு 13ம் நூற்றாண்டுகள் என்பதே தற்பொதைய கணிப்பீடாகும். இக்காலப்பகுதியில்தான் நல்லூர் இராசதானி கட்டப்பட்டதனால், இவ்வரசனே அனைத்து அரச திட்டங்களையும் யாழ்ப்பாணத்துக்கென அமைத்திருக்கிறான் என்று எடுத்துக்கொள்ள முடிகிறது.
எனினும் நல்லூர் மேலும் மெருகுபடுத்தப்பட்டது 15 நூற்றாண்டுகளுக்குப் பின்னரே. காரணம் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள் (புலிகள் உட்பட) பொதுவாக இப்பிரதேசத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தமையாகும். இவ்வரசனின் பின்னர் “குலசேகர சிங்கையாரியன்” 10 வருடகாலமாக அதாவது கி.பி 1246ல் இருந்து 1256 வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் கூழாங்கைச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவன் நாட்டில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை ஏற்படுத்தி அபிவிருத்தியைத் தூண்டுவிக்கும் பொருட்டு விவசாயத்தைப் பெருக்கினான். பின்னர் இவனுடைய குமாரனான “குலோத்துங்கசிங்கையாரியன்” ஆட்சியமர்ந்து தந்தை வழியில் நாட்டை விருத்தி செய்தான். .. தொடரும் அருகன்.
திரு, அருகன் அவர்களே, யாழ்ப்பாண வரலாற்றுக் காலகட்டங்கள் நான்கு கட்டங்களை கொண்டது. அதாவது
1. ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்)
2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி 12 ஆம் நூஆ – கி.பி 1620)
3. குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 – கி.பி 1948)
4. குடியேற்றவாத ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்)
இதை தான் நாம் சிறு வயது முதல் அறியபட்டும் , பள்ளி ஆசிரியர்களால் எங்களுக்கு கிடைத்த வரலாற்று அறிவும் கூட.
உங்கள் கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிட்ட…..
/// இந்த இராவணனின் தம்பிகளுள் ஒருவன் விபீசனன். வசிர வசுவுக்கு கையேசியிடத்தில் பிறந்த மூன்றாவது புதல்வன். இந்த
விபீசனன், இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது, சீதையை மீண்டும் இராமனிடத்தில் கொண்டு போய் விடும்படி பலமுறை பலவகையில் எடுத்து உரைத்தவன். ஆனால் இவனுடைய எந்தப் பேச்சுக்களுக்கும் தமையனான இராவணன் செவி கொடுக்கவில்லை! இராவணனின் தவறைச் சுட்டிக் காட்டி எந்தப் பிரதிபலிப்பையும் அறியாத விபீஷனன், தன் தமையனை விட்டு விட்டு, இராமனிடம் போய்ச் சரணாகதி அடைந்தான். இராமனும் அவனுக்கு அபயம் அளித்தான். இராவணனைச் சங்காரம் செய்து அழித்தபின்னர் இந்த விபீஷணனுக்கு இராவணனின் அரசாக இருந்த இந்த இலங்காபுரி என்னும் ஈழமண்டலத்தை உரிமையாக்கி, அவனை அரசாளச் செய்தார் இராமர். (இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் தொடர்பு கருதி மீட்டுள்ளேன்) இந்த விபீஷணன் (சிலர் வேறு அரசனைக் காட்டுகின்றனர்) அரசாண்ட காலத்தில் அவனது சபையில் “யாழ்”வாசித்து அவனை மகிழ்வித்த “பாணன்” ஒருவனுக்கு தனது அன்பளிப்பாக “மணற்தீடை” என்ற பரப்பை வழங்கினான்.////
///// இன்னும் சிலர் 11ம் நூற்றாண்டளவில் இரஜேந்திர சோழனின் படையெடுப்பில் ஆரம்பித்தது என்றும், 13ம் நூற்றாண்டில் கலிங்கச் சக்கரவர்த்தியின் போரெடுப்பில் உதயமானதென்று சிலரும், மட்டுமல்லாது, “பாண்டிவளவன்” என்றொருவன் யாழ்ப்பாணப்பகுதி தகுந்த அரசாட்சி இல்லாததால் அண்மையில் உள்ள பெருந்தேசத்தில் இருந்து ஒருஅரசனை அழைத்ததாகவும், இன்னொரு பக்கம் செல்லப் படுகிறது. மேலும், தமிழ்ப் படைகளின் உதவியுடன், பெருங்கூட்டு ஆட்சிநடத்திய சிங்களவருடன் அப்போதைய தலைநகரான பொலநறுவையை கலிங்கத்து சக்கரவர்த்தி போர் செய்து, அவன்மூலம் தனி ஆட்சி நடத்தப்பட்டதாகவும், தனது பெயரை யாழ்ப்பாணத்தின் ஆட்சிக்காக “கூழாங்கைச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு ஆண்டதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர், மற்றும் செ.இராசநாயகம் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.////
எங்க இருந்து இந்த தகவல்களை திரட்டிநிங்கள் என்பது புரியவில்லை. ஆகமொத்தத்தில் உங்களின் கட்டுரையாகிய தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்2 எங்களால் வாசித்து உண்மைகளை கிரகிக்க கடினமாக இருக்கு என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம்
“உதாரணம் “இயேசுக் கிறீஸ்து” “ஜீசஸ் கிறைஸ்ட்” “யேசு நாதர்” என்பன ஒரே ஆளைக் குறிக்கிறது. பெயர் எக்காரணங் கொண்டும் மொழிமாற்றத்திற் குட்படக்கூடாது!!! அது போலவே இடமும். உண்மையிலே ஒரு சம்பவம், “ஒருவருடைய பெயர் தமிழில் “செபமாலை” அவர் தனது பெயரை வெளிநாடு சென்றதும் தன்னை “றொசாறியோ” என்று அறிமுகப்படுத்தினார் இப்போது அவரை முன்பு அறிந்தவர் பின்பு அறிந்தவர் என்று இருபகுதி காணப்படுகிறது…”
தங்களுடைய எடுத்து காட்டுகள் கூட உங்களுடைய அடிமை வாழ்கையை நீட்டி கொண்டுதான் செல்கின்றது. இதில் என்ன வரலாறு பொதிந்து கிடக்கிறது?. எவன் எவனோ அழுதினத எழுத்துக் கூட்டி படிச்சு உரைப்பதில் அர்த்தம் என்ன ? வட்டத்தை விட்டு வெளியில் வந்து வெட்ட வெளியினை பாரு புதிதாய் ஒரு கருத்து உங்களுக்குள் ஒளிரும்.. அங்கே தமிழும் தமிழை வடிவமைதவரும் தோன்றுவர்.
மாற்றங்கள் மாற்றானிடம் மண்டியிடுவதால் நேரும்
தோற்றதால் தொலைந்தது எம்தமிழே தமிழே!!
அன்று போதுகிசியரிடம் தோற்று கிருத்தவர் ஆனீர்
முகலாயரிடம் தோற்று முஹம்மதியராநீர்
இன்று சிங்களவரிடம் தோற்று புத்தனாகவா?
இனம் எங்கு மாறுதோ
இருப்பு அங்கு மறுதே
இறை எங்கு மாறுதோ
இருள் அங்கு சூழுமே..
தமிழை தமிழாய் சொல்ல தொல்லாசிரியன் இல்லை
அமிழ்தாம் தமிழை அறிந்தவர்யாரும் இல்லை
தமிழ் காப்போர் என்று கபடநாடகம் போடும்
தமிழ் வேடதாரிகளை களைதல் வேண்டும்.
சித்தன் சொல்லு சத்தியம் சிந்தியுங்கள் தமிழரே…
தமிழில் ஒருசொல் வெல்லும்! ஒருசொல் கொல்லும்! தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன் சிவனடியான்