சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..!

“மாய்மாலக்கார மருமகளே! கோழிக்கறிக்கு பதம்பார்” என்றாளாம் ஒரு மாமியார் அதற்கு அவள் மருமகள் “ஐயோ அது கொக்கோ என்று கொத்த வருகுது அத்தே நான் மாட்டேன்” என்றாளாம்… இப்படிப்பட்ட ஒரு மாய்மாலக்கார மருமகளாகத்தான் இருக்கிறார்கள் சில‌ வெளிநாட்டுப் புலிப் பினாமிகள் இன்றும்…

கடந்த வருடத்தில் இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களையே ஆட்டிப் படைத்த பிரபாகரனாதியோரும் அவர்கள் படை பலமும் முற்றாக அழிக்கப்பட்டு… பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டு.. ஒழிக்கப்பட்டு.. இலங்கையில் அமைதி பிறந்து அனைவரையும் நின்மதிப் பெருமூச்சுவிட வைத்த மகிந்த அரசு இனிமேல் இந்த நாட்டிலே இனவாதம் என்ற பேச்சுக்கே இடமளிப்பதில்லை என்றும் அனைவரும் இந்நாட்டு மக்களே என்றும் உறுதிமொழி கொடுத்து படிப்படியாக மீள் குடியேற்றத்தை ஆரம்பித்தபோது வன்னியில் கடந்த காலத்தில் புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளால் அந்தப் பணியில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு அவர்களை குடியமர்த்துவதில் சில தடங்கல்களும் குறைபாடுகளும் ஏற்பட்ட‌ போதிலும் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியில் இயன்றவரை அவர்களை குடியமர்த்தி தற்போது ஒரு சிலரே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையாகும்…மேலும் அனைத்திலங்கை மக்களின் வளமான‌ எதிர்காலம் ஒன்றுக்காக‌ நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் அனைவரையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கு தெற்கு என்று பாரபட்சம் பாரமாமல் நாட்டின் பல பாகங்களிலும் கட்டுமானப் பணிகளை துரிதகதியில் இயங்கச் செய்வ‌துடன் நின்று விடாது தமிழர்கள் தன் காலத்திலேயே அவர்கள் சுய உரிமைகள் அனைத்தையும் பெற்று சுதந்திரமாக.. சுந்தரமாக… சுய கௌரவத்துடன் வாழ வைக்கப்பட்டார்கள் என்ற நற்பெயர் தனக்கு ஏற்பட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள ஒருவராக அனைத்து தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து அதற்கு ஒரு முடிவு காண்பதற்காக‌ அவர் அயராது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்…
கடந்த காலத்தில் சமாதானமாக தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய‌ இருந்தும் தங்கள் சுயநல நோக்கத்திற்காக அவைகள் அனைத்தையுமே வேண்டுமென்றே மறுதலித்துப் புறந்தள்ளி போர்..போர் என்று தமிழினத்தின் வருங்காலச் சந்ததியொன்றை அதற்காக பலி கொடுத்து… இளைய சமுதாயமொன்றின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கி… தமிழர்களின் எதிர்காலத்தை சிதைத்து… அவர்கள் சுபீட்சத்திற்கு இடறலாக‌ இருந்த புலிகள் என்னும் தடைக்கல் நீக்கப்பட்ட நிலையிலும் இன்னும் குழம்புக் வைத்த கோழிக்கறி கொக்கோ என்று கொத்த வருவதுபோல்தான் என்றோ நடந்த இனக்கல‌ரவங்களை இன்னும் தொகுத்து பெருதுபடுத்தி அவைகள் இன்றுதான் நடைபெறுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை வெளி நாட்டுத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி அதனால் இன வெறியைத் தூண்டி கடந்த காலத்தில் தங்கள் பணப் பைகளை நிரப்பிக் கொண்டதுபோல் இனியும் நிரப்பலாம் என்று கனவு கண்ட புலிப் பினாமிகளை விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கத் தொடங்கியுள்ளது புலம் பெயர்ந்த கூட்டம்….. பிரபாகரன் காலத்தில் இவர்களுடைய‌ இந்த‌ மாய்மாலங்கள் வெற்றியளித்து வந்திருந்தாலும் தற்போது தங்கள் சிந்தையில் ஓரளவு தெளிவடைந்து யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்ககவும் புரிந்து கொள்ளவும் தொடங்கியுள்ள‌ புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர் கூட்டத்தினர் பலரின் அறிவுக் கண்கள் திறந்து புலிகளை அலட்சியம் பண்ணத் தொடங்கியிருப்பது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான விமோசனம் வெகு தூரத்தில் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது …

கனடாவில் மட்டும் பிரபாகரனின் பிள்ளைகளின் பெயரில் பல கோடிக் கணக்கான சொத்துக்கள் திரை அரங்குக்களாகவும் பிஸியான பிஸ்னஸ் சென்ரர்களாகவும் பல புலிப் பினாமிகளின் கட்டுப்பாட்டில் இன்று வரை இயங்கி மாதம் சுமார் 200 கோடி வரையில் இலாபம் ஈட்டி வருவதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்திருப்பதாக புலிகளின் ஆதரவு இணையத் தளங்களே பெருமையாக‌ செய்தி வெளியிடும்போது தமிழினத்தின் இயமனாக வந்து வாய்த்த‌ பிரபாகரனை இமயம்வரை உயர்த்தி தமிழர்களின் விமோசனத்திற்காக‌ எதையோ தியாகம் செய்த பெருந்தகையாக‌ சிந்தரித்து அவர் புகழ்பாடிச் சதிராடும் சில‌ புலி வால்கள் இன்னும் மடங்குதாகத் தெரியவில்லை .. எனினும் மனம் திருந்திய‌ அவர்களில் பலர் தங்கள் கருத்துக்களை யதார்த்தத்தை நோக்கி மாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது தற்போதய பல நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது…

புலிகளின் காலங்களில் அவர்கள் தங்கள் பிழைப்புக்காக‌ மகிந்தாவை ஒரு பேரினவாதியாக இனத்துவேசம் கொண்ட ஒரு இனவெறியராக தங்கள் இணையத் தளங்களில் சித்தரித்து வந்ததை அந்த நாட்களில் புலிகள் சார்பு இணையத் தளங்களை மட்டுமே மேய்ந்து வந்த நமது புலம் பெயர்ந்த தமிழர்கள் அப்படியே நம்பி வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை…மகிந்தா என்பவர் யார் என்பது புலிகள் சொல்வதுதான் உண்மையென்று அவர்கள் நம்பி வந்த காலமது..

பெரும்பாலான அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய‌ அரசியல் நடவடிக்கைகளுக்கும் அவர்களது சுய‌ குண இயல்புகளுக்கும் இடையில் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. தங்கள் அரசியல் லாபத்திற்காக எந்த விதமான நாடகத்தையும் நடத்தத் தயாராக இருக்கும் மேகா நடிகர்க‌ள் அவர்கள்.. இதற்கு உதாரணமாக புலிவால் பிடிக்கும் தமிழக‌ அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ள‌ முடியும்… அன்று முள்ளி வாய்க்காலில் புலிகளின் பிடியில் அந்த அப்பாவி வன்னிச் சனங்கள் சிறை பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக மாற்றப்பட்டபோது அவர்களின் மனங்கள் வெடித்துச் சிதறிக் கதறிய‌ கூக்குரல் இந்த அரசியல்வாதிகளின் காதில் விழவேயில்லை… ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா நோர்வே ஜ‌ப்பான் முதலிய நாடுகள் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்து அங்குள்ள வன்னி மக்களை உடனே விடுவித்து அவர்களை பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல‌ அனுமதிக்க வேண்டும் என்று புலிகளை வற்புறுத்த‌ இந்த தமிழக அரசியல்வாதிகளோ இலங்கை அரசாங்கம் புலிகளுக்கெதிரான‌ போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றுதானே கூக்குரலிட்டார்கள்….ஆம் அவர்களுக்குத் தேவை வன்னித் தமிழர்களின் விடுதலையல்ல‌ ஆனால் இலங்கை இராணுவத்தின் வியூகத்தினுள் மாட்டிக் கொண்டு திக்குமுக்காடிக் கொண்டிருந்த‌ அந்த‌ பாசிசப் புலிகளின் விடுதலை… அவர்களுக்கு இதயம் என்றதொன்று இருந்து அதில் மனித நேயம் என்றதொன்று இருந்திருந்தால் அந்த அப்பாவிச் சனங்களை உடனே விடுவித்து அவர்களைப் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல அனுமதிக்கும்படி புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து கூக்குரலிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் கதறியழுததெல்லாம் யாருக்காக? ஆம்… அவர்களுக்குத் தேவை புலிகளின் விடுதலை… அவர்களை எப்படியாவது விடுவித்து தங்கள் அரசியல் நிலையை பாதுகாத்து அதன் பலனாக அவர்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடையினால் தங்கள் பணப் பெட்டிகளையும் நிரப்புவதுதான் முக்கியம். ஆகவேதான் புலிகளுக்கெதிரான போரை உடன் நிறுத்தும்படி இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி அழுத்தம் கொடுத்தார்கள்.. புலிகள் பிடியிலிருந்து அந்த அப்பாவிச் சனங்களில் பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தப்பியோட முயற்சித்த வேளைகளில் அவர்களை பெண்கள் பிள்ளைகள் வயோதிபர் என்ற பாகுபாடில்லாமல் பின்னிருந்த‌ புலிப் பட்டாளம் சுட்டுத் தள்ளிய போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தப் பொய்யர்கள் கூட்டம் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பது என்பது வெறும் பம்மாத்து வேலை என்பதை இவர்களின் மாய்மாலங்களை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்..

நமது வன்னிச் சனங்கள் மீதுதான் இந்தத் தமிழக புலிவால் அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை என்று பார்த்தால் அவர்களுக்கு படியளந்து வந்த பிரபாகரனின் குடும்பத்தார் மேலும் அவர்களுக்கு எள்ளளவும் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது பிரபாவின் தாயார் பார்வதியம்மாவின் விடயத்தில் தெளிவாகத‌ தெரிந்தது… அவரது இந்திய வருகையின் போது இவர்களுடைய செயற்பாடுகள் இவர்களுடைய தன்னலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு மகிந்தாவின் அரசாங்கத்தால் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்ட அந்த‌ மூதாட்டிக்கு மனிதாபமான அடிப்படையில் தங்கள் நாட்டில் மருத்துவ உதவி பெறுவதற்கு இந்தியா விசா வழங்கியிருந்தது. அவர் பிரபாவின் தாயார் என்று தெரிந்திருந்தும் 81 வயதான அவருக்கு முன்னர் தமிழ் நாட்டில் தன் மகளுடன் அவர் தங்கியிருந்த கால கட்டத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட‌ வைத்தியரிடமே மேற் கொண்டு அவர் சிகிச்சை பெற விரும்பியதற்கு மதிப்பளித்தே இந்திய அரசாங்கம் விசா வழங்கியிருந்தது. ஆனால் பார்வதியம்மா வரப்போவதை ஏற்கெனவே அறிந்திருந்த வை.கோ மற்றும் ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் இந்த வருகையின் மூலம் தங்கள் பொலிட்டிக்கல் ஸ்டண்டைக் காட்டும் நோக்கத்துடன் அவரை வரவேற்கிற பேர்வழிகளாக‌ விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். இப்படித் தாங்கள் அவரை வரவேற்க செல்வதை மத்திய அரசாங்கம் அறிந்தால் தமிழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய‌ இருப்பதால் அவரை திருப்பியனுப்பத் தயங்காது என்பதை நன்கு அறிந்திருந்தும் இவர்கள் வேண்டுமென்றே விமான நிலையத்திற்கு வரவேற்கச் சென்றார்கள். ஒருவேளை பார்வதியம்மா இந்தியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டால் (கலைஞர் கருணாநிதியை வீழ்த்த) அவரை தங்களுடன் அழைத்துச் சென்று தங்கள் அரசியல் மேடைகளில் இருத்தி இவர்தான் பிரபாகரச் செம்மலை ஈன்றெடுத்த தாய்க்குலம் இவரை இலங்கையிலிருந்து அந்தக் தமிழினத் துரோகி கொடும்பாவி மகிந்தா நாடு கடத்தியதால் இன்று நமது தாய் மண்ணை தேடி வந்திருக்கிறார்.. அப்படி நாடு கடத்திய மகிந்தாவுடன் நட்புறவாக கலைஞர் கருணாநிதி நடந்து கொள்கிறார் என்று தமிழக மக்களுக்கு வெறுப்பேற்றி பிரச்சாரம் செய்து பார்வதியம்மாவின் பரிதாபகரமான தோற்றத்தை தமிழக மக்களிடம் மேடைகளில் காட்டி அவர்களை நம்பச் செய்து அவர்களை தங்கள் பக்கம் திரட்டி எலக்சன் வோட்டுகளை தங்கள் பக்கம் கணிசமான அளவு அதிகரித்திருப்பார்கள். அங்கே இலங்கை இராணுவம் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அதிலிருந்த கர்ப்பக் குழந்தைகளை வெளியிலெடுத்து தரையிலடித்து கொலை செய்கிறார்கள் என்று கூசாமல் பொய் சொல்லி தமிழக மக்களை கொதிக்கச் செய்த இந்த தன்னலவாதிகளுக்கு அன்று இப்படியொரு பித்தலாட்டத்தைச் செய்வதென்பது பெரிய காரியமல்ல…

பாவம் அந்தப் பார்வதியம்மா.. அவர் செய்த தவறு பிரபாகரன் என்ற அடங்காப் பிடாரியை ஈன்றெடுத்தது மட்டும்தான்… ஆதியிலிருந்தே தன் மகனது வன்முறை வழியை விரும்பாதவர் அவர்.. எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் அவையொன்றையும் கேளாமல் வீட்டை விட்டு வெளியேறி தான்தோன்றித் தனமாக வேண்டாத கூட்டங்களுடன் கூட்டுச் சேர்ந்து தன் தாய் சொல்லைத் தட்டி தன்னையும் கெடுத்து தன் தாய் மண்ணையும் கெடுத்தார் அவர். என்ன செய்வது அதுவெல்லாம் விதியின் பயன்… நட்டவனுக்கு நச்சு மரமென்றாலும் பட்சம் என்பதுபோல் பிரபாவை ஈன்ற குற்றத்திற்காக அவர் தலைமறைவாக இருந்து செலவுக்கு பணம் கேட்டு ஆளனுப்பும் போதெல்லாம் எட்டாம் வகுப்புடன் கல்விக்கு கல்தா கொடுத்து விட்டு தந்தையின் அறிவுரைக்கு அல்வா கொடுத்து வெறுப்பேற்றிய பிரபாகரன்மேல் கடுப்பிலிருந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு தெரியாமல் அவ்வப்போது பணம் கொடுத்தனுப்பினார் அவர்.. ம்ம்ம்ம் என்ன செய்வது அந்த‌ பார்வதியம்மாவின் பெத்த மனமோ பித்து இந்த பித்தலாட்டப் பிள்ளையாண்டானின் மனமோ கல்லாகிப் போயிருந்தது.. தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலில் ஒரு பாகம் இயங்க முடியாத நிலையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக‌ இந்தியாவை நாடி வந்த அவரை இந்திய அரசாங்கம் விமானத்திலிருந்து இறங்க விடாமலேயே மலேசியாவிற்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்ட இந்த பரிதாபகரத்திற்கு யார்தான் காரணம்?.. ஆம் அவர்கள்தான் தமிழக புலிவால் அரசியல்வாதிகள்…

அதுசரி பார்வதியம்மாவை வரவேற்க வைகோ ராமதாஸ் நெடுமாறன் குழுவினர் செல்கிறார்கள் என்பதை மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்தவர் யார்? ஆம்..அவர்கள் வேறு யாருமல்ல இலங்கைத் தமிழர்களையும் பிரபாகரனையும் வைத்து அங்கே தமிழகத்தில் அரசியல் நடத்தும் அதே தமிழக அரசியல்வாதிகள்தான்… பிரபாகரனுடன் மாத்திரமல்ல அவரது பெற்றோருடனும் தாங்கள்தான் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதைக் காட்டுவதில் ஏற்பட்ட போட்டியின் விளைவுதான் பார்வதியம்மாவை மத்திய அரசாங்கம் திருப்பியனுப்பியது. இன்று இலங்கைத் தமிழர்களின் வழிகாட்டியாக இவர்கள் இருப்பதற்கு இவர்கள் எவரிடமும் எந்தவிதமான தகுதிகளும் இல்லை என்பது அவர்கள் செயற்பாடுகளில் இருந்து தெட்டத் தெளிவாகத் தெரிகிறது…

பிரபாகரனாதியோரை இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்காலில் சுற்றி வளைத்தபோது உடனே போரை நிறுத்தும்படி தமிழகத்தில் தீக்குளித்த முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தில் “வணக்கம்! வணக்கம்! வீர வணக்கம்!” என்று புலிகளின் கோசத்தை எழுப்பியபடி அந்த ஊர்வல ஊர்தியில் ஏறி நின்று முழக்கமிட்ட விடுதலைச் சிறுத்தையின் தலைவர் திருமாவளவன் இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வாரிசு தானேதான் என்பதைக் காட்ட முற்பட்டார்… இது சீமான் வைகோ ராமதாஸ் நெடுமாறன் குழுவினருக்கு எரிச்சலை மூட்டக் காரணமாக அமைந்தது… ஆகவே அவர்கள் எப்படியாவது திருமாவளவனை காய் வெட்டி விடும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க‌ வைத்து விட்டது. பிரபாகரனாதியோரின் பயங்கவாதத்திற்கு மகிந்தா முற்றுப்புள்ளி வைத்த பின்னர் வைத்திய சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை தந்த பார்வதியம்மாவின் விடயம் அப்போது கை கொடுத்தது. ஆகவே அவர் சிகிச்சைக்காக தமிழகம் வரப்போகும் விடயத்தை திருமாவளவனுக்கு தெரிந்து விடாதபடி மிகவும் இரகசியமாக பாதுகாத்தார்கள் அந்த சூதாட்டத் தருமர்கள்…

பார்வதியம்மா திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் தான் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவிலுள்ள‌ பார்வதியம்மாவின் உறவினருடன் அவரது உடல் நலம் தொடர்பாக தொலைபேசியில் பேசியதாகவும் பார்வதியம்மா சிகிச்சைக்காக‌ இந்தியா வரப்போவது பற்றி அப்போது அவர்கள் தன்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் அவர் கூறியிருப்பதில் இருந்தே அவர் எதையோ மறைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அது மட்டுமல்ல அவர் திருப்பியனுப்பட்ட பின்னர் தான் பலமுறை மலேசியாவை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் தனக்கு லைன் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பதும் நம்பத் தகுந்ததல்ல‌. அப்படியெல்லாம் லைன் கிடைக்காமல் போவது என்பது இந்த நவீன யுகத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகும். மேலும் தமிழக‌ முதல்வர் கருணாநிதிக்கும் அது பற்றி ஒன்றுமே தெரியாது என்ற ஊடகங்களுக்கு கூறி அவரையும் காப்பாற்ற அவர் முயற்சித்ததில் இருந்தே வழமை போலவே சமய‌ சந்தர்ப்பத்திற்கேற்றபடி கட்சிமாறி கருணாநிதியில் காவிச் சால்வைக்குப் பின்னால் மறைந்து பச்சோந்திந்தித்தனமான‌ அரசியல் நடத்துகிறார் அவர் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஆகவே பார்வதியம்மாவை வரவேற்க வைகோ நெடுமாறன் குழுவினர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள் அங்கு அவர்கள் பார்வதியம்மாவை வரவேற்பதனால் அவர்கள் புகழேறிவிடும் என்பதற்காகவும் தனக்கு தெரியாமல் அவர்கள் ஆடிய இந்த நாடகத்திற்கு அவர்களை பழிவாங்கும் நோக்கத்திற்காகவும் திருமாவளவன் மத்திய அரசாங்கத்திற்கு இந்த விபரங்களை போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்றுதான் கருத‌வேண்டியுள்ளது. பார்வதியம்மா திருப்பியனுப்பப் பட்டதற்கு தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவோ ஒரு சிறு கண்டன அறிக்கை கூட திருமாவளவன் வெளியிடாமல் புலிகளின் பாணியில் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறியிருப்பது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது…

திருப்பியனுப்பட்ட அந்த அம்மையார் பின்னர் மலேசியாவிலிருந்து தனது உடல்நிலை குறித்து மிகவும் உருக்கமாக கருணாநிதிக்கு தான் அங்கு சிகிச்சை பெறுவதற்கு அனுமதியளிக்கும்படி எழுதியது மட்டுமல்லாமல் இறுதியில் அவரைப் புகழ்ந்தும் வாழ்த்தியும் எழுதியிருந்ததிலிருந்து அவருக்கு கருணாநிதியின்மேல் எந்த விதமான காழ்ப்புணர்வோ அல்லது வெறுப்புணர்வோ இல்லை என்பதை தெளிவாக்குகிறது. கடிதத்தை படித்து மனமிரங்கிய கருணாநிதியும் அவருக்கு தமிழகம் வருவதற்கு விசா வழங்கும்படி மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது மட்டுமல்லாது தமிழக அரசே அவரது வைத்தியச் செலவுகளை ஏற்பதாகவும் உறுதியளித்தார். பார்வதியம்மா அவர்கள் அவரது உறவினர்கள் வீட்டில் தங்குவதற்கோ அல்லது அவர்களை விஜயம் செய்வதற்கோ எவ்வித தடைகளையும் தமிழக அரசு விதிக்கவில்லை ஆனால் தமிழக அரசியல்வாதிகளை சந்திப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது.. மனிதநேயத்திலோ அல்லது சமாதான வழிகளிலோ நாட்டமில்லாத… நம்பிக்கையில்லாத.. இந்த அசுரத்தனமான‌ புலிவால் தமிழக அரசியல்வாதிகளை பார்வதியம்மா சந்திப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது நியாயமானதுதான் என்பதை சிந்திக்கத் தெரிந்த எவருமே ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் இறுதி நேரத்தில் மலேசியாவிலிருந்து இந்தியா செல்வது பற்றிய‌ தனது தீர்மானத்தை கைவிட்டு இலங்கைக்கே திரும்பியது அவருக்கு மகிந்தா அரசாங்கத்தின்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறதா?. புலிகள் சார்பு இணையத்தளங்களில் எழுதியிருந்ததுபோல் அவரும் அவரது மறைந்த கணவன் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்துப்பட்டார்கள் என்பது உண்மையாக இருந்திருந்தால் தான் அனுபவித்த துன்பங்களையும் துயரங்களையும் துன்புறுத்தல்களையும் மறந்து அவர் மீண்டும் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க எண்ணியிருக்க மாட்டார். என்பது உண்மையாகும். இது மனோதத்துவ ரீதியிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாகும். புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனாதியோரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்து அங்கே பயமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவான பின்னும் அவர்கள் மீண்டும் அங்கே வந்து வாழத் தயங்குவது..பயப்படுவது… இந்த மனோரீதியான பாதிப்புகளால்தான். ஆனால் பார்வதியம்மாவிற்கு இலங்கைக்கு திரும்பி வருவதில் எந்த விதமான‌ பயமோ..பதட்டமோ இருந்திருக்கவில்லை.. காரணம்.. அவரும் அவர் கணவரும் இலங்கை இராணுவத்தால் அகதிகள் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டபோது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்படாமல் பத்திரமாக ஒரு இடத்தில் பாதுகாப்புடன் சகல வசதிகளுடனும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் அத்துடன் திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த வைத்தியர்களால் தகுந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டிருந்தது… மேலும் அவரது இறுதி நேரத்தில் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. ஆகவே பார்வதியம்மா அவர்களுக்கு இந்திய அரசியல்வாதிகள் மேல் இருக்கும் நம்பிக்கையைவிட இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் நம்பிக்கை அதிகம் என்றுதானே கொள்ள வேண்டும்..

இறுதிக்கட்டத்தில் புலிகளுக்கு குட்பை சொல்லி விட்டு மக்களோடு மக்களாக அகதிகள் முகாம்களுக்குள் வந்து முடங்கிய தமிழினி ஜோர்ஜ் மாஸ்டர் தயா மாஸ்டர் போன்றோர் எவருக்குமே எந்தவித மகிந்தாவின் அரசு இழைத்துவிடவில்லை..மாறாக அரவணைக்கப் பட்டிருக்கிறார்கள்.. சூசையின் மனைவியும் பிள்ளைகளும் தமிழ்ச் செல்வனின் மனைவியும் பிள்ளைகளும் பாதுகாப்பாக ஒரு மறைவிடத்தில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளுடன் பராமரிக்கப்படுகிறார்கள்..அவர்கள் பிள்ளைகள் மேற்கொண்டு தங்கள் கல்வியைத் தொடர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன‌… இதன் உச்ச கட்டமாக தலை மறைவாகியிருந்த புலிகளின் முக்கிய புள்ளியான‌ கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்து தற்போது ஆனந்தசங்கரி ஐயாவே பொருமி வெடிக்கும்படிக்கு அவருக்கு மகிந்தாவின் அரசு ராஜ உபசாரம் செய்கிறது ஏன்?..இவைகளை எல்லாம் எதற்காக மகிந்தா செய்கிறார்?.ஒன்பது கனடா புலிப்பினாமிகள் திடீரென்று கே.‍பியுடன் கைகோர்த்து இலங்கை வந்து தாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கி நாட்டைக் கட்டியெழுப்ப தாங்கள் தயார் என்று அறிவிப்பதற்கான‌ காரணத்தின் பின்னணி என்ன? ஆச்சரியமான உண்மைகளுடன் அடுத்த பாகம் தொடர்கிறது (தொடரும்)

22 Responses to “ சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..! ”

  1. இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்

  2. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் சித்தி.எதையுமே எவராலும் மறுக்க முடியாது.

    ஆரம்ப காலத்திலேயே சுயநல தமிழ் அரசியல்வாதிகளையும், அவர்களின் எடுபிடிகளான தெருச் சண்டிளையும் நன்கு அறிந்தும், தமிழ், தமிழ்தேசியம் என்று அவர்கள் தொடங்கியதே கள்ள நோக்கத்திக்கு என்று தெரிந்தும்,

    பல தமிழ் அறிவுக்கொளுந்துகளும்,மண்டைகழண்ட தமிழ் மந்தைக்கூட்டமும் முன்,பின் சிந்திக்காமல் ஆதரவு வழங்கி, வளர்த்துவிட்டதால் வந்த விளைவை இன்று ஒட்டுமொத்த ஈழத் தமிழினம் மட்டுமே அனுபவிக்கிறது.

    கொளுத்த முதலைகள் இப்போ கண்ணீர் விடுவது, நிட்சயமாக வேறு ஒரு கள்ள நோக்கத்திக்கே.

    திருந்துங்களா அந்தப் பரதேசிகள்?

  3. ஈழத் தமிழரின் பிரச்சனைகளுக்கு இலகுவாக, இழப்பின்றி தீர்க்கக் கூடிய வழிகள், சந்தர்ப்பங்கள் இருந்தும்,

    தலைக்கனத்தினால், குறுகிய சிந்தனையால், கூடாத மனநிலையால், சுயநல நோக்கத்தினால், மந்தப் புத்தியால், முட்டாள் தனத்தினால், கள்ளம் கபடத்தினால் அதை தட்டிக் கழித்து, சாட்டு போக்கு சொல்லி, விதண்டாவாதம் செய்து, சண்டையை தொடக்கி,

    ஒரு தமிழ் பரம்பரையே வீணடிக்கப்பட்டு விட்டது மட்டுமல்ல, இருந்ததையும் இழந்து, தமிழ் மண்ணையும் பறிகொடுத்து, உலகமே வெறுக்கும் படியாக நடந்து, மானம், மரியாதை இழந்து வாழவேண்டிய நிலைமைக்கு தமிழினத்தை கொண்டு வந்து விட்ட பெருமையை,

    தமிழ்ஈழ அறிவாளிகள், தமிழ்ஈழ அறிவுக்கொழுந்துகள், தமிழ்ஈழ அரசியல் வாதிகள், தமிழ்ஈழ எடுபிடிக் கூட்டம், புலன்பெயர்ந்த தமிழ்ஈழ மந்தைகூட்டம், உலக தமிழ்ஈழ வானொலி, தொலைகாட்சி, பத்திரிகைகள், தமிழ்ஈழ அறிஞர், கலைஞர் கூட்டங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொருவரும் தமது மனட்சாட்சியை தொட்டு ஒவ்வொன்றையும் அலசிப்பார்த்தால், உங்களின் இதயத்தில் இருக்கும் அழுக்குகளை அறிந்து கொள்ளலாம்.

    முதலில் உங்கள் அழுக்கை கழுவுங்கள்.

    தமிழ்ஈழகூட்டம் வாழ்கையில் திருந்துவார்களா?.

  4. இந்த கள்ள கூட்டத்தின் பொருக்கி வேலை , இன்று உலகறிந்த விடயம். இந்த பரதேசி பாசிச புலி நரகன்களால் இனி எதுவும் பண்ண முடியாது! உந்த நாய் கூட்டங்களுக்கு, சரியான மருந்து எமது ராஜபக்சவும் , அவரின் அரசியலும் தான்! பாசிசம் செய்ததுக்கு, தகுந்த தண்டனையை ராஜபக்ஷவை தவிர உலகத்தில் எவனாலயும் வழங்க முடியாது என்பதையும் – உலக தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்! இன்று – ராஜபக்ஷவினால் தான் – இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக- சுதந்திர சுவாசக்காட்ட்ரை அனுபவிக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இதே புலி கூட்டமாக இருந்து இருந்தால், இந்த தமிழ் மக்கள்-இப்படி சுதந்திரமாக சுவாசித்து இருப்பார்களா? யாரவது தகுந்த ஆதாரத்துடன் இதை சொல்ல முடியுமா? புலி வால்களாக, புலி பரதேசியலாக இருந்த, புலி பொருக்கியளாக இருந்த எவனாலும் இந்த உத்தரவாதத்தை தமிழ் மக்களுக்கு இந்த முப்பது வருட போராட்டத்தில் கொடுத்தாங்களா? புலி என்ற பொருக்கியல்,தமிழரை அளிக்க பிறந்த பாசிச நாய்களே தவிர, தமிழ் மக்களுக்கு என்ன செய்தவங்கள்? சாதீய புலி ஒளிந்து/தொலைந்து/நாசமாய் போனதுக்கு காரணமே, இந்த நாய்களின் மனித இரேய்ச்சி வேட்கை தான் என்பதை உலக தமிழ் இனம் அறியும்.

  5. Don’t delete this comment please
    3.5 million tamils in sri lanka 1984. thirty million tamils leaft that country no any reason(including me) remain 0.5 million. LTTE had the shortage for the membership than LTTE force join with them including children old men women girls.IN this condition very nice situation for the government forcess their kill everyone because everyone is a LTTE but we are think money my children very safety our hobby is srl tamils politic that all. I asking you in this month ten thousend tamils went from sweiss to SRL.UNO OR EU don’t know about that? have you any comment forthis?

  6. i think u such an asshole…bocz in u r mind u love prabakaran..thats y…u..makn story.. he is tha 1.coz of that..every time..u rember his name.war is end .1 year passed.but u still talking about him..
    i like u man.keep it up.
    “kaaikiara maraththukuthan kalleri padum*

  7. Dear Sam, would you please explaine yuar problem probbrly?
    Who is LTTE? Who is it? What that terrorist done for Tamils? You talking about millions of peopele and LTTE. Do you know-hove many thousands of tamil peoples killed by LTTE libaration of tamil tigers?

    There are no more LTTE in SriLanka,if you wish to be a former of new LTTE, better you identyfy it your self first on this nett side.

  8. பார்வதியம்மாள் உட்பட இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு நாடு கடந்த தமிழ் ஈழ கனடா நாட்டு முதன்மை MP யான கௌரவ வனிதா இராஜேந்திரம் அவர்கள் முன்வந்துள்ளார்கள். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ஐம்பது டாலர்கள் மாதாந்தம் அறவிடுவதட்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வார இறுதியில் நடைபெறும் CTR வானொலி மாபெரும் களியாட்ட விழாவில், முள்ளிவாய்க்கால் மரணத்துக்கு மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியபின், இதற்கான பத்திரங்கள், வங்கி கட்டளைகள் என்பன அன்பான தமிழீழ மக்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கேள்வி கேட்காமல் சொன்ன இடத்தில வாக்கு போட்டவர்கள் ஐம்பது என்ன நூறும் மாதாமாதம் கொடுப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

  9. இதுவரைக்கும், விடுதலைப் போராட்டம், எங்கள் தாயகம் தமிழீழ தாயகம், நாளை பிறக்கும் தமிழீழம் என்று இடைவிடாது ஓதி, ஓதி, பாடி, பாடிப் புலன்பெயர் தமிழ் மக்களின் மண்டையைக் கழுவி, மெழுகி மண்டை கழண்ட மந்தைகூட்டங்கலாக்கி, அவர்களைத் தடவி, தடவி துவேசத்தை ஊட்டி வளர்த்து,

    தங்கள் சுயநல, சுகபோக வாழ்வுக்கு ஓசி, ஈசியாக பணம், பொருள், சொத்து, சுகம் சேர்த்துப் பழக்கப்பட்ட புலிமாபியா கூட்டம் ஒருபோதும் திருந்தப் போவதில்லை.

    நிட்சயம், இனிவரும் காலங்களில் ஏதாவது ஒரு புதிய வடிவில், புதிய பாணியில் மீண்டும் உங்கள் முன் காட்சியளிப்பார்கள்.

    பணம் என்றால் பிணங்களும் வாய் திறக்கும் என்றால், பிணங்களை வைத்து பிழைப்பு நடத்திய பேய்கள் சும்மாவா இருக்கும்.

    இனியும் அவர்களை இனங்கண்டு ஒதுக்கிவிடாமல், ஒதுங்கிவிடாமல், அவர்களின் புதிய பசப்பு வார்த்தைகளில் மயங்கி, மீண்டும் பேயடித்த தமிழீழவேருளிகளாக சாக்கடைக்குள் விழுவதாகில்,

    நீங்கள் தலையில்லாத முண்டத்திக்கு சமன்.

    எனவே கனடா வாழ் தமிழர்களே, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
    இனியும், உங்கள் தலையை கழுவ இடமளிக்க வேண்டாம்.

  10. வணக்கம்
    என் உண்மைத் தமிழே
    நீண்ட இடைவெளியின் பின் நான் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியாக இருப்பினும் ஒரு கறுப்புத்திரையின் பின் நடந்தேறியுள்ள நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தையும் நாமறிய வேண்டும் என்றால் தமிழர்களாகிய நாமெல்லாம் ஒருநிமிடம் நடிகர்களாக மாற வேண்டும் அதை செய்துவிட்டு நாம் பார்வையாளர்களாக இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்போம் ,

    நான் என் பயணத்தை புத்தளத்தில் இருந்து ஆரம்பித்தேன் ஏன் புத்தளத்தில் இருந்து ஆரம்பித்தேன் என்றால் அங்குதான் விடுதலைப் புலிகளால் வெளியேற்றிய எம் இஸ்லாம் உறவுகள் உள்ளனர் அன்று போராளிகள் எடுத்த முடிவு சரியோ அல்லது பிழையோ என்பதுக்கு அப்பால் அவர்களின் மன நிலையை பகுத்து ஆராய்ந்து உங்களுக்கு தர எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை எட்டு மகிச்சி ,கிட்டத்தட்ட பதினைந்து இஸ்லாம் மத தமிழ் உறவுகளோடு பகிர்ந்தவை அவர்களின் கருத்து சுருக்கமாகத் தருகின்றேன் ஏதோ புலிகள் எம்மை வெளியேற்றி விட்டார்கள் என்ற கோபம் எமக்கிருக்கின்றது தான் ஆனால் நாம் புத்தளத்தில் நிமதியாக இல்லை இதை விட விடுதலைப் புலிகளோடு நாம் நிம்மதியாக இருந்தோம் என்ற ஆதங்கக் கருத்தை அவருடைய வாயால் சொல்லி பெருமுச்சு விட்டனர் ஆனால் அங்குள்ள பிரச்சனைகளை பொறுப்புள்ளவர்கள் கவத்தில் எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் நாம் தொடர்ந்தும் பல இன்னலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றார்கள் ,

    அடுத்ததாக கிழக்கின் பலபாகத்துக்கும் சென்று பார்த்தபோது எங்கள் தமிழ் சமுதாயம் நிர்க்கதியற்று நிற்ப்பதை பார்க்கக் கூடியதாக உள்ளது இதைச்சொன்னால் ஒரு சில சந்தர்ப்பவாதிகள் கோவப்படுகின்றனர் ஆனால் உண்மைகளை நீண்ட காலத்துக்கு மறைத்து வைக்க முடியாது காரணம் கிழக்கை சிதைத்த முழுப் பொறுப்பும் கருணாவுக்கே போய்ச்சேரும் இதைப் பற்றி என் உடன் பிறப்புக்கோளோடு உரையாடியபோது அவர்கள் கூறிய வார்த்தை எல்லாத்துக்கும் காரணம் இந்த நாசமாய்ப் போன கருணாவே காரணம் என்று கோவபபடுவதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது காரணம் இது ஒரு கிழக்கு தமிழ் குடிமகனின் குமுறல் நான் படும் படாமலும் அவரிடம் கேட்டேன் ஜயா வட கிழக்கை பிரிக்க கருணா கூறிய பிரதேச வாதம் சரியா என்று கேட்டபோது அவர் கண் அனாலைப் போன்று சிவந்து விட்டது உடனே அவர் சொன்னார் ஒரு தனிமனிதன் விட்ட தவறுக்கு நாம் தலை குனியத் தேவையில்லை என்றார் ,

    இனி கொழும்பு வருவோம் கொழும்பு வாழ் தமிழரின் நிலைமை 1983 இக்கு முன் எப்படியிருந்ததோ அதே நிலைப்பாடுதான் இப்போதும் உள்ளது விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றனர் ஆனாலும் சிங்கள ராணுவக் காவல் அரண்கள் முலைக்கு முலையாகவும் அடிக்கடி மறித்து விசாரணைகள் செய்வதும் வேடிக்கையாகவே உள்ளது கேள்வி எங்கே போகின்றாய் முதல் கேள்வி நாம் போகுமிடத்தைக் கூறியபின் எங்கிருந்து வருகின்றாய் நாம் எங்கிருந்து வருகின்றோம் என்பதைக் கூறியபின் ஏன் போகின்றாய் என்ற கேள்வியை தொடுக்கின்றார்கள் அதற்கும் பதில் கூறிய பின் எப்பொழுது நீ உன்னுடைய இடத்துக்குத் திரும்புவாய் என்ற கேள்வி பிறக்கின்றது இது மிகவும் கடினமான கேள்வி காரணம் எல்லோரும் இன்னாட்டு மாக்கள் என்று நீதான் சொல்லுகின்றாய் ஆனால் இதையும் நீதான் கூறுகின்றாய் கோதுமையும் அரிசிமாவும் உளுத்தம்மாவும் உண்டு என்று எம்மை அடுக்கடி நீதான் நினைவு படுத்துகின்றாய் ,

    அடுத்து வவுனியா நோக்கி என் பயணத்தை செலுத்தினேன் புகை வண்டிப் பயணம் என்று சொன்னாலும் அது தமிழனுக்கு ஒரு எரிச்சல்ப் பயணமாகத்தான் உள்ளது காரணம் சிங்கத்தின் குகைக்குள் சென்று உயிர் தப்பினால் எப்படி உணர்வு இருக்குமோ அப்படியே எனக்கு இருந்த்தது இப்பொழுது வவனியா வந்து விட்டேன் எனக்கு இந்த தகவலை தருவதில் கடினமாக இருந்தாலும் வவுனியா நிலன்தரக் குடியிருப்பாளரின் உதவியோடு திரட்டிய தகவல் கிட்டத் தட்ட வவுனியாவில் 2500 று சிங்களக் காவல் நிலையங்கள் தொடர்ந்து இன்றும் செயல்ப்பாட்டில் உள்ளது ஆனால் தமிழர் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று 100000 தமிழரின் பிணத்தின் மீதுதானே நின்றுதானே மகிந்த பட்டாளம் வெற்றிமாலை சூடியது பிறகு யாரைக் கொல்ல இந்த அடக்குமுறை காவல் அரண்கள்?

    இனி வன்னியின் ஒருபகுதியாகிய வவுனியாவை விட்டு கண்டி வீதியால் கிளிநொச்சிக்குப் பயணத்தை செலுத்தினேன் நம்பமுடியவில்லை உலகத்திலையே இராணுவம் இப்படி இருப்பது வேறு இந்த நாட்டிலும் இல்லை கிட்டத்தட்ட 2000 யிரம் காவல் அரண்கள் அனைத்தும் நவீன அரங்கலாகக் காணப்படுகின்றது ஓடு தகரம் சீட் போன்றவையால் அமைக்கப் பட்டுள்ளது நான் என்னுடன் பயணம் செய்த முதியவரிடம் கதை கொடுத்தபோது அவர் சொன்னபதிலும் கேள்வியும் இவையெல்லாம் தமிழரின் வீட்டுத் தளபாடங்கள் இன்றும் எங்கள் வீட்டை உடைத்து தங்கள் காவல் அரண்களை அமைத்த இந்த நாய்களா எமக்கு வீடும் வாசலையும் கட்ட நட்ட ஈடு தரப் போகின்றனர் தமிழனை வாழ விடப் போகின்றனர் என்ற கேள்வியோடு அவர் நிறுத்திக் கொண்டார் ,

    இனி மாங்குளம் நகரத்தில் எறங்கி ஒரு தடவை சுற்றிப் பார்த்தேன் அப்பொழுது எனக்கு ஒரு நினைவு வருகின்றது உயிர்களுக்கு இறப்பின் பின் நரகமோ சொர்க்கமோ கிடைக்கும் அப்படிப் பார்த்தால் இனி தமிழனுக்கு நரகம் இல்லை நேரடியாக சொர்க்கம் தான் காரணம் இன்று தமிழன் ஒரு பெரும் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இனி அப்படியே கிளிநொச்சிக்கு சென்றேன் கிளினகரம் இன்று பெரும் நரகமாக அதாவது சிங்கள நரகமாக மாறியுள்ளது உள் எறங்கி மக்களோடு உரையாடிவிட்டு முறிப்பு நோக்கி பயணத்தை மேற்கொண்டேன் கோணாவில் அக்கராயன் இப்படி உள் நுழைந்து மக்கள் நிலை அறிந்து தருகின்றேன் என் மக்கள் எல்லாத்தையும் இழந்து வேறுமையானதொரு வாழ்க்கையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை ஒரே சிங்களமயமாக்கலுக்கான திட்டம் மட்டும் அங்கே தெரிகின்றது அடுத்ததாக பணத்தைப் புரட்டக் கூடிய தமிழர்கள் ஒருளவுக்கு தம்மை சீர் செய்து வருகின்றனர் ஆனால் இது அவர்களின் சொந்த முயற்ச்சி ,

    அடுத்தது கிளி மக்களின் கருத்து நாம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் போராளிகளின் மறுவருகை தவிர்க்க முடியாது ஆனால் கடைசிக் கட்ட போராட்டத்தில் போராளிகளையும் போராட்டத்தையும் தவறு என்று காட்டுவதுக்கு கறுப்புத் திரையின் பின் பல நாடகம் அரங்கேறியுள்ளது அன்று எமக்குப் புரியவில்லை இன்று எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது எனவே போராளிகளின் மறுவருகையும் போராட்டத்தின் தன்மையும் மாறும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது ஆனால் இனியும் புலிகள்தான் இதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறி எல்லோரும் ஒன்றுபட்டால் நிச்சயம் இந்த நரகத்தில் இருந்து விடுபட முடியும்

    இனி முல்லை நோக்கிய பயணத்தை நான் மேற்கொண்டேன் கிட்டத்தட்ட மாங்குளத்தில் இருந்து முளியவளை வரை 1950 காவல் அரண்கள் உள்ளது இது வெளிப்படையாக உள்ளவை மட்டுமே கேப்பாபிலவு மக்களை மக்களின் வேதனை நான் பலதடவை என் கட்டுரையில் தந்துள்ளேன் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே இன்றும் நடு வீதியில்த்தான் வற்றாப்பளை வீதி ஏற்க்கனவே கண்டி வீதியை விட அகலம் ஆனால் வீதி அகட்டுகின்றோம் இன்று சொல்லி மக்களின் காணிகள் அபகரிக்கப் படுகின்றது இதனால் எத்தனையோ பயன் தரும் மரங்கள் அளிக்கப்படுகின்றன நான் என் கண்ணால் கண்டவை பல பிலா மரங்கள் நிறைந்த காயுடன் நிக்கின்றன ஒரு வயோதிபர் அதைப் பார்த்து இதுதான் எங்கள் வருமானம் இதை விட்டால் வேறு வழியில்லை என்றார் இன்னும் ஒருவர் தம்பி எங்கள் கடையும் இவங்கள் விச்த்தரிப்புக்குள் உடைக்கப்போறாங்கள் இன்னும் ஒருவர் சொன்னார் இது பருவாயில்லை எங்கள் மலசலக் கிடங்கும் விச்த்தரிப்புக்குள் போகின்றது என்னுமொருவர் தென்னைகள் பிலாக்கள் தேசிகள் தொடை இன்று பல பயன்தரும் மரங்கள் அழிக்கப்படப் போகுது

    முளியவளையில் இருந்து நெடுங்கேணி இங்கு வாழ் மக்கள் குழம்பிப் போய் உள்ளனர் காரணம் பல கொலைகள் நடை பெற்ற இடமாக மாறியுள்ளது இராணுவ எப்படிப் பட்ட இடத்தில் இராணுவ காவல் அரண்களுக்குள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட பெரும் பாடுபடுகின்றனர் விவசாயத்தில் பெரும் சாதனை படைத்த கிராமங்களி அரவணைத்து சென்ற ஒரு பெரும் நகரம் தான் நெடுங்கேணி ஆனால் இன்று இராணுவ அடக்கத்துக்குள் இருந்து தன்னை கட்டிஎளுப்பப் பெரும் பாடுபடுகின்றது இனி கிராமம் ஒன்றுக்குள் நுழைந்தேன் ஒதியமலை எங்கேதான் 1984 ம் ஆண்டு இராணுவ கொலைவெறியாட்டம் நடைபெற்றது 35 கிராம முதுகெலும்புகளை வாசியா சாலைக்குள் போட்டு கொலை செய்யப்பட்டது இந்த மக்கள் இன்று எந்தத் துணிவும் இன்றி உயிர் வாழ வேண்டும் பிள்ளைகளை வாழ வைக்க வேண்டும் இன்று மீண்டும் கொலைக் கிராமத்தில் இராணுவ அடக்கத்துக்குள் குடியேறியுள்ளனர்

    பெரியகுளம் படிக் குடியிருப்பு டொலர்பாம் என்ற தமிழ் கிராமத்துக்கு அண்மையாக உள்ளது எதில் டொலர்பாம் ஏற்க்கனவே சிங்களமயமாக்கலாகி விட்டது இனி தொடரும் அபாயம் மக்கள் குழப்பம்

    ஒரு இராணுவ அதிகாரியின் பதில் மக்கள் சென்று கேட்டதுக்கு அவர் கூறிய பதில் இது அட மடத் தமிழா உங்கள் பிரவாகரன் வெறும் ரோட்டுக்கும் சோத்துக்கும் வீட்டுக்குமா போராடினான் இதைக் கேட்டிருந்தால் மகிந்தா குண்டியைத் தட்டிக் கொண்டு கொடுத்திருப்பானே இதை கேட்டால் அவனும் தந்து விட்டு எல்லாம் முடிந்து போயிற்ரு இன்று சும்மாய் இருப்பான் உங்கட உருமையைக் கேளுங்கடா என்று ஆனால் நீங்கள் உண்மையில் மடத் தமிழன்தான் இது ஒரு இராணுவ அதிகாரியின் கூற்று

    நன்றி வணக்கம்

  11. கோத்தாபய ராஜபக்ஸவும், டி.எம்.ஜெயரட்ணவும் என்ன சொல்கிறார்கள்?

    * புலிகள் இயக்கம் வெளிநாட்டில் இருந்து உயிர் பெற்று வந்து விடலாம் என்கிறார்கள் அவர்கள்.

    வெளிநாட்டில் பயிற்சி பெற்று கடல் வழியாக வந்து தரையிறங்கலாம் என்று பயம் காட்டுகிறார்கள்

    இது சிங்களவருக்காக அவர்கள் காட்டும் பூச்சாண்டியல்ல- தமிழருக்காக வெட்டும் புதைகுழி.

    புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் தான் அவர்கள் இப்படிச் சொல்வதற்குக் காரணம்.

    ஆயுதப்போராட்டம் அழிந்து விடவில்லை- தேசியத் தலைமையும் தளபதிகளும் பாதுகாப்பாகவே உள்ளனர்- மீளவும் வந்து ஐந்தாவது கட்ட ஈழப்போரை நடத்துவர் என்று செய்த பிரசாரத்தின்; விளைவு இது.

    சிங்கள அரசுக்குத் தெரியும்- இப்படி எதுவும் நடக்கப் போவதில்லை என்று.

    ஆனால் சிறைப்பட்டுள்ள போராளிகளை நிரந்தரமாகவே தடுத்து வைத்திருப்பதற்கு- நாம் கொடுத்த பொல்லை வைத்தே எம்மைத் தாக்குகிறது சிங்கள அரசு.

    புலிகள் இயக்கம் மீள உயிர் பெற்றால் விடுதலையாகும் போராளிகள் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்று கோத்தாபய வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

    புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் அதீத கற்பனையுடன் செய்யும் பிரசாரம்- தடுப்புக்காவலில் உள்ள போராளிகளுக்கு எமனாக மாறியுள்ளது.

    * இங்கே எமது தலையில் மண் அள்ளிப் போட வேறெவரும் வரவில்லை- நாமே தான் அதைச் செய்கிறோம்.
    * எமக்கு நாமே குழிபறிக்கிறோம். எமக்கு நாமே பொறி வைக்கிறோம்.

    ஆயுதப் போராட்டம் என்பது இனிமேல் தமிழரின் வரலாற்றில் சாத்தியமேயில்லாத ஒன்று.

    அப்படியான கற்பனைக் கோடொன்றை வரைந்து புலம்பெயர் மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள்- தடுப்புமுகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறார்கள்.

    முள்ளிவாய்க்காலுடன் எமது அவலங்கள் முடிந்து போகவில்லை.

    அங்கே தான் அழிவுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

    மீண்டும் சந்திப்போம்.

  12. முப்பது வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போரட்டத்தை நயவஞ்சக முறைகளில் அணுகிய இலங்கை அரசு. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் போராட்டம் நடத்தியவர்களை சித்திரவதை செய்தும், பொதுமக்களை கொடூரமான முகாம்களிலும் தடுத்து வைத்திருக்கும் அதேவேளை புலம்பெயர் வாழ்தமிழ் மக்களுக்கு பாடம் புகட்ட இலங்கை அரசு.
    ஆயத்தமாகியுள்ளது

    இலங்கை தீவில் வடக்கு கிழக்கு பிரதேசங்களை கொண்ட தமிழ் அரசு 1833ம் ஆண்டு சிங்கள அரசுக்களுடன் பிரித்தானியா அரசினால் இணைக்கப்பட்ட நாளிலிருந்து தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் கஷ்டங்கள் கணக்கில் அடங்காது.

    1956ம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஆரம்பமாகிய ஒப்பந்தங்கள் இறுதியில் 2002ம் ஆண்டு நோர்வேயின் மத்தியாஸ்தத்தில் இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையான ஒப்பந்தங்கள் வரை, தமிழீழ மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அரசியல் ரீதியாக தமிழ் மக்களுடனான இலங்கையின் நட்பு என்பது சிங்களவர்களின் ஆதிக்கத்தை இலங்கை தீவில் முழுமையாக நிலைகொள்ளச் செய்யும் தந்திர உபாயமே தவிர, இதில் தமிழீழ மக்களுக்கு ஏதுவித நன்மையும் கிடைக்க போவதில்லை.

    ஆகையால் தமிழீழ மக்களுடைய சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம் நன்மையான பிரதிபலிப்புக்களை கொடுக்காத காரணத்தினால் எதிர்காலங்களில் தமிழீழ மக்களுடைய ஜனநாயக விடுதலைப் போராட்டமானது ஒரு நாட்டுடைய உதவியுடன் மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

    இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கான அரசின் போராட்டம் கடந்த இருபத்தேழு வருடங்களாக சர்வதேச மாயப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு யார் தன்னும் பின்னின்று மீண்டும் மீண்டும் மண் குதிரையான இலங்கை அரசுடன் சமரசம் பேச எந்த ஒரு ஈழத்தமிழனும் முன் வருவானானால, அவன் அரசியல் ஞானம் இராஜதந்திரம் விளங்காத தெரியாத ஒர் சுயநலம் கொண்ட பேர் வழியாகத் தான் இருக்கமுடியும்.

    கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் நாம் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லையென நம்புகிறேன். என்றாலும் ஓர் உதாரணத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    1987ம் ஆண்டு தமிழீழ மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசங்களை இலங்கையின் பாதுகாப்புப் படைகள் தமது அநாகரீகமான யுத்த முறையினால் அபகரிக்க முனைந்த வேளையில், 1987ம் ஆண்டு யூலை மாதம் இலங்கை – இந்திய உடன்படிக்கை உருவாகியது. இவ் உடன்படிக்கையை தமிழீழ மக்களில் பெரும்பான்மையோரும் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளும் ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்களின் எதிர்காலத்துக்கு ஏற்ற ஒரு சில நல்ல விடயங்கள் இவ் உடன்படிக்கையில் காணப்பட்டன!

    அவ்வேளையில,; இவ் உடன்படிகையில் கைச்சாத்திடுவதற்காக கொழும்பு சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை, இலங்கையின் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு நடைபெற்ற இராணுவ மரியாதையின் போது தாக்கினார்.

    இதனால் இலங்கை – இந்தியா உறவு பாதிக்கப்படுவதை அவதானித்த அவ்வேளையில் அரசியல் நரி என வர்ணிக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனவும், அவரது பாதுகாப்பு மந்திரியான அத்துலத் முதலியும் பல கபட நாடகங்களை நடித்து, இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமாகியது. இவ் யுத்தம் சில வருடங்கள் நீடித்ததை அவதானித்த இலங்கையின் புலனாய்வு, இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க விரும்பவில்லையென ஊகித்தனர். இவ்வேளையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆர். பிரேமதாச, தமிழீழ விடுதலைப் புலிகளை கபட நோக்குடன் பேச்சுவார்த்தைக்கென அழைத்து, புலிகளை இந்தியா அரசின் பகைமையை சம்பாதிக்க வழிவகுத்த அதேவேளை, தாம் தமிழீழ விடுதலைப் புலிகளை முடித்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.

    இதனால் 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமாகியது மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவின் நிரந்தர எதிரியாக ஒரு காரணி என்பது சரித்திரம்.

    இப்படியாக தமிழீழ மக்களை, தமிழீழ மக்களின் விடுதலையை முன்னெடுத்தோரையும் தனிமைப்படுத்திய இலங்கை அரசு, தொடர்ந்து படுகொலைகள், காணாமல் போதல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சொத்தழிப்புக்கள் போன்றவற்றை பிரமாண்டமாக வருடக்கணக்கில் செய்தார்கள். உலகில் யாரும் இவற்றைத் தட்டிக் கேட்க முன்வரவில்லை. இறுதியில் தாம் விரும்பியவற்றையும் கடந்த வருடம் மே மாதம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

    இவை யாவற்றுக்கும் ஈழத் தமிழார் தொடாந்து செய்யும் அரசியல் இராஜதந்திர தவறுகளே காரணம். முதலாவதாக 1987ம் ஆண்டு இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தின் பின்னர், இலைங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல என்பதை இலங்கை ஏற்ற பின்னர், தமிழ் மக்கள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டிய அவசியமில்லை. இதேபோல் 2002ம் ஆண்டு நோர்வேயின் மஸ்தியத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கு மிடையில் கைச்சாத்தான உடன்படிக்கையை இலங்கை நல்ல சந்தர்ப்பம் பார்த்து அதை இரத்துச் செய்துள்ளது.

    இவ் உடன்படிக்கையின் பிரகாரம் தமிழீழ மக்களின் அரசியல் பிரச்சனை ஓர் உள்நாட்டு பிரச்சனையல்ல என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    ஆகையால் தொடர்ந்தும் நாம் மண் குதிரையான இலங்கை அரசிடம் சென்று உள்ளதையும் பறிகொடுக்காமல், ஆழ்ந்து சிந்தித்து எமக்கு சரித்திர, கலாச்சார, சமய ரீதியாக உதவக்கூடியவர்களுடன் இணைந்து அவர்கள் உதவியுடன் சரியான முறையில் ஜனநாயக ரீதியாக எமது சுயநிர்ணய உரிமைகயை பெற வேண்டும்.

    அபிவிருத்தி என்ற பெயரில் எமது இனத்தை அழித்து, எமது மண்ணை அபகரித்து, எமது சரித்திரத்தையே மாற்றியமைத்து வரும் இலங்கையின் பௌத்த சிங்கள அரசிற்கு நாம் அறிந்தோ அறியாமல் துணை போகக்கூடாது.

    உண்மையில் இலங்கை அரசு தமிழீழ மக்களில் அக்கறை கொண்டவர்களானால் இன்றுவரை இடம்பெயர்ந்து வருடக்கணக்கில் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு என்ன புனர்வாழ்வு, புனரமைப்பு செய்துள்ளனர்?

    தொடர்ந்து தமிழ் மக்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பயமுறுத்தி, அலுவல்களை புரியும் இலங்கை அரசை யார் நம்புவார்கள்?

    புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகள் யாவும் ஜனநாயகமானது மட்டுமல்லாது சீர்சிருத்தமான நாடுகளும் கூட. இவ் நாடுகளில் சட்ட ஒழுங்குகளை மதித்து நல்ல பிரஜைகளாக வாழும் எவரும் இலங்கையின் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் ஒரு பொழுதுமில்லை.

    அப்படி தவறான தகவல்களை கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தவறுதலாக யாரும் தண்டிக்கப் பட்டாலும், ஐரோப்பிய சபையின் ஒருங்கிணைப்பின் பிரகாரம், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் அல்லது ஐ. நா. மனித உரிமைக் குழுவிடம் பாதிக்கப்பட்டோர் நீதி காணும் நிலையே ஐரோப்பிய நாடுகளில் உண்டு.

    இலங்கையை நம்பி நாம் அனுபவிப்பவை, அனுபவித்தவை போதும். நாம் தொடர்ந்து எமக்கு வழிகாட்டக் கூடிய நண்பரை மீண்டும் தேடுவோம்.

  13. mattvarhaludaiya karuthum thevai sithi mathiram etho tamilarhaluhaka enna perucha seythava

  14. சிறீலங்கா அரசு ஒரு இனவாத அரசு எனவும், சிங்களவர்கள் மட்டுமே இந்த நாட்டின் குடிமக்கள் என்ற பண்டாரநாயக்க கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், சிறீலங்கா அரசு ஆசியாவிலேயே படைத்துறை மயப்படுப்பட்ட அரசு எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கோர்டன் வைஸ் (Gordon Weiss) கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவுஸ்திரேயாவிற்கு படகுகளில் சென்று தஞ்சம் கோருவோரில் விடுதலைப் புலிகளும் உள்ளடங்கி இருப்பதாக சிறீலங்கா அரசு குற்றம் சாட்டிவரும் பின்னணியில், இது தொடர்பாக கருத்துப் பகிர்வுப் பகுதியொன்றை தி ஒஸ்ரேலியன் (The Australian) பத்திரிகை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கருத்தாய்வுப் பகுதியில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ள வைஸ், சிங்கள தேசியவாத, இனவாதப் போக்குடைய சிறீலங்கா அரசு, இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டும் இருக்கின்ற போதிலும் அதனை மறுத்து வருகின்றது எனவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

    போர்க் குற்றம் புரிந்ததையும், பொதுமக்களைக் கடத்தியதையும் சிறீலங்கா அரசு மறுத்து வருவதைக் கண்டித்துள்ள வைஸ், சிறீலங்கா அரசின் படுகொலைப் பிரிவினால் பல்லாயிரக் கணக்கானோர் வீதிகளில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதாகவும், ஆனால் சிறீலங்காவின் நீதித்துறையும் அரசிற்கு துணை போயிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    இறுதிப் போரில் பொதுமக்கள் 7,000 பேரே கொல்லப்பட்டதாக தற்பொழுதும் சில பன்னாட்டு ஊடகங்கள் எழுதிவரும் நிலையில், 40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் இறுதிப் போரில் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக கோர்டன் வைஸ் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டதை பதிவு இணையம் நினைவூட்ட விரும்புகின்றது.

    போர் காலத்தில் இலங்கையில் பணியாற்றி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோர்டன் வைஸ், இலங்கையில் சிங்கள இனவாதம் உயிர் நிலையில் இருப்பதை அச்சத்துடன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இறுதிக்கட்டப் போர் பற்றிய நூல் ஒன்றையும் எழுதி வருகின்றார்.

    இதேவேளை, படகுகளில் சென்று ஏதிலித் தஞ்சம் கோரும் மக்களில் விடுதலைப் புலிகளும் இருப்பதற்கான ஆதரங்கள் இல்லை என அறிவித்து, சிறீலங்கா அரசின் பரப்புரைக்கு கனடிய அரசாங்கம் சாட்டையடி கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  15. என்ன நடக்குது?
    டமில் ஈழம்ஸ் நாடு கடந்த அரசாங்க எம்பிமார் என்னவாம்?
    நினைச்ச மாதிரி பருப்பு அவிக்க முடியவில்லையா?
    நினைச்ச மாதிரி உழைப்பு இல்லையா?
    பேசாமல் உங்கட நண்பர் மாதிரி மகிந்தாவோட சேர்ந்து உழைப்பு நடத்துங்கோ

    அங்கதான் இப்ப நல்ல உழைப்பு.
    உங்களுக்கு காசு வந்தா கானும்தானே.
    டமில் பீபிளுக்க்ககா ஒரு மாவீரர் விழா நடத்தி மட்டின் ரோல் வித்தா கானும்தானே ஈசியாக எமாதல்லாம்

    ஜாலியோ ஜிம்கானாவோ……………..ஆதவன்

  16. வணக்கம்
    ஊர்க்குருவி
    உன்னுடைய தேவை அற்ற ஆனந்த்தாவுக்கு எத்தனை தடவைதான் நாம் மன்னிப்புக் கொடுப்பது போராட்டம் எதிரிக்கும் எமக்கும் ஆனால் உன்னுடைய ஆனந்தா எதிரியோடு நின்று தமிழனுக்குக் கொட்டிய குப்பைகளை மறந்து என்ன கை கோர்க்கச்சொல்லுகின்ராஜா?
    நன்றி

  17. hallo five colour pulee when you want go to in cage like a kilee I am great RAJAPAKSA are you scare now don’t worry I am not can you answer for this we are came to europa asked the asylum srl is a not safety for us everyone claim government kill us. we got a citizen here feeling europien want go there holiday and we want show them got nice life in europa. How is possible for srl government you are europiean canadiean or anyone don.t care WE are big lier in the world we want keep our kids in the pocked twice birthday in year nicelife. think about money whywe are put poorpeaple in the bloodiest funniest awful war SRL living tamils don’t know what is your tamil eelam or why thier put us in this war they parents think as well our children need nicelife WHEN our party coming big power then we claim all foreign living tamils pay the compensation in this conflict and anwer three hundred thosend people HOW MANY ORPHANS WIDOWS AND DISABLE

  18. வந்தபாதையினை தெரிந்து கொள்ளாதவர்கள் போகும் பாதையினை புரிந்து கொள்மாட்டார்கள்: தோழர் தியாகு
    திகதி: 21.07.2010 // தமிழீழம்
    தென் ஆபிரிக்காவிற்கு சர்வதேசம் கொடுத்த அழுத்தங்களே அங்கு ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணம் புலம்பெயர் தமிழ்மக்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என தமிழ் இன உணர்வாளரும் கவிஞருமான தாமரை தெரிவித்துள்ளார்.

  19. அப்படியா சங்கதி தாமரை.
    தென்னாபிரிக்காவில் கறுப்பின மஜாரிட்டி வெள்ளையன மைனாரிடி இடம் இருந்து சுதந்திரம் வேண்டி போராடியினம்.

    நெல்ல்சன் மண்டேலா உலகம் மதித்த அஹிமசை போராட்ட வாதி.

    பிரபாகரன் உலகம் வெறுத்த பயங்கரவாதி

    ஆபிரிக்காவில் இருந்து உறிஞ்ச கூடிய வளங்களை வெள்ளை இனம் உறிஞ்சி விட்டது.இன்னும் உறிஞ்ச படுகிறது .

    நிறைய வித்தியாசம் இருக்கே தாமரை
    அறிவில் நீ வெறும் தண்ணியில்லா தரை
    வெட்டி பேச்சு பேசினால் கொடுப்பாங்க உன் கன்னத்தில் அரை

  20. Whatever happened, happened for the good;
    Whatever is happening, is happening for the good;
    Whatever will happen, will also happen for the good only.
    You need not have any regrets for the past.
    You need not worry for the future.

    இருபத்தைந்து வருடத்திற்கு முன் துவக்கு இருந்தால் இயக்கம் கட்டலாம்
    யாரையாவது சுட்டு கொன்றால் இயக்கத் தலைவன், தளபதி ஆகலாம்.
    சோவியத் யூனியன் பிளவு படும் ஜேர்மன் சுவர் விழும் என்று எண்பதுகளில் இருந்த தம்மை அரசியல் ஆய்வாளர்களாக சொன்னவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை

    இருபத்தோராம் நூற்றாண்டில் தம்மை அரசியல்விற்பன்னர்களாக சொல்லிக்கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்துவிடும் என்று புரிந்திருக்கவில்லை. இப்போ ஊரை ஏமாத்தி காசுசுத்தினால் ரேடியோ டிவி பத்திரிகை நடத்தலாம் . இவர்களுக்கெல்லாம் மீடியாவுக்கு இருக்க வேண்டிய தர்மம், ஒழுக்கம் சமூகக் கடமை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. மாறிமாறி மாலை போட்டு பொய்களையே சொல்லி மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள்.

    கில்லாடிகளையும் கொலைகாரர்களையும் கள்ளக்கடத்தல்காரர்களையும் காசு அடிப்பவர்களையும் பெரிய சுளியர் என்று தலையில் தூக்கிவைத்து கூத்தாடும் பீலாக்கூட்டம் இந்த யாழ்ப்பாணிகள். நம்பவேண்டியதை நம்பாமல் நம்பக்கூடாத்வர்களை நம்பும் யாழ்ப்பாணிகளுக்கு இந்த சுத்துமாத்து ஏமாத்து மீடியாகாரர்தான் சரி.

  21. வணக்கம்
    DR
    இனி நீங்கள் புத்தம் சரணம் கச்சாமி
    பவுத்தம் இல்லாட்டி இனி நீ செத்தாய் நீ

    நீ பித்தம் பிடித்தே வாழ்ந்தாய் நீ
    உன் நிலை அறிந்து வாளாய் நீ

    தமிழ் கொலை செய்தான் கச்சாமி
    இனி தமிழன் கசாப்புக்கடை மாடாயிரு

    அட புத்தம் சரணம் கச்சாமி
    இனி தமிழன் செத்தான் DR கச்சாமி
    இனி தமிழன் கச்சைதான் மிச்சமாயிரு

    நன்றி

  22. வணக்கம்
    mambo
    உங்களைப் போன்றவர்கள் அடிப்படை தெரியாமல் அந்தரத்தில் நின்று ஆடுகின்ற பட்டத்தைப் போன்றவர்கள் ஏன் என்றால் காத்தடித்தால் பரப்பீர்கள் காற்று நின்றால் கீழே விழுந்துவிடுவீர்கள் ஆனால் விடுதலை விரும்பிகளோ அதுக்கும் அப்பால்ப்பட்டவர்கள் அதனால்த்தான் கடசிவரையும் உங்கள் திரோகங்களையும் தாண்டியும் களத்தில் நின்றார்கள் போராடினார்கள் எது நீங்கள் விமர்சனம் செய்ய உதவுகின்றதோ அதுதான் தமிழனின் எதிர்கால விடுதலையின் துருப்புச்சீட்டு ஒருவன் வேர்வை சிந்தாமல் வீடுகட்டுகின்றான் என்றால் நிட்ச்சயமாக இன்னொருவனை வதம் செய்துதான் கட்டமுடியும் எனவே உழைத்து உத்தமனாக வாழ வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் உழைக்க வேண்டும் என்றால் வேர்வை சிந்த வேண்டும் இவையில்லாமல் எவனும் வாழ முடியாது

    எனவே உலக வரலாற்றில் தன இனத்தைக் காத்து வந்த தடையங்களை அளித்த பெருமை எமது சமுகத்தில்த்தான் நடந்திருக்கின்றது இதை நாம் கடைசியாக முள்ளிவாய்க்கால் வரையும் வந்த இந்த துரோகத்தின் உச்சத்தைஎல்லாம் பார்த்த பின்னும் மறுக்கின்றோம் என்றால் இது கூட உலகத்தில் எந்த இனத்துக்கும் நடந்திருக்காது ஏன் இன்றும் விடுதலைப் போராளிகளையும் அதை ஆதரித்து நின்ற எமது தமிழ் சமுகத்தையும் வசைபாடியே வாழ்க்கை நடத்துவதைப் போல் உலகத்தில் எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு நானோ நீங்களோ அறிந்திருக்க வில்லை

    நீங்கள் mambo கடைசி யுத்த காலத்தில் எப்படியெல்லாம் தமிழனுக்குள் உல் புகுந்து விளையாடிநீர்கள் என்று கடசிவரையும் காலத்துக்குள் நின்று தப்பி வந்தவர்கள் சொல்லும் வார்த்தையை உண்மையாக்குவதுபோல் நீங்கள் இராணுவத்தோடு வந்து நின்று எங்களை வவுனியாவுக்குள் வரவேற்ற போதே நாம் கண்டுகொண்டோம் இதைவிட எமக்கு இனி என்ன ஆதாரம் தேவை உங்கள் திரோகத்தையும் தமிழ் விசுவாசத்தையும் ௩௬ வருட போராட்டத்தில் நடக்காத முழு சம்பவத்தையும் நீங்கள் உள் நுழைந்து நின்று நடத்திய நாடகத்தை உண்மையாக போராடிய போராளிகள் மீது பழிபோடும் உங்கள் தீர்க்க தரிசனமோ தரிசனம் உன்மைகள ஒருநாள் முழுமையாக வெளி வரும் போது நீங்கள் ??????????????????????????

    நன்றி

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>