தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3
தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3
ஏற்கனவே இரு பாகங்களை வாசித்த பலர் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பிலும், இதன் போக்கு எத்தகைய உண்மை பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும், வழமைபோல் இவருடைய ஆக்கத்தில் வெளிவருகின்ற முற்போக்கு கருத்துக்கள் இதில் வெளிவருமா என்று சில அரசியல் நகர்வாளர்களும், விவாதத்திற்கே என்று இன்னொரு சிலரும் …, சஞ்சரிக்கத்தான் போகின்றனர்… இது ஒருபுறம் இருக்க, பேரறிஞர் ஐயா சிவத்தம்பியைப்பற்றி ஒரு சம்பவத்தை பதித்தாகவே ண்டும் … காரணம் “கடந்த வரலாற்று உண்மைகளை, இன்றைய அநர்த்தத்தோடு ஒப்பிடும்போதே, எதிர்கால பாதைகளிற்கான கடினமான கற்கள் விலக்கப்படுகின்றன…” இதனடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டில் ஐயா மதிப்பிற்குரிய சிவத்தம்பி அவர்கள் “தமிழ்நாடு கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழுத்தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பியும்இ தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. ஆனால், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் அண்மையில் பி.பி.ஸி. தமிழோசைக்கு தெரிவித்தார்.” என பல இணையங்கள் காரசாரமாக வெளியிட்டிருந்தன… இதற்கும் இலங்கை வரலாற்றிற்கும் என்ன சம்மந்தம் என்று ஒரு சிலர் வினாவத்தான் செய்வார்கள்!!!… “எப்போதும் பலம்பொருந்தியவர்களின் செயற்பாடுகள் சர்வதேச சிறப்பைப்பெறும், மாறாக பலங்குன்றியவர்கள் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் அது விமர்சனத்தோடே ஸ்தம்பித்துவிடுகின்றன…” என எழுகின்ற கருத்தின் அடிப்படையில் பேரறிஞரான ஐயாஅவர்கள் திடமாக வார்த்தைகளையும் அடிகளையும் எடுத்துவைக்காது, பலவீனமான கருத்தைத்தெரிவித்து விட்டு இப்போது 2010ல் அந்த விழாவில் கலந்து சிறப்பித்து வந்திருக்கின்றார்… நல்ல செயற்பாடு, இதையே அவர் ஆரம்பத்தில் திடமாகச்சொல்லியிருந்தால் அனைத்து தமிழ் ஊடகங்களும் தமிழ் அறிஞர்களும் அதுதொடர்பாக பேசியிருப்பார்கள், அந்த மாநாட்டில் பல தமிழர்கள் கலந்தும் இருப்பார்கள்… தமிழ் உலகம் முழுதும் சிறப்பிக்கப்பட்டிருக்கும்… இவ்வாறான செயற்பாடுகளே வரலாற்றை மழுங்கடித்து முன்னுக்குப்பின்னான முரன்பாடுகளை எதிர்காலச்சந்ததிக்குத்து தோற்றுவிக்கின்றது. முன்னிக்கவேண்டும் ஐயா அவர்களே! தவறுகள் பகிரங்கமாக்கப்பட வேண்டும் அப்போதுதான் அவை திருத்தப்படும்!!!
இனி… அடுத்து பகுதிக்குச் செல்வோம்.
முதலாவது பகுதியிலும், இரண்டாவது பகுதியிலும் தமிழர்களின் ஆரம்ப அடிகளைப்பார்த்து, பல விடயங்களை அறிந்திருப்பீர்கள். எனினும் இரண்டாவது பகுதி சற்றுக்கடினமாகத்தான் இருந்திருக்கும் என்பதனை அன்பர்கள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் தெளிவுபடுத்துகின்றது. எனவே மேலும் இலகுபடுத்துப்பட்ட தமிழிலும், நடைமுறை வரிகளாலும் அலங்கரிக்கப்பட்டே இம்மூன்றாவது பகுதி வெளிவருகின்றது.
இரண்டாவது பகுதியில் முன்னைய அரசர்கள் பற்றி அலசியிருந்தோம். அது ஒரு புறம் இருக்க, இலங்கை அரக்கர் வாழும் ஒரு பிரதேசமாக புராணங்கள் விளக்கம் கொடுக்கின்றன… இது எத்தனை தூரம் உண்மை என்பதனை சற்று நோக்கித்தான் பார்க்க வேண்டும். இன்றைய தமிழ் வரலாற்றை கண்ணோக்குமிடத்து, தமிழீழம் என்றொரு தேசத்தில் மாவெரும் படையை நடாத்திய கரிகாளச்சோளனுக்கு ஒப்பான ஒரு மாவீரன் பிரபாகரன் என்ற நாமத்துடன் சிறப்பாகச் செங்கோலாட்சி நடத்திய வரலாறுகள் காட்டத்தவறவில்லை, அந்தத் தமிழீஈழ அரசனையும் அவன் படைகளையும், சிங்களக்காடையர்கள் பெரும் மனிதாபிமானமற்ற அரக்கத்தனமாக தோற்கடித்து பெருந்தொகையான தமிழ் குடிகளை கொண்று குவித்தனர்… என்று வரலாற்றில் வருகின்ற போது, … இங்கு சற்று நிறுத்திக்கொள்ளுதல் அவசியம்!!! அதாவது, “சிங்களக்காடையர்”, “அரக்கத்தனமாக” என்ற இந்தப்பதங்கள் சிங்களவர்களுக்கு மாறாக தமிழர்களாலே குறிப்பாக புலிகளைச்சார்ந்த அல்லது நலன்விரும்பிகளான தமிழர்களால் சித்தரிக்கப்படுகின்ற போது, சிங்களவர்கள் வேறுவகையில் இதனை வர்ணிக்கப்போகின்றார்கள் என்ற உண்மையினைப்புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் மேல் குறிப்பிட்ட வார்த்தைகள் அதாவது, “சிங்களக்காடையர்”, “அரக்கத்தனமாக” என்னும் பதத்தை விசாலமாகப்பாத்தால், காடையர்கள் மனிதர்களாக இருந்தாலும் மிருகத்தனமாகச் செயற்படுவோர்கள் எனவும், அரக்கர்கள் மனித உறுவில் மிருகங்களாகவும், மனித மாமிசம் தின்பவர்களாகவும், மனிதர்களிலும் பார்க்க பலம்கொண்டவர்களாகவும், மாயை மந்திரங்களை கையாளத்தெரிந்தவர்களாகவும் பார்ப்பதற்கு அசுரத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்றே நம் கதைகள் விளக்குகின்றன… இந்தவகையில் சிங்களவர்களைப்பார்க்கும் வரையில் அது கூட உண்மையாகத்தான் இருக்கின்றது. ஆனால் சிங்களவர்களைப்பார்த்தபின்னர்தான் தெரிகின்றது பல சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பார்வையில் வேறு பாடே இல்லை என்று! இதுபோலவே வரலாறறுப்பக்கங்களிலும் பல உண்மைகள் நமக்குத் தெரியாமலே புனையப்பட்டுள்ளன. ஊண்மைகள் உண்மைக்குப்புறம்பாக வெளிப்படுத்தப்பட்டன.
அதுவாகில், ஆரிய இனத்திற்கும் திராவிட இனத்திற்கும் அன்றைய ஆரம்ப காலத்தில் இருந்தே ஒவ்வாத்தன்மை காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்… சிங்களவர்களோ, ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். நான் சிங்களவர்கள் என்று குறிப்பிடுவது, விஜயனின் காலத்தில் இருந்து வெளிவந்தவர்களைக்குறிக்கின்றது… “குவேனியை” சார்ந்து தடமாறியகாலத்தில் இருந்தே புதிய தனி இனமாக சிங்களவர்கள் தம்மை வகுத்துக்கொண்டனர் என்பதனை பின்வரும் பகுதிகள் தெளிவு படுத்தும்.
இப்போது இரண்டாவது பகுதியில் குறிப்பிட்ட பல அரசர்களைப்பார்க்கும் முன்னர் பிரபல்யமாக காணப்பட்ட இலங்காபுரியின் மாமன்னனான இரவணனின் வரலாற்றை சற்றுப்பார்ப்போம். இராவணனின் வரலாறு என்றவுடனேயே எமக்கு கண்முன்தோன்றுவது இராமாயணமே! இந்த ராமாயணம் யாருடைய பக்கத்தில் இருந்து எழுதப்பட்டது என்றும் பார்ப்பது மிக அவசியமாகக்காணப்படுகின்றது.
அதாவது, இப்படி உதாரணப்படுத்துவோம்,
இராவணன் – பிரபாகரன்
இராமன் – இராஜபக்ஷ
இராவணன் என்றதும் கொடியவன், அரக்கன் என்ற எண்ணம் தமிழர்களான எம்மவர்களிடமும் இருப்பதுதான் ஆச்சரியம்!. பின்வரும் ஆதாரங்கள் இராவணனின் உயர்தரக்குணங்கள் தெளிவாக வெளிக்காட்டப்படும். அதே போன்றே பிரபாகரனின் உயர்தரக்குணத்தை அவருடன் கூடியிருந்தோரும், அவர் நம்பியிருந்தோரும் தற்போது தமது நன்மைக்காக கேவலப்படுதஇது முயற்சிப்பதிலிருந்து புலிகளின் பல சிறப்பம்சம் காலப்போக்கில் மறைக்கப்படப்போகின்றது என்பதும் உண்மையே!