சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

ஒரு உற்பத்திக் காலத்தில்.. கற்பத்தில் கனியாகி.. காலம் கனிந்த பின்.. மாதொரு மடியில் மகனாய் பிறந்து.. தவழ்ந்து புரண்டு தத்தி நடந்து .. மழலை மொழிந்து.. பின் எழுந்து நடந்து.. ஏடு படித்த‌ இளைஞனாகி.. கல்விக்குத் தக்க‌ கடமையும் புரிந்து.. வாலிப வயதில் மடந்தைகள் நோக்க‌… உள்ளம் புகுந்து உணர்வில் கலந்த உத்தமி ஒருத்தியின் கைத்தலம் பற்றி.. இல்லற வாழ்வின் இனிமையறிந்து.. பிள்ளைகள் பிறந்து நன்மைகள் புரிந்து.. உற்றம் சுற்றம் போற்றிட வாழ்ந்து.. முடிவில் ஒரு நாள் முதுமையடைந்து.. கண்கள் இருண்டு கடுகி நடந்து.. நோயில் விழுந்து பாயில் கிடந்து.. கடைசிக் காலம் கண்களில் தெரிந்து.. உற்றம் சுற்றம் சூழ்ந்து நிற்க‌.. உறவுகளெல்லாம் கண்ணீர் சிந்த.. உடலை விட்டு உயிரும் பிரிய‌.. ஒரு மாயக் கனவாய் மறைந்து போகிறது இந்த‌ மானிட‌ வாழ்க்கை ……

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற படிமுறையை இயற்கை அவன் பிறந்த நேரம் முதலே எழுதி வைத்திருக்கிறது… பிறப்பு.. ஆம் அது அனைவருக்கும் ஒன்றாக இருந்தாலும்.. இறப்பு சிலருக்கு விபத்தினாலோ.. இடையில் ஏற்படும் தீராத நோயினாலோ அல்லது இயற்கை அனத்தங்களாலோ.. இப்படி ஏதோ ஒரு வகையிலோ இடையில் முடிந்து போவது விதி நடத்தும் ஒரு விளையாட்டுதான்.. இடையில் ஏற்படும் அப்படிப்பட்ட ஒரு துர் மரணத்தை அவன் தலை விதியாக‌ மனிதன் ஏற்றுக் கொண்டாலும் யாரோ ஒருவரால் அவன் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதை அவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவைகள் யாவுமே மனித நேயம் உள்ள மனிதர்களாலும் ஏற்றுக் கொள்ள‌ முடியாதவைகள் ..ஏனெனில் ஒரு மனிதன் எப்படிப்பட்ட தவறை செய்த போதிலும் அந்த‌ மனிதன் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டியவனே அல்லாமல் அவன் உயிரைப் பறிப்பதற்கு வேறு எந்த மனிதனுக்கும் உரிமையில்லை என்பதுதான் மனுநீதி..

ஆனால் இப்படியாக‌ ஏதோ ஒரு வகையில் அவன் வாழ்க்கை முடிந்து போனாலும் அவன் அறியாத அந்த வாழ்க்கையின் முடிவு வரைக்கும் அவன் நின்மதியாக.. மகிழ்ச்சியாக.. வாழ்வின் படிமுறைகளை அனுபவித்து வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் என்பதுதான் இயற்கை அவனுக்கு வகுத்து வைத்த‌ நியதி…. ஆனால் இயற்கையின் இந்த படிமுறைகளை விட்டு விலகி தனக்குத் தானே அவன் உருவாக்கிக் கொள்ளும் பேராசையும்.. வீண் பெருமையையும்.. தன்னலமும் எரிச்சலும்.. பொய்யும் புரட்டும்.. போட்டியும் பொறாமையும்.. பிறரை பழி வாங்கும் எண்ணமும்.. அவனை இயற்கை வகுத்த‌ யதார்த்த வழியிலிருந்து விலகச் செய்து.. ஒரு அழிவுப் பாதையை நோக்கி அவன் வாழ்க்கையை திருப்பி.. அவனைப் பாழடித்து.. அவனை ஒரு கொலைகாரனாக.. ஒரு கொள்ளைக்காரனாக.. ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக.. ஒரு சட்ட விரோதியாக.. சமூக விரோதியாக‌.. மாற்றியமைத்து விடுகிறது…

மனித நாகரீகம் வழர்ச்சியடையத் தொடங்கிய‌ காலம் முதலே தான் பிறந்த இந்த மனித குலத்திற்கு இயற்கை வகுத்த இந்த‌ வழி முறைகளின்படி அவன் அமைதியை நேசித்து சமாதானமான மகிழ்ச்சியுடன் வாழ வைக்கப்பட‌ வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர்களாக‌.. மனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேலும் பல வழிவகைகளை வகுத்து அவனுக்கு துணை புரிவதற்காக.. சமூகத்தில் உருவானவர்கள்தான் சமூகநலவாதிகள்.. மக்களின் சேவையை மகேசனின் சேவையாக கருதி தங்களால் இயன்றவரை மனித குலத்திற்கு நன்மை செய்யப் புறப்பட்ட இவர்கள் காலப் போக்கில் மனித குலத்தால் தலைவர்களாக மதிக்கப்பட்டு முடிவில் அவர்கள் அரசியல் வாதிகளாக மாற்றமடைந்தனர்…

உண்மையான அரசியல்வாதிகள் என்பவர்கள் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்.. ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்கள்.. ஆம் அவர்கள்தான் ஒரு இனத்தை பாதுகாத்து அவர்களை வழி நடத்தும் தந்தையின் ஸ்தானத்தைப் பெற்றவர்கள்.. மனித‌ உயிர்களின் பாதுகாப்புக்கும்.. நின்மதியான வாழ்வுக்கும்..உத்தரவாதமளிப்பவர்கள். ஒரே நாட்டில் வாழும் தங்கள் இனத்திற்கும் மற்றைய இனங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக‌ இருந்து தன் இனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வழிவகைகளை ஆராய்ந்து எந்த வழி தன் இனத்திற்கு மட்டுமல்லாமல் அங்கு வாழும் பிற இனங்களுக்கும் கெடுதல் விளைவிகாமல் அவர்கள் அனைவருமே சமாதானமாக வாழ‌ வழி வகுக்கும் என்று கருதுகிறார்களோ அந்த‌ வழியையே தெரிந்தெடுத்து அதன் மூலமே அந்த நாட்டு மக்களின் சுபீட்சத்திற்கு வழி காட்டும் கலங்கரை விளக்கங்களாக இருந்து தன் இனத்திற்காக பாடுபட‌ வேண்டியவர்கள் அவர்கள்.. தன்னுயிரைப் போல் தன் இனத்தை மட்டுமல்லாமல் அந்த நாட்டில் வாழும் பிற இனங்களையும் நேசிக்கும் மனித நேயம் இந்த அரசியல்வாதிகளுக்கு தாராளமாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் தனது சுய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் சுயநலவாதிகளாக இவர்கள் செயல்பட்டு இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்குவார்களேயானால் அந்த நாட்டிலே இரத்தக் களரி ஏற்பட்டு பல‌ படு கொலைகள் சர்வ சாதாரணமாக தினந்தோறும் அரங்கேறும் நிகழ்ச்சியாக அமைந்துவிடும் என்பதற்கு நமது இலங்கைத் தீவே மிகச் சிறந்த உதாரணமாகும்..

இலங்கை சுதந்திரமடைந்த‌ காலம் முதல் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வழி காட்டப் புறப்பட்ட இந்த சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் நடத்திய கொடூர‌ இனவெறி கக்கும் கேவலமான‌ அரசியலால் பல இலட்சக் கணக்கான இலங்கைத் தாய் ஈன்றெடுத்த செல்வங்களின் உயிர்கள் காவு போனது மட்டுமல்லாமல் அங்கே ஒரு கொலை வெறிக் கலாச்சாரத்தை வித்திட வழி கோலியது.. இன்று வரையில் இலங்கைத் தீவில் கொலைகளும் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடை பெறுவதற்கு இந்த இனவெறிக் கலாச்சாரத்தையும் ஆயுதக் கலாச்சாரத்தையும் ஆரம்பித்து வைத்த‌ இந்த கேடு கெட்ட‌ அரசியல்வாதிகள்தான் முக்கிய‌ காரணம் என்றால் அது மிகையாகாது… இந்த கேடு கெட்ட‌அரசியலின் இறுதிக் கால கட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கையை முன் எப்போதுமில்லாதவாறு கேவலமாக சிதைத்தழிக்க புலிகள் உருவானார்கள்..

ஒரு புறம் புலிகள் துரோகிகள் என்று பட்டமளித்து தமிழர்கள் மத்தியிலிருந்த‌ கற்றோரையும் கண்ணியமானவர்களையும்.. முற்போக்குவாதிகளையும்.. சமாதான விரும்பிகளையும் போட்டுத் தள்ளவும்.. தமிழ் மக்களை வெருட்டவும் அடக்கி ஒடுக்கவும் தங்கள் ஆயுதங்களை வடக்கிலும் கிழக்கிலும் பயன்படுத்த‌.. இராணுவத்தில் இருந்து ஆயுதங்களுடன் தப்பியோடிய இராணுவத்தினர் பலரும் அந்த ஆயுதங்கள் மூலம் தென்னிலங்கையில் கொள்ளைச் செயலிலும் பணம் படைத்த சிங்களவர்களின் கைக் கூலிகளாக‌ இயங்கி அவர்கள் எதிராளிகளை போட்டுத் தள்ளும் பணிகளையும் செவ்வனே செய்து முடிப்பவர்களாக செயற்பட்டார்கள்.. இன்னும் செயற்படுகிறார்கள் .. தமிழ் சிங்கள இளைஞர்களான‌ இவர்களில் பெரும்பாலோர் பதினெட்டுக்குக்கும் இருபத்தைந்து வயதுக்கும் உட்பட்ட இளைஞர்கள்தான் என்பது வேதனைக்குரியது.. இன்று அனைத்து யுத்தங்களும் முடிவடைந்த நிலையிலும் ஆயுதம் படைத்த இந்த‌ இளைஞர்களின் அட்டகாசம் அடங்காமல் வடக்கிலும் தெற்கிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

இவைகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் எதிர் விளைவுகளைப் பற்றி சற்றேனும் சிந்தித்துப் பாராமல் விடாக் கண்டனும் கொடாக் கண்டனுமாக கடந்த காலத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகள் நடத்திய அரசியல் சூதாட்டம் இலங்கைத் தீவையை படு பாதாளத்தில் வீழ்த்த வழி கோலியது.. ஒரே வீட்டில் வாழ்ந்த இரண்டு சகோதர இனங்களுக்குள் பகையை மூட்டி விட்டு அதில் குளிர்காய்ந்தது இந்த தன்னலவாதிகள் கூட்டம்..

என்றோ சுமுகமாக தீர்த்து வைக்கப் பட்டிருக்க வேண்டிய இந்த இனப் பிரச்சனையானது இலங்கையின் முதல் பிரதமர் முதல் மகிந்தா ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாண்ட ஜனாதிபதிகள் வரை ஒரு தீர்த்து வைக்கப்பட முடியாத பிரச்சனையாக‌ இருந்ததற்கு காரணம் எந்த சிங்கள அரசியல்வாதியோ அல்லது தமிழ் அரசியல்வாதியோ இந்தப் பிரச்சனையை முறையாக‌ தீர்த்து வைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருந்தும் அவைகள் யாவற்றையும் இயன்றவரை பின்தள்ளி தங்களால் முடிந்தவரையில் இனக்குரோத்தையே சிங்கள சமூகத்திலும் தமிழ் சமூகத்திலும் வழர்த்து வந்தார்கள்..

இந்த தமிழ் சிங்கள் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளுக்கும் தெருச் சண்டியர்களின் செயல்பாடுகளுக்கும் இடையில் அவ்வளவு பெரிதான வேறுபாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை.. இலங்கையில் ஒரு அரசியல்வாதி தன் இனத்தால் மதிக்கப்பட வேண்டுமானால் அவர் ஒரு தலை சிறந்த இனவாதியாகத்தான் இருக்க வேண்டும் என்று இந்த சிங்கள தமிழ் அரசியல்வாதிகள்.. அரசியல்வாதி என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணம் வகுத்திருந்தார்கள்..

குள்ள நரித் தந்திரவாதியான‌ ஜே.ஆரின் காலத்தில் இந்த இனவெறியின் உச்ச கட்டம் இலங்கையில் கொடி கட்டிப் பறந்தது..இனப் படு கொலைகள் தாராளமாக நிறைவேற்றப் பட்டன‌.. அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இந்த வெறி சற்றுத் தணிந்து இனக் கலவரங்கள் நிறுத்தப் பட்டாலும் தமிழர்களின் பிரச்சனையை துணிவுடன் அணுகி அதைத் நிரந்தரமாக‌ தீர்த்து வைத்து நாட்டில் நிலையான‌ சமாதானத்தை நிலைநாட்ட‌ அவர்கள் எவருமே பெரும்பாலும் சரியானபடி முயற்சிக்கவுமில்லை…அதைச் சரியான கோணத்தில் அணுகவுமில்லை.. காரணம்… பிரபாகரன் என்ற தமிழர்களை அடக்கியாள ஒரு அராஜகவாதி தமிழர்கள் மத்தியின் உருவாகி தமிழீழமென்னும் என்றுமே சாத்தியமாகாத‌ ஒரு கோட்பாடை உருவாக்கி அதை ஒரு வியாபாரமாக்கி அதற்கு அரசியல் முலாம் பூசி அவர் புரிந்த மனிதப் படு கொலைகள் மனித குலத்தையே அச்சுறுத்தி நடுநடுங்க வைத்ததால் அந்த தமிழ் சண்டியருடன் இந்த சிங்கள சண்டியர்கள் சற்று அடக்கித்தான் வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது… வாசித்தார்கள்.. அடிக்கடி மோதுவது போல் பாசாங்கு செய்து கொண்டு அவருடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டு தங்கள் அடாவடி அரசியலை தொடர்ந்து நடத்துவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்களேயன்றி பிரபாகரன் என்ற தேசியப் பயங்கரவாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழர்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சமாதானத்தையும் நிலைநாட்ட‌ எவருமே முன் வரவில்லை.. மேலும் அவர்கள் தயக்கத்திற்கான இன்னொரு காரணம்.. பிரபாகரனின் உயிர் வாழ்தலிலேயே இந்தச் சிங்கள இனவாத‌ அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலமும் தங்கியிருந்தது என்பது இந்த இருபாலாரின் கடந்தகால நடவடிக்கைளையும் கூர்ந்து அவதானித்தவர்களுக்கு அது நிட்சயம் புரிந்திருக்கும்…தெளிவாகத் தெரிந்திருக்கும்..

பிரபாவின் வெற்றிகளை தமிழர்களின் வெற்றியாக சித்திக்கத் தெரியாத தமிழர்கள் கூட்டம் ஒன்று மந்தித்தனமாக‌ தமிழ்ப் பிரதேசங்களிலும் வெளி நாடுகளிலும் கொண்டாடி மகிழ‌.. இராணுவத்தின் வெற்றியை சிங்கள மக்களின் வெற்றியாக எண்ணிக் கொண்டாடி மகிழந்தது சிங்கள‌ மக்களின் மத்தியிலிருந்த‌ இன்னொரு புத்தியில்லாத மந்திகள் கூட்டம் ஒன்று.. ஆனால் இந்த இரு பாலாரின் வெற்றிக் களிப்பின் பின்னணியில் அழிந்து கொண்டிருந்ததோ வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த‌ அந்த‌ பரிதாபத்திற்குரிய அப்பாவி சிங்கள தமிழ் மக்களின் பிள்ளைச் செல்வங்கள்தான்…

இங்கே தமிழர்களின் ஏக பிரதிநிதியாக‌ தங்களைக் காட்டிக் கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் எதைத்தான் தமிழ் மக்களுக்காக தன் காலத்தில் சாதித்திருந்தார்? புலிகள் எவரைக் கொல்கிறார்களோ அதுவே முறையானது என்ற கொள்கையின் அடிப்படையில்தானே அந்த விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது?.. அதில் எங்கிருந்தது தமிழர்களின் பங்கு?.. எங்கிருந்தது மக்களுக்குரிய‌ கருத்துச் சுதந்திரம்?.. தமிழ் மக்களை எந்த வேளையில் எப்போது இந்த ஆயுதங்கள் பாதுகாத்தன?..

சாதாரண ஒரு தமிழ் குடிமகனின் வீட்டு வாசலில் பதுங்கியிருந்து அந்த வழியால் போகும் இராணுவ வாகனத்தை நிலக்கண்ணி வைத்து தகர்த்து விட்டு அதில் சிதறிச் செத்தவர்கள் போக‌ சிதறிய வாகனத்திலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாய் வெளியே வரும் எஞ்சிய இராணுவச் சிப்பாய்களையும் சுட்டுக் கொன்று விட்டு ஓடியொழியும் இந்தப் போராளிகளின் தலை மறைவிற்குப் பின் ஸ்தலத்திற்கு விரைந்து வரும் இன்னொரு இராணுவப் பட்டாலியன் அந்த சுற்று வட்டாரத்திலுள்ள வீடுகளில் புகுந்து அங்கிருந்த வாலிப வயதுள்ள யாவரையும் கதறக் கதற வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொலை செய்தபோது எங்கே போனது புலிகள் குறிப்பிடும் அந்த‌ “தமிழர்களின் பாதுகாப்புக்காக‌ ஆயுதம் ஏந்தினோம்” என்னும் அந்த வார்த்தையின் அர்த்தம்.. அது எப்படிப் பாதுகாத்தது தமிழர்களின் உயிர்களை?.. இப்படித்தானே புலிகள் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள்.. இந்தப் பாதுகாப்பானது அத்துடன் நின்று விடாமல் அவர்களின் இறுதி மூச்சுவரை தொடர்ந்ததே!.. ஆம் முள்ளி வாய்க்காலில் தமிழர்களை மனிதக் கேடயங்களாக்கி அவர்களில் பெரும்பாலோரை அழித்தொழித்து விட்டுதானே அடங்கியது அந்தப் பாதுகாவலர்களின் இறுதி மூச்சுக‌ள்…

பஞ்ச தந்திரத்துடன் இவர்கள் நடத்திய அரை வேக்காடு அரசியலால் இலங்கைத் தீவில் கண்டு களிப்பதற்கு எதுவுமில்லாமல் பல தசாப்தங்களை கண்டு களைத்த நிலையில் மகிந்தாவின் சகாப்தம் ஆரம்பமானது.. இவர் ஜனாதிபதியாக‌ முடி சூட்டிக் கொள்வதற்கு வியாபார நோக்கமுள்ள பிரபாகரனாதியோர் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க.. அப்படி அவர் பதவியேற்றதும் தனது முதல் நடவடிக்கையாக புலிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் அவர்.. அதை முந்தைய ஜனாதிபதிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்து அவர்கள் நன்மதிப்பை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்.. நாட்டிலுள்ள‌ இனங்களுக்கிடையில் உண்மையான ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட்டு கடந்த காலங்களின் நடைபெற்ற‌ போரினால் அழிந்து சிதைந்து போயிருந்த இலங்கையின் பொருளாதாராமும் அதன் கட்டுமானப் பணிகளும முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை உள்ள ஒரு தேசியவாதியாகவும் இதை அவர் முன்னெடுத்தார்.. ஆனால் நடை பெற்ற‌ பேச்சு வார்த்தைளிலோ .. இராணுவத்தை அகற்று.. தமிழ் பகுதிகளில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படுவதை நிறுத்து.. போன்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல‌ கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் பேச்சு வார்த்தைகளை குழப்பியடிப்பதில் பிரபாகரனாதியோர் முன்னின்றார்களேயன்றி.. தமிழர்களுக்கான எந்த ஒரு சாத்தியமான‌ தீர்வையும் அவர்கள் முன் வைக்கவுமில்லை.. மூச்சு விடவுமில்லை. (மகிந்தாவின் காலத்தில் இராணுவமும் பொலிசாரும் தமிழர்கள் மத்தியில் புலிகள் நடத்தி வந்த‌ அடக்கு முறைக்கும்.. அட்டகாசமான‌ வசூலிப்புகளுக்கும்.. வேண்டிய இடத்தில் வேண்டாதவர்களை போட்டுத் தள்ளும் நற் பணிகளுக்கும் பெருந் தடையாக இருந்தார்கள் என்பது வேறு விசயம்..)

பேச்சு வார்த்தைகள் முறிவடைந்த நிலையில் மகிந்தாவை தப்புக் கணக்குப் போட்ட புலிகள் மீண்டும் யுத்தம்.. போர் நிறுத்தம் என்று பழைய பாணியில் தங்கள் போக்கை ஆரம்பிக்க அதற்கு புலி ஊடகங்கள் ஒத்தூத அவர்கள் வியாபாரம் ஜோராக ஓகோ என்று வெற்றி நடை போடத் தொடங்கியது.. புலிகளின் செயற்பாடுகளால் போர் பிரியர்களாக மூளைச் சலவை செய்யப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் புலிப் பினாமிகளுக்கு வாரிக் கொடுக்கும் பாரி வள்ளல்களானார்கள்..

அதர்மம் என்றுமே நிலை நிற்பதில்லை.. அக்கிரமம் நிக்கிரகம் செய்யப்படும் நாளும் வந்தது.. அது மாவிலாறு வடிவில் வந்தது.. மாவிலாற்றைப் பூட்டி தங்கள் அழிவுக்கு பாதையை திறந்து விட்ட‌ புலிகளை நோக்கி முன்னேறிய‌ மகிந்தாவின் இராணுவம் புலிகள் நினைத்து போல் போர் நிறுத்தம் என்றதும் அது இடை நிறுத்தப் படவில்லை.. போர் நிறுத்தம் என்பது தங்கள் படை பலத்தையும் ஆயுத ஆயுத பலத்தையும் அதிகரிக்க புலிகள் போடும் போலி வேசம் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்த மகிந்தா அதை நிறுத்த மறுத்தார்.. தொடர்ந்தார்.. பிரபாகரனாதியோருக்கு நிரந்தரமாக‌ முள்ளி வாய்க்காலில் முற்றுப் புள்ளி வைக்கும்வரை..

தமிழ் மக்கள் தாராளமாக‌ கொல்லப்பட வேண்டும் அதனால் சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நன்றாகவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட புலிகளின் இறுதி யுத்தத்தை சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை.. காரணம்.. புலிகளுக்கு சார்பாக செயல்பட்ட நோர்வே கூட அந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் கட்டுப்பாடுப் பகுதியிலுள்ள வன்னிச் சனங்களை அவர்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசத்தில் போக அனுமதிக்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் புலிகள் அதை அலட்சியம் செய்ததால் சர்வதேசம் வெறுப்படைந்து அந்த இறுதிக் கட்டத்தில் மௌனம் சாதித்தது.. அன்று புலிகள் அவர்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அப்படி அந்த அப்பாவிச் சனங்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் போக அனுமதித்திருந்தால் அந்த இறுதிக் கட்டத்தில் புலிகளுக்கு உதவி செய்ய சர்வதேசத்தில் ஏதாவது ஒரு நாடாவது முயற்சித்திருக்கும்..

புலிகள் யாவரும் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர் சரணடைந்த புலிப் போராளிகளுக்கு புனர்வாழ்வழிப்பதில் அக்கறை காட்டியது மகிந்த அரசு.. அவர்களில் தொழில் பயிற்சியளிக்கப்பட்ட பலர் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.. அவர்களில் பலருக்கு திருமணங்கள்கூட அரசாங்க செலவில் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.. அகதிகள் முகாம்களில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.. இவர்கள் அனைவரையும் குடியேற்றுவதில் சில குறைபாடுகள் இருந்த போதிலும் அவைகளை இயன்றவரை நிவர்த்தி செய்து தீர்த்து வைப்பதில் மகிந்தாவின் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எந்த தமிழ் மகனும் இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டதாகவோ அல்லது கொலை செய்யப்பட்டதாகவோ தகவல்கள் எதுவும் இல்லை.. பிரபாகரனாதியோரின் அழிவிற்குப் பின்னர்தான் அவர்கள் காலத்தில் பிறந்த இளைய சமுதாயமொன்று மனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை இன்று வடக்கிலும் கிழக்கிலும் அறியத் தொடங்கியிருக்கிறார்கள்..

இன்று சிங்கள சமூகம் எவ்வளவோ முன்னேறி வருகிறது.. இனத்துவேசத்தை ஒதுக்கி யதார்தமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளது.. அதற்கு காரணம் மகிந்தாவின் முயற்சிதான் என்றால் அது மிகையாகாது.. தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் அவர் தமிழில் பேசாமல் தமிழ் மொழியை சிங்கள மக்கள் அனைவரும் கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதற்கு அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றே எடுத்துக் காட்டாகும்..”வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவே!” என்று தமிழ் மொழியை நன்றாகக் கற்றுத் தேர்ந்த பௌத்த பிக்குகள் உட்பட‌ சிங்கள அரசாங்க ஊழியர்கள் பலர் அண்மையில் ஒன்றாகக் கைகோர்த்தபடி அந்த‌ மேடையில் உருக்கமாக பாடியிருப்பதை கேட்கும்போது சற்று மெய் சிலிர்க்கத்தான் செய்கிறது…. அவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியெய்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட அன்று தான் இப்படிப் பாடி அசத்தியுள்ளார்கள். இந்த தமிழ் மொழிக்கான பயற்சியை முதலில் தனது சொந்த‌ தொகுதியான அம்பாந்தோட்டையிலேயே மகிந்தா ஆரம்பித்து வைத்து சிங்கள மக்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் அவர்..

சிங்கள மக்கள் மத்தியில் இன்று இனவெறி காணாமல் போய்க் கொண்டிருக்கும் இதே கால கட்டத்தில் புலி வழிவந்த சில புத்திசாலிப் பிரமுகர்கள் தங்கள் பிழைப்புக்காக இன்னும் இனவெறியையே தங்கள் ஆயுதமாக ஏந்தி தமிழ் மக்களுக்காக போராடப் புறப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களின் பித்தலாட்டங்களை தற்போது சற்றளவேனும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு புத்தி தெளிந்திருக்கும் புலம் பெயர் தமிழர்கள் அவர்களை அலட்சியம் செய்யவும்..நிராகரிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் செயற்பாடுகளில் இருந்து தெரியக் கூடியதாக இருக்கிறது.. தாம்தூம் என்று பெரிய எடுப்புடன் ஆரம்பிக்கப்பட்ட “நாடு கடந்த தமிழீழமும்”.. “வட்டுக்கோட்டைத் தீர்மானமும்” இன்று எங்கோ காணாமல் போய் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டன‌.. ஒரு உண்மையான அரசியல்வாதி என்பவன் தன் மக்களுடன் கூட‌ இருந்து அவர்கள் துன்பங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொடுப்பானேயன்றி தான் மட்டும் வசதியாக‌ பிறிதொரு நாட்டில் வாழ்ந்து கொண்டு தனது மக்களின் அழிவுக்கு பாதை வகுத்துக் கொடுக்க மாட்டான்.. மகாத்மா காந்தி தென்னாபிரிக்க இந்தியர்களின் உரிமைக்காக போராடியபோது அவர் தென்னாபிரிகாவிலும்.. இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியபோது அவர் இந்தியாவிலும்தான் இருந்தார்.. தென்னாபிரிக்காவில் இருந்து கொண்டு இந்திய சுதந்திரத்திற்காகவும் இந்தியாவில் இருந்து கொண்டு தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைகளுக்காவும் அவர் போராடியிருந்தால் அவைகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்திருக்கும்… ஆகவே உண்மையிலேயே இவர்கள் துணிவுள்ள‌ போராட்ட வீரர்களாக இருந்தால் தாங்கள் தற்போது வாழும் நாட்டின் பிரஜா உரிமையை இரத்துச் செய்து விட்டு இலங்கைக்கு திரும்பிச் சென்று அங்கிருக்கும் தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு அவர்கள் குறிப்பிடும் நோக்கங்களுக்காக‌ போராடிப் பார்க்கட்டும்…

புலம் பெயர்ந்த மக்களை பேய்க்காட்டி உங்கள் பணப்பைகளை நிரப்புவதற்காக‌ இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்காதீர்கள்.. அவர்கள் சுபீட்சத்தில் அக்கறையுள்ளவர்களா நடித்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தை சிதைத்து சீரளித்து விடாதீர்கள்.. அவர்களை நின்மதியாக வாழ விடுங்கள்.. மீண்டும் ஒரு முறை புலிகளின் வழிகளில் சென்று இனவெறிக் கொள்கையை கையில் எடுத்தால் நமது தமிழினம் என்பது சர்வ தேசத்தாலும் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு எங்கோ ஒரு பனிமூட்டம் சூழ்ந்த‌ பாலைவனத்தில் தட்டந்தனியான கேட்பாரற்ற ஒரு பட்டமரமாகத்தான் அது காட்சியளிக்கும் என்பது சர்வ நிட்சயம்..

அன்று போராட்டம் என்று ஆயுதம் ஏந்திய அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவர்கள் பலர் இன்று அவைகள் அனைத்துமே அர்த்தமற்றவைகள் என்பதை உணர்ந்து நேசக் கரம் நீட்டும் மகிந்தாவின் அரசுடன் இணைந்து தமிழினம் மகிழ்ச்சியாகவும் சுபீட்சத்துடன் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்ற வேட்கையுடன் தங்களால் இயன்றவரை தொண்டாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவைகள் காலப் போக்கில் நிட்சயம் மேலும் வெற்றியளிக்கும்.. சமாதானப் பாதையில் முன்னெடுக்கப்படும் எந்தக் காரியமும் தோல்வியில் முடிவடைவதில்லை.. ஆனால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டு இராணுவத்துடன் மோதி சகோதர போரட்ட இயக்கங்களையும் அழித்து.. இறுதியில் மக்களையும் அழித்து.. தாங்களும் தோற்றுப் போய் சரணடைந்தோ அல்லது அழிந்துபோன இயக்கங்களின் வரலாற்றில் புலிகள் வரலாறு மட்டுமல்லாது .. காஷ்மீர்.. பங்களாஷ்.. இந்தோனேசியா.. கிழக்காபிரிக்கா.. இலத்தினமரிக்கா போன்ற நாடுகளில் நடந்த போராட்ட வரலாறுகளும் இதற்கு சான்று பகிர்கின்றன. ஆகவே இந்த ஆயுதப் போராட்டம் என்பது அர்த்தமற்றது என்பதை எமது தமிழினம் இனியாவது நன்கு உணர்ந்து கொண்டு வேண்டாத இந்த இனவெறி அரசியலை வெறுத்து சமாதானப் பாதையொன்றுக்கு தங்கள் மனதைத் திருப்ப வேண்டும்.. அது ஒன்றுதான் தமிழர்களுக்கான சுபீட்சமான வாழ்க்கையை நோக்கி வழி நடத்தும் சிறந்த பாதையாகும்….

(தொடரும்)

அன்புடன் சித்திறெஜினா

13 Responses to “ சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..! ”

  1. ணக்கம்
    சித்தி
    உங்களுக்கு உள்ளம் பேதலித்து விட்டது என்பதில் எந்தச்சந்தேகமும் காரணம் நீர் எதைக் கூற முற்பட்டாலும் அதில் பல சிங்கள விசுவாசமும் தமிழ்த் திரோகிகளின் கொடுப்பனவு விசுவாசமும் தெட்டத் தெளிவாக உங்கள் எழுத்தில் புலப்படுகின்றது ஆனாலும் தொடர்ந்து தமிழில் எழுதும் உங்களின் முயற்ச்சிக்கு பாராட்டுதல் நன்று

    அடுத்ததாக புலிகளை நீங்கள் தொடர்ந்து சாடுவது உங்கள் ………. பிளைபதைப் போன்றது என்று நான் சொல்லவில்லை என் சமுகம் சாந்த்தோர் பேசிக்கொள்கின்றனர் எந்த நடையிலும் ஒரு நாகரிகம் உண்டு அதாவது விடுதலைப் புலிகளின் போராட்டம் இல்லை என்ற பொழுதுதான் தமிழர் நடையில் எவ்வளவு அநாகரிகம் உள்ளது என்பதை உங்களைப் போன்றவரின் எழுத்து எடுத்துக் காட்டாக உள்ளது எதை நீங்கள் ஏற்க்கின்றஈர்களோ எல்லையோ என் சமுகம் நிட்சயம் ஏற்கும்

    அடுத்தது நான் என்று சிங்களத்தின் குகைக்குள் இருந்து என்னுடைய கருத்தை நேரடியாக சொல்ல முடியவில்லை என்பதால் கணணியை பயன்படுத்திக் கொண்டுள்ளேன் ஆனால் எனக்கு இந்த வசதியுள்ளதனால் நான் கருத்துக் கூறுவது போல் என் சமூகத்திடம் இந்த வசதி இருக்கின்றது என்றா நினைக்கின்றீர்கள் இல்லை நிறைய தமிழ் உள்ளங்கள் மனதுக்குள் புலம்புவதும் அந்தப் புலம்பலை கள்ளுத்தவறனைகளில் நின்று கொட்டுவதும் உண்மையாகிவிட்டது இனி தமிழரின் கருத்தைக் கேக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு கல்ளுத்தவரனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது

    அடுத்தது போராளிகளின் தியாகம் தான் நாம் என்று சிங்களத்தின் குகையில் இருப்பினும் நாம் எங்கள் உருமைகளைப் பற்றி சிந்தித்த வண்ணம் உள்ளனர் எனவே சித்தி அவர்களே நீங்கள் கூறுவதுபோல் பிரவாகரன் தன்னைப்பற்றி சிந்தித்திருந்தால் அவர் எப்போதோ அவர் சுயநலமாக செயல்ப்பட்டிருக்க முடியும் ஆனால் பிரவாகரன் கடசிக்கட்டத்திழ்க் கூட தன்னைப் பற்றி சிந்தித்தாக இந்த விதமான ஆதாரமும் இல்லை அவர் கடசிவரையும் மக்களோடு ஒரு சாதாரண போர்வீரனாகத்தான் தோற்றம் அளித்தார் என்பதுக்கு பல ஆதாரங்கள் உண்டு அப்படியிருக்கும் போது எப்படி நீர் இப்படியான குசும்புத்தனமான கட்டுரையைத் தொடர்ந்து எழுத முடியும்

    ஆனால் இங்கே பிரவாகரன் பெருமையை உண்மைத் தமிழன் பேசுவான் பொய்மைத் தமிழன் துற்றுவான் எனவே எதில் அவர் அவர் எந்த இடத்துக்குள் இருக்கின்றீர்கள் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் எதை நான் கூறவில்லை ஒரு சாதாரண உண்மைத் தமிழன் என்ற வகையில் கூற வைக்கின்றது

    நன்றி

  2. அம்மா றெயினா,
    உம்மை நினைக்க பரிதாபமாகவுள்ளது.

  3. வாழைப்பழத்தை உறித்து கொடுத்ததைப்போல் விசுவமடுவில் சகல இரகசியங்களையும் ஒரே தட்டில் வைத்து கொடுத்தவர்கள் இப்போதும் மக்களை பேய்க்காட்ட முனைகிறார்கள். VVT யை சார்ந்தவர் என்ற ஒரேகாரணத்துக்காக தேசியத்தலைவரால் தகுதிக்கு மீறிய பதவி கொடுக்கப்பட்டோரில் ஒருவரான காஸ்ட்ரோவின் குளறுபடிகளால் போராட்டம் முள்ளிவாய்க்காளில் முடிவடைவதற்கு ஒரு வாரத்தின் முன்னர் நடைபெற்ற தளபதிகளின் சந்திப்பின் போது, பின்னடைவுக்கு பாரிய பொறுப்பாளரான காஸ்ட்ரோ விற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதை அவரே நிறைவேற்றும்படியும் கூறப்பட்டு மே 10 அன்று காஸ்ட்ரோ சயனய்டு அடித்தார். இதை மறைக்கப்பார்க்கும் அவரின் புலம்பெயர் அடிவருடிகளும் வியாபாரிகளும் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கணனிகளில் இருந்த தரவுகள், மின்னஞ்சல்களின் மூலம் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சிலர் குற்றவாளிகளாக காணப்பட்டு ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளனர். பலர் அரசாங்க வேலையிலிருந்த்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

    தன்னுடைய கனிஷ்ட புத்திரனை தலைவனாக்கும் முயற்சியில் சமாதான காலம் முழுவதையும் செலவிட்ட தேசியதலை, அரசாங்கம், அதிவேக விமானம், கப்பல், சுடுகலன், UAV , ஒட்டுகேட்கும் கருவிகள், cluster , posparous குண்டுகள் என்று வாங்கி குவிக்கும் போது, கேவலம் மருந்து தெளிக்கும் பறக்கும் வாகனம், அதை ஓட்டுவதற்கும், ஒழிப்பதற்கும் பல இடங்களில் ஓடுபாதை, தரிப்பிடம், என்றும் ஓட்டை கணணிகளையும் குமரிகளையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்து ஒரு IT பணிமனை, இடற்கெல்லாம் பொறுப்பாளராக தன மகன் என பொன்னான காலத்தையும் பணத்தையும் ஆளணிகளையும் செலவளித்துக்கொண்டிருந்தார். தன மகளாரையும் மகளிர் அணி யாவற்றுக்கும் சிறப்பு தளபதியாக்கும் முயற்சியில் அயர்லாந்து, நாட்டியம் என்று தனியாக படிக்கவைத்துவிட்டு சோதியா படையணியில் பாதுகாப்பான இடத்தில் உலாவ விட்டார். பதின்மூன்று வயது மகனுக்கு சரணடையும் பொது கூட எட்டு மெய்பாதுகாவலர். மனைவிக்கு அமாவாசைக்கு திருக்கை, பருவத்துக்கு கடலாமை, ஞாயிறுதோறும் உடும்பு என்று கண்ணாளனுக்கு தீவுப்ப்க்குவத்தில் உறைப்பு கறி வைப்பது மற்றைய வேளைகளில் பணிமனைகளுக்கு ரிப்பன் வெட்டி திறப்பு விழா வைப்பதுவும் மாவீரர் முன்னாள் கருப்பு சேலையுடன் குனிந்து நிப்பதுவும் தான் கடமை. வெள்ளை சேலைகளை முள்ளிவாய்காலில் தேவைப்படும் என்று சேமித்து வைத்திருப்பார் போலும். தலை ஐம்பதினாயிரம் தமிழர்களை பலி கொடுத்தாவது தானும் தன குடும்பவும் பாதுகாப்பான இடத்துக்கு போகும் வரை போரை நடத்த திட்டம் இட்டிருந்தார். இறுதியில் எல்லோருடனும் போய்செர்ந்தார். ஊர்மிளா விடயம் தொடங்கி செஞ்சோலை சிறார் போராளிகள் காந்தரூபன் கரும்புலி காப்பகம் என்று இயற்கைக்கு எதிராக செயல் படுவோர்க்கு இதுதான் முடிவு.

  4. நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றார்கள் எந்த நாளை என்று இறுதி வரை அவர்களும் சொல்லவில்லை

    நான் அன்றே சொன்னேன். என்று இந்த கருநாய்கள் ஒளிவான்களோ அன்றே தமிழீழம் மலரும்.

    தமிழ் மடையர்கள் என்று ஒரு சொல்லில் சொல்லிவிட முடியாது. அறிவிலிகள், துரோகிகள், …

  5. கடந்த கால வலராறு, சரித்திரம், உண்மைகள், அனுபவங்கள் எல்லாம் எமக்கு தலை சிறந்த பாடமாக அமைகிறது. நன்றாகவே படித்து விட்டோம்.

    இனியும், அடம்பிடிக்காமல், விதண்டாவாதம் செய்யாமல், திருந்தி, நல்லதை நினைத்து, நல்லதை செய்து, மனித நேயமுள்ள, நல்ல பண்புள்ள மனிதர்களாக இவ்வுலகில் வாழ பழகிக்கொள்வோமாக.

  6. வணக்கம்
    sella
    நான் நினைக்கின்றேன் என்று உலகமும் சிங்கள அரசும் விடுதலைப்புலிகள் சம்பந்தமாய் அவர்களின் திடீர் முள்ளிவாய்க்கால் பின்வாங்களின் இரகசியங்கள் என்னவாக இருக்கும் ஏன் புலிகள் சிங்களத்தை முள்ளிவாய்க்கால் வரையும் இழுத்து விட்டு பின்வாங்கினார்கள் என்ற கேள்வியைத் தங்களுக்குழ்க் கேட்டுக் கொண்டிருக்கும் போது அதாவது சிங்களத்தின் குகைக்குள் சென்று சிங்களத்தைக் சிதற வைத்த போராளிகள் மக்களின் கருத்துப் படி போராளிகள் ஒரு பினகர்வுத் தாக்குதல் மட்டுமே நடத்தினார்கள் எந்த ஒரு கட்டத்திலும் சிங்களத்தை சிதறடிக்கும் தாக்குதல் நடத்தவில்லை அது ஏன் உண்மையில் போராளிகளின் விவுகம்த்தான் என்ன ஏன் சிங்களத்துக்கு சகல வால்ப்பிடிப்புக்களையும் வழங்கி வந்த சில அந்நிய சக்த்திகள் இன்றும் போராளிகளின் திருப்புமுனையை ஒரு கேள்வியோடுதான் பார்த்த வண்ணம் உள்ளனர்

    ஆனால் இவர்கள் ஏன் இவ்வளவு கசிற்றப்படுவான் நேரடியாக வந்து எங்கள் sella அண்ணாவைப் பிடித்தால் முழுத் தகவலும் கிடைக்குமே சில சில்லறை யாபாரிகளின் கணக்கின்படி அன்றைய பொழுது போனால்க் காணும் நாளைய பொழுதை நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் என்பதுபோல் உள்ளது சித்தி ரெஜினா sella மேலும் போராட்டத்தை அக்குவேறு ஆணிவேறாகக் காட்டிப் பிழைப்பு நடத்தும் அனைத்து வியாபாரிகளுக்கும் அதிலும் கூட்டத்தோடு கூட்டமாய் நாமும் கும்மாளம் அடிப்போம் என்பதுபோல் உள்ளது 36 வருட விடுதலைப் போராட்ட இரகசியங்களை வித்து வாழ்க்கை நடத்த முடியுமா ?அல்லது உலக வலைப்பின்னளைப்பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் அல்லது விடுதலைப் போராட்டத்தின் வடிவங்களையும் நெளிவு சுளிவுகளையும் இவர்களால் கண்டு பிடிக்க முடியுமா ?

    சரி அடுத்தது என்ன உண்மையில் சிங்களத்தின் கையில் எந்த இரகசியம் சிக்கியிருந்தால் உண்மையில் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் எந்த இரகசியத்தை எப்படிப் பாதுகாத்து போராளிகளின் வலைப்பின்னலை உடைத்து அதன் பின் என்ன நடந்தது எப்படி நாம் எதைக் கையாண்டோம் என்ற வடிவத்தை அவிட்டு விட்டிருப்பார்கள் ஆனால் என்ன நடந்தது ஏன் எடுத்த எடுப்பில் நாம் அங்கு அதைக் கண்டுபிடித்தோம் எதைக்கண்டுபிடித்தோம் என்று ஊடகங்கள் ஊடாக விபரிகக வேண்டும் இதை தமிழர்கள் ஆகிய நாம் நம்பவேண்டும் என்றில்லை சிந்திக்க வேண்டும் அதாவது சிங்களத்தின் இன்றைய எதிரிகள் புலம்பெயர் தமிழீழ மக்கள் இவர்களை ஒரு வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் அவர்களுக்கு பீதியுட்டும் செய்திகளை வெளியிட வேண்டும் அதை சிங்களம் புத்தி சாலித்தனமாக செய்வதாக எண்ணுகின்றது

    இதை நம்பி சில செம்மறிகள் போராட்டத்தையும் போராளிகளின் உண்மையான குணாம்சத்தையும் விலை பேசுவதுபோல் தமிழில் கதைஎழுதி காவியம் படைக்கலாம் என்று நினைத்து என் தமிழாம் அது உன் தமிழே இனி அது பின் தமிழ் ஆகாது என்ற என் தமிழ் உணர்வோடு இதை முடிக்க முயலுகின்றேன்
    இப்படிக்கு
    உங்கள் உறவு
    pskvanni

  7. சித்தி,
    உங்கள் கடந்த கால வரலாறு பிரபாகரன் அழிக்க பட்ட முறை அனைத்தும் சரியாக கணிக்கபட்டாலும் ஓன்று பிழைக்கிறது.

    மகிந்தா செய்வது எல்லாம் சரி என்று சொல்வது சரி இல்லை.
    அவர் அங்கு குடும்ப ஆட்சி நடத்துகிறார்.
    சாதாரண சிறு கட்சிகள் இயங்க முடியாத நிலை.
    முக்கிய புலி உறுபினர்கள்,வெளிநாட்டு பினாமிகள் மகிந்தாவுடன் மாளிகையில் விருந்து.

    புலிகளிடம் இருந்து நாட்டை மீட்க போராடி ரத்தம் சிந்தியவன் சிறையில் பரிதாப நிலை
    புலிப்பினாமிகள் யாழ்ப்பாணத்தில் ஓட்டல கட்டுகிறார்கள்.
    வெளிநாட்டு புலி பினாமிகள் வடக்கில் கலக்கல.
    வடக்கு வாசிகள் வறுமையில் முடக்கல்
    22 வயது இளவரசன் நாமல் ராஜபக்ச அனைத்து அரசியல் வாதிகளையும் ஓரம கட்டி விட்டு சகல நிகழ்ச்சிகளிலும் தலைமை தாங்கள் .

    சித்தி எங்கே தாயே உங்கள் யதார்த்தம்

    கொழும்புவில் வாழ்க்கை நடத்தி பார்த்தால் தெரியும் உங்களுக்கு சிங்கள மக்களின் இன துவேஷம்.

    இன்னும் ஏன் ராணுவ முகாம்கள் அமைகிறார்கள் விஸ்தீரண படுத்துகிறார்கள்.

    யாழ்பாணத்தில் குற்ற செயல்கள் களவுகள் பாலியல் துன்புறுத்தல்கள் இவை முன்பு புலிகள் காலத்தில் இருந்ததா?

    முன்பு ஒரு கும்பலுக்கு பயந்து வாழ்க்கை நடத்திய மக்கள் இன்று பல கும்பல்களுக்கு பயந்து வாழ்க்கை.

    இன்று பிரபாகரன் எப்படி குடும்ப ஆட்சி நடத்த முனைதாரோ அது போல மகிந்தா மற்ற பக்கம்.

    சித்தி அன்று உங்கள் கட்டுரைகள் உண்மை பேசின .ஆனால் இன்று உண்மைகள் மறைக்கப்பட்டு……………ஆதவன்

  8. அது சரி…ஏதோ நேருக்கு நேர் மோதி இத்தனை மாவீரர்களையும் அழித்தது போன்று அன்று பீத்திக்கொண்டது இலங்கை அரசு….

    இன்று எச்சில் வழிய வழிய சிங்களவனின் எச்சில் எலும்புத்துண்டை காவியபடி இந்த ஓநாய் இதை இங்கு தொடர் கட்டுரை எழுதுகின்றது …த்தூ….கேவலம்…..

    வெஞ்சினத்தோடு,,,போராட நின்றிருந்த
    வேங்கைகளை…

    நய வஞ்சகமாய்..
    நச்சு வாயுவினை ஏவி,,
    நாச வேலை செய்த..
    அரசும் அதன் கூலிப்படைகளுக்கும்…

    புலி மறவர்களை
    களத்திலே எதிர் கொள்ள
    துணிச்சல் இல்லை…

    எத்தனையோ நாடுகள் கூட்டணி சேர்ந்தும்…
    ஏன் இந்த சதி வேலை…???
    இலங்கை இராணுவத்திற்கு பலம் போதாது..
    இல்லை என்பீர்களா??
    பிறகேன் நச்சு வாயு???

    அத்தனை புலி வீரர் உடம்பிலும் தோல் உரிந்து கருகிக்காணப்படுகின்றதே அன்றி,,எவராவது குண்டடிபட்டு வீரச்சாவடையவில்லையே…

    ஏதாவது ஒரு வீரனின் உடம்பில் சூட்டுக்காயம் இருக்கிறதா??

    ச்சீ கேவலம்….புற முதுகில் குத்தி விட்டு அதை வீரம் என்று ஒரு கோழை அரசு பரப்புரை செய்ய அதை இன்னொரு முட்டாள் துரோகி மினக்கெட்டு பதிவிறக்கி…இங்கு பதிவேற்றம் செய்யுது….

    இவனுக்கு சொல்லி புரியாது…..
    நரிப்புத்தி,,,,உள்ள 2 கால் மிருகங்கள் இவர்கள்….

    இந்த துரோகியின் பக்கத்தில் கருத்து இடக்கூடது என்றிருந்தேன்…என்ன செய்ய…இரத்தம் கொதிக்கிறதே…

  9. வணக்கம்
    நந்தா
    வருக வருக
    பெருகபேற்க
    உங்கள் பிதற்றல்
    தொடர்க தொடர்க

    தொட்வன் விட்டதில்லை
    விட்டவன் தொடதில்லை
    பணத்தை தொட்டவன் விட்டதில்லை

    இதை உன்போன்றவர்களில் இருந்து நாம் கற்றுக் கொல்லாம்
    காரணம் எதுக்கெடுத்தாலும் பணம் பணம் புலி புலி என்று புலம்பியவண்ணம் உள்ளீர்
    நன்றி

  10. வணக்கம்
    mambo
    உங்களைப் போன்றவர்கள் அடிப்படை தெரியாமல் அந்தரத்தில் நின்று ஆடுகின்ற பட்டத்தைப் போன்றவர்கள் ஏன் என்றால் காத்தடித்தால் பரப்பீர்கள் காற்று நின்றால் கீழே விழுந்துவிடுவீர்கள் ஆனால் விடுதலை விரும்பிகளோ அதுக்கும் அப்பால்ப்பட்டவர்கள் அதனால்த்தான் கடசிவரையும் உங்கள் திரோகங்களையும் தாண்டியும் களத்தில் நின்றார்கள் போராடினார்கள் எது நீங்கள் விமர்சனம் செய்ய உதவுகின்றதோ அதுதான் தமிழனின் எதிர்கால விடுதலையின் துருப்புச்சீட்டு ஒருவன் வேர்வை சிந்தாமல் வீடுகட்டுகின்றான் என்றால் நிட்ச்சயமாக இன்னொருவனை வதம் செய்துதான் கட்டமுடியும் எனவே உழைத்து உத்தமனாக வாழ வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் உழைக்க வேண்டும் என்றால் வேர்வை சிந்த வேண்டும் இவையில்லாமல் எவனும் வாழ முடியாது

    எனவே உலக வரலாற்றில் தன இனத்தைக் காத்து வந்த தடையங்களை அளித்த பெருமை எமது சமுகத்தில்த்தான் நடந்திருக்கின்றது இதை நாம் கடைசியாக முள்ளிவாய்க்கால் வரையும் வந்த இந்த துரோகத்தின் உச்சத்தைஎல்லாம் பார்த்த பின்னும் மறுக்கின்றோம் என்றால் இது கூட உலகத்தில் எந்த இனத்துக்கும் நடந்திருக்காது ஏன் இன்றும் விடுதலைப் போராளிகளையும் அதை ஆதரித்து நின்ற எமது தமிழ் சமுகத்தையும் வசைபாடியே வாழ்க்கை நடத்துவதைப் போல் உலகத்தில் எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு நானோ நீங்களோ அறிந்திருக்க வில்லை

    நீங்கள் mambo கடைசி யுத்த காலத்தில் எப்படியெல்லாம் தமிழனுக்குள் உல் புகுந்து விளையாடிநீர்கள் என்று கடசிவரையும் காலத்துக்குள் நின்று தப்பி வந்தவர்கள் சொல்லும் வார்த்தையை உண்மையாக்குவதுபோல் நீங்கள் இராணுவத்தோடு வந்து நின்று எங்களை வவுனியாவுக்குள் வரவேற்ற போதே நாம் கண்டுகொண்டோம் இதைவிட எமக்கு இனி என்ன ஆதாரம் தேவை உங்கள் திரோகத்தையும் தமிழ் விசுவாசத்தையும் ௩௬ வருட போராட்டத்தில் நடக்காத முழு சம்பவத்தையும் நீங்கள் உள் நுழைந்து நின்று நடத்திய நாடகத்தை உண்மையாக போராடிய போராளிகள் மீது பழிபோடும் உங்கள் தீர்க்க தரிசனமோ தரிசனம் உன்மைகள ஒருநாள் முழுமையாக வெளி வரும் போது நீங்கள் ??????????????????????????

    நன்றி

  11. எல்லாம் சரி சித்தியக்கா நீங்கள் எழுதிய இக்கட்டுரையில் உள்ளவை எல்லாமே நிதர்சனமான உண்மைகள்தான்

    ஆனால் மகிந்த புகழ் தான் ஓவராகத் தெரிகின்றது மகிந்த புகழ் எழுதாமல் உங்களால் இத் தொடரை தொடர்ந்து எழுத முடியாதா ?

    மகிந்த தமிழ் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடிந்த தலைவர் இல்லை என்பதுவும் உங்களுக்கு நன்கு தெரியும்

    அவர் சரியானவராக இருந்திருந்தால் யுத்தம் முடிந்து ஒன்றரை வருடமா
    கியும் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் இன்றுவரை தெரு நாய்கள் போல் அலைய மாட்டார்கள்

    ஆனால் மாறாகத் தமிழ் மக்கள் இன்றுவரை விசர் நாய்கள் போல அலைவது உங்களுக்குத் தெரியவில்லையா ???

  12. எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு

    தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.

    தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு.

    தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசிய மரம், தேசிய விலங்கு, தேசியப் பூ என்பனவாகும். தேசியத்தை வளர்த்த பிதாமகர்கள் இவற்றைத் தெரிவு செய்கிறார்கள்.

    காலம் தனது வரலாற்றுப் பதிவை தேசியச் சின்னங்களுக்கு வழங்குகிறது தேசியச் சின்னங்கள் தேசியத்திற்கு நிகரானவை.தேசியம் என்பது உன்னதமான உணர்வு தேசியச் சின்னம் உணர்வின் உருவம்.

    தேசியச் சின்னங்கள் எழுச்சி வடிவங்கள் அவை உருமாற்றம் செய்யப்படுவதில்லை தேசியத்திற்குரிய மக்கள் கூடும் இடங்களில் தேசியச் சின்னங்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன

    தேசிய சின்னங்கள் மாறாது இருப்பதோடு மாற்றத்திற்க்கு உட்படாத வலுப் பொருளாகவும் இருக்கின்றன தமிழீழத்தின் தேசியக் கொடி புலிக் கொடி இறையாண்மை பெற்ற நாடுகளின் தேசியக் கொடிகள் ஆரம்பத்தில் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரின் கொடியாகவே தொடங்கியுள்ளன. பின்பு நாட்டின் கொடியாகப் பரிணமித்துள்ளன இது உலக நியதி.

    ஈழத்தமிழர் தம் புலிக்கொடி முழு தமிழர்களின் தேசியக்கொடி இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. தேசிய நாட்கள் நிகழ்ச்சிகள் ஒன்று கூடல்கள் என்பனவற்றில் புலிக்கொடியை ஏற்றுவது பறக்க விடுவது நியாய பூர்வமானது அது உலக ஒழுங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் நிகழ்வு

    அண்மைக் காலமாக ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் ஒன்று கூடல்களிலும் தேசியக் கொடிக்குரிய உயர் மதிப்பு அளிக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றது. இதை கண்டு வருந்துகிறோம் தேசியக் கொடிக்குரிய மதிப்பை வழங்கும் உரிமை ஒவ்வொரு ஈழத்தமிழனின் கடமை

    ஈழத் தமிழர்களின் தேசியப் பறவை “செண்பகம்” தேசியமரம் “வாகை”, தேசியப் பூ “கார்த்திகைப் பூ” தேசிய விலங்கு “சிறுத்தை” புலம்பெயர் இனிய உறவுகள் மறந்து விடக் கூடாது என்பதற்காக இதில் பட்டியல் இடுகின்றோம்.

    மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையில் தொடர்புப் பொருளாகத் தேசியச் சின்னங்கள் இடம்பெறுகின்றன. தேசியச் சின்னங்களின் சிதைவு தொடர்பின் சிதைவாக அமைகின்றன.

    தாயகத்திற்கும் புலத்திற்கும் இடையில் நிலவும் உறவை வலுப்படுத்தும் பாலமாகத் தேசியச் சின்னங்கள் நிலவுகின்றன தமிழீழ விடுதலைப் போரின் அடிப்படை இலட்சியங்களைத் தாங்கி நிற்கும் உணர்வும் உருவமுமாகப் தேசியக் கொடியும் தேசியச் சின்னங்களும் விளங்குகின்றன தேசியக் கொடிக்கும் பிற தேசியச் சின்னங்களும் உரிய மதிப்பு வழங்குவது எமது கடமையாகும்.

  13. தமிழீழம் கனவல்ல… அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்!

    தீப்பற்றி எரிந்த காடுகள் போல் தமிழீழ மண் தீய்ந்துபோய் உள்ளது. மண் மட்டுமல்ல, அந்த மக்களது இதயங்களும் கருகித்தான் போயுள்ளது. நாளும் பொழுதுமாக வன்னி மக்கள் இப்போதும் வதைபட்டுக்கொண்டுதான் உள்ளார்கள். மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும், மீண்டும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

    வாழ்வைத் தொலைத்தவர்களும், வாழும் வகையைத் தொலைத்தவர்களும், ஊனமுற்றவர்களுமாக அந்த மண் சோபை இழந்து சோகமாகக் காட்சி தருகின்றது. அவர்களது உடலில் உயிரைத் தவிர அவர்களுக்கென்று எதுவுமே மிச்சமாக இல்லை. அவர்களது அவலங்களை அப்படியே வெளிக் கொணர்ந்து உலகின் மனச்சாட்சியைத் தட்டும் பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது ஆரம்பித்துள்ளது.

    அழுவதற்கோ, ஆறுதல்படுத்துவதற்கோ, ஆதரவுக் கரம் நீட்டுவதற்கோ கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள், அவர்களது கல்லறைகளில் கூட கண்விழிக்க அனுமதியின்றித் தவிக்கின்றார்கள்.

    இத்தனை அவலங்கள் நிறைந்த இன்றைய தாயக பூமி இங்கிருந்து செல்லும் சில ஈனத் தமிழர்களுக்கு சொர்க்க பூமியாகக் காட்சி தருவதுதான் மிகப் பெரும் கொடுமையாக உள்ளது. விபச்சாரிகள் தப்பு, சரி என்று எதையுமே கணக்கிடுவதில்லை என்பது போலவே, இவர்களுக்கும் அந்த மண்ணின் அவலங்களும், அந்த மக்கள் மீது நடாத்தப்படும் அசிங்கங்களும், அவமானங்களும் துடைத்தெறியக்கூடிய புனிதங்களாகத் தோன்றுகின்றன.

    இவர்களுக்காகவென்றே சிங்கள தேசமும், அதன் கூலிக் குழுக்களும் செய்து கொடுக்கும் வசதிகளும், வாய்ப்புக்களும் இவர்களுக்கு தமிழீழம் தற்போது தேன் பாயும் பூமியாகக் காட்சி தருகின்றது. மனிதன் இழக்கக் கூடாதது மானம், இழக்க முடியாதது சுய கௌரவம். இந்த இரண்டையும் இழந்துவிட்ட இரண்டும் கெட்டான்களுக்கு சிங்களம் வரம் தரும் கர்ப்பக்கிருகமாகக் காட்சி தருவதில் வியப்புக் கொள்ள ஒன்றும் இல்லை.

    தமிழீழம் சூறையாடப்படுகின்றது. தமிழ் மக்கள் அச்சத்தினுள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழம் திணறுகின்றது. கிழக்கைப் போல், வவுனியா போல் வன்னியும், யாழ்ப்பாணமும் சிங்கள மயப்படுத்தப்படுவதால், அங்கும் தமிழர்கள் சிறுபான்மை இனமாக அவலப்படும் நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது. அச்சப்படுத்தப்படும், வாழ்வுரிமை மறுக்கப்படும் தமிழர்கள் கடல் கடந்து தப்பிச் செல்வதைக் கறியாகக் கொண்டிருப்பதால், சிங்களத்தின் ‘சிங்கள தீப’ கனவு நனவாகும் நிலையை அடைந்து வருகின்றது.

    இந்த வருடங்களில் உல்லாசப் பயணமாக அந்தத் தமிழ் மண்ணைத் தரிசித்தவர்கள், இன்னமும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்தில் ‘ஆயி போவன்’ சொல்லியே தரை இறங்க வேண்டிய அவலத்தைச் சந்திக்கப் போகின்றோம் என்பதை இப்போதே உணர்ந்து கொள்ள வேண்டும்.

    சின்னச் சின்ன ஆசைகளோடு சிறிலங்கா சென்று திரும்பும் எமது உறவுகள், எம் இனத்தின் எதிர்காலத்தையும் சேர்த்தே காவு கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று முழுக்குப் போடும் நம்மவர்கள், இன்றும் விடுதலை வேட்கையுடன் தமிழீழ மண்ணும், மக்களும், புலம்பெயர் தமிழர்களும் யாக வேள்வி நடாத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    தனி ஒரு மனிதனாகத் தனக்கான சுமையுடன் சுகந்தன் என்ற தமிழீழ விடுதலைத் தீப்பொறி லண்டனிலிருந்து ஜெனிவா நோக்கித் தனது போர்ப் பயணத்தைத் தொடர்ந்த வருகின்றது. பத்து நாட்களாக நடந்து பாரிஸ் நகரின் ஊடாகப் பயணப்பட்டுள்ள இந்த அக்கினிக் குஞ்சு புலம்பெயர் தேசத்தின் தமிழ் மக்களது திறக்காத மனக் கதவுகளை உடைத்துத் தமிழீழக் கனவை விதைக்கப் போகின்றது. அது சிங்கள தேசத்தின் பிடியிலிருந்து தமிழீழத்தை முற்றாக மீட்டெடுக்கும் புதிய போர்க் களத்தைப் புயலாக மாற்றப் போகின்றது.

    இந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழம் தோற்றுப்போகவில்லை. அது தோற்றுப்போக அந்த மண்ணுக்காய்ப் போராடி மாவீரராகிப்போன எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டாhகள். தமிழீழம் கனவல்ல… எங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள தேசியக் கடமைகளை நாங்கள் சுகந்தனைப் போல் தூய மனத்துடன் சுமந்து சென்றால், தமிழீழம் கனவல்ல!

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>