வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடந்த நிலையில் மீட்பு // பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண் புகார்..!

வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடந்த நிலையில் மீட்பு..!

வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடக்க காணப்பட்டார். இவர் இங்கு சிற்றூழியராக கடமையாற்றி யவர். மின்விசிறியில் கயிற்றில் தூங்கியவாறு இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அறைக்கதவு மூடப்பட்ட நிலையில் இருந்தபோது கதவை உடைத்து திறந்து பார்த்தபோது இவரது சடலம் தொங்கியவாறு காணப்பட்டது. இவர் சிலாபத்தைச் சேர்ந்த 23வயதான இளைஞன் எனவும் வாடிவீட்டுக்கு இரு வாரத்திற்கு முன்னர்தான் வேலைக்கு வந்தவர் எனவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தைச் கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன.

பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக  இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண் புகார்..!

பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண்ணொருவர் செய்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு தியத்தலாவ இராணுவ பொலிஸாருக்கு உதவுவதற்காக விசேட புலனாய்வுக் குழுவொன்றை இராணுவம் நியமித்துள்ளது. இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், விசாரணைகள் இன்னும் நடைபெறுவதால் அது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கூற முடியாது எனவும் இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் யூ.ஏ.பி. மெதவல தெரிவித்துள்ளார். கடந்தமாதம் தனது காதலருடனான பிரச்சினை குறித்து புத்தல பொலிஸில் புகாரிடச் சென்றபோது அங்கிருந்த மூன்று பொலிஸார் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக மேற்படி பெண் புகாரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>