படகில் வரும் அகதிகளால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதாக மெல்பேர்ன் கல்வியாளர் தெரிவிப்பு // எந்த குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக, அவரின் உதவியை பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு-அரசாங்கம்..!
படகில் வரும் அகதிகளால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதாக மெல்பேர்ன் கல்வியாளர் தெரிவிப்பு..!
படகுமூலம் இலங்கை அகதிகள் உட்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் ஹர்வினாஸ் என்கிற கல்வியாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவுஸ்திரேலிய எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அகதிகள் விடயத்தில் விவாதிப்பதிலும் தோல்வி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படகுப்பயணம் மிகவும் அபாயகரமானது. எனினும் கடத்தல்காரர்களால் அரசியல் நோக்கம்கொண்டு மக்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துவரப்படுகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியா தமது எல்லைப்புறங்களையும், கடற்பிராந்தியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது. தாம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படாமல் வரவேற்கப்படுவதும் அகதிகளின் அதிகரிப்புக்கு காரணமாகும். அகதிகளின் வருகையால் அவுஸ்திரேலியாவிற்குள் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் ஹரிவினால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக, அவரின் உதவியை பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு-அரசாங்கம்..!
எந்தவொரு பயங்கரமான குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக, அவரின் உதவியை பெற்றுக்கொள்ள நாட்டின் சட்டத்தில் இடமிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்திற்காக மன்னிப்பு வழங்கி, நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறாத வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் ரம்புக்வெல்ல கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தன்னால் தற்போது கூறமுடியாதெனவும் அமைச்சர் கூறியுள்ளார். புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செயற்பட்டு வந்த கே.பியை அரசாங்கம் தனது சாட்சியாளராக பயன்படுத்தவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்