வடக்கின் அபிவிருத்திக்காக புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை-அரசாங்கம் // பொலிஸ் உத்தியேகாத்தரை திட்டிய இன்ஸ்பெக்டர் குறித்து வழக்கு..!

வடக்கின் அபிவிருத்திக்காக புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை-அரசாங்கம்..!

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியேகாத்தரை திட்டிய இன்ஸ்பெக்டர் குறித்து வழக்கு..!

பாதசாரிகளுக்கான கடவையைப் பயன்படுத்துமாறு தம்மை அறிவுறுத்திய போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை திட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சிவிலுடையில் இருந்த மேற்படி இன்ஸ்பெக்டர், கண்டி தலதா வீதியில் பாதசாரிகளுக்கான கடவையை பயன்படுத்தாமல் வேறு இடத்தில் வீதியைக் கடக்க முற்பட்டாராம். அப்போது பாதசாரிகளுக்கான கடவையைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அறிவுறுத்தியபோது, அவரை தகாத வார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டினாராம். இந்நிலையில், குறித்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித விஜேசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>