வாகரை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம் // கண்டியில் கருக்கலைப்பு செய்த தாய் மரணமானது தொடர்பில் விசாரணை..!
வாகரை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம்..!
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து கதிரவெளி, சித்தங்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
கண்டியில் கருக்கலைப்பு செய்த தாய் மரணமானது தொடர்பில் விசாரணை..!
கண்டியில் கருக்கலைப்பு செய்த தாயார் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமொன்றில் கருக்கலைப்பு செய்த நிலையில் அதிக இரத்தபோக்கிற்கு உள்ளாகிய நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்