பேருவளைப் பகுதியில் சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை // வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் விடயம் தொடர்பான வழக்கு..!

பேருவளைப் பகுதியில் சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை..!

பேருவளைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வானொலி நிலையமொன்றை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பேருவளைப் பகுதியில் தமது ஒலிபரப்புச் சேவைகளை வழங்கி வந்த வானொலி நிலையமொன்றை நேற்று பொலிஸார் திடீர்ச் சோதனைக்கு உட்படுத்தியதாகவும் இதன்போது ஒலிபரப்புச் சேவைக்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எப்.எம் அலைவரிசையூடாக இலங்கை முழுவதிலும் குறித்த வானொலியானது தமது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்ததாகவும் அந்த வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த சட்டவிரோத ஒலிபரப்புச் சேவையை நடத்தி வந்த சந்தேக நபர்களை கைதுசெய்யும்படி தான் பொலிஸாரைக் கேட்டுக்கொண்டதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். குறித்த வானொலி நிலையமானது தனிப்பட்டவர் ஒருவராலேயே நடத்தப்பட்டு வந்ததாகவும் அவர் மருதானையை வதிவிடமாகக் கொண்டவர் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் விடயம் தொடர்பான வழக்கு..!

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியொன்றில் கூறியதாக வெளியான செய்தி தொடர்பாக இவ்வழக்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 20 சாட்சிகளுக்கும் நீதிமன்றம் மேற்படி அழைப்பாணையை விடுத்தது. அதேவேளை ஜெனரல் சரத்பொன்சேகாவின் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை உறுதிப்படுத்தும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்தது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>