கனடாவில் நாயை பலாத்காரப்படுத்திய இலங்கையர் கைது // கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடைசெய்ய நடவடிக்கை..!

கனடாவில் நாயை பலாத்காரப்படுத்திய இலங்கையர் கைது..!

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 51வயதுடைய அஞ்சலோ அபயவிக்ரம என்பவர் நாயை பலாத்காரபடுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த மேமாதம் கைது செய்யப்பட்டார். இவரது வழக்கு நேற்று முன்தினம் கனடா நீதிமன்றில் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாயின் உறுப்பில் பலாத்காரமாக ஆணுறையினை அணிவித்து சித்திரவதை செய்ததால் அந்நாய் பரிதாபமாக துடிதுடித்த சம்பவத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின்பேரிலேயே அந்நபர் கைதுசெய்யப்பட்டார். மிருகவதை சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபரின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, தான் வேண்டுமென்று அந்நாயை சித்திரவதை செய்யவில்லை எனவும் அந்நாய் அடிக்கடி தனது வீட்டில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காகவே தான் அப்படி ஆணுறையினை அந்நாய்க்கு மாட்டிவிட்டதாகவும் சந்தேகநபர் மன்றில் தெரிவித்திருக்கிறார். மேலதிக விசாரணைகள் மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நபர் கடந்த 2007ம் ஆண்டு தனது நண்பருடன் கத்திக்குத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்காகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடைசெய்ய நடவடிக்கை..!

கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடைசெய்வது தொடர்பாக பெண்கள், சிறுவர்களுக்கான பொலிஸ்பிரிவு நேற்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப சிரேஷ்ட அதிகாரிகள், பம்பலப்பிட்டி சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையொன்றை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்ததையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான பொலிஸ்பிரிவு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் பொலிஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை ஜனாதிபதி அறிவித்திருந்தார். அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான சகலவிதமான துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். பல்வேறுபட்ட முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றிருந்ததாகவும் தனிப்பட்ட முறையிலும் பல முறைப்பாடுகளை தான் பெற்றிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நாட்டிலிருந்து சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாமல் செய்வதற்கான சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடியுள்ளனர். இந்த தொலைபேசிகளில் இலவசமாக ஆபாசப் பட இணையத்தளங்களை பார்க்கக் கூடியதாக இருப்பதால் துஷ்பிரயோகம் மற்றும் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிப்பதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இளம்பராயத்தினர் கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் விடயங்கள்அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொலிஸாருக்கு உதவுவதற்கு கையடக்க தொலைபேசி இயக்குநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>