ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழ் பெற முடியாதுபோனால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 150மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் // வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளும் பணிகள் நாளையுடன் நிறைவடைகின்றன…!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழ் பெற முடியாதுபோனால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 150மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும்..!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழ் பெற முடியாதுபோனால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 150மில்லியன் டொலர்களை இழக்க நேரிடுவதுடன் சுமார் 2லட்சம் மீனவர்கள் தொழிலை இழக்க நேரிடும் என கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இதனை நிவர்த்திக்கும் நோக்குடன் இந்து சமுத்திர ரூனா ஆணைக் குழுவின் அங்கத்துவத்தை பலப்படுத்துவதுடன் அடுத்தாண்டு ஆணைக்குழுவின் மாநாட்டை இலங்கையில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்து சமுத்திர ரூனா ஆணைக்குழுவின் நிறைவேற்று செயலர் அலெஜான் ரோ அங்கனூறி நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜிதவுடன் ஐ.ஓ.ரி.சியின் நிறைவேற்று செயலர் அலெஜென்ரோவும் கலந்துகொண்டிருந்தார். இந்து சமுத்திர ரூனா, ஆணைக்குழுவுக்கு இலங்கை இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. 2007ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இந்த ஆணைக்குழுவுக்கு எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் இந்த ஆணைக்குழுவுக்கு இலங்கை கட்டுப்படவில்லை என்ற ஒரு நிலைப்பாட்டுக்கு ஆணைக்குழு வருமானால் ஐரோப்பியதரச் சான்றிதழ் கிடைக்காமல் போகும், இதனால் நாம் சட்டவிரோதமாக கடலில் மீன்பிடிப்பவர்கள் என்ற பார்வையில் நோக்கப்படுவதுடன் எமது மீன்களை வெளிநாட்டுக்கு விற்பனைசெய்ய முடியாது. வெளிநாட்டுக்கு மீன்களை அனுப்புதவன் ஊடாக வருடாந்தம் சுமார் 150 மில்லியன் டொலர்கள் கிடைப்பதுடன் சுமார் 2லட்சம் மீனவர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளும் பணிகள் நாளையுடன் நிறைவடைகின்றன…!

வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளும் சகல பணிகளும் நாளையுடன் நிறைவடைகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநில, மாவட்ட பிரதிநிதிகள், மகளிர் இணைப்பதிகாரிகள், மாவட்ட அமைப்பாளர்கள், ஆகியோர் இன்று நள்ளிரவுக்கு முன்பு சகல தோட்டங்களுக்கும் சென்று வாக்களார் படிவங்களை பூர்த்தி செய்ய உதவும்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியவர்களின் பெயர்களை தேர்தல் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் நாட்டைவிட்டு வெளியேறிய யாழ்ப்பாண வாக்காளர்களின் பெயர்களை இடாப்பிலிருந்து நீக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தேர்தல் செயலக உத்தியோகத்தர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் நவம்பர் 1ம் திகதி முதல் 28ம் திகதி வரை புதிய இடாப்பு பார்வைக்காக வைக்கப்படும் எனவும் உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>