சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர்கட்டுரை.. பாகம் 39)

SRI LANKA-UNREST-HINDU-PRIEST(ஒருவரைப் பற்றி சரிவர அறிந்து ஆராய்ந்து பாராமல் அவருடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாமல் அவர் மீது அவதூறு கூறி சேற்றை வாரி இறைப்பது மனிதப் பண்பாகாது. ஒரு மனிதனின் குண நலன்களும் அவன் பழக்க வழக்கங்களும் அவன் வாழ்க்கை முறையும் அவன் பிறந்து வழந்த சூழ்நிலையிலும் அவன் குடும்பத்தின் பின்னணியிலும் தான் தங்கியுள்ளது. ஆகவே ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள அவர் வரலாற்றை ஆராய்ந்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்…சற்று அறிந்து கொள்ளுங்கள்!… கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்!!…) நமது இலங்கைத் தீவில் தென்னிலங்கையை எடுத்துக் கொண்டால்
அதன் நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில்தான் இயற்கையின் அழகை தரிசிக்க முடியும். பிரதான தார் சாலைகளிலிருந்து உள்வாங்கிச் செல்லும் செம்மண் கிறவல் சாலைகள் அதன் ஓரங்களில் நெளிந்தோடும் தெளிந்த சிறிய நீரோடைகள் அவற்றிற்கு அப்பால் தெரியும் நெடிதுயர்ந்த தென்னை மரத் தோப்புகள் அதன் நடுவே வெப்பத்தை தணித்து வீசும் மென் தென்றல் அதைக் கடந்து அப்பால் சென்றால் கண்களைக் குளிர வைக்கும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள் என்று இயற்கை விரிந்து சிரிக்கும் ரம்மிய அழகு இந்தக் கிராமங்களில்தான் கொட்டிக் கிடக்கிறது….

நகர் புறத்து சுறுசுறுப்பான சம்பிரதாய வாழ்க்கையை கடந்து இந்தக் கிராமங்களில் நுழைந்து விட்டால் நமது மனங்கள் கூட இலகுவாகி ஒரு குழந்தையைப் போல் ஆகிவிடுமென்றால் இங்கேயே பிறந்து வழர்ந்தவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் நம்மைப் போல் அல்லாமல் நகர்ப்புறத்து சூதுவாது மனப்பான்மையைக் கடந்து அன்பையும் நட்பையும் பாசத்தையும் மதித்து வாழும் உன்னத மனப்பான்மை உள்ள மனிதர்களாகவே பெரும்பாலும் காணப்படுவார்கள் . இயற்கையுடன் ஒட்டி வாழ்வதாலோ என்னவோ அவர்கள் மற்றவர்களின் மன உணர்வுகளை மதித்து அவர்கள் துன்பங்களில் பங்கு கொள்ளும் இயல்பான மனப்பாங்கும் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தென்னிலங்கைக் கிராமமாகிய வீரகட்டியாவில் பிறந்தவர்தான் மகிந்த ராஜபக்ச அவர்கள். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது அந்தக் கிராமத்து வாசனை அவர் வாழ்க்கையிலும் வீசுவது தெரிகிறது…

இன்று மகிந்தா அரசியல் மேடைகளில் “குரோதம் கொண்ட அரசியல் பரப்புவதைக் கைவிட்டுஇ அன்பைப் பரப்பும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்” என்று பேசி வருவது வெறும் பிரச்சார வார்த்தைகள் அல்ல. அது அந்தக் கிராமத்து மனிதரின் மனதின் ஆழத்திலிருந்து வரும் மானசீகமான வார்த்தைகள் . அவர் மனதின் ஆழத்தில் என்றோ பதிந்துபோன ஒரு எண்ணத்தின் எதிரொலி அது . தன் நாட்டையும் தன் மக்களையும் ஆத்ம பூர்வமாக நேசிக்கும் ஒருவன் இதைத்தான் கூறுவான். தன் நாட்டில் அமைதியும் தன் மக்களின் மனதில் மகிழ்ச்சியும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு நாட்டின் தலைவன் இதைவிட கூறுவதற்கு வேறு வார்த்தைகள் இருக்க முடியாது. அவர் கூறுவதுபோல் நமது நாட்டில் அப்படி ஒரு அன்பைப் பரப்பும் அரசியல் கலாச்சாரம் உருவாகுமேயானால் இலங்கையைப் போல் ஒரு சுபீட்சமான நாடு உலகில் வேறெங்குமே இருக்க முடியாது…

மகிந்தாவின் வாழ்க்கையும் அவர் நடத்தும் அரசியலும் அவருடைய தந்தையாகிய அல்வின் ராஜப்பக்சவிடமிருந்து அவருக்குக் கிடைத்த பரிசுகள். வீரக்கட்டிய கிராமத்து மனிதராகிய அல்வின் ராஜபக்ச பரம்பரை வழிவந்த பல தென்னந் தோப்புகளுக்கும் வயல் நிலங்களுக்கும் மிராசுதராக இருந்தார். வீரக்கட்டிய கிராமத்து மக்களால் “அல்வின் மாத்தயா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் 1947ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு விஜயானந்தா தகநாயக்காவின் அரசாங்கத்தில் காணி மற்றும் விவசாய அமைச்சராக பணியாற்றினார்…

இந்தக் கால கட்டத்தில் அரசுக்குக் சொந்தமான சுமார் 2000 ஏக்கர் காணி நிலத்தை குருவாபிட்டியா ஏழை விவசாயிகளுக்கு 99 வருட கால குத்தகை என்ற ஏற்பாட்டின் பேரில் குடும்பத்துக்கு தலா 5 ஏக்கர் வீதம் பகிர்ந்தளித்தார் அவர். இதன் மூலம் குருவாபிட்டியாவில் நெற் செய்கை என்றுமில்லாதபடி அதிகரித்தது என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. பின்னர் பண்டாரநாயக்கா அரசாங்கத்திலும் இதே பதவியை வகித்த அவர் விவசாயிகளுக்கும் இல்லிடமற்றோருக்கும் பலவிதத்திலும் ஆவன செய்தார்…

விருந்தோம்பலிலும் ராஜபக்ச குடும்பம் சிறந்து விளங்கியது. வீரக்கட்டியாவில் வசித்த சில வசதியற்ற குடும்பங்களின் மதிய உணவு பெரும்பாலும் இந்த வீட்டில்தான். மேலும் தினமும் அல்வின் ராஜபக்ச வீட்டிற்கு உதவிநாடி வருபவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு விருந்தளித்த பின்தான் விடை கொடுப்பது அவர் வழக்கமாக இருந்தது. சில நாட்களில் அந்த வீட்டில் சுமார் பதினைந்து இருபது பேர்வரை கூட உணவருந்திச் சென்றிருக்கிறார்கள் என்று அந்தக் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகிறார்கள்..

தன்னுடைய பதவிக் காலங்களில் மற்ற அரசியல்வாதிகள் போல் அரசியலை வியாபாரமாக்கி பணம் பண்ண அவர் என்றுமே முயற்சித்ததில்லை. இப்படி மனித நேயத்துடன் வாழந்ததாலோ என்னவோ பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு அவருடைய பரம்பரைக் சொத்துக்கள் சிலவற்றை அவர் விற்கவேண்டிய கட்டாயமும் ஒரு கால கட்டத்தில் ஏற்பட்டது…

கமல்இ மகிந்தாஇ பாசில்இ கோத்தபாயாஇ டட்லி என்று ஐந்தும் ஆண் குழந்தைகள் இவர்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய தன்னிடம் இருந்த ஒரே மோட்டார் வண்டியை விற்றும் இருந்த மிச்ச சொச்ச தென்னந் தோப்புகளை குத்தகைக்கு விட்டும்தான் அவர்களுக்கு கல்வியூட்ட அவரால் முடிந்தது. தன்னுடைய பொருளாதாரக் கஸ்டமான சூழ்நிலையிலும்கூட தன்னால் இயன்றவரை வசதியற்றோருக்கு உதவுவதையை தன் இறுதி நாள்வரை கடமையாகக் கொண்டிருந்தார் அந்த கண்ணியமான மனிதர்…

முடிவில் நவம்பர் 7 ந் திகதி 1967ம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட இருதய வலியினால் அவதிப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் சொந்தமாக ஒரு வண்டி இல்லாததால் ஒரு வாடகை வண்டியை தேடி அலைந்து அமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்து விட்டது. சிறிது நேரம் முன்னதாக வைத்திய சாலைக்கு கொண்டு வந்திருந்தால் தங்களால் அவரைப் பிழைக்க வைத்திருக்க முடியும் என்று டாக்டர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் என்ன செய்வது விதி முந்திக் கொண்டு விட்டது….

கணவர் உயிருடன் இருந்தவரை வீட்டு வேலை பிள்ளைகள் என்று வெளி உலகம் தெரியாமல் வாழ்ந்து வந்த திருமதி பாலதுவ ராஜபக்சவுக்கு கணவரின் மறைவு பேரிடியாக வந்து அவரை நிலை குலையச் செய்தது எனினும் அவர் சுதாரித்துக் கொண்டார் முழுக் குடும்பப் பொறுப்பையும் ஏற்று நடத்த தன்னைத்தானே திடப்படுத்தியும் கொண்டார். தன் பிள்ளைகளை மேற் கொண்டு கல்வியூட்டுவதென்று முடிவு செய்து அவர்கள் தங்கள் கல்வியைத் தடையின்றி தொடர்வற்காக கணவனால் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை ஒவ்வொன்றாக விற்க வேண்டிய சூழ்நிலைகூட அன்று ஏற்பட்டது. ஆனால் அந்தப் பெண்மணி மனம் தளராமல் தான் நினைத்தபடியே தனியொருந்தியாக தன் பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர அவரால் முடிந்தது என்றால் அது அவரது மனோ பலம்தான் காரணம் என்றுதான் கூற வேண்டும். சிறீமாவோ பண்டாரனாயக்காவின் ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டைத் தொகுதிக்கு அவரைத் தன் கட்சியின் அமைப்பாளராக இருக்கும்படி சிறீமா பல முறை வற்புறுத்தியும் அந்தப் பெண்மணி அதற்கு திடமாக மறுத்து விட்டார்..

தந்தையார் உள்ளவரை மகிந்தாவுக்கு வானம்பாடிப் பறவையாக இருந்தது வாழ்க்கை. அந்த உல்லாசமான நாட்களில் ஜாலியாக ஒரிரண்டு சிங்களப் படங்களிலும் நடித்திருக்கிறார் மகிந்தா. ஆனால் தந்தையின் மறைவிற்குப் பின் தனக்கிருக்கும் பொறுப்புகளை அவர் உணரத் தவறவில்லை. பௌத்த வித்யோதய சரிவகலாசாலையில் லைப்பிரேனியனாக கடமையேற்றார்… அங்கு சில காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது 1970 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்காவின் வேண்டுகோளின் பேரிலும் அம்பாந்தோட்டைத் பகுதி மக்களின் வற்புறுத்தலின் பேரிலும் பாலித தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியபோது அவரது வயது என்னவோ இருபத்தி நான்குதான். பாராளுமன்றத்தில் புன்சிரிப்புடன் நுழையும் மகிந்தா என்ற அந்த இளைஞனை வியப்புடன் அண்ணாந்து பார்த்தனர் அங்கிருந்த பழுத்த அரசியல்வாதிகள்…

பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977ல் ஒரு சட்டத்தரணியென்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் மகிந்தா. ஆனால் இவர் ஆஜரான பெரும்பாலான வழக்குகள் வசதியற்றோரின் உரிமைகளுக்காக வாதாடும் மனித உரிமை வழக்குகளே. இதற்காக கொழும்பு பல்கலைக் கழகம் கடந்த வருடம் செப்ரம்பர் 6 ந் திகதி இவருக்கு சட்டத் துறையில் டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது…

இந்தப் பாகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி மகிந்தா அமோக வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த இனிப்பான செய்தி எங்கள் இலங்கைத் தாயின் சுதந்திரத்தையும் அவள் பிள்ளைகளாகிய எங்கள் அனைவரது ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் சமாதானத்தையும் நேசிக்கும் நம் அனைவருக்கும் பேருவகை அளிக்கும் செய்தி என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தன் நாட்டையும் தன் மக்களையும் பாகுபாடில்லாமல் நேசிக்கும் அவள் மூத்த குமாரன் மகிந்தாவை நாமும் நம் சகோதரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் தலைவனாக தெரிவு செய்ததைப் பார்த்து அவள் நிட்சயம் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பாள். வேறொருவருக்கு தன்னை அடிமையாக விற்கத் திட்டமிட்ட தேசத் துரோகிகளின் சதி முயற்சி முறியடிக்கப்பட்டதை கண்டு அவள் நின்மதிப் பெருமூச்சு விட்டிருப்பாள்…

என்னுடைய முந்திய பாகத்தில் எழுதியதுபோல அமெரிக்காவை நம்பி அது போடும் எலும்புத் துண்டுகளுக்காக தன் நாட்டைக் காட்டிக் கொடுத்த குற்றத்திற்காக பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்க்கோஸ்இ ஈரான் மன்னராக இருந்த ஷா போன்றோர் எப்படி ஒரு அனாதைப் பிணமாக ஹவாய் தீவில் செத்தழிந்து போனார்களோ அப்படியே சரத்தின் தலைவிதியும் எங்கோ ஒரு கண் காணாத தேசத்தில் முடியத்தான் போகிறது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்…

தனது உயிர் பாதுகாப்புக்காக தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக இன்று சரத் ரீல் விடுவதை சில முட்டாள்கள் நம்பத்தான் போகிறார்கள் ஆனால் சரத் வென்றால் தங்கள் ஆட்சி அவர் தோற்றாலோ அது அவரின் தனிப்பட்ட வீழ்ச்சி என்று அதைக் கண்டு கொள்ளாது அமெரிக்கா விட்டு விடும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவர் நாட்டை விட்டு வெளியேறும் உண்மைக் காரணம் நிட்சயம் புரிந்திருக்கும்! .. அமெரிக்காவினால் கைவிடப்படும் கதை தெட்டத் தெளிவாகத் தெரிந்திருக்கும்!!…

சரத்திற்கும் பிரபாவிற்கும் அப்படி என்னதான் வித்தியாசம் இருந்திருக்கும்? இருக்கும்வரை இருந்து ஆண்டு அனுபவித்து விட்டு எம் மக்களை கொன்று குவித்து விட்டு தங்கள் உயருக்கு ஆபத்து என்றவுடன் எங்காவது காடு மேடுகளைத் தேடி ஓடி ஒளிந்து கொள்ளும் எண்ணங் கொண்ட பேடித் தனமான கேடிகள் இவர்கள்..

தான் இலங்கையை விட்டு வெளி நாடொன்றிற்குச் சென்றாலும் இலங்கையிலுள்ள மக்களின் தொடர்பு தனக்கு என்றுமே இருக்குமாம் என்று சரத் கூறியிருப்பதை பார்க்கும்போது வெளி நாடுகளில் இருக்கும் புலிப் பினாமிகள் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்காக நாடு கடந்த தமிழ் ஈழம் ஒன்றை அமைக்கப் புறப்பட்டிருக்கும் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. போதாதற்கு சுட்டாலும் மணவாத கட்டாக் கருவாடாகிக் கிடக்கும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தைவேறு தூசு தட்டி இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள் புலன் பெயர்ந்த் மக்களின் வீட்டுக் கதவுகளை மீண்டும் காசு கேட்டுத் தட்டுவதற்காக!

அண்மையில்தேர்தலுக்கு முன் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்காக பிரபல அரசியல் ஆய்வாளரும் நிருபருமான ராஜ்பால் அபேயநாயக்க மகிந்த ராஜபக்சவை பேட்டி கண்டிருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் ஆணித்தரமாக அளித்திருக்கும் பதில்கள் அவர் நேர்மையையும் குணநலனையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது..

உதாரணத்திற்கு சில….

கேள்வி: நீங்கள் அரச்சாங்க ஊழியர்களுக்கு இலவச மதிய உணவளிதீர்களாமே?. அது சட்ட விரோதமானதல்லவா? அது அனுமதிக்கப்படாத ஒன்றல்லவா?

பதில்: மக்களுக்கு உணவளிப்பது இன்று மட்டுமல்ல நான் பிறந்த காலம் முதற் கொண்டே எங்கள் வீட்டிலே மற்றவர்களுக்கு உணவளித்துத்தான் வந்திருக்கிறார்கள்.

கேள்வி: நான் வீட்டுக்கு வருபவர்களைப் பற்றி கேட்கவில்ல ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு உணவளித்ததைப் பற்றிக் கேட்கிறேன்…

பதில்: இல்லையில்லை..நான் அரசாங்க ஊழியர்களுக்கு விருந்தளிக்கவில்லை. நான் என்றுமே எந்தவொரு அரசாங்க ஊழியருக்கும் உணவளித்ததில்லை..அவர் ஒரு அரசாங்க ஊழியராக இருந்தால் என்னால் அவரது கடமைக்கு பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்புவதும் இல்லை..அவர் ஒரு அரசாங்க ஊழியராகவோ அல்லது உங்களைப் போன்ற ஒரு நிரூபராகவோ அல்லது வேறு எவராகவோ இருந்தாலும் எனது வீட்டிற்கு வருபவர்களுக்கு நான் விருந்தளிப்பேன்… அரசியலுக்காக எனது குடும்பப் பாரம்பரியங்களை நான் மாற்ற முடியாது…

கேள்வி: இது தமிழ் தேசிய கூட்டமைப்பினரைப் பற்றியது..உங்கள் எதிர்க் கட்சி அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் அரைவாசியையோ அல்லது அதற்குக் குறைவானதாகவோ சில வாக்குறுதிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்கி அவர்களை உங்கள் பக்கம் தங்கவைத்திருக்க முடியும் என்று நீங்கள் எண்ணவில்லையா?

பதில்: இது பிரச்சனைக்குரியது. இந்தத் தேர்தலுக்காக நான் பொய் கூற விரும்பவில்லை. என்னால் ஒன்றைக் கொடுக்க முடியுமாயிருந்தால் மட்டுமே நான் முடியும் என்று கூறுவேன்.. அப்படி முடியாதிருந்தால் முடியாதென்று மட்டும்தான் கூறுவேன். நான் என் வாழ் நாளில் அப்படிப் பட்டவனாகவே இருந்திருக்கிறேன். என்னால் முடியாதிருந்தால் முடியும் என்று கூறி மக்களை தவறாக வழி நடத்த என்னால் முடியாது. வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பது பற்றிய பிரச்சனையையும் இராணுவ முகாம்களை அகற்றுவது பற்றிய பிரச்சனையையும் சுயாட்சி பற்றிய பிரச்சனையையும் என்னிடத்தில் கொண்டு வந்தால் இவைகளைச் செய்ய முடியாது என்று மட்டுமே நான் கூறுவேன். சம்பந்தன் அடைக்கல நாதன் போன்றோர்க்கு இதுதான் தேவைப்படுகிறது… அப்படியான ஒரு ஒப்பந்தத்தை தாங்கள் சம்பந்தனுடன் கையெழுத்திட்டுள்ளதாக இப்போது சரத் சில்வா கூறுகிறார்..

கேள்வி: தமிழர்களுக்கான உங்கள் அரசியல் தீர்வுக்கான அறிகுறியை எப்போது நீங்கள் தருவீர்கள்?

பதில்: தேர்தல் முடிந்த பின்னர் இதில் ஈடுபடுவேன்..இது சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்கள் செய்திருக்கிறேன்…இதற்காக பல வருடங்களாக நான் முயற்சித்தும் அவர்கள் எனக்கு ஒதுழைப்புத் தரவில்லை.

கேள்வி: முடிவாக தமிழர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி?

பதில்: நானும் தமிழ்தான் பேசுகிறேன் அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள் ஆகவே எவ்வித பிரச்சனைகளும் இடையில் இல்லை என்பதே தமிழ் பேசும் மக்களுக்கு நான் கூறும் செய்தியாகும்…

ஆம் உள்ளதை உள்ளபடியும் முடிந்ததை முடியும் என்றும் முடியாததை முடியாதென்றும் கூறும் வெளிப்படையான திறந்த மனம் படைத்த ஒரு சிறந்த கிராமத்து மனிதர்தான் நமது ஜனாதிபதி மகிந்த ராஜ்பக்ச அவர்கள்…(தொடரும்)

-சித்திரெஜினா

24 Responses to “ சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர்கட்டுரை.. பாகம் 39) ”

  1. அன்பான சித்தி ரெஜீனா
    ஆஹா அருமையிலும் அருமை இவ்வாரத் தொடர் தேர்தலில் மகிந்த வென்றதுக்காக அவருக்கு நமது நல்வாழ்த்துக்களைக் கூறுவோம் அது நமது எதிரியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அது ஒரு மனித நாகரீகம் ஆனால் அதற்காக ஏதோஅவரது வீரக்கட்டியா கிராமத்தில் ராஜபக்ச மாத்தையாவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டித்தான் தாங்கள் பிறந்து வளர்ந்தது போலவும் அவர்களது வீட்டு அன்னதானத்தில் தாங்களும் பங்குபற்றி வளர்ந்தது போலவும் தற்போது உங்களுக்கு வயது தொன்நூறைத் தாண்டியது போலவும் எப்போதும் அவர் புகழ்
    பாடுவதும் தங்களது எழுத்தில்க் காட்டிக்கொள்வதும்
    ஏற்டுக்கொள்ளக்கூடியதல்ல ஏனெனில் மஹிந்த புலித் தலைமையினை அடியோடு அழித்து இந்தக் கொடிய பயங்கரவாதியையும் கொன்று யுத்தத்திற்கு ஒரு முடிவு கட்டியதை விட வேறு
    இது வரையில்த் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்ததாக இல்லை ஏன் அவர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை அதாவது அடுத்த ஜனாதிபதி தேர்தல் உட்பட இன்று வரை அந்த அவசரகாலச் சட்டத்தினை தேர்தல் காலத்திலும் கூட அமுலில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துபவர் இவற்றை எல்லாம் ஏன் உங்களால் எழுத முடியவில்லை ஆட்சியில் இருப்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் செய்யும் செய்த நன்மைகளை எழுதுவது போல் அவர்கள் செய்யும் செய்த தீமைகளையும் எழுதுவதுதான் சித்தி ரெஜீனா நீங்கள் உட்பட அனைத்து எழுத்தாளர்கட்கும்எழுத்துத் தர்மமாக அமையும்

  2. வணக்கம் என் உறவுகளே ,? எங்கே இவர் சொல்வதைப் பார்த்தால் தமிழ் மக்கள் இவருக்கு வாக்குப் போட்டுக் கிளித்து விட்டார்கள் என்பது போல் அர்த்தப் படுகின்றது உண்மையில் என்ன நடந்தது ???? தமிழர் இந்த தேர்தலை பொருட்டாக எடுக்கவில்லை ஆனால் ஒரு குறிப்பிட்ட தமிழர் குழம்பிய நிலையில்த் தான் போன்செகராவுக்கு வாக்குப் போட்டார்கள் போடாமல் விட்டால் மகிந்தா வந்து விடுவானோ என்ற பீதி எனவே போட்ட மக்களிலும் தவறு இல்லை

    சரி இனி டக்ளசிடம் வருவோம் இவர் யார் ??????? இவர் உண்மைல் ஈழத்தை சேர்ந்தவரா ஏன் என்றால் என்னிடம் பலர் கேட்டனர் எனக்குத் தெரியவில்லை இதற்கு பதில் அதிரடியிடம் விட்டுவிடுவோம் ,ஆனால் இவர் அரசாங்கத்தோடு இருந்து இருவது வரிடம் மக்களுக்கு தொண்டு செய்திருந்தால் ஏன் இவருக்கு மக்கள் வாக்குப் போடவில்லை ??????????????????? இரண்டாவது இவருக்கு விழுந்த வாக்கு யாருடையது ?????? ஏ என்றால் எதுவும் உண்மையில் மக்கள் போட்டதா ???????? அல்லது மக்களைப் போடா வைத்ததா ?

    சரி அதை விடுங்கள் இப்போது டக்கிளஸ் விட்ட அறிவித்தல்லின் ராஜதந்திரம் என்ன ????? எதற்க்காக எந்த நாடகம் யாரை ஏமாற்ற ???? இதனால் இவருக்கு என்ன பலன் ? பொறுத்திருந்தது பார்ப்பம் ,

    சரி இனி எங்கள் துரோகி கருணாவிடம் வருவேம் இவர் என்ன சொல்ல வாரார் என்பதது இவருக்கே புரியவில்லை ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு எப்படிப் புரியும் ?????என்னிடம் ஒரு கேள்வி உண்டு இவர் இருவது வருடங்கள் தலைவர் பிரபாகரனோடு இருந்துவிட்டு தமிழ் மக்கள் போட்ட சொத்தைத் திண்டு வந்த நாய் தமிழருக்கே திரோகம் செய்த போதும் எப்படி மகிந்தா இவரை நம்பி பக்கத்தில் வைத்துள்ளானோ ஏன் என்றால் எமக்கு துரோகியாய் இருப்பவனை விட எதிரியைப் பிடிக்கும் காரணம் எதிரி நேருக்கு நேர் நின்று போரிடுவான் ஆனால் திரோகிகள் முதுகிக்கு பின் இருந்து கழுத்தறுப்பார்

    இப்போ கருணாவை தமிழர்கள் எந்த இடத்தில் வைக்க வேண்டும் ???????

    ஆம் அடுத்ததாக சித்தி ரெயினா ??????? உங்கள் கருத்துப்படி மகிந்த்தாவால் தமிழருக்கு ஒரு புண்ணாக்கும் கிடைக்கப் போறதில்லை பிறகு என்னத்துக்கு இந்த ஆர்ப்பாட்டம் ????? எனக்குத் தெரியும் மகிந்தா ஒரு தடவை தன சொந்த ஊரில் ஒரு தமிழனுக்கும் வாடகைக்குக் கூட வீடு கொடுக்கக்குடாது என்று சொன்ன உத்தமர் அல்லவா, இவர் எப்படி தமிழனை நின்மதியாய் வாழவிடுவான் ??????

  3. தமிழனின் சாபக்கேடும் ஈழத் தமிழனின் தலைவிதியும்.

    ஏற்கனவே, அறநிலை சாராத தமிழர்களின் சுயநல அரசியல், பிற்போக்குத் தலைமைகள், கசாப்புக்கடைசிந்தனை, மண்டைகழண்ட தீர்மானங்கள், தலைக்கனம், குறுகிய மனநிலை, மூடத்தனம், குறுக்கால போற குணம், தன்னலம் தான் தமிழர்களை எல்லாம் உடுக்கடித்து எங்கெல்லாமோ அழைத்துச் சென்றிருக்கிறது.

    அன்றிலிருந்து, இன்றுவரைக்கும் கிடைத்த அறிய சந்தர்ப்பங்களை, பொன்னான வாய்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி, சீர்குலைத்து, கட்டிய கோவணத்தையும் காற்றில் பறக்கவிட்டு நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

    பகுத்தறிவு,பண்பாடு,தன்மானமுள்ள தமிழனுக்கே இதன் தாக்கம் தெரியும்.

    எப்பொழுதும், சாதகமாக வந்தடைகின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றியடைந்து கொள்ளலாம்.
    அல்லாவிட்டால் கிடைத்த சந்தர்பம் மீண்டும் கிடைக்காமல் போய் விடும் என்பதே உண்மையும், யதார்த்தமுமாகும்.

    உலக, சமுக, மானிட நியதிகளுக்கப்பால் பல தவறுகளை தமிழினம் செய்து விட்டது.

    சரி, இனியாவது செய்த தவறுகளை ஒரு படிப்பினையாகக்கொண்டு, தமிழினம் திருந்தும் என்றால், ….. …. …..

    குறுக்கால போன, சுயநலத் தமிழினம் மீண்டும், மீண்டும் ஈழத்தமிழருக்கு தலையிடியைத் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    எல்லாவற்றுக்கும் முக்கிய காரணகத்தாக்களான, சொகுசாகவும், பாதுகாப்பாகவும் வெளிநாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வெட்கம், ரோசமில்லாத, புலியாதரவு தமிழின துரோகக் கூட்டங்களும், மண்டைகழண்ட புலன்பெயர் மந்தை கூட்டங்களும்,
    “வீ வான்ட் தமிழ் ஈழம் ” முடிந்து, பின்னர், ” இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும்” என்பதும் முடிந்தும், திருந்தும் நோக்கம்மில்லை.

    தன்னலம் கருதி, தமது சொந்த, பந்தம் மட்டுமன்றி தமது சொந்த மண்ணையே விட்டோடி, அந்நிய நாடுகளில் அகதியாக, அடிமையாக மட்டுமல்ல, பணத்திக்காக அடிமட்ட வாழ்க்கை வாழும் கேடுகெட்ட, முண்டங்களுக்கு என்ன தான் இழப்பு? என்ன தான் பாதிப்பு?

    இனிமேல், ஈழத் தமிழினம் எந்த மூஞ்சியைக்கொண்டு தமிழர் பிரச்சனையை கதைப்பது? எம்மேல் எப்படி எவருக்கும் கரிசனை வரும்?

    இப்படியே காலம் பூராக, நாசமாய்ப் போன, சுயநல நரிக்கூட்டங்களாலும், நாய்க் கூட்டங்களாலும் தான் தமிழினம் அழிந்துகொண்டிருக்கிறது. தமிழ் மண் குறுகிக் கொண்டு போகிறது, ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    இனியாவது அந்தச் சனியன்கள் ஈழத்தமிழரை விட்டு விலகுமா?
    ஈழத் தமிழரை நிம்மதியாக வாழவிடுமா?

    சிந்திக்குமா மண்டை கழண்ட புலன் பெயர் மந்தைக்கூட்டம்?
    திருந்துமா தமிழின துரோகக் கூட்டங்கள்?

  4. அன்பின் சகோதரர் வன்னியானுக்கும் அவரைப் போல் நான் இங்கே எழுதுவதைப் பற்றி எண்ணுபவர்களுக்கும் நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு எழுத்தானின் திறமை தான் அறிந்த விபரங்களை வைத்து ஒரு கட்டுரை எழுதும்போது அந்த விபரங்களை காட்சிகளாக‌ மாற்றி அதைப் படிப்பவர்களின் கண்முன்னே விரியச் செய்வதில்தான் தங்கியிருக்கிறது. ஒரு அரசியல் கட்டுரைய எழுதும் போது அதை இரண்டு வகையாக‌ எழுதலாம் ஒன்று formal way மற்றது informal way நான் இதில் இரண்டாவது வகையை பின் பற்றுகிறேன். எனது கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புரிந்திருக்கும். இந்தக் கருத்தை எழுத்தாளர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மேலும் நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் நான் குறிப்பிடும் விடயங்களுக்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இங்கே சகோதரர் PSK குறிப்பிடுவதுபோல் எந்தவித‌ ஆதாரமுமில்லாமல் மகிந்தா ஒரு தடவை தன சொந்த ஊரில் ஒரு தமிழனுக்கும் வாடகைக்குக் கூட வீடு கொடுக்கக் கூடாது என்று சொன்ன உத்தமர் என்று கூறுவதில் இருந்தே அவர் யார் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இப்படித்தானே தமிழர்கள் மனதில் இனத்துவேச விதையை விதைத்து இன்றுவதை எஞ்சியிருக்கும் தமிழருக்கும் சமாதிகள் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

    நீங்கள் கூறும் செய்தியை ஆதாரங்களுடன் நிரூப்பிக்க உங்களால் முடியுமா? அது முடியாது என்பது உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும். வீரக்கட்டியா என்ற கிராமம் எங்கிருக்கிறது என்று கூட உங்களுத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். ஏன் கொழும்பு கூட உங்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறும்போதுதான் முதல் முதலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும்! தமிழர்களுக்கு மகிந்தா என்ன செய்தார் என்று கேட்குமுன் உங்கள் தலைவன் பிரபாகரன் தமிழர்களை அவர்கள் இளம் சமுதாயத்தை அழித்ததைத் தவிர வேறு எதைத்தான் செய்தார் அவர்களுக்கு? சுனாமி அனர்த்தத்தின் போது கோடி கோடியாக அங்கே வெளிநாடுகளில் திரட்டிய பணத்தில் அவர்களுக்கு ஒரு குடிசை வீடாவது கட்டிக் கொடுத்தாரா உங்கள் தலைவன்? அதுவும் தேவையில்லை அவர் பங்கருக்குள் இருந்து வெளியே வந்து அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதல்கூடக் கூறினாரா? அதுவும் இல்லை! அப்படிப்பட்டவரை உங்கள் தலைவன் என்று கூறிக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவருடைய கொடுங்கோல் ஆட்சியிலே வன்னியிலே 70 வீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் போசாக்கின்றி எத்தியோப்பிய குழந்தைகளை விடக் கேவலமாக இருந்தபோது அதைப்பற்றி வெளி நாட்டுப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தபோதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? வன்னிப் போர் தொடங்கியபோது தலைவர் உள்ளே வரவிட்டு அடிப்பார் என்று வாய்ச் சவடால் பேசிக் கொண்டு அங்கே வெளிநாடுகளில் தலைக்கனம் பிடித்து அலைந்த நீங்கள் எல்லாம் அவர் தோல்வியைத் தழுவி தொலையப் போகிறார் என்ற பின்னர்தேனே வெளிநாட்டுத் தெருக்களில் உங்கள் கொடுங்கோலனைக் காப்பாற்றுவதற்காக வன்னித் தமிழர்கள காப்பாற்றுகிறோம் என்ற பேர்வளிகளாய் நீலிக் கண்ணீர் வடித்தீர்கள்! உங்கள் மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் உண்மையிலேயே தமிழர்களுக்காகவா கண்ணீர் வடிக்கிறீர்கள். இல்லை இல்லை உங்கள் சுய நலத்திற்காக…

    முடிவில் இங்கே வந்து நானும் இங்கே எழுதும் எனது சகோதர எழுத்தாளர்களும் எங்கள் கட்டுரைகளை பிரசரிக்கும் எங்கள் உறவான‌ அதிரடியும் மகிந்த அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறோம் என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு கூறுகிறேன். உங்களைப் போல் பணத்துக்காக பிணங்களை வைத்து வியாபாரம் நடத்துபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் எங்கள் சுய உழைப்பில் வாழ்பவர்கள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக என்னால் என் கட்டுரையை அதிரடியில் தொடர முடியாமல் போனதற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா? நான் கட்டுரைகள் எழுதும் கணணி பழுதடைந்த நிலையில் ஒரு புதிய கணணி வாங்க முடியாத நிலையில்தான் நான் இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? தன்னுடைய நிலைமைக்காக ஒருவரிடம் கடன் வாங்கவோ அல்லது மற்றவரிடம் கை நீட்டவோ முடியாத தன்மானமுள்ள்வர்கள்தான் எழுத்தாளர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! சற்று புரிந்து கொள்ளுங்கள்!! ஒருவரை சரவர புரிந்து கொள்ளாமல் அவரை அறிந்து கொள்ளாமல் அவரை அவமானப்படுத்தும் முகமாக அவர்மேல் சேற்றை வாரி இறைப்பது மனிதப் பண்பாகாது..
    அன்புடன்
    சித்தி றெஜினா

  5. வணக்கம் என் தமிழ் ஈழ உறவுகளே வணக்கம் நான் ஒன்றும் ஜானியில்லை ஆனால் ஒரு சாதாரண தமிழ் குடிமகன், அந்த வகையில் இதை வரைகின்றேன் நாம் கொஞ்ச நேரம் ஒரு இடத்தில் நின்று சிந்திப்போம் ? விடுதலைப்புலிகள் போராடியது சரியா? இந்தப் போராட்டத்தினால் எமக்கு என்ன கிடைத்தது? என்னகிடைக்கவில்லை ? என்ன கிடைக்க வேண்டும் ??இதற்கு முதல் ஒரு கேள்வி விடுதலைப்புலிகள் யார் ? எங்கிருந்து வந்தவர்கள் ?என்னும் ஒரு படி மேலே சென்று பார்ப்போம் ஆனால் இந்த விடுதலைப் போராட்டத்தினால் விடுதலைப்புலி போராளிகளுக்கு என்ன லாவம் ???????????????????????????????????????????????????????????????

    சரி முதலாவது கேள்விக்கான விடையைக் காண்போம், ,,, தமிழர் வரலாறு ஒன்றும் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் ஆகவில்லை இதுமுப்பது வருட அகிம்சைப் போராடத்தின் பின் எமக்கு சிங்களத்தோடு பேசி பயனில்லை என்றபின் ஆரம்ப்பிக்கப்பட்டது, அப்படி என்னதான் தமிழ் தரப்பு சிங்களத்திடம் கேட்டது?மாநில சுயாட்சி அல்லது ஜம்பதுக்கு ஜம்பது இதன் பொருள் சம அந்தஸ்த்து இது ஒன்றும் தப்பில்லை காரணம் தமிழர்கள் தனில் ஈழத்தில் ஒரு தேசிய இனம், எமக்கு என்று கலை கலாச்சாரம் பண்பாடு இவைகள் தமிழரின் தனித்துவமானது ,எனவே தமிழரின் வாழ்க்கை கேள்விக்குறியான போது நிட்ச்சயமாக தமிழர் போராட எண்ணியது சரி எனவே விடுதலைப்புலிகளின் போராட்டம் சரி,…

    சரி அடுத்தது விடுதலைப் போராட்டத்தினால் என்ன எமக்கு கிடைத்தது ? இதை சுருக்கமாக சொல்லிவிடுகின்றேன் கரணம் இதற்கு நீண்ட வரைவு தேவை எனவே இதுதான் சுருக்கம் தமிழ் இனத்தை அடையாளப்படதியுள்ளது இதற்குள் நிறைய தியாகம் உண்டு

    அடுத்தது என்ன இது? ஏன் இவ்வளவு போராட்டம் செய்தும் நாம் இலக்கை அடையவில்லை ? இதை இப்படி சொல்வதை விட இலக்கு சரியானது அவர்கள் சென்ற பாதையும் சரி இவர்கள் ஒன்று மட்டும் பிரபாகரன் பிழை விட்டுள்ளார் அது என்ன ?? இது எல்லா தமிழரிடமும் எழுந்த கேள்வி அதுதான் பிரபாகரன் ஏன் நல்லவராக நயவஞ்சகம் அற்றவராக இருந்தார் ????ஏன் என்றால் சிங்களம் தமிழர் மீது நற்சு வாயுக்களைப் போட்டும் ஏறி குண்டுகளைப் போட்டும் கொன்ற போது ஏன் விடுதலைப்புலிகளால் மட்டும் சிங்கள மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை ??செய்திருந்தால் சிங்களமும் போரை நிருதிருக்கும் .,,ஆனால் விடுதலைப்புலிகள் ஏன் அந்த ஈனத்தனமான வேலையை செய்யவில்லை இதற்கும் ஒரு தூர நோக்கு சிந்தனை பிரவகரனிடம் இருந்திருக்கிறது எதற்க்கான் விடையும் காலம் பதில் சொல்லட்டும்

    அடுத்தது விடுதலைப்புலிகள் யார் ??? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? இதை மக்களிடம் விடுவோம் ஏன் என்றால் மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள்.

    அடுத்தது , இது ஒரு தூர நோக்கு சிந்தனயில் சிந்திக்க வேண்டும், இதுவும் மக்கள் தான் பதில் கூற வேண்டும் ஏன் என்றால் உயிருடன் இருந்தவர்களை நீங்கள் எப்படியெல்லாம் கூற முடியுமோ கூறிவிட்டீர்கள் ஆனால் எமது மண்ணுக்காகவும் எமது மக்களுக்காகவும் உயிர் விட்ட உயிரைத் தந்த அந்த மாவீரருக்கு என்ன பதில் எங்களால் சொல்ல முடியும் ஒன்று இரண்டு அல்ல கிட்டத் தட்ட முப்பத்தையாயிரம் மாவீரர் தங்கள் இன்னுயிரைத் தந்து எமக்கு ஒரு அடையாளத்தைத் தந்துள்ளனர் இது ஒரு இனத்துக்கு மிகவும் முக்கியம்..ஆனாலும் இவர்கள் மக்களுக்கு எல்லாத்தையும் கொடுத்து விட்டு ஒன்றை மட்டும் எடுத்து சென்றுள்ளனர், அது தான் அன்பு..வேறு ஒன்றும் இல்லை நான் தலை வணங்குகிறேன் .

  6. சித்தி ரெயினா, நீங்கள் என்னதானம்மா சொல்ல வர்ரிங்கள் என்று எனக்கு விளங்கவில்லை ?அதாவது நீங்கள் மகிந்தாவின் படுக்கை அறையை திறந்து காட்டுங்கள் என்று சொல்வதைப் போல் உள்ளது, காரணம் இன்று மகிந்தா எதையும் வெளியில் தெரியாமல் செய்ய வேண்டும் என்று செய்து விட்டு இருக்கிறான் நீ என்னன்ட்டால் காட்சிப் படுதினால்த் தான் நம்பிவியோ? என்னம்மா கண்ணு சவுக்கியமா ? நான் ஒன்றும் பட்டிக்காட்டானுக்கு முட்டாசு காட்டவில்லை மகிந்தாவின் தமிழர் மீதான மும்முனைத் தாக்குதலைப் பற்றித்தான் சொன்னேன் இதில் தமிழ் துரோகக் கட்சிகளின் பங்கும் பெரும் பங்கு என்பதையும் தெளிவாகத் தான்,விளக்கினேன் .

    ரெயினா உங்களுக்கு தொலைக் காட்சிகளையும் பத்திரிகைகளையும் சிலர் சொல்வதையும் அறிந்து கருத்து எழுத வந்துள்ளீர் ,ஆனால் நான் சிங்களத்தின் குகையில் இருந்து எமது இனம் பட்ட துன்பத்தைப் பார்த்து எழுதுகின்றேன் ஒரு தடவை நீ வா என் வன்னி மண்ணுக்கு உனக்கு நான் கூட்டி சென்று காட்டுகின்றேன் என் வன்னி மண் பட்ட வேதனையை ஆனாலும் சிங்களத்தின் காட்சிகள் காலநேரத்திர்க்கு ஏற்ப வரும் அப்போது உங்களைப் போன்றவர்களும் தெளிவி அடைவீர்கள் நாம் இங்கு பொய்யான தகவல் எதுவும் தரவில்லை எல்லாம் கால நீரோட்டத்தில் வெளியில் வரும் எதற்கு உதாரணம் இளையர்கள் படுகொலை மற்றது பெண் போராளிகள் படுகொலையும் கற்பழிப்பும்,இவைகள் சில மேலும் வரும் அப்போ மகிந்தாவின் திருவிளையாடல்களும் தமிழ் கட்சிகளின் உல் விளையாடலும் ,

    நன்றி ரெயினா உங்கள் கருது உங்கள் சம்பத்தப் பட்டது அதாவது சிங்களம் சம்பந்தமானது ,இது தமிழர்கள் தொடர்பானது மாதிரியில்லை எனவே நீங்கள் எமது இனத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் எமது வரலாறு தெரியவேண்டும் உதாரணம் தமிழன் ஆரம்பத்தில் ஓடிய ஒழிந்த கதை ?

  7. Sithi Renina ,
    You can fool someone sometimes,
    You can`t fool evryone all the time

  8. புத்திஜீவி என்று தங்களைத் தாங்களே எண்ணிக்கொள்ளுகிறவர்களும், மற்றவர்கள் மூலம் தன்னை புத்திஜீவி என்று அழைக்க
    விரும்புகிறவர்களும்தான் இப்போதைய தேக்கத்துக்கு காரணம்.
    தன்னை இழக்கத்துணியாமல் மற்றவர்களுக்கு ஆலோசனையும்,ஆய்வுகளும் சொல்லும் இந்த வர்க்கம் இப்போது புதிதாக
    கடைலாயில் உமிழ்நீர்சுரக்க இங்கும் அங்கும் அலைகினம்.
    அப்படியான ஒரு புத்திஜீவிதான் டக்கியையும் தொங்கிகக்கொண்டு அலையுது .
    புத்திஜீவிக்களான சேர்.பொன்.இராமநாதனும்,ஜி.ஜி. பொன்னம்பலமும்,திருச்செல்வமும்,அமிர்தலிங்கமும் இந்த இனத்தை
    மீளமுடியாத பாதாளத்துக்குள் தள்ளினதைப்போல இப்போது சில டொக்ரரேட்டுகளும்,காம்ரேட்டுகளும் வெளிக்கிட்டுஇருக்கினம்.
    ஏதோ இல்லாதுவிட்டால் ஏதேதோ எல்லாம் வருமாம் என்பது போலவே…..

  9. உலகில் முதன்முதலாக கணனி தொழில்நுட்பத்தால் வெற்றிகொண்ட இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்: மங்கள சமரவீர

    ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்து பசில் ராஜபக்சாவினால் மேற்கொள்ளப்பட்ட கணனித் தொழில்நுட்ப நடவடிக்கைகள் பொதுத் தேர்தலிலும் பயன்படுத்தப்பட்டால் தமது எதிர்கால அரசியல் இருப்பு கேள்விக் குறியாகும் என அமைச்சர்கள் பலர் அஞ்சுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மகிந்தவை ஆதரிக்காமல் புறக்கணித்ததும், வடகிழக்கில் மகிந்த படுதோல்வியடைந்ததும் யாவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து தற்போது யாழில் தங்கியிருக்கும் டக்ளஸை தொடர்புகொண்ட பசில் அறமுறைய திட்டித் தீர்த்துள்ளார். நீரும் ஒரு மனிசனா யாழில் சிறு பகுதியில் கூட உமது கட்சியால் வெல்லமுடியவில்லையே, கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என திட்டியுள்ளதாக, அவரின் கட்சித் தொண்டர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. உம்மை நம்பியதை விட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருந்தால் நாம் வென்றிருப்போம் எனவும் பல தகாத வார்த்தைகளாலும் பசில் டக்ளஸை திட்டித் தீர்த்துள்ளார்.

    இதனை அடுத்து தாம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக டக்ளஸ் பெரும் பீலா ஒன்றை அரங்கேற்றினார். காலையில் அவ்வாறு அறிவித்த அவர் மாலையில் தனது முடிவை மாத்துவதாக அறிவித்துள்ளார். தம்முடன் மகிந்த தொடர்புகொண்டு தமது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், உடனே டக்ளஸ் அதனை மறு பரிசீலனை செய்து முடிவை மாற்றிக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த சைக்கிள் கப்பில் சில தொண்டர்கள் இந்திய அரசியல் பாணியில் யாழ்ப்பாணத்தில் கடைகளை மூடச்சொல்லியும், ஒரு பேருந்தை தீவைத்தும் கொழுத்தியுள்ளனர்.

    இதனிடையே பீ.பீ.சி தமிழோசைக்கு டக்ளஸ் வழங்கிய பேட்டியில், தன் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தாம் கூறியிருந்ததாகவும், ஆனால் தமிழர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் நொந்துள்ளார். இதன் மூலம் அவரே தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

    ஒரு காலத்தில் கட்டித் தழுவியவர்கள் தற்போது எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் எனப்தே ஜதார்த்தம் ! தற்போது இவர் கட்சியின் சின்னமான வீணை சோக கீதங்களையே வாசிக்கிறது..போலும்…
    ஆனால் இந்த ராஜினாமா மற்றும் சமாதானம், ஹர்த்தால் எல்லாம் வரப்போகும் பொதுத்தேர்தலில் தமக்கு வாக்குகளைச் சேகரிப்பதற்கான ஒரு நாடகம் எனவும் சில அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர்

    டக்ளசை பதவி விலகவேண்டாம் என்று கூறி ஹர்த்தால் ஒன்றுக்கு சிறு குழுக்களால் உத்தரவிடப்பட்டது. வடமராட்சி பஸ் ஒன்று அடித்து நொருக்கப்பட்டது. பல பஸ்கள் கற்கள் வீசி தாக்கப்பட்டன. ஓட்டோ வண்டிகள் விரட்டப்பட்டன. மக்கள் அவதியுற்றனர்.

    இதனை அவதானித்த படையினர் உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பஸ்களை ஓட வைத்தனர். ப10ட்டிய கடைகளை திறக்க வைத்தனர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த டக்ளஸ் ஸ்ரீதர் குகையில் இருந்து வெளியே வந்து தான் சொல்லி கடைகள் திறக்கப்பட்டதாகவும் தான் சொல்லி பஸ்கள் ஓட வைக்க வேண்டும் என்பது போலவும் நாடகமாடியது நடிகர் சிவாஜிகணேசனே எழுந்து வந்தால் கூட இப்படி நடிக்கமாட்டார் போங்கள். இத்துப்போன அந்த ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு அவர் பட்ட பாடு வடிவேலு செத்தார் போங்கள். அது சரி யாராவது ஒரு தொண்டரை வைத்து தீக்குளிக்க வைத்தால் என்ன டக்கண்ணா? அது சரி உங்களுக்காக ஆர் தீக்குளிக்கப் போறான். சண்முகம் கடையிலை ரீகுடிக்க வைச்சுப்போட்டு தீக்குளிச்சதா ஒரு ஸரேட்மென்ட் எங்கள் தேசத்திலையும் நாபிடிபி நியூசிலையும் போடுங்கோ டக்கண்ணா.

  10. புலிகள் ராஜபக்சவிடம் இருந்து 180 மில்லியன் ரூபாய்களை வாங்கியது உண்மையானால் ராஜபக்ச நோ்மையான ஒழுக்கமான அரசியல்வாதி என்று சிலா் புலம்புவது எவ்வளவு கொடுமையான விடயம் பாருங்கோ.

  11. whoever write the name with EELAVAR SAMUTHAYAM, i’m really very sorry for u. i don’t know where r u living?? why u always blame tamils who is living in foreign countries like ur language mandai kalandathu,tigers supporter, actually what is ur problem with them.u r telling join with mahintha and support to him, did he tell u if tamil support him he will solve the problem…this is ur day dream.u never ever get anything from makintha…

    ANNE REYINA MONNAWATHA OYA KIYANA?..U R TELLING U R A GOOD WRITER..OK KEEP IT..SO WHY U ALWAYS WRITE ARTICLES ABOUT MAHINTHA GOVERNMENT AND BLAME TAMILS WHO IS SUPPORT TO TAMIL EELAM. DON’T U HAVE ANYTHING TO WRITE…OH!!U R TELLING UR PC WAS DAMAGED WHY U DIDN’T ASK MAKINTHA FOR ONE..OR SORRRYYY..U TOLD U DIDN’T ASK ANYONE ANYTHING.IF U R MUSLIM WRITE ABOUT UR STORY.NEARLY 50 YRS. I’M LIVING IN COLOMBO..I KNOW ABOUT HISTORY AND WHAT SINHALA PEOPLE DONE TO US.THEY ALWAYS MAJORATY, WE ALWAYS MINORITY. THEY WON’T GIVE ANYTHING TO US. THIS IS MY 50YRS.EXPERIENCE.DON’T WASTE UR TIME TO WRITE ABOUT THEM.IF U WANT TO HELP THE TAMILS WRITE SINHALA ARTICLE IN COLOMBO PAPERS(IF U KNOW SINHALA) IF U R MUSLIM U I THINK U KNOW SINHALA. B/CAUSE U KNOW MAHINTHA’S HISTORY.. DID HE ALLOW U TO GO TO HIS BED ROOM TO WRITE ABOUT HIS PERSONAL LIFE…I WILL EXPECT UR 42ND. ARTICLE WILL BRING THIS NEWS.

  12. PC திருத்தக் காசு இல்லையோ? அப்போ ஏற்கனேவே கொடுப்பனவு எல்லாம் நிறுத்திட்டாங்களா`? கொடுப்பனவு இல்லாமலே இப்பிடி எழுதுறீர் என்றால் கொடுப்பனவும் கிடச்சா …………..எப்பிடி எழுதுவீர்னு கற்பனை பண்ணவே கஷ்டமாரிக்கு

  13. சித்திரெஜினா அவர்களுக்கு!

    PSK VANNI,Kannan,செல்லா போன்று சிங்களவனிடம் காசுக்காய் சோரம் போன கூட்டத்துக்கு எல்லாம் நீங்கள் வக்காளத்து வாங்கி உங்கள் சக்தியை வீணடித்து மறுமொழி எழுதவேண்டிய அவசியமும் இல்லை, அதே நேரம் இந்த ஊத்தை கூட்டங்களுக்கு நீங்கள் அறிவுரைப்பதால் நடக்கப்போவது ஒன்றுமில்லை. இவங்களுடைய தலைவன் எவ்வழியோ அவ்வழியேதான் இவங்கள் போவான்கள். சொந்த மனைவியையே கொண்டுபோய் படையினரிடம் கொடுத்த மானம்கெட்ட கூட்டங்கள். வெளிநாட்டுக்காரன் இவங்களை நாய்களுக்குகூட கொடுக்கிற மரியாதை கொடுப்பதில்லை. இந்த பரதேசிக்கூட்டங்களின் விமர்சனங்களை பற்றி நீங்கள் ஆட்சேபனை கொள்ளாமல், நீங்கள் உங்கள் கட்டுரைகளை தொடருங்கள். சரத்பொன்சேகாவுக்கு யாழ்பாணத்து மக்கள் அளித்த வாக்குகள் பிரபாகரனையும் பயங்கரவாதத்தையும் அழித்ததற்கு நன்றி தெரிவித்து அளிக்கப்பட்ட வாக்குகளாகும். யாழ் மக்கள் இராணுவத்தினருடன் நல்ல மாதிரி புழங்குகிறார்கள். இராணுவத்தினர் சொல்லித்தான் யாழ் மக்கள் சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தவர்களாம். வெளிநாடுகளில் உள்ள இந்த psk, செல்வா, கண்ணன் போன்றவன்கள் புலிகளால் காசுகொடுத்து வைத்திருக்கும் ஊத்தை கூட்டங்கள். இவர்களுக்கு இங்கே வந்து ஊத்தை தனமாக விமர்சனம் எழுதுவதுதான் முழுநேர வேலையாகும். காசு வாங்கிகொண்டு இப்படியான வேலை செய்பவர்கள் நினைக்கிறார்கள் மற்றவர்களும் தங்களைபோல் நடக்கிறார்கள் என்று. ஒரு விடயத்தை சற்று நீங்கள் சிந்தித்து பாருங்கள், இவங்களை நாங்கள் எப்படிதான் இழிவாக பேசி எழுதினாலும் இவங்களுக்கு ரோசம், மானம் எதுவுமே வருவதில்லை. இவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் ஏன்என்றால் இவங்களுக்கு இதைவிட வேறு பிழைப்பில்லை. இவங்கள் பிரசுரிக்கப்படுகின்ற கட்டுரையைக்கூட வாசிப்பதில்லை. வாசித்தாலும் அவங்களுக்கு அது விளங்கப்போவதில்லை. இந்த கட்டுரையில் டக்ளஸ்சை பற்றி எதாவது எழுதியிருக்கா? இல்லையோ? அப்படியிருக்கும் பொழுது ஏன் டக்ளஸ்சை பற்றி இதில் எழுதுகிறார்கள். மந்தை கூட்டங்கள்.

  14. ஹலோ சித்தி ரெஜினா,

    மகிந்தா இலங்கை மக்களுக்கு செய்த பெரிய நன்மைகளில் ஒன்று, பிணந்தின்னிக் கூட்டத்தை அழித்தது மட்டும்தான்!
    அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!
    தங்களுக்கு மகிந்தாவின் புகழ்பாடுவதே வேலையாகிப் போய்விட்டது. இதை நாம் குற்றம் சொல்லவில்லை. இது தங்களின் உரிமை.

  15. p.s.k போன்றோர்கள் போல் அதிரேடியில்வந்து எழுதும் மந்தை கூட்ட ங்களுக்கு முதல் டீசன் டிசிப்பிளின்
    தெரியுமோ ?தெரியாது எதை எழுதினாலும் வாடா போடா என்று எழுதுகிறார்கள் இவர்கள் தான் ஈழம்
    பிடிச்சு தரவெளிக்கிட்டவை நல்ல அறிவுக் கூட்டம் இதுகளின் முட்டாள் தலைவனால் தான் இன்று
    தமிழருக்கு இந்த நிலைஎன்று இதைத் தெரியாமல் சும்மா கத்தத்தான் தெரியும் நக்கத்தெரிந்தவர்களே
    உங்கள் குடும்பங்கள் உங்கள் ஈழம்கேட்கும் தமிழர்கள் இன்னும் இலங்கையில் சிங்களவரிடம்
    நக்கிக்கொண்டு ஈழம் தமிழ் ஈழம் எப்படி முடியுது உங்களால் விசுக்கோத்துகளே எங்களால்
    நம்ப முடியவில்லை எங்களால் ஒன்று மட்டுந்தான் நம்ப முடியும் இலங்கை ஒரு நாம் நாடு
    எல்லோரும் இலங்கை நாட்டு மக்கள் இதை விரும்பாதவர்கள் இலங்கையை விட்டு ஓட
    வேண்டியதுதான் தாறதை வேண்டி நக்கிறத்துக்கு சும்மா ஈழமாம்தமிழ் ஈழமாம் o,k வரட்டுமா

  16. மகிந்தா வெற்றி இன் நாயகன்……இலங்கையின் சரித்திரத்தில் மிகச் சிறந்த தலைவன் மகிந்தா …….

  17. sithi regina

    எந்தவித‌ ஆதாரமுமில்லாமல் மகிந்தா ஒரு தடவை தன சொந்த ஊரில் ஒரு தமிழனுக்கும் வாடகைக்குக் கூட வீடு கொடுக்கக் கூடாது என்று சொன்ன உத்தமர் என்று கூறுவதில் இருந்தே அவர் யார் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் .

    do you want to any evidence?recently do you know that?colombo ulla tamil sanathai ellam yair bus ethie vavuniyaviruku anupenathu?mahindava or pirpharana?

  18. கட்டுரையாளர் கூறுவது போல் “அவர் காசுக்காக எழுதுவது இல்லை” என்பது உண்மையா இல்லையா என்று எமக்குதேரியாது .அது உண்மையென்றே கருதுவோம்.அனால் கட்டுரையில் உள்ள விடயங்கள் உண்மையில்லை என்பது வெளிப்படை. ஏனென்றால் இப்பிரச்சனைகளுடனேயே பிறந்து அந்த சுழலியே வாழுந்து வழர்ந்தவர்களில் நானும் ஒருவன்.

    இக்கட்டுரையாளர் உண்மைகளை தெரிந்தும்(eg: if she/he affected by an organisation or personal hate to a community or commited to support a particular political party) அவற்றை திரிபு படுத்தி எழுதியிருந்தால் அதை பத்தி ன்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    அப்படி இல்லாமல் தான் எழுதுவது உண்மை என்று 100 % நம்பி எழுதுபவராக இருந்தால் (due to the bad guidance of the sinhala media )அதற்காக வருந்துவோம்.ஒருவர் தன் கட்டுரையில் உண்மையையே எழுதாத போது , அக்கட்டுரைக்கு கருத்துக்களும் விமர்சனங்களும் உங்கள் எல்லோராலும் கருத்துக்களும் விமர்சனகளும் எழுத உங்கள் எல்லோராலும் எப்படித்தான் முடிகிறது?
    எது எப்படியோ வன்னி ஈழநாதத்தில் யாராலும் ஒரு விமர்சனம் கூட எழுத முடிந்ததில்லை .அதனுடன் ஒப்பிடும் போது அதிரடியை பாராட்டியே ஆக வேணும்

  19. என்னுடைய தம்பி பீ எஸ் கே வன்னி(PSK Vanni) அங்கொட மன நோயாளர் பிரிவில் இருந்து தற்செயலாக வெளியேறி தொலைந்து போய் விட்டார் . நேற்றில் இருந்து ஆசையாக பிரபா என செல்லமாக பெயரிட்டு நாம் வளர்த்த கொஞ்சம் குட்டையையான் கருப்பு நிற அல்சேசன் நாயை காணவில்லை, காணாமல் போன நாயை கண்டு பிடித்து கொடுத்தால் லட்ச ரூபா சன்மானம் கிடைக்கும்

  20. வணக்கம்
    சித்திய ரெஜினா
    உமது சமூக அக்கறைக்கு எமது நன்றி ஆனால் தமிழ் சமூகத்தைப் பற்றியா அல்லது சிங்கள சமூகத்தைப் பற்றியதா ஏன் என்றால் விடுதலைப் புலிகளோ அல்லது தமிழர்களோ ஆயுதத்தை விரும்பித் தூக்கவில்லை இனவெறி பிடித்த சிங்கள அரசுகள் தான் எதைத் திணித்து தமிழனைப் போராட வைத்தது ஆனால் எதில என்ன வெக்கக் கேடு என்றால் ஒரு தமிழ் சமுகத்தில் பிறந்த உனக்கு வெளங்கப் படுத்த வேண்டிய நிலையில் தமிழ் சமுகம் இருக்கின்றதோ அல்லது நீர் இருக்கின்றிரோ தெரியவில்லை

    ஆனாலும் உலகமே இன்று தமிழனுடைய நிலைமையை ஓர் அளவுக்குப் புரிந்துள்ளது ஆனால் நீர் இன்னும் புரிந்துகொள்ளவில்லையோ அல்லது சிங்கள விசுவாசம் உன்னை விட மறுக்கின்றதோ எமக்குத் தெரியவில்லை ஆனாலும் தமிழ் ஈழப் போராட்டம் சரியாய்த் தான் நடத்தப்பட்டுள்ளது என்பது காலப் போக்கில் தெரிய வரும் உண்மைகள் வெளிவரும் போது எதுதான் நியம்

    ஆனால் யார் யார் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக உள்ளார்களோ அவர்களை எல்லாம் சிங்களம் சரியாகப் பயன் படுத்தி வருகின்றது என்பது தான் உண்மை அதற்க்கு சித்தி ரெஜினாவும் விதி விலக்கில்லை ஆகினும் எவர்கள் ஒன்றை மட்டும் தெளிவு படுத்த வேண்டும் இன்று புலிகளை எதிர்க்கின்றோம் என்று சொல்கின்றனர் ஆனால் எத்தன பிறகு யாரை எதிக்கப் போவினம் ? ஏன் என்றால் யார் யார் தமிழ் மொழியையும் தமிழையும் தமிழருடைய கலை கலாச்சாரம் பண்பாடுகளை காக முர்ப்படுகின்றனரோ அவர்கள் தான் இவர்களின் எதிரி என்றால் இவர்கள் யார்??இவர்களின் நோக்கம் என்ன எப்படி தமிழை இவர்களால் காப்பாற்ற முடியும் ??? அப்படி இருந்தால் இன்று புலிகள் ஆட்ச்சி இல்லாமல் போய் எட்டு மாதம் தமிழருக்கு என்ன செய்தனர் ? ஏன் இன்னும் முட்கம்பிகளுக்குள் எம் மக்கள் ??? எதற்கான விடையை சித்தி ரேஜினாவால் தர முடியுமா ?

    அல்லது இப்போ நடக்கின்ற கொலையை நிறுத்த முடியுமா ?? அல்லது ஏன் இன்னும் ராணுவ அரண்கள் மக்கள் குடியிருப்புகளில் ??? அங்கு ஏன் ஊடகச்சுதந்திரம் தடை மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ?? மக்களின் அன்றாட வாழ்க்கை நரகம் ?? ஏன் கணவனும் மனைவியும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்றால் கூட உங்கள் ராணுவத்தோடு கேட்க்க வேண்டும் ?? சொல்லடி என் அன்னக்கை

  21. வணக்கம்
    அட முட்டாள் கிருபா உன் எண்ணம் யாருக்கு வரும் சி——-ப் பி—த உனக்கு மட்டும் தான் வரும் தமிழ் ஈழத்தில் பிறந்த எவனுக்கும் வராது அப்படி வந்தால் அவன் தமிழனுக்குப் பிறந்திருக்க முடியாது உனக்கு சிங்கள ராணுவம் வரும் என எண்ணி காட்டுக்குள் ஒளிந்திருந்து கல்வி கற்ற அனுபவம் உண்டா எல்லை என்றால் தமிழ் ஈழத்தின் எல்லைக் கிராம மக்களைக் கேள் அவர்கள் சொல்வார்கள் தங்கள் சோகக் கதை எந்த ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் எங்க வந்து சித்தி ரேஜினாக்காவின் எடுப்ப பிடிச்சுக்கொண்டு நில்லாதை மடச்சாம்பிராணி போல்

  22. வணக்கம்
    என் அன்பு நண்பர் வன்னியான்
    என்னுடைய பெயரின் சில உமக்கு இருப்பதால் முதல் உமக்கு வணக்கம்

    நீர் சொல்வதைப் போல் பண்டாரவன்னியன் பரம்பரையில் பிறந்த எவனும் மானம் கெட்டவனாக இருக்கமுடியாது எந்தக் கோழையும் ஒரு தடவை முல்லைத்திவிக் கோட்டைக்கும் கர்ப்புரப் புல்வெளிக்கும் கற்ற்ச்சிலைமடுவாம் எங்கள் பண்டாரவன்னியன் துயிலும் இல்லம் வந்தால் அவனுக்கும் வீரம் பிறக்குமடா நண்பா நீயும் வேண்டும் என்றால் ஒரு தடவை வந்து பார், ஆனால் நீயும் நானும் எழுத்திலே மோதினாலும் ஈழம் என்னும் கருத்திலே மோத முடியாது ,

    நீர் உண்மையில் ஒரு வன்னியானாய் இருந்தால் இப்படி எழுத முடியாது எங்கேயோ உதைக்கிறது எதற்கும் உன் தாய் தந்தையரை அசிங்கப் படுத்த நான் விரும்பவில்லை ஏன் என்றால் இடம் பொருள் அறிந்து பேசு என்பது மனித பண்பாடு எனினும் நீர் இளையவனாக இருந்ந்தால் இதையும் அறிந்து கொள் வெறும் முள்ளிவாய்க்கால் இல்லை தமிழர் வரலாறு பண்ட்டாரவன்னியனைப் பற்றி அறிந்தவனுக்கு தன்னகத்தே தமிழ் ஈழம் தனித்திருந்த வரலாறும் தெரிந்திருக்க வேண்டும் அதற்க்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்திருக்க வண்டும்

    கொக்குத்தொடுவாயில் இரந்து வவுனியா வரையும் வன்னிக் கிராமங்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்திருக்க வேண்டும் ஏன் தமிழ் ஈழத்தின் எல்லைக் கிராமங்கள் எல்லாம் இப்படி நீர் முலமாக்கப் பட்டு சிங்களவன் இன்று வாழ்ந்து வருகின்றான் என்பதுவும் தெரிந்திருக்க வேண்டும் இவை உமக்கு சில தகவல்கள் நன்றி

  23. வணக்கம்
    vives thanan
    அடி முட்டாள் மாதிரிப் கட்டுரை எழுதவேண்டாம் நீங்கள் பண்டைக் காலத்தில் நின்று கொண்டு சாதிகளைப் பற்றியும் பிரதேசவாதம் செய்வதும் மக்களிடத்தில் தூண்டி விடுவதும் இதுதான் உங்கள் தமிழ் சமுதாயத்தின் விசுவாசமோ ?? எழுத்து என்பது பலருடைய அறியாமையை நீக்கி அவர்களை நல்வழிப் படுத்துவதாக இருக்க வேண்டும் உன் போறவர்களின் கட்டுரையை வாசிப்போர் எப்படி ஆவார்கள் என்பதையும் நீர் கொன்ச்சம் எண்ணிப்பார் தமிழ் ஈழம் என்பது வெறும் ஒரு கிராமத்தைக் குறிக்கும் என்று உன் போன்ற முட்டாள்கள் இங்கு வந்து புலம்பும் போது, எம்மைப் போன்ற தமிழர்கள் உன்னைப் பார்த்து சிரிக்கின்றதா அல்லது அழுகின்றதா என்ற வினா எழுகின்றது என்பது தான் உண்மை .,

    அட மகாவம்சத்தில் பிறந்த உனக்கு நாம் எதைச்சொல்லி என்ன பயன் உங்களைப் போன்ற செம்மறிகள் அன்றில் இருந்து இன்றுவரை அப்படியே இருக்கின்றீர்கள், வேதனை உணர்வுள்ளவனுக்குத்தான் உணர்ச்சி வரும் ஆனால் உங்களைப் போன்றவர்களுக்குப் பிறக்கும் போதே அதை ஏனோ அறுத்துவிட்டாங்கள்,காரணம் உன் முன்னாள் உன் அம்மாவையோ அல்லது உன் அக்காவையோ சிங்களவன் மானபங்கப் படுத்தினால் நீ சரித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் ஏன் என்றால் நீங்கள் ஒரு யடங்கள்,அதாவது உணர்ச்சி அற்றவர்கள்,

    அட மடச்சாம்பிராநிகளே ஒரு கணம் உங்கள் கண்களை மூடி நாம் தமிழ் இனம் என்று உச்சரித்துப் பாருங்கள் மறுகணம் நீங்கள் மனிதர்கள் என்றால் அப்போது நீங்கள் மனித நேயம் உள்ள ஒரு தமிழனாகி விடுவீர்கள் தாய்ப்பாலை ஊட்டும் போது உன் அன்னை என்ன சொல்லி ஊட்டினாலோ எம் இனத்தின் விசக்கிருமிகளாக மாரியுல்லிர்கள்
    நன்றி

  24. ராஜ பக்ஷ குடும்பத்தின் தாராள மனப்பான்மை எனக்கு தெரியும். அந்த நாட்களில் கதிர்காமத்தில் “வள்ளி” மலையில் தண்ணீர் பந்தல் நடத்திய ஓர் தமிழ் இந்து துறவி பண உதவிகள் கோரி இலங்கை முழுவதும் வருவது
    வருடாந்த வழக்கம். அவருடைகையில் ஓர் கணக்குப் புத்தகம் இருக்கும். என்னுடைய பேரன் வருடாவருடம் அவருக்கு பணம் கொடுத்து உதவுவார். அவர் ஒரு நாள் எங்கள் வன்னி வீட்டில் தங்கி எனது பாட்டனாருடன் பலகதைகள் பேசி அடுத்த நாள்த்தான் புறப்படுவது வழக்கம்.

    பலமுறைகள் அந்த பெரியவர் தனது கணக்கு புத்தகத்தை எனது தாத்தாவிடம் காட்டி “சிங்களவர்கள்” தாராளமாக கொடுக்கிறார்கள் ஆனால் தமிழர்களிடம் அவ்வளவு லேசாக பணம் வாங்கவும் முடியாது, அவர்கள் கொடுக்கவும் மாட்டார்கள் என்று குறைப்பட்டார். தாத்தா என்னிடம் அந்த புத்தகத்தை தந்து ‘மோனே” இதை ஒருக்கா பார். எனக்கு கண் புகைச்சலா இருக்கு என்றார். நான் பார்த்த பொழுது சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்களில் நான்கு இலக்க பணம் கொடுக்கபட்டிருந்தது தெரிந்தது. அதில் ஒரு ராஜ பக்ஷ அல்ல பல ராஜ பக்ஷவினர்கள் இருந்தனர். ரொனி தீ மெல்லின் குடும்பம் எப்போதும் முதல் பெயராக இருந்தது. அல்வின் ராஜபக்சவுடைய பெயரும் அதில் ஒன்று. சிங்களம் படிக்க தெரிந்த அவர் அப்போது சொன்ன தகவல்கள் பற்றி இப்போது நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. “இந்த ராஜபக்ஷ ஆட்கள் அள்ளி குடுப்பினம். அவங்கள் அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, திசமஹாரகம, பெலியத்த பகுதிகளில் பெரிய பணக்காரங்கள். கதிர்காமம் என்று சொன்னவுடனேயே சிரித்த முகத்தோடு தேநீர் வரவழைத்து காசும் தருவாங்கள். கன தமிழன்களுக்கு என்னை கண்டவுடனேயே முகம் மாறி விடும்.” என்பது அவரின் கணிப்பு.

    பல முறை கதிர்காமம் சென்ற எனக்கு வள்ளி மலையில் அந்த தண்ணீர் பந்தலையும், அதுக்கு நிதி திரட்டி சேவை செய்த அந்த புண்ணியாத்மாவையும் என்றும் மறக்க முடியாது. அப்படியான “தமிழர்கள்” தமிழர்களின் நல்ல பெயரை சிங்களவரிடையே காப்பாற்றியவர்கள். தமிழ் என்று புறப்பட்டவர்கள் “தமிழனுக்கே” நாமம் போட்டவர்கள். தமிழ் என்று தமிழர்களைக் கொலை செய்து, கொள்ளையடித்தவர்களை விட ராஜபக்ஷ குடும்பம் கோடி மடங்கு உயர்வானது.

    அடுத்தது வீடு வாடகைக்கு கொடுப்பது. வவுனியாவில் ஒரு “தீவானுக்கு” வீட்டை வாடகைக்கு கொடுத்த என் உறவினர் அவனை அங்கிருந்து துரத்த பட்ட பாடு எனக்கு நன்கு தெரியும். அதற்கு அவன் கொடுத்த வாடகை பணத்தை விட அதிக பணம் செலவு பண்ண வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்து கோர்டில் கள்ள உறுதி பிரச்சனைகள்தான் அதிகம் என்பது பலருக்கும் தெரியும்.

    பல பழைய நினைவுகளை மீட்க சந்தர்ப்பம் தந்த சித்திக்கு நன்றிகள் பல உரித்தாகட்டும்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>