சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. -சித்திரெஜினா (தொடர்கட்டுரை பாகம் -40)

cartoonltte_piraba-familynnnஅன்று அந்த அரசனின் அரண்மனை அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. மந்திரிகள் முதற் கொண்டு அங்குள்ள எடுபிடிகள் வரை மன்னனின் ஒரே வாரிசான அந்த மூன்று வயதுக் குழந்தையின் அழுகையை நிறுத்தி எப்படி சமாதானப்படுத்துவது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள்… அண்டை நாட்டு மன்னனின் மகளை திருமணம் முடித்து பல வருடங்கள் கழித்து தவமிருந்து பெற்ற தன் ஒரே வாரிசை எக் காரணம் கொண்டும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அங்கேயுள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று அந்த மன்னன் திட்டமாக கட்டளை இட்டிருந்தான்… ஆனால் இன்று அதன் அழுகையை நிறுத்த அவன் அரண்மனையில் ஒருவராலும் முடியவில்லை என்பதை அறிந்த மன்னன் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று விட்டான்… என்ன நடக்குமோ.. ஏது நடக்குமோ.. என்று அஞ்சி நடுநடுங்கிப் போனார்கள் அனைவரும்….

அந்த மூன்று வயதுக் குழந்தையின் அழுகைக்குக் காரணம் வழமை போலவே அந்தக் குழந்தைக்கு அதன் செவிலித் தாயார் வண்ண நிலாக் காட்டி பால் சோறூட்டிக் கொண்டிருக்கும்போது வானத்தில் தெரியும் அந்த வட்ட நிலவைப் பிடித்து தன் கையில் தா என்று திடீரென்று அடம்பிடித்து அழுதது அது… முடிகிற காரியமா இது? எனவேதான் அன்று அனைவருமே திக்குமுக்காடிப் போனார்கள்…ஆனால் ஒரு புத்திசாலி மந்திரியின் சிந்தனையில் திடீரென்று ஒரு பொறி தட்டியது.. பரபரவென்று அரண்மனை நிலா முற்றத்திற்கு விரைந்தார் அவர்… ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை உடனே கொண்டு வரும்படி அங்கிருந்த வேலையாட்களுக்கு கட்டளையிட்டார்… கண்ணாடியும் வந்தது.. குழந்தையின் கையில் கொடுத்தார் அதை.. அதுவும் குனிந்து கண்ணாடியில் பார்த்தது .. என்ன ஆச்சரியம்!.. வானத்து வண்ண நிலா தன் கையிலிருந்து கண் சிமிட்டிச் கொண்டிருந்ததைப் பார்த்து கெக்கலித்து சிரித்தது அந்தக் குழந்தை. மகிழ்ந்துபோன மன்னனோ அந்த புத்திசாலி மந்திரிக்கு பல பரிசில்கள் கொடுத்து பதவி உயர்வும் கொடுத்தான்…

அன்றும் இப்படித்தான் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த புலம் பெயர்ந்த மக்களுக்கு வெகு தூரத்திற்கு அப்பால் உள்ள இலங்கைத் தீவின் வன்னி நிலப் பரப்பில் பிரபாகரன் என்ற புலிகளின் அரசனின் நிழல் ஆட்சியில் நடந்து கொண்டிருந்த தமிழ் ஈழம் என்ற நிலவை காட்டி களிப்பூட்டி தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்டிருந்தது புத்திசாலிப் புலிப் பினாமிகளின் கூட்டமொன்று…

இலங்கையில் வடக்கென்றும் தெற்கென்றும் இல்லாமல் தினம் திக்கெட்டிலுமிருந்து வெளியாகும் திக்கென்ற செய்திகள்.. புலிகளின் மனிதக் குண்டுகளின் மாயாஜாலத்தால் வெடித்துச் சிதறிக் கிடக்கும் பிணக் குவியல்கள்.. பொது இடங்களென்றும் பள்ளிக்கூட பஸ்களென்றும் புகை வண்டிகளென்றும் பொது இடங்களென்றும் பகிரங்கத் தெருக்களென்றும் எங்கும் எதிலும் பராபட்சம் பாராது தங்கள் கைவரிசையக் காட்டி அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தனர் அந்த மனித நேயமற்ற விடுகாலிப் புலிகளின்… இதில் பிஸ்டல் குழுவேறு தெருவில் பேப்பர் விற்கும் சிறுவன் முதல் அப்பாவிக் குடும்பஸ்தர்வரை தங்கள் பங்கிற்கு புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்…

இவைகள் எல்லாம் ஏன்? எதற்காக?

புலிகளின் பிரச்சாரங்களால் இன வெறியேற்றப்பட்டு இரத்த வெறியூட்டப்பட்ட இந்தப் புலம் பெயர்ந்த புலிப் பித்தம் பிடித்தவர்களை களிப்பூட்டுவதற்காக..

காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் தங்கள் வீட்டு சோபாவில் சாய்ந்தபடி புலிகளின் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் அந்தக் கிலிக் காட்சிகளை பார்த்துக் கொண்டோ அல்லது புலிகளின் வானொலிகளில் கொலைச் செய்திகளை கேட்டுக் கொண்டேதான் அவர்களால் தங்கள் மாலை உணவை ரசித்துப் புசிக்க முடிந்தது.. நாள் முழுவதும் வேலை செய்த களைப்பையும் அவர்களால் தீர்க்க முடிந்தது…

இரத்தக் களரிகளை ரசிப்பதென்பது ஒரு கொடுமையான மனோ வியாதி என்பதை அறியாமலேயே அவர்கள் இந்த கொடூரமான காட்சிகளுக்கும் செய்திகளுக்கும் அடிமையாகிப் போனார்கள். . ஆம் இவைகள்தான் அவர்கள் மாலை உணவை மகிழ்விக்கும் வண்ண நிலா..இவைகள்தான் அவர்கள் அறிய விரும்பும் தமிழ் ஈழ செய்திகள்.. இந்தக் காட்சிகளுக்கும் செய்திகளுக்காகவும் தான் மாதா மாதம் தங்கள் சம்பளத்தில் ஒரு விழுக்காடை கட்டணமாக செலுத்தி வந்தனர் அவர்கள். தேச விடுதலைக்கான நிதி என்ற பெயரில் அவர்கள் கொடுக்கும் இந்த நிதிக்கு வஞ்சகம் செய்யாமல் புலிகளும் தங்கள் பங்கிற்கு தினம் தினம் கொலைக் காட்சிகளை இலங்கைத் தீவென்னும் மேடையில் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்…

உலகில் உயிரினங்கள் தோன்றிய காலப் பகுதியில் அவைகள் மாமிச பட்சணிகள் தாவர பட்சணிகள் என்று இரண்டாக வகுக்கப்பட்டன. இதில் தாவர பட்சணிகளாக மாடு மான் மரை யானை என்பவைகள் அடங்கும் மேலும் இவைகள் இயற்கையிலேயே சாந்த குணமுடையவைகள். அவைகளுக்கு தங்கள் உணவை தேடியலைந்து வேட்டையாடி உண்ண வேண்டிய அவசியமும் இருந்ததில்லை. ஆனால் மாமிச பட்சணிகளில் வரிசையில் அடங்கும் சிங்கம் புலி ஒனாய் மனிதன் போன்றவைகள் குரூர குணமுள்ளவைகளாகவும் தங்கள் உணவை தேடியலைந்து அவைகளை வேட்டையாடி உண்ண வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அவைகள் இருந்தன.. ஆம்…விலங்கியல் கூற்றுப்படி மனிதனும் ஒரு மிருகம்தான் மேலும் அவன் இந்த மாமிச பட்சணிகளின் வரிசையில்தான் அடங்குகிறான். அதனால்தான் ஆதி மனிதன் தன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி வந்தான் என்று உயிரின வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

இயற்கையின் நியதிப்படி உயிரினங்களுக்கு தங்களுடைய உணவு இதுதான் என்பதை நிர்ணயிக்க அவைகள் தோன்றிய காலங்களில் அவற்றின் இன்ஸ்ரிங்ட் என்று கூறப்படும் உள்ளுணர்வுதான் அவைகளுக்கு உதவியது. இதன் அடிப்படையிலேயே அவைகள் தங்கள் உணவையும் தெரிவு செய்து கொண்டன. மனிதன் உட்பட வேட்டையாடிப் புசிக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பசி ஏற்படும்போது கூடவே இரத்த வெறியும் ஏற்பட்டு விடுகிறது. இந்த இரத்த வெறியின் உந்துதால்தான் தன்னுடைய வேகத்திற்கு நிகராக ஓடும் ஒரு மிருகத்தைக்கூட அவைகளால் வீழ்த்த முடிகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.. மேலும் அவைகள் தங்கள் உணவாக தெரிந்தெடுத்த மிருகங்கள் யாவுமே சாதுவான தாவர பட்சணிகளே. ஆதி காலத்தில் மிருகங்களுடன் மிருகங்களாக வாழ்ந்த மனிதன் மற்றைய எந்த ஜீவராசிகளுக்கும் இல்லாத ஆறறிவாகிய தன்னுடைய பகுத்தறிவினூடாக படிப்படியாக முன்னேறி மிருகங்களில் இருந்து பிரிந்து இன்றைய நாகரீகமடைந்த மனித சமுதாயமாக மாற்றமடைந்தான்…எனினும் மிருகங்களுடன் மிருகமாக அவன் வாழ்ந்தபோது அவனுள் இருந்த சில உணர்வுகள் அவனது மரபணுக்கள் மூலமாக இன்றைய சமுதாயம்வரை தொடரத்தான் செய்தன…ஆனால் அவற்றை தன் மன உறுதியாலும் சமூகக் கட்டுப்பாடுகள் மூலமும் அவன் அடக்கியாண்டு வந்திருக்கிறான் என்பது உண்மையாகும்..

எப்படித்தான் அவன் தனக்குள் பதிந்திருக்கும் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் அவனுக்குள் ஆதி முதற் கொண்டு பதிந்துபோன் இரத்த வெறி உணர்வு மட்டும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் தலை காட்டத்தான் செய்தது. உதாரணமாக வீதி விபத்தொன்றில் அலங்கோலமாக சிதறுண்டு இரத்த வெள்ளத்தில் ஒரு மனிதன் இறந்து கிடந்தால் அந்தக் கோரக் காட்சியைப் பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஒரு கூட்டம் அந்த இடத்தில் கூடி விடும். ஏன் இன்றைய திரைப்படங்களில் கூட கோரக் கொலைகளுடன் கூடிய வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப் படங்களுக்குத் தான் மவுசு அதிகம். அவைகள் தான் போட்டி போட்டுக் கொண்டு பல நாட்கள் திரையரங்குகளில் ஓடுகின்றன.

இதற்குரிய காரணம் மனிதனுக்குள் புதைந்திருக்கும் இரத்த வெறி இரத்த தாகம் போன்றவைகள் இந்தக் கோரக் காட்சிகளால் கிளர்சியடைந்து அவனை களிப்பூட்ட எத்தனிக்கிறது என்று மனோ தத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். மனிதனின் வன்முறை உணர்வுகளுக்கு தங்கள் திரைப்படங்கள் மூலம் தீனி போட்டு பல கோடிகளை அள்ளிக் கட்டுகிறார்கள் அவைகளின் தயாரிப்பாளர்கள். தற்போது பல மனித நேய அமைப்புகள் இப்படிப்பட்ட திரைப்படங்கள் மனித உணர்வுகளை பாதிப்பதால் அவைகளைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன…

இந்த சூழலில் தன் உணவிற்காகக்கூட பிறிதொரு உயிரினத்தை கொல்வது பாவம் என்று எண்ணத் தலைப்பட்ட மனத குலத்தின் ஒரு பிரிவினரும் இருக்கிறார்கள் அவர்கள் அவர்கள் மாமிச உணவைத் தவிர்த்து மரக்கறிவகைகளை தங்கள் பிரதான உணவாக தேர்ந்தெடுத்தனர். ஏன் திருவள்ளுவர்கூட “கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும்” என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்..

மனிதனுக்குள் புதைந்திருக்கும் இந்த வன்முறை உணர்வுகளைப் பற்றி எவர் சரியாகப் புரிந்து கொண்டார்களோ இல்லையோ பிரபாகரன் கோஸ்டியினர் அதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அதையே பயன்படுத்தி வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்து விட்டுப் போனார்கள். அவர்களின் பிழைப்புக்கு பண முதலீடு செய்த புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் பல கொலைச் சாகசங்களைச் செய்து காட்டி அவர்களுக்குள் தலை விரித்தாடிய இரத்த தாகத்தை தினமும் தணித்து வந்தார்கள் அவர்கள்.

மனிதன் மிருகமாக இருந்தபோது எப்படி தாவர பட்சணிகளாக இருந்த சாதுவான மிருகங்களை தன் உணவாக்கிக் கொண்டானோ அதே போல தான் நாகரீக வழர்சியடைந்த காலத்திலும் சாதுவான மனிதர்களையே தனது சுயநல எண்ணங்களை பூர்த்தி செய்து கொள்ளும் கருவிகளாக அவன் உபயோகித்து வந்தான்..

அப்படியே புலிகளும் தங்கள் சுயநல எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு பலி கொடுக்க தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான் இலங்கையில் வாழும் அந்த பாவப்பட்ட நமது அப்பாவித் தமிழர் சமூகத்தின் பிள்ளைகள். முதலில் இது உண்மையான உரிமைப் போராட்டம் என்று நம்பி அதில் இணைந்து மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் போக மிகுதியாய் எஞ்சி இருந்தவர்களை அடித்து வதைத்து துன்புறுத்தி இந்த இயக்கத்தில் பலோத்காரமாக இணைத்து பலி கொடுத்துப் பலனடைந்தார்கள் அவர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் வன்னியில் இருந்து வந்தவர்கள் அளித்த வாக்கு மூலங்களில் பதிந்திருக்கின்றன…

கௌரவமாக மனித நேயத்துடன் வாழ வேண்டிய தமிழர் சமுதாயத்தை..மனித நாகரீகத்தில் இருந்து புறந்தள்ளி.. சுயசிந்தனை அற்றவர்களாக்கி.. இனவெறியர்களாகவும்.. சமாதானத்தை எதிர்ப்பவர்களாகவும்.. போர் பிரியர்களாகவும்.. பிணக் குவியலகளை ரசிப்பவர்களாகவும்.. நன்மையை வெறுத்து தீமையை தெரிவு செய்பவர்களாகவும்..மாற்றியமைத்து அவர்களை ஒரு கற்காலத்திற்கு தள்ளிச் சென்று ஒரு மிருகத்தைவிடக் கேவலமாக வாழ வைத்துவிட்டுப் போன பெருமை பிரபாகரனையும் அவன் கூட்டத்தாரையுமே சாரும்..

இலங்கையில் மகிந்தாவின் ஆட்சியில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு இங்கே கொலைகளோ குண்டு வெடிப்புகளோ இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்வது அங்கேயுள்ள புலம் பெயர்ந்த புலிப் பினாமிகளுக்கும் புலி ஆதரவாளர்களுக்கு பெரும் எரிசலூட்டும் விடயமாக அமைந்து விட்டது. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் அது கிடைக்காத பட்சத்தில் எப்படித் பரிதவித்துத் துடித்து எரிச்சலைடைவானோ அதேபோல இவர்களின் நிலையும் இன்று ஆகிவிட்டது…

எப்படி கைக்கெட்டாத வானத்து நிலவை தன் கையில் பிடித்து விளையாட அந்த அரசனின் குழந்தை ஆசைப் பட்டபோது அந்தப் புத்திசாலி மந்திரி ஒரு கண்ணாடியை அதன் கையில் கொடுத்து நிலவு அதன் கையில்தான் இருக்கிறது என்று நம்பச் செய்தாரோ அதே பாணியில் புலிப் பினாமிகளும் நடை முறைக்கு ஒவ்வாத எவராலுமே எட்ட முடியாத கைக்கெட்டாத தூரத்திலுள்ள தமிழீழமென்னும் மோக நிலவை ஒரு குழந்தையைபோல் சிந்திக்கும் இந்த புலம்பெயர் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழமென்னும் கண்ணாடியிலும் வட்டுக் கோட்டை தீர்மானமென்னும் கண்ணாடியிலும் காட்டி அவர்களுக்கு களிப்பூட்டி தங்கள் தமிழீழப் பிழைப்பைத் தொடர நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காட்டும் அந்த கண்ணாடித் தமிழ் ஈழம் என்பது வெறும் மாயத் தோற்றம்தான் என்பது இந்தப் புலன் பெயர்ந்த பாப்பாக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் விடுதலைப் புலிகள் என்ற மனிதப் பேரளிவிற்கான இயந்திரத்தின் தலைப்பகுதி மட்டுமே இன்று பிளக்கப்பட்டு அதன் உள்ளிந்திரியங்கள் அகற்றப் பட்டுள்ளன ஆனால் அதன் உதிரிப் பாகங்கள் இன்னும் செயலிழந்து போகவில்லை அவைகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இழந்துபோன தலைப் பகுதிக்குப் பதிலாக இன்னொரு தலைப் பகுதியைப் பொருத்தி அதை மீண்டும் செயல்படுத்தி பலனடைவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு புலிப் பினாமிகள் மீண்டும் களமிறங்கியிருக்கின்றனர். தலைதான் போய் விட்டது இனி ஒன்றுமில்லை என்று சும்மா அலட்சியப் படுத்தக் கூடிய காரியமா இது? கடந்த காலங்களில் எவ்வித முதலீடுகளுமில்லாமல் ஜஸ்ட் வீட்டுக் கதவுகளைத் தட்டுவதன் மூலம் கரன்சி நோட்டுகளை கொட்ட வைத்த அலாவுதீனின் அற்புத விளக்கிற்கு நிகரான வியாபாரமல்லவா அது? அதை அம்போ என்று கைவிட யாருக்குத்தான் மனம் வரும்?

இந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்துவதானால் அதற்கு தேவையானவைகள் இரண்டு. ஒன்று தணிந்து கொண்டிருக்கும் இனவாதச் சிந்தனைகளை புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மீண்டும் தூண்டி அவர்களை இன வெறியர்களாக்கி சிங்கள இனத்தை வெறுக்கச் செய்வது. மற்றது எந்தவித பேச்சு வார்த்தைகளோ அல்லது எந்தவிதத் தீர்வுகளோ தமிழர்களுக்கு விமோசனம் அளிக்கப் போவதில்லை என்று அவர்களை நம்பச் செய்து அவர்களை தங்கள் பக்கம் தங்க வைத்துக் கொள்வது என்பதுதான் அவைகள்.

தமிழீழமொன்று என்றுமே அமையப் போவதில்லை என்பது இந்த புலிப் பினாமிகளுக்கு நன்கு தெரிந்த விடயம். அப்படியிருந்தும் இந்த சுய சிந்தனையற்ற புலன் பெயர்ந்த தமிழர்கள் வெளி நாடுகளில் உள்ளவரை தங்களால் இயன்றவரை அவர்களிடமிருந்து கறக்கக் கூடியதை கறந்து கொண்டு அவர்கள் கண்கள் திறக்கும் வரை தங்கள் காலத்தை சிவனே என்று ஓட்டி விடுவது என்று அவர்கள் தீர்மானித்திருப்பது பாவம் இந்தக் கண்மூடித் தூங்கும் கண்ணாடிப் பாப்பாக்களுக்கு தெரியவா போகிறது? புரியவா போகிறது?? (தொடரும்…)
-சித்திரெஜினா

25 Responses to “ சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. -சித்திரெஜினா (தொடர்கட்டுரை பாகம் -40) ”

  1. sithi neengkal romba lusu

  2. பிரபாகரன் போன வ்ழி ஓகே ஆனால் அவர் நம்பி இருந்த தளபதி தான் சரிஜில்லை நீங்கள் ஏன் இந்த கோணத்தில ஜோசிச்சு பாக்கிறிங்கள் இல்லை அப்படி எல்லோரும் விசுவாசமாய் இருந்திருந்தால் தமிழ் ஈழம் நிச்சயம் கிடைத்திருக்கும் நம்ம வரலாறு எத்தன எட்டப்பனை பார்த்திருக்கு அதில நீங்களும் ஒருத்தார் நமக்கு விடுதலை கிடைக்காமல் போனதிற்கு புலிகள் காரனம் இல்ல நீங்க தான் காரனம்

  3. அன்பின் சித்தி ரெஜினா, உங்களுக்கு எனது பாராட்டுகள்,
    நிட்சயமாக உங்களின் சேவை மகேசன் சேவை போன்றது.

    உங்களைப் போன்ற அறிஞர்களால் தான்,தடம் பிரண்டு கிடக்கும் தமிழினத்தை ஓரளவு நிமிர்த்த முடியும்.

    உண்மையில், எத்தனையோ கடமைகள் எம்மை காத்து நிற்கிறது.

    அதிரடியில் மட்டுமல்ல, எங்கும் உங்கள் எழுத்துக்கள் எங்கும் மிளிர வேண்டும் என வேண்டி நிற்கும் ஈழத் தமிழ் மக்கள்.

  4. வணக்கம் என் உறவுகளே
    சித்திய ரெயினா
    உன்னுடைய வக்குரப்புத்தி என்ன என்பது இப்போ எமக்குப் புரிந்து விட்டது நீ ஒரு அ——ப் பி—- மாதிரித் தெரியவில்லை உலகம் ஒரு உருண்டை அதற்குள் நாம் எல்லாம் ஓடி விளையாடும் பந்துக்கள் அப்படித்தான் உலகம் மாறிவருகின்றது அது எமக்குத் தெரியும் ஆனாலும் உலகில் உள்ள ஒவ்வொரு இனமும் தம் இன மொழி கலாச்சாரத்தைப் பின்னணியாக வைத்துத்தான் அசைவாக இருந்தாலும் இசைவாக இருந்தாலும் அசைவில்லாமல் இருப்பினும் எல்லாமே அவர்களின் கலைகலாச்சாரத்தோடு உருவாக்கப் பட்டுள்ளது இது அவர்களின் இன மொழி பாதுகாப்போடு சம்பந்தப் பட்ட விடையம்
    நீர் உண்மையில் ஒரு தமிழராக இருக்க முடியாது அப்படியிருந்தால் இப்படியான மட்டமான கட்டுரையை வரைய முன்வந்திருக்க மாட்டாய் எமக்கு இப்போது ஒரு சந்தேகம் நீர் சிலவேளையில் எமது மக்களையும் மண்ணையும் அதை விடுவிக்க முயன்ற விடுதலைப்புலிகளையும் காட்டிக்கொடுத்த துரோகக் கும்பலில் இருந்து வந்த ——-? இல்லை உமக்கு ஏதேனும் துரோகிகளால் தவறான தகவல் கிடைத்திருந்தால் அதை வைத்து நீ பிழைப்பு ஓட்ட நினைப்பது தவறு
    இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் விடுதலைப்புலிகளின் முப்பத்தியாறு வருட விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் போராட்டம் ஒரு கீழ்த் தரமாக சிங்களத்தால் நடத்தி முடித்த போர்? இல்லை போர் என்றால் அதற்க்கு ஒரு விதி முறை இருக்கின்றது ஆனால் சிங்களம் நடத்தியது போர் அல்ல அது கிட்லரின் நாசிப்படைகள் செய்த வேலையை விட மிகவும் மோசமானது அதை விட எந்த சிங்கள நாசிப்படை பல நரி வேலைகளையும் செய்திருக்கின்றது?
    இதுதான் அந்த நரி வேலை கருணா டக்ளசிடம் சிக்கிய தமிழ் இளையர்களை விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவ விட்டு கடைசி நேரத்தில் மக்கள் மீது தாக்குதல் இதை அறியாத எமது மக்கள் எமது இயக்கமே எம்மைத் தாக்கினார்கள் என்று புலிகள் மீது கோவத்தைக் காட்ட முற்பட்டபோதும் இந்த கருணா டக்ளசின் கும்பல் தான் மீண்டும் தாக்கியுள்ளது, இதுதான் கடைசியில் நின்று வெளியில் வந்த போது தம்மைத் தாக்கியவர்கள் எல்லோரும் சிங்கள இராணுவத்தோடு நின்ற பொழுது அதிர்ச்சி அடைந்ததாக சொல்லியுள்ளார்கள் இது எப்படி சாத்தியமாகும்??? ஆனால் கடைசித் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் படையணிகள் ஒரு பகுதிக்குள் குவிந்த சமயம் யார் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று தெரியாமல் குழம்பி இருந்த தாகவும் அதற்குள் எந்த திரோக கும்பல் புகுந்து விளையாடியதாகவும் தகவல் ஆனால் இதை அறியாத உண்மையான விடுதலைபுலிகளின் அணிகள் குழம்பியிருந்தனர் என்பது அங்கு இருந்து வெளிடில் வந்த எம்மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் இதை நான் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்
    ஆனால் இங்கே சித்தி ரெயினா விடுதலைப்புலிகள் தொடர்பான ஒரு நீண்ட பிழையான கட்டுரையை தொடக்கிவிட்டு அதில் எந்த திருகக் கூட்டம் குளிர் காய முற்படுகின்றது என்னினும் எம் மக்கள் விழிப்பாக இருக்கின்றார்கள் என்பதை என்னால் உணரமுடிகின்றது ஒன்றை மட்டும் உணர வேண்டும் சித்தி நீங்கள் ஒரு தடவை உலக விடுதலைப் போராட்டங்களைப் படிக்க வேண்டும் பின்பு அதில் விடுதலைப் புலிகள் எவ்வளவு சிறந்த இடத்தில் இருக்கின்றார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்
    ஏன் என்றால் தமிழரை கொலை செய்த சிங்கள அரசையும் அந்த இராணுவத்தையும் சிங்கள மக்கள் எவ்வளவோ பாதுகாக்க முயற்ச்சி செய்கின்றனர் ஆனால் எமது விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளை இப்படிக் கீழ்த் தரமாக கொச்சைப் படுத்தினால் நாம் எப்படி உங்களைக் கூப்பிடுவது ?ஆனால் சித்தி உங்களைப் பார்த்தால் எம்மினம் சத்திதான் எடுக்கும் நிறுத்தும் உமது புலி எதிர்ப்பு புராணத்தை கதை முடித்து நீண்ட நாள் ஆகுது இப்பொழுது எமது ஈழப்போராட்டம் வேறுவழியில் நெறிப்படுத்தியுள்ளோம் அதிலை ஏதேனும் ??
    எனினும் சித்தி உங்களைப் பார்த்தால் எனக்கு எங்கள் ஊர் அல்லியக்காவின் நினைப்புத் தான் வருகுது ஏன் என்றால் அவா வேலைக்கும் போறதில்லை ஆனால் பள்ளிக்குடம் போனதில்லை ஆனால் பணம் மட்டும் கொட்டோ கொட்டோ என்று கொட்டும் அது எப்படி????

  5. நீங்கள் எதற்காக இதையிட்டு எப்போதும் நெஞ்சிலடித்து ஒப்பாரி வைக்கிறீா்கள் றெயீனா?????

    செக்கிளுக்கும் மாடுபோல் நீங்கள் அதற்குள்ளேயே நிற்கிறீா்கள் எம் போன்றவா்கள் இவைகளை மறந்து நாட்களாகிவிட்டது நியமாக உமது ஆக்கங்கள் சலிப்படைய வைக்கின்றன.

  6. அன்பின் சித்தி ரெஜினா, உங்களுக்கு எனது பாராட்டுகள்,
    நிட்சயமாக உங்களின் சேவை மகேசன் சேவை போன்றது.

    உங்களைப் போன்ற அறிஞர்களால் தான், தடம் பிரண்டு கிடக்கும் தமிழினத்தை ஓரளவு நிமிர்த்த முடியும்.

    உண்மையில், எத்தனையோ கடமைகள் எம்மை காத்து நிற்கிறது.

    அதிரடியில் மட்டுமல்ல, எங்கும் உங்கள் எழுத்துக்கள் எங்கும் மிளிர வேண்டும் என வேண்டி நிற்கும் ஈழத் தமிழ் மக்கள்.

  7. வணக்கம் றெஜினா அக்கா..
    உங்களுக்கு கருணா அண்ணர் வேற வேலையொண்டும் தராமல் ஏன் இப்பிடியான குரங்கு வேலை ஒண்டைத் தந்திருக்கிறார்?
    கை நீட்டிக் காசு வேண்டுறனிங்கள்…கொஞ்சம் விசுவாசமா நடக்கத்தான் வேணும்..இல்லையெண்டில்லை! ஆனால் இது கொஞ்சம் ஓவராத் தெரிது. வில்லங்கமாய் கொட்டாவி விட்டபடி எழுதிற கட்டுரைகள் எண்டு வடிவாத் தெரியுது. முட்டையெறி வாங்கிறதுக்கிடையில…ஓடித்தப்புங்கோங்காக்கா..! ஏனென்டால் நான் தான் உங்கட முதல் ரசிகன்!
    உங்களை மற்றவங்கள் பேமானி, புளிச்சகாய், சிரட்டைத்தண்ணி, புண்ணாக்கு என்றெல்லாம் திட்டிறதை சத்தியமாய் என்னால் தாங்க முடியேல்லை அக்கோ….ய்!

  8. ‘insha ALAH’ beef cury ready sithy regina.

  9. பிரபாகரன் போன வ்ழி ஓகே ஆனால் அவர் நம்பி இருந்த தளபதி தான் சரிஜில்லை நீங்கள் ஏன் இந்த கோணத்தில ஜோசிச்சு பாக்கிறிங்கள் இல்லை அப்படி எல்லோரும் விசுவாசமாய் இருந்திருந்தால் தமிழ் ஈழம் நிச்சயம் கிடைத்திருக்கும் நம்ம வரலாறு எத்தன எட்டப்பனை பார்த்திருக்கு அதில நீங்களும் ஒருத்தார் நமக்கு விடுதலை கிடைக்காமல் போனதிற்கு புலிகள் காரனம் இல்ல நீங்க தான் காரன

  10. வணக்கம் என் உறவுகளே
    நன்றி உங்கள் கருத்து
    தமிழினிக்கு
    இலங்கை என்னும் திரு நாட்டில் சிங்களவன் இருக்கும் வரை தமிழன் நின்மதியாய் வாழமுடியாது , ஏன் என்றால் நேற்று நடந்த வவுனியா படுகொலைகள் சிங்களக் கிராமத்துக்கு அருகாமையில் எரும்ம்புக் கம்ம்பிகளால் தாக்குதல் எது எப்படி நடக்கின்றது ? அடுத்தது ஓமந்தை ஏலம் பெண் கொலை முற்று முழுதான ராணுவ வலையம் எப்படி ?ஏன் எந்த நிலை தமிழனுக்கு இதல்லாம் வேண்ட்டாம் சிங்களவனின் சகவாசமே வேண்டாம் என்றுதான் நாம் விடுதலை கேட்டோம் அதைக் கூட அவனுக்கு தர விருப்பம் இல்லைப் போலும் சில வெங்காயங்கள் கூறுவதைப் போல் இல்லை தமிழ் மக்கள் வாழ்வு

  11. வணக்கம் அதரடி
    இங்கேயும் துரோகமா ? எங்கே நாம் விட்ட உண்மையின் வெளிப்பாடு என்கட்டுரை ஏன் எந்தக் களத்தில் இருந்து அகற்றப்பட்டது? புரியவில்லை ? எங்கே யார் யார் எல்லாம் வந்து தமிழ் தேசத்திற்கு எதிராக கட்டுரை வரைகிறார்கள் அதல்லாம் எங்கே தடையில்லை ஆனால் எமது மக்களின் நிலைமையும் தமிழ் ஈழத்தில் நடந்த வைற்றை சொன்னாள் அதை நீங்கள் பிரசுரிப்பதில்லை ஏன் எங்கே பாகுபாடு

  12. வணக்கம் என் உறவுகளே வங்கம் விரிந்து வளைகுடா சுழண்டு தமிழர் அங்கம் அதன் மேல் மிதந்தாலும் புலி எதிர்ப்பு மண்டை கழண்ட கூட்டம் அங்கம் சிதையாதோ ? தன் மானம் போய் தமிழ் மானம் போய் தமிழன் அழிந்தாலும் இந்த வஞ்சகர் செய்யும் வழிப் பறிக் கொள்ளை முடியாதோ ? இது தான் ஒவ்வோர் தமிழனின் மனதிலும் எழும் குமுறல் ஆனாலும் முந்தையர் செய்த முற்பலன் என்னவோ எம் மண்ணில் வந்து உதித்தான் உத்தம வீரர்

    எனினும் செத்தவன் உடலில் சேறு பூசி சந்தையில் விக்க நினைக்கும் சில தமிழினத் துரோகிகளே ., வழி தவறி வந்தவன் எம்மை வாழ வைப்பானோ ??? இல்லை கூண்டோடு புதிய வைப்பானோ ? செத்தவன் வேறு யாருமில்லை என்தமிழ் ஈழ தேசத்தின் சொத்துக்கள் எனினும் இவர்கள்தான் எம் எதிர் காலத்தின் வித்துக்கள் இந்த சொத்துக்கள் என்றும் எம் முத்துக்கள் எனவே முத்துக்கள் என்றும் முத்துக்கள் தான் நன்

  13. சித்திய ரெயினா
    Thank you for article, keep write , I hope one day all Eelam Tamils will understand the real world!!!
    do not give up your writing !!!

  14. என்னுடைய தம்பி பீ எஸ் கே வன்னி(PSK Vanni) அங்கொட மன நோயாளர் பிரிவில் இருந்து தற்செயலாக வெளியேறி தொலைந்து போய் விட்டார் . நேற்றில் இருந்து ஆசையாக பிரபா என செல்லமாக பெயரிட்டு நாம் வளர்த்த கொஞ்சம் குட்டையையான் கருப்பு நிற அல்சேசன் நாயை காணவில்லை, காணாமல் போன நாயை கண்டு பிடித்து கொடுத்தால் லட்ச ரூபா சன்மானம் கிடைக்கும்

  15. வணக்கம் என் தமிழ் மக்களே
    வானம் இடிந்து என் வையகம் சிதைந்தாலும் இந்த வழிதவறி வந்த சிங்களன் எம்மை வாழ விடுவானோ? எமது மக்களின் புதை குழியில் நின்று சிங்களம் சுதந்திர தினம் கொண்டாடுது எமது பாடசாலைக் குழந்தைகள் எல்லாம் முள்வேலிக்குள் போட்டுவிடு சிங்களம் சுதந்திரத்தைப் பற்றிக் வாய் கிழிய பேசிக்கொண்டிருக்க எதைப் பார்த்து எமது இனத் துரோகிகள் வாய் பிளந்து கைத்தட்டுகின்றன ஆகா என்ன தமிழ் மீது இவர்கள் வைத்துள்ள பற்று என்ன இவர்கள் எமது மக்கள் மீது வைத்துள்ள பற்று ஆகா என்ன ???????????? ஆனால் இவர்கள் தங்கள் பண ஆசையாலும் பதவி ஆசையாலும் என்று தமிழையும் தமிழ் ஈழத்தையும் விற்றுக்கொண்டிருக்கின்றார்கள்

    அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் இனி தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றுதான் விடுதலைப் புலிகள் போராடினார்கள் ஆனால் இந்தத் தமித் துரோகிகள் கூட இருந்து குழிபறித்தது காணாது என்று சிங்களத் தோடு சேர்ந்து தமிழ் ஈழத்தைக் காட்டிக் கொடுத்து தங்கள் சிங்கள விசுவாசத்தைக் காட்டி தமிழனைக் கழுத்தறுத்து விட்டார்கள்

    அது தான் சிங்களம் போர் முடிந்த கையோடு தமிழரின் புதைகுழியின் மேல் சிங்களத்தின் நாசிப் படையின் நினைவுச்சின்னத்தை அமைத்து அதில் ஏறி நின்று மகிந்தா புத்தம் சரணம் கச்சாமி என்று கோசம் இட்டு கத்தியுள்ளான் இவன் எல்லாம் ஒரு மனித பிண்டம் என்று இவங்களுக்கெல்லாம் ஒரு சுதந்திர தினம் எதைப் பார்த்து கையசைக்கும் சில தமிழ் சாம்பிராணிகள்

    தமிழர் ஆகிய நாம் தமிழ் ஈழம் அமைந்தால் மட்டு தான் எமக்கு சுதந்திரம் இதை விட்டு விட்டு சிலர் கூறுவது போல் நாம் சிங்களத்தோடு இணைந்து வாழலாம் என்றால் ஆங்கிலத்தில் சொல்வார்கள் dream day அதாவது பகல் கனவு இந்த நிலை என்று மாறுமோ அப்போது தமிழ் ஈழம் பிறக்கும் நாம் எல்லோரும் சுதந்திரமாக வாழலாம் ஆம் இதற்கும் மாற்றுக்கருத்து இருக்கு என்று சொல்லி சில வெங்காயம் திரியுது அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும் நீங்கள் சொல்வதை சொல்லலாம் ஆனால் உங்களின் அம்மாவிடம் சொல்லுக்கள் நீ செரியில்லை நாங்கள் விலைக்கு ஒரு அம்மாவை வாங்கப் போறம் என்று அப்போது உன்னுடைய தாயின் பதில் எதுவாகத் தான் இருக்கும் ஓம் இன்று இப்படி சொல்லுங்கோ நாளை தாய்பால் செரியில்லை அதற்குப் பதிலாக நரிப்பால் கொடுக்கப் போறம் என்று

    ஏன் இதை இங்கே சொன்னேன் என்றால் தமிழ் ஈழத்துக்கு மாறாக ஒரு கருத்து வரும் என்றால் அது இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்

    நான் சொல்ல வந்ததை மறந்து விடுமுன் சொல்லிவிடுகின்றேன் ஒரு நாடு என்றால் அந்த நாட்டில் வருகின்ற நல்லது கெட்டது எல்லாம் அந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் சம பங்குண்டு ஆனால் இலங்கையில் நல்லது நடந்தால் சிங்களவனுக்கும் கெட்டது நடக்கவேண்டும் என்றால் அது தமிழனுக்குத் தான் சொந்தம் இப்படி இருக்கும் போது எப்படி தமிழர் இந்த நாட்டை நேசிக்க முடியும்???????????????????? முடியாது
    அப்படியானால் இது எமது நாடாக இருக்க முடியாது இதைத் தான் விடுதலைப் புலிகளும் சொன்னார்கள் அதை நான் என்னும் தெளிவாக சொன்னால் இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் தம்மை பாது காக்கும் கடமையுண்டு இது தவறு இல்லை அதே போன்று தமிழருக்கும் தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கின்றது

    நாம் என்த வல்லாதிக்க சக்திகளுக்காகவும் எமது உருமைகளை விட்டு கொடுக்கக்கூடாது நாம் ஈழத்தின் பூர்வீக குடிமக்கள் என்பதை மறந்து வாழ முடியாது

  16. வணக்கம் என் தமிழ் உறவுகளே
    அட இங்கே புனைப் பெயரை வைத்துக் கொண்டு சித்து விளையாட்டுக் காட்டுதுகள் ஏன் என்றால் இதுகள் நினைத்துதுகள் என் பெயரும் புனை என்று அட பாவிகளே என் பெயர் இதுதாண்டா வேணும் என்றால் உங்கள் மகிந்தாவிடம் சொல்லி பிடிக்க வைபாப்பம் இது தான் உங்கள் தொழில் அதுதான் அப்படி சொன்னனான்

    தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்ற உங்களுக்கே இவ்வளவு திமிர் என்றால் எமது நாட்டை நேசிக்கின்ற எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் நீ சிங்களவனோடை இருக்கும் வரை எங்கள் திரோகிதான் தமிழ் இனத் விரோதிகள் தான் இதை யார் செய்தாலும் அவர்கள் இந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்

    எனவே தமிழ் ஈழப் போராட்டம் முடிவுற்றதாக நீங்கள் நினைக்க வேண்டாம் அது இப்போ வேறு வடிவத்தில் சிங்களவனைத் தாக்கும் ஒரு வீரனுக்கு துப்பாக்கிதான் தேவை என்பதில்லை அவன் தன்னுடைய இன விடுதலைக்கு எதையும் பயன் படுத்தலாம் சிங்களத்தைப் போல் தமிழன் காட்டு மிராண்டிகள் இல்லை எமக்கு என்று ஒரு மரவு உண்டு எதிரியானாலும் அடைக்கலம் என்று வந்தால் நாம் அடைக்கலம் கொடுப்போம் எதுதான் தமிழன் பண்பாடு

    எதைத் தான் பிரவாகரனும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விளக்கியுள்ளார் சிங்கள நாசிப்படை இவ்வளவு கேவலமான முறையில் எமது மக்களை கொலை செய்தும் விடுதலைப் புலிகள் சிங்கள மக்கள் மீது எந்த தாக்குதலையும் செய்யவில்லை எந்த இடத்தில் கருணாவோ அல்லது டக்ளஸ் இருந்திருந்தால் நிட்சயமாக சிங்களப் பொது மக்கள் மீது தாக்குதல் நடதியிருப்பான்கள் இங்கே சிங்கள அரசுக்கும் தமிழர் படைக்கும் மட்டும் தான் சண்டை பொதுமக்களுக்கு இல்லை

  17. தமிழ்,தமிழ் என்று புலம்பித்திரியும் புலன்பெயர் செம்மறி கூட்டம் முதலில் கண்ணாடி முன் நின்று கேட்கவேண்டிய கேள்விகள் பல.

    தன்னலம், தன்குடும்ப நலம் கருதி, தமது சொந்த, பந்தம், இனம் மட்டுமன்றி தமது சொந்த மண்ணையே விட்டோடி, அந்நிய நாடுகளில் அகதியாக, அடிமையாக மட்டுமல்ல, பணத்திக்காக அந்நியனின் கக்கூசுகளையும் கழுவி வாழ்க்கை வாழும் கேடுகெட்ட வெட்கம், ரோசம், மானமிலாத சுயநலவாதிகளுக்கு தமிழில்,ஈழமண்ணில் என்ன தான் பற்று?

    உண்மையில், ஈழத்தில் இனவிருத்தி அற்று தமிழினம் அழிந்துகொண்டு போகிறது. குடியிருக்க மக்களின்றி தமிழ் மண் குறுகிக் கொண்டு போகிறது, தமிழர்களின் வெற்று இடங்களில் வேறினத்தவர்கள் குடியேற்றப்படுகிறார்கள்.

    அக்கறையுள்ள தமிழன் என்றால், இங்கு வந்து எங்களைப்போல் எமது மண்ணில், எமது இனத்துடன், குடும்பமாக தன்மானத்துடன் வாழ வேண்டியது தானே.

    யாரும் READYயா?

  18. இராசபக்சே எதை உன்னிடம் பேசி தீர்க்க அழைக்கிறாய்? இழந்த இன்னுயிர்களையா? கற்பையா?பொருட்களையா? எதற்காக இந்த நாடகம்?சர்வதேச சமுதாயத்திடம் கடன் வாங்குவதற்காகவா? அல்லது சர்வதேச சமுதாயம் உன் மீது விசாரணை நடத்தும் என்ற அச்சமா??? இராசபக்சே பகல் கனவு காண்கிறார். வடக்கில் மேம்பாடு என்று சொல்வதெல்லாம் ஏமாற்று. தேர்தலுக்கு முன்னர் மீன்பிடி்க தடையை நீக்கிய இராசபக்சே தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அந்தத் தடைகளை போட்டிருக்கிறார். வடுகிழக்கில் மறுவாழ்வுப் பணிகளைச் செய்து வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இராசபக்சே அரசு தடை செய்துள்ளது. வடக்கில் இப்போது நடக்கும் ஒரே மேம்பாடு ஏ9 நெடுஞ்சாலை இரு மருங்கிலும் புத்த சிலைகளும் புத்தவிகாரைகளும் வேக வேகமாகக் கட்டப்படுவதுதான். முன்னர் தமிழர்களின் தாயகம் இராணவமயப்படுத்தப் பட்டது.சிங்களக் குடியேற்றம் மூலம் சிங்கள மயப்படுத்தப்பட்டது. இப்போது பவுத்த மயப்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் இந்தியாவின் துணையோடு செய்யப்படுகிறது..கொலை வெறியர்களுக்குக் கொலை வெறியர்கள் பாராட்டுவதற்கு வாழ்த்துப் பா பாடும் ஆரியர்கள் தமிழ்ப் பெயரில் மறைந்திருந்தாலும் அடையாளம் காணப்படுகிறார்கள். பொன்சேகோ பக்கம் படையணியினர் மாறிப் படைப் புரட்சியில் ஈடுபடக்கூடாது எனச் சிங்கள அரசு படாத பாடு படுகிறது. அதன் ஒரு பகுதியே இந்தப்பாராட்டு மழை. மனித நேயமற்ற ஈவு இரக்கம் இல்லாத கொலைவெறியர்களுக்கு இறைவன் தர உள்ள பாராட்டும் காத்திருக்கிறது. வினை விதைத்தவர்கள் வினையை அறுடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை..இழப்பு ஒன்றும் எமக்கு புதிது அல்ல எல்லாம் எம் மண் விடுதலை அடயும் போது உலகம் சொல்லும் வரலாறு வெல்லும் விழுந்தாலும் வித்துகளாய் மடிந்தாலும் மக்களுக்காய் என்றன்றும் அவர்களே (தலைவரின் சிந்தனை) சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை..சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்துவதையே அமைதி எனக் கூறிக் கொண்டு அரச பயங்கரவாதத்தையே தொழிலாகக் கொண்டு பன்னாட்டு நிதி உதவிக்காகப் பசப்பிக் கொண்டு இந்திய சீனத் துணையுடன் உலகை ஏமாற்றும் சிங்களம் உண்மையிலேயே தன் நாட்டு மக்கள் மீது பற்றுக் கொண்டு இருந்தால் அவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற – ஈழப் போரில் தேவையற்று உயிர் இழக்கதவும் உறுப்புகள் இழக்கவும் செய்த சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க, இலங்கை மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்க வேண்டும். தனித்தனி உரிமையுடைய தமிழ் ஈழ இலங்கைக் கூட்டு ஒன்றியத்தை அமைக்க வேண்டும்.பிற வெல்லாம் வழக்கம் போல நிகழ்த்தும் ஏமாற்றுக் கண்துடைப்பு வேலைகளே. மேலும் இவ்வாறு அறிவிப்பதற்கு யாரையும் பேச வாருங்கள் என்று அழைக்க வேண்டிய தேவையில்லை. இன்னும் ஏழாண்டு ஆளப் போவதாக நம்பியுள்ள் பக்சேவே அறிவித்தால் போதுமானது.அதற்குள் என்னென்ன மாற்றம் நிகழப் போகிறதோ??? வெல்கதமிழ் ஈழம்! வளர்க ஈழ உலக நட்புறவு!..

  19. வணக்கம்
    என் அன்பு நண்பர் வன்னியான்
    என்னுடைய பெயரின் சில உமக்கு இருப்பதால் முதல் உமக்கு வணக்கம்

    நீர் சொல்வதைப் போல் பண்டாரவன்னியன் பரம்பரையில் பிறந்த எவனும் மானம் கெட்டவனாக இருக்கமுடியாது எந்தக் கோழையும் ஒரு தடவை முல்லைத்திவிக் கோட்டைக்கும் கர்ப்புரப் புல்வெளிக்கும் கற்ற்ச்சிலைமடுவாம் எங்கள் பண்டாரவன்னியன் துயிலும் இல்லம் வந்தால் அவனுக்கும் வீரம் பிறக்குமடா நண்பா நீயும் வேண்டும் என்றால் ஒரு தடவை வந்து பார், ஆனால் நீயும் நானும் எழுத்திலே மோதினாலும் ஈழம் என்னும் கருத்திலே மோத முடியாது ,

    நீர் உண்மையில் ஒரு வன்னியானாய் இருந்தால் இப்படி எழுத முடியாது எங்கேயோ உதைக்கிறது எதற்கும் உன் தாய் தந்தையரை அசிங்கப் படுத்த நான் விரும்பவில்லை ஏன் என்றால் இடம் பொருள் அறிந்து பேசு என்பது மனித பண்பாடு எனினும் நீர் இளையவனாக இருந்ந்தால் இதையும் அறிந்து கொள் வெறும் முள்ளிவாய்க்கால் இல்லை தமிழர் வரலாறு பண்ட்டாரவன்னியனைப் பற்றி அறிந்தவனுக்கு தன்னகத்தே தமிழ் ஈழம் தனித்திருந்த வரலாறும் தெரிந்திருக்க வேண்டும் அதற்க்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்திருக்க வண்டும்

    கொக்குத்தொடுவாயில் இரந்து வவுனியா வரையும் வன்னிக் கிராமங்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்திருக்க வேண்டும் ஏன் தமிழ் ஈழத்தின் எல்லைக் கிராமங்கள் எல்லாம் இப்படி நீர் முலமாக்கப் பட்டு சிங்களவன் இன்று வாழ்ந்து வருகின்றான் என்பதுவும் தெரிந்திருக்க வேண்டும் இவை உமக்கு சில தகவல்கள் நன்றி

  20. PSK VANNI, நீ நாட்டில இருக்கும் பொழுது என்னவேலை செய்தாய் என்பதையும் உன்னுடைய உருவம் எப்படியானது என்பதையும் http://www.——— இல் “ஒஸ்லோவில் குடிமக்கள் ஆர்பாட்டம்” என்ற தலையங்கத்தின் கீழ் பிரசுரித்திருக்கிறார்கள். நீ கட்டாயம் பார்க்கவேண்டும். உன்னை மாதிரிக் கூட்டங்கள்தான் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்பதை பட்டவர்தனமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்கள். ஆனால் ஒன்று நீ தமிழன் என்றுசொல்லிகொண்டாலும் உன்னை மாதிரி ஆக்களை தமிழர்கள் என்ன ரேஞ்சில் வைத்திருக்கிறார்கள் என்பதை நீ கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டும்.

  21. வணக்கம்
    pskvani2
    நீர் என்பெயரைப் போடு எழுதுவது உன் மட்டமான சிந்தனை ஆனால் நான் எழுதிய விபரங்கள் சிங்களம் நடத்திய கொடூர வேட்டையின் அடையாளங்களைத் தான் ஆனால் யாராவது அந்த இடத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் கேட்டுப்பாரும் எது பொய்யோ உண்மையோ என்று மற்றது நான் தமிழருக்கு நடந்த கொடுமைகள் பற்றி எழுதும் போது நீ ஏன் சிங்களன் தமக்குள்ள விளையாடிய சித்து விளையாட்டைப் பற்றி கும்மாளம் போடுகின்றாய் நீ தமிளன அல்லது சிங்களவனுக்குப் பிறந்தவனா?

    அட மடச்சாம்பிராணி தமிழ் ஈழத்தையே சிதைத்து விட்டு என் மக்களின் பிணத்தின் மேல் சிங்களன் தன்னுடைய நாசிப்படையின் சின்னத்தைக் கட்டிக் கொண்ட்டாடியுள்ளான் நீ என்னடா என்றால் வெக்கம் இல்லாமல் சிங்களத்துக்கும் மகிந்தாவுக்கும் தடவிக்கொன்று நிக்கிறாய் தனி மனித சுதந்திரமே இல்லாத நாட்டில் தமிழ் இனம் எப்படி வாழ முடியும் ?

    நல்ல சகுனம் என்பார்
    சரத்போன்செகரா கைது
    சிங்கள நாட்டுக்கு திரோகமாம்

    வணக்கம் தமிழ் உறவுகளே சிங்களவன் எங்கே தாம் செய்த படுகொலை சதி எல்லாம் வெளிவந்து விடுமோ என்று எண்ணித்தான் போன்செகராவைக் கைது செய்தது ஆனால் இது அவர்கள் இடத்தில் இருந்து பார்க்கும் போது சரியென்றுதான் படுகின்றது ஏன் என்றால் மகிந்தா கட்டளை இட்டது உண்மை ஆனால் சரத் அப்போது இதை மறுத்திருந்தால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் அப்படி என்னை பதவி நீக்கினாலும் பரவாயில்லை என்று மறுத்திருக்கலாம் ஆனால் அவரும் சேர்ந்து இந்த தமிழ் மக்கள் மீதான அழிப்பை செய்த பின் இப்போது மாறி நிர்ப்பது தான் தவறு ஏன் என்றால் எதிரிக்கு கூட முதுகில் குத்தக் கூடாது என்பது தான் புலிகள் கருத்து அதாவது தமிழர் கருத்து

    ஆனால் சிங்களம் எப்படி விளித்து எழுந்தது தமக்கு ஆபர்த்து வரப்போவது தெரிந்தவுடன் ஆனால் எமது இனத்தில் பிறந்தவர்கள் எமது இனத்தை காட்டிக் கொடுத்து பேர்வாங்கி வாழ்க்கை நடத்தி வருவது தான் மிக வேதனையாக உள்ளது தமிழ் ஈழம் ஒன்று உருவானால் தமிழருடைய பாதுகாப்பு உரிதிப்படுதப்படும் இதில் யாருக்கு என்ன நட்டம் ?இப்பவாவது சிங்களத்தோடு சேர்ந்து நிற்கும் இந்த க்ளுக்கள் தங்கள் தவறினை திருத்த வேண்டும் எமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் அதை நாம் எமக்குள் தான் பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய சிங்களவனுக்கு எம்மைக் காட்டிக் கொடுக்கக் கூடாது ,

    ஒற்றுமையே எம் பலம் ஏன் என்றால் இது என் வீட்டு உன்வீட்டுப் பிரச்சனையில்லை இது எங்கள் வீட்டுப் பிரச்சனை அதாவது முழுத் தமிழர்களின் இருப்புப் பிரச்சனை எனவே தயவு செய்து இனியாவது முதுகில் குத்தும் என்னத்தை விட்டு தமிழ் ஈழத்தை அடையும் வேலையைப் பாருங்கள்
    நன்றி
    உங்கள் pskvanni

  22. வணக்கம்
    ஆதவன்
    aathavan
    நாங்கள் தமிழர்கள் தமிழர்கள் என்றால் நாம் இப்படித்தான் எங்கள் உணர்வுகள் இருக்கும் ஏன் என்றால் சிங்களவனால் நாம் பட்ட துன்பம் கொன்ச்சம் நஞ்சம் இல்லை நான் பல தடவை என்னுடைய கருத்தை ஆணித்தரமாக எழுதியுள்ளேன் இனி தமிழன் வாழவேண்டும் என்றால் தமிழ் ஈழம் அமைய வேண்டும் அப்படி அமையவில்லை என்றால் எமது எனதின் உடல்களை கிணறுகளிலும் குளங்களிலும் ஆறுகளிலும் தான் தேடி எடுக்க வேண்டும் எதுதான் யதார்த்தம் எதை விட்டு விட்டு நீயும் நானும் அடிபடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை,

    இப்படிஇருக்குது இன்றைய சூழ்நிலை புலிகளை அழித்துவிட்டோம் என்று மார்தட்டும் சிங்களமும் அன்று புலியில்லாத போது தமிழர்களையும் தமிழ் கிராமங்களையும் அளித்தது எதற்க்காக ? சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு நாடு அந்த நாட்டின் போக்கிசங்களைப் பாதுகாக்க வேண்டுமேயொழிய அளிக்கக் கூடாது தமிழனின் போக்கிசமாகிய யாழ் நூலகம் எரிக்கப் பட்டது எதற்க்காக என்று உம்மால் விளக்கம் தரமுடியுமா ? நீ வேண்டும் என்றால் கூறலாம் அதை மீண்டும் கட்டித் தந்து விட்டார்கள் தானே என்று ஆனால் நான் கூறுவது கட்டிடத்தை அல்ல தமிழனின் வரலாறு எதுதான் தமிழனை ஈழத்தில் இருந்து அளிக்க போட்ட முதலாவது திட்டம்

    ஒரு இனத்தின் வரலாறு அந்த வரலாற்றுப் பொக்கிசத்தை அளித்து விட்டு சிங்களம் இப்போதமிழன் வந்தேறு குடிகள் என்று அல்லவா கொக்கரிகின்றது வரலாறு என்றால் என்று சிங்களம் வைத்திருக்கும் மாகா வம்சம் அதைப்போல் தமிழனுக்கும் வரலாற்றுப் போக்கிசந்தான் எமது நூலகம் இத்தோடு சிங்களவன் விட்டு வைக்கவில்லை எதுவெல்லாம் தமிழரின் வரலாறைக் குறிக்கின்றதோ அதுவெல்லாம் அளிக்கப் பட்டுள்ளது இதுக்குள் இறங்கினால் எனக்கு நாட்கள் போதாது உமக்கு விளங்கப் படுத்த ,

    அடுத்தது உம்மைப்போன்று இங்கு வந்து காடுறை என்ற பெயரில் தவறான தகவல் எழுதுகின்றவர்களுக்கு இது தெரித்திருக்க வேண்டும் தமிழனின் பாது காப்பை உடைத்த முள்ளிவாய்க்கால் இல்லை போராட்டத்தின் காரணம் முளிவாய்க்கள் தமிழ் இளம் சந்ததிகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே ,

    வெறும் ஜந்து மாதத்தில் மட்டும் தமிழன் நிலைமை இப்படி உருவானது என்று சொல்லி தமிழருடைய போராட்டத்தை குறகிய அரசியல் லாவபம் தேட என்னும் உன்னைப் போன்றவர்கள் தமிழ் மக்கள் கடந்த காலத்தில் எப்படியெல்லாம் சிதைக்கப் பட்டான் என்பதை மறைக்காமல் வெளியில் சொல்ல வரவேண்டும் கடந்த காலத்தில் வடக்கை விட கிழக்கு மாகாணம் நிறைய பாதிக்கப் பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகப் பிரிவின் ஒரு அறிக்கையில் சுட்டிக்காடப்பட்டுளது,

    மீண்டும் நான் சொல்வது சிங்கள அரசின் கீள் தமிழினம் நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாது காரணம் ஏன் என்றால் தமிழன் சிங்களத்தின் ஆட்சியின் கீள் இருக்க வேண்டும் என்றால் சிங்களம் எழுதி வைத்திருக்கும் பொய்யான மகா வம்சத்தைக் கைவிட்டு உண்மையின் பக்கம் மனித நேயத்தோடு நடக்க முற்ப்பட்டால் நாம் அதைப் பரிசீலனை செய்யலாமே ஒழிய அது தான் முடிவென்பது அல்ல ஆனாலும் தமிழ் மக்கள் நின்மதியாய் வாழவேண்டும் என்றால் தமிழ் ஈழத்தைத் தவிர எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை , தொடரம்
    நன்றி

  23. வணக்கம்
    vives thanan
    அடி முட்டாள் மாதிரிப் கட்டுரை எழுதவேண்டாம் நீங்கள் பண்டைக் காலத்தில் நின்று கொண்டு சாதிகளைப் பற்றியும் பிரதேசவாதம் செய்வதும் மக்களிடத்தில் தூண்டி விடுவதும் இதுதான் உங்கள் தமிழ் சமுதாயத்தின் விசுவாசமோ ?? எழுத்து என்பது பலருடைய அறியாமையை நீக்கி அவர்களை நல்வழிப் படுத்துவதாக இருக்க வேண்டும் உன் போறவர்களின் கட்டுரையை வாசிப்போர் எப்படி ஆவார்கள் என்பதையும் நீர் கொன்ச்சம் எண்ணிப்பார் தமிழ் ஈழம் என்பது வெறும் ஒரு கிராமத்தைக் குறிக்கும் என்று உன் போன்ற முட்டாள்கள் இங்கு வந்து புலம்பும் போது, எம்மைப் போன்ற தமிழர்கள் உன்னைப் பார்த்து சிரிக்கின்றதா அல்லது அழுகின்றதா என்ற வினா எழுகின்றது என்பது தான் உண்மை .,

    அட மகாவம்சத்தில் பிறந்த உனக்கு நாம் எதைச்சொல்லி என்ன பயன் உங்களைப் போன்ற செம்மறிகள் அன்றில் இருந்து இன்றுவரை அப்படியே இருக்கின்றீர்கள், வேதனை உணர்வுள்ளவனுக்குத்தான் உணர்ச்சி வரும் ஆனால் உங்களைப் போன்றவர்களுக்குப் பிறக்கும் போதே அதை ஏனோ அறுத்துவிட்டாங்கள்,காரணம் உன் முன்னாள் உன் அம்மாவையோ அல்லது உன் அக்காவையோ சிங்களவன் மானபங்கப் படுத்தினால் நீ சரித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் ஏன் என்றால் நீங்கள் ஒரு யடங்கள்,அதாவது உணர்ச்சி அற்றவர்கள்,

    அட மடச்சாம்பிராநிகளே ஒரு கணம் உங்கள் கண்களை மூடி நாம் தமிழ் இனம் என்று உச்சரித்துப் பாருங்கள் மறுகணம் நீங்கள் மனிதர்கள் என்றால் அப்போது நீங்கள் மனித நேயம் உள்ள ஒரு தமிழனாகி விடுவீர்கள் தாய்ப்பாலை ஊட்டும் போது உன் அன்னை என்ன சொல்லி ஊட்டினாலோ எம் இனத்தின் விசக்கிருமிகளாக மாரியுல்லிர்கள்
    நன்றி

  24. adda tamil pajalkala Sri Lanka olly singala naddu.unakaluku inku onum illai,sapadu maddum tharuvam athai sapeddudu paddukavum,athuthan unkada ltte talaivan pirpharan nama kondu poddam ,unkallai ene ena sejia muddijium ,ha ha ha ithu namthu naddu sareja

  25. வெள்ளைக்காரர் எங்களை பிச்சை எடுக்க வந்த கூட்டமா மிக மிக கேவலமா தான் பாக்குறவன் இங்க இவங்களுக்கு பல்லை காட்டி கொண்டு எவளவு காலம் தான் இருக்குறது ஆகவே இழந்த எங்கட நாட்டை மீட்குற வேலைய பாருங்கோ சும்மா பெயரில தன்மானமுள்ள தமிழன் என்று தனக்கு தானே பெயரை வைத்து கொண்டு திரியுற கழுதயளுக்கு சொல்ல இல்லை அப்பு, பிள்ளையால் எட்டப்பன் வேலையல விட்டு போட்டு நாட்டை எப்படி மிட்குறது என்று பாருங்கோ இந்த சித்தி ரெஜினாக்கு என்ன தெரியும் சொல்லுங்கோ இதுகள் பன்டி கூட்டம் போல பெத்து கொண்டு போற வாறா இடத்தில குந்துற கூட்டம் தானே இதை விட கொடுமை என்ன எண்டால் இந்த அதிரடி இணையம் இப்படியான லூசு (பாஸ்கரன்,சித்தி ரெஜினா) கூட்டத்துக்கு தான் முதல் உரிமை குடுக்குதுகள் அது சரி நடத்துறதுகள் ஒழுங்கா இருந்தால் எல்லோ நல்ல நியூஸ் போடுறதுக்கு ம்ம் என்னத்த செய்ய ???

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>