மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்.. -சாகரன் (கட்டுரை)

மீசைவைச்ச ஜனாதிபதி வேட்பாளரில் யார் சிறந்தவர் என்ற ஓட்டப் பந்தயத்தில் மகிந்த வெல்ல வேண்டும் என்று ஒரு சாரர் தமிழ்த் தலைவர்களும் ஜெனரல் சரத் வெல்ல வேண்டும் என்று இன்னொரு சாரர் தமிழ் தலைகளும் ஆசை வைச்சனர். இதே போல் வெளிநாட்டு நட்பு, ஆதிக்க சக்திகளும் தமக்குள் ஒவ்வொரு ஆசையை வைத்திருந்தனர். புலம் பெயர் புலி ஆதரவாளர் தமிழர்களும் ஆசை வைச்சனர். புலிகளை மறுத்து நிற்கும் இடதுசாரி ஜனநாய சக்திகளும் தமக்குள் ஒரு ஆசை வைச்சிருந்தனர்;. ஜனாதிபதித் தேர்தல் முடிவு பலரின் ஆசையை நிறைவேற்றியும், சிலரின் ஆசையை நிராசையுமாக்கியுள்ளது. இலங்கையில் ஜனநாயக நிலைமைகளை மேலோங்கி நிற்கச் செய்யும் ஏகாதிபத்திய ஆதரவு இராணுவ மேலாதிக்க ஆட்சியைத் தவிர்த்து முடிவுகள் வந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இடதுசாரி ஆதரவு பெற்ற பொது வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற செய்தியும் வெளிவந்துவிட்டன. கூடவே தமிழ் பேசும் மக்களின் வாக்கு ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இத் தேர்தலில் இருக்கவில்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. வடக்கு கிழக்கு (திகாமடுல்ல மாவட்டம் நீங்கலாக) நுவரெலியா மாவட்டங்களில் மகிந்தாவை விட சரத் பொன் சேகாவிற்கு கூடுதலான வாக்கு கிடைத்தும் உள்ளன. இப் பிரதேச மக்கள் மகிந்தாவை விட பிரபாகரனின் கோவணத்தையும் உருவிய சரத் பொன்சேகாதான் தமது சரியான தெரிவு என எண்ணியதினால் அவ்வாறு கூடுதல் வாக்களித்தள்ளனர் என்று மகிந்தாவிற்கு ஆதரவு தெரிவித்த அப்பகுதி மக்களை பிரநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் மூலம் சிங்கள மக்கள் ஒன்றை தெளிவாக சொல்லி விட்டார்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்தது அரசியல் தலைமைதான் மாறாக இராணுவத் தலைமை அல்ல. தமிழ் பேசும் மக்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள் இன்னும் சில காலம் ஆகினும் தமிழ் குறுந்தேசியவாதத் தலைமைக்கு ஏமாறத் தயார். மலையக மக்கள் பாரம் பரியமாக ஆதரித்து வந்த ஐதேக ஐ விட்டு விலகத் தொடங்கி விட்டோம், ஆனால் முழுமையாக அல்ல. முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வருபவர் என எதிர்பார்கப்படுபவரை ஆதரித்து தமது சமூகத்தின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல். கூடவே ஐதேக யை இனியும் அதிகம் நம்புவது தமது சமூக முன்னெற்றத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையமாட்டாது. கொழும்பு முதலாளிமார் தமது ஆதரவுத்தளத்தை ஸ்ரீ சுதந்திரக் கட்சி பக்கமும் திருப்பத் தொடங்கி விட்டோம். இவையே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எமக்கு சொல்லும் செய்திகள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக்காட்டிக் கொடுத்து விட்டது. வடக்கு கிழக்கில் வென்றது சம்மந்தன் கூட்டமைப்பாக தோற்றம் அளித்தாலும், தோற்றுப் போனது தமிழ் பேசும் மக்கள். இவர்களைத் தோற்க வைத்தவர்கள் சம்மந்தன் கூட்டமைப்பினர். தமிழ் மக்களை வெல்ல வைக்க மாற்று கருத்து அமைப்பினரால் முழமையாக இன்னும் முடியவில்லை. கிழக்கில் தமிழ் மக்கள் இன்னும் முழுமையாக கருணா பிள்ளையானை நம்பி வெளியில் வரத் தயங்குகின்றனர்.

மே 18 புலிகளை வெற்றி கொண்ட அன்று சிங்கள் மக்கள் ஒருவகை உணர்ச்சிப் பிரவாக்கத்தில் புலிகளை வெற்றி கொண்ட ‘வீரைய’ மகிந்த என மகிழ்திருக்கலாம். ஆனால் நாட்கள், மாதங்கள் செல்ல பெரும்பான்மை கிராமப்புற சிங்கள மக்கள் மகிந்தாவை தமது விருப்பிற்குரிய நாயகனாக மாற்றிக் கொண்டதற்கு இவ் உணர்ச்சிப் பிரவாக்கம் முக்கிய காரணம் அல்ல. மாறாக போர் காலத்தில் வறிய சிங்கள மக்களின் வீடுகளில் தினம் தோறும் எதிர்பார்த்திருந்த சா வீட்டு அவல ஓலம் நிறுத்தப்பட்டதற்கு இந்த மகராசனே காரணம் என்ற நன்றியுணர்வே பிரதான காரணம் ஆயிற்று.

ஐதேக உம் ஜேவிபி உம்  ‘ஆட்சி மாற்றம் வேண்டும்’ என்று கோஷம் இட்டு இரு வழிகளில் பயணிக்க துடிக்கும் ஒரு வண்டிலின் இரு வேறு வேறு சக்கரங்கள். இவர்களை நம்பி கட்சியற்ற முன்னாள் இராணுவ ஜெனரலை ஆதரிப்பது புத்திசாலித்தனம் அல்ல. மாறாக இலங்கை அபிவிருத்திப் பாதையில் முன்னே தள்ளிச் செல்லக் கூடிய மகிந்த சகோதர்கள் எதிர்கால இலங்கைக்கு தேவையானவர்கள் என்பதை ஏற்றக் கொண்டுள்ளனர். மீசை வைத்த வேட்டி கட்டிய சிங்கள மாத்தைய, மீசையில்லா கோட் சூட் போட்ட கொழும்பு, கண்டி தொரையைவிட நல்லவர், வல்லவர். எங்களுடன் எங்களுக்காக இருப்பார் என்று கிராமத்து சிங்கள மக்கள் நம்புகின்றனர். இவை மகிந்தாவிற்கு சிங்கள கிராமங்களில் வாக்குகளை அள்ளிக் குவித்து இருக்கின்றது.

போரின் வடுக்கள் பொது மக்கள் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகம் பாதிப்பை கொடுத்திருந்து. அதேவேளை வயிற்று பிழைப்பிற்காக தொழில் நிமித்தம் இராணுவத்தில் சேர்ந்த ஆணிரம் ஆயிரம் சிங்கள வறிய இளைஞர்களின் குடும்பங்களும் இதில் பாரியளவு பாதிப்படைந்தனர். போர் முனையில் இருந்து தமது வீட்டிற்கே கொண்டு வராமல் அடக்கம் செய்யப்பட்ட சிங்கள் இளைஞனின் குடும்பங்களின் அழுகை ஓலங்கள் உண்ணில் அடங்காது. மே 18 உடன் போரை நிறுத்தியத்னால் தனம் தினம் சிங்கள்க கிராமங்களில் வீதிக்க வீதி கேட்டுக் கொண்டிருந்த இந்த அவலங்கள் முடிவக்கு வந்தன. ஆமாம் போரினால் தினம் தினம் கொல்லப்படும் தகப்பனை, மகனை, புருஷனை, ஏன் தாயை, மகளை எதிர்பார்த்து ஏக்கி நிற்கும் சிங்கள சமூகத்திற்கு போர் முடிவுற்றது என்பது நெஞ்சில் பால் வாரத்த செய்திதான். மரணத்தின் வலி என்பது எல்லோருக்கும் ஒரு மாதிரியானதுதான். தனது பச்சிளம் குழந்தையின் முகத்தை ஒரு தடவையேனும் காணாமல் பலியான இராணுவ சிப்பாய்கள் ஏராளம். எனவே போரை முடிவுக்கு கொண்டு வந்த (வென்றது அல்ல) மகாராசன் மகிந்தா என்ற நன்றியுணர்வு சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் உயர்ந்தே இருக்கின்றது.

இதனாலேயே போரின் முடிவுக்கு பின்பு ஒரு இலட்சம் இராணுவத்தை திரட்டுவேன், கரையோரங்களில் இராணுவ முகாம்களை அமைப்பேன், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கமாட்டேன், முகாம்களில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் போர் முரசு கொட்டிய சரத் பொன் சேகாவை இராணுவத்தில் உள்ள தமது உறவுகளின் எமதூதனாகவே சதாரண சிங்கள மக்கள் பார்க்கத் தொடங்கினர். இதனாலேயே சரத் பொன் சேகாவை சிங்கள மக்கள் நிராகரித்தனர். தமிழ் பேசும் மக்களும் நியாயப்படி அப்படியே செய்திருக்க வேண்டும். ஆனால் மாறாக இப் போரினால் சிங்களம் பேசும் மக்களைவிட கூடிய பாதிப்பை அடைந்த தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியினர் தெளிவடையாமல் போர் முரசு கொட்டும் சரத் பொன் சேகாவை தமது ‘தேசியத் தலைவர்’ ஆக சம்மந்தன் – ரவூக் ஹக்கீமின் வேண்டுதலின் பேரில் ஆதரித்து வாக்களித்தனர்.  தமிழ் பிரதேசங்களில் வாக்களிகாத மக்களின் மனநிலையை ஓரளவேனும் அறிய முடிந்தால் இவற்றைப் பற்றிய முழுமையான ஆய்வை கொடுக்க முடியும்.

வறுமையின் காரணமாக இராணுவத்தில் சேர்ந்து பணம் ஈட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்த வறிய சிங்கள கிராம இளைஞனின் அவலங்களை நிறுத்திய தலைவன் மகிந்த என்று சிங்களம் பேசும் மக்கள் பூஜிக்க தொடங்கி விட்டனர். போர் முடிவுற்றது மட்டும் அல்ல அதனைத் தொடர்ந்த போர் அற்ற ‘சமாதான’ நிலமைகள் துளிர்விடுவதை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளத் தயாராகிவிட்டனர். இனிப் போர் இல்;லை என்பது அவர்களைப் பொறத்தவரையில் நெஞ்சில் பால்வார்த்த செய்திதான். போர் செய்த வடுக்கள் அவ்வளவு மோசமானது. இப் போர் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல சிங்கள மக்களுக்கும் கிட்டத்தட்ட இழப்புக்கில் ஒரேமாதிரியான உணர்வலைகளைத்தான் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிற்போக்கு தலைமைதான் வெளிநாட்டுக் காசுகளுகாக தமது வர்க்க நலன்களுடன் ஒத்துப் போகும் ஐதேக யுடன் கரம் கோர்த்து நிற்கின்றனர்.

இலங்கையில் இனக்கலவரங்களை திட்மிட்டு தமது ஆட்சிகாலங்களில் நடத்திய ஐதேக தமிழ் மக்களின் நண்பன் என்கின்றனர். வடக்கு கிழக்கை பிரிப்பதே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் என்கின்ற ஜேவிபி சக கூட்டாளி. இவர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் முரசு கொட்டத் துடிக்கின்றன. இவர்களின் செயற்பாடுகள் இன்றும் இவற்றையே கட்டியம் காட்டி நிற்கின்றன.

போர் நின்றதால் பெரும் மூச்சு விட்ட மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளனர். சிறப்பாக புலிகள் அற்ற சூழலில் வாழுதல் என்பது ஒரு பெரிய சுதந்திரம் என்பது வீட்டுக் ஒரு பிள்ளையை மீறி அனைத்து பிள்ளைகளையும் கட்டாய புலிப்படைக்கு  பறி கொடுத்து தவித்த பெற்றோர்கள் பிள்ளைகள் கணவன்மார்கள் மனைவியர், காதலன், காதலி என்று நீண்டு கொண்டே சென்றது பட்டியல். இவர்களுக்கு மகிந்தா ஒரு மீட்போனாக முழமையாக காணப்படாமல் இருந்ததற்கு போரில் தமது உறவுகளை இழந்த வடுகள் வேதனைகள் காரணமாக அமைந்தன. இதனால் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் சற்றே தள்ளிநிற்க வைத்திருக்கின்றது அவர்களை. அதுதான் தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதன் வெளிப்பாடே ஜெனரலுக்கும், ஜனாதிபதிக்கும் வாக்கு அளிக்கவில்லை. இதன் தாக்கத்தை வடபகுதி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரிதும் உணரக் கூடியதாக இருந்தது. சரத்திற்கு வாக்களித்தவர்கள் புலிகளின் மாவீரர் குடும்ப நெருங்கிய உறவுகள்.  இவர்கள் சாட்சாத் தமிழர் தரப்பில் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்களை துரோகிகளாக இன்றும் கருதுவதினால் அவர்களின் ஆதரவு பெற்ற மகிந்தாவிற்கு வாக்களிக்க தயாராக இல்லை.

அவர்களின் முதல்எதிரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புகள். இதன் பின்னர்தான் மகிந்த என்ன, சரத் என்ன. ஏன் இந்தியா என்ன. இதில் அவர்கள் ‘தெளிவாக’ இருக்கின்றனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெளிவாக இருக்கின்றது. இதற்கு அவர்களுக்கு கிடைத்த பலமான ஆயுதம் தமிழ் தேசியம் என்ற குறும் தேசியவாதம். இதுவே பாராளுமன்ற கதிரைகளைப் பிடிக்க மிக இலகுவான வழி. தமது மூதாதையர் கை கொண்ட வழி முறையை இவர்கள் தொடர்ந்தம் கைக் கொள்கின்றனர். இதில் இவர்கள் மாற்றத்தை வேண்டி நிற்கவில்லை.

ஆட்சி மாற்றம் கோரும் இவர்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை ஏற்கவே மாட்டார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டாம் என்ற கோஷம் தமிழ் மக்கள் மத்தியில் அதிகார மாற்றம் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தத் தானே என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்தும் தமிழ் பிற்போக்குத் தலைமைகள் நாற்காலிகளைத் தக்க வைக்க பாவிக்கும் தந்திரோபாயம் இது.

சம்மந்தன் கோஷ்டியின் உசுப்பலுக்கு உட்பட்ட மாவீரர் குடும்ப உறவுகள், கிழக்கில் கருணா – பிள்ளையான் என்ற ‘துரோகிகள்’, வடக்கில் டக்ளஸ் என்ற ‘துரோகி’ என்ற கண்ணோட்டத்தில் மகிந்தாவின் உறவு நிலையைப் பார்த்திருப்பார்கள்;. இவர்கள் தமது எதிர்பை காட்ட நிச்சயமாக சரத் பொன்கேசாவிற்கு வாக்களித்திருப்பார்கள்.

இவை எல்லாவற்றையும் விட வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழ் பேசும் மக்கள் (தமிழ், முஸ்லீம் உட்பட) கடந்த 60 வருட காலமாக ஐதேக ‘எமது நண்பன்’ என்று தமிழ் பேசும் மக்களின் பிற்போக்கத் தலைமைகளினால் காட்டிவந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள். இவர்களை திடீரென சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக் சொன்னால் அவர்களால் உடனடியாக மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் தாக்கமும் தமிழ் பகுதிகளில் ஐதேக ஆதரவு பெற்ற சரத் பொன்சேகாவிற்கு கூடுதல் வாக்குகள் கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசுடன் நல்ல உறவு நிலையில் உள்ள அமைச்சர்கள், முதல் அமைச்சர் குழாம் பற்றிய நம்பிக்கைகள் இன்னும் முழுமையான நிலையை நோக்கி வளர்ச்சியவில்லை.

இந்நிலையில் மகிந்தாவிற்கு போதியளவு வாக்குகளை கேட்டு பெற இவர்களால்  முடியவில்லை. தமிழ் தேசியக் கூட்மைப்பைத் தவிர ஏனைய தமிழ் அமைப்புக்கள் ஓரணியில் நின்று மகிந்தாவிற்கு தமது ஆதரவை தெரிவித்து இருந்தனர். ஆனால் இவர்கள் யாபேரும் தமது ஐக்கியப்பட்ட பிரச்சாரத்தின் மூலம் ஒரு மாற்றுத் தலமையின் பலத்தை தமிழ் பேசும் மக்களுக்கு உணர்த்தும் செயல் முறை வடிவத்தை கொண்டிருக்கவில்லை. ‘தனித்து’ நின்றே ஆதரவு தேட முயன்றனர். ஈபிடிபி, பத்மநாபா ஈபிஆர்எல்எப், புளொட், கருணா, பிள்ளையான் போன்றோர் ஓரணியில், ஒரு மேடையில் நின்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுபடும் தோற்றப்பாட்டை செய்யத் தவறிவிட்டனர். இதே வேளை டியூ குணசேகரா தலைமையில் யாழ், வன்னி, மன்னார் போன்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட நல் முயற்சிகளையும் மறுப்பதற்கில்லை.

புலிகளால் அழிக்கப்பட்டதில் மாற்றுக் கருத்தாளர்களில் தலமையுறுப்பினர் பலர் என்பதே இப்போதெல்லாம் பெரிதும் உணரப்படும் ஒன்றாக இருக்கின்றது. புலிகளால் நாசமாக்கப்பட்ட பலவற்றில் நல்ல தலைவர்கள், புத்திஜீவிகள,; கல்விமான்கள், நல்ல தொண்டர்கள் என பலவற்றை கூறலாம். தற்போது தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் தலைமை உறுப்பினர்களின் பற்றாக்குறையை 30 வருட போரில் புலிகள் ஏற்படுத்திவிட்டுச் சென்று விட்டனர். இல்லாமல் போனதைப்பற்றி அழுது கொண்டிருக்காமல் இருப்பவர்களில் சிறந்தவர்களை முன்னிறுத்தி செயற்படவேண்டும். ஆயிரம் பூக்கள் மலர அனுமதியுங்கள். அதில் பல பூக்கள் உங்கள் மத்தியிலேயே இலைமறை காயாய் உள்ளன. இவற்றை நீங்களே ஊக்குவித்து முன் கொணடு வந்திருக்க வேண்டும்;. தனிநபர் மட்டும் முன்னிறுத்தும் பாணி முழுமையான பரந்து பட்ட வெற்றியை ஈட்டித் தராது. மக்கள் மத்தியில் உங்களை பற்றிய நம்பிக்கையை முழுமையாக ஏற்படுத்தாது. இதனை புரிந்து கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட. சரியானதும் கூட. இவ்வாறு செய்திருந்தால் வடக்கில் மேலும் பல ஆயிரம் வாக்குகளை மகிந்தாவை நோக்கி கொண்டு வந்திருக்க முடியும்.

ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறுகளை களைய இவை உதவும். எனவே காலம் தாமதியாது செயற்படுங்கள். மீண்டும் தமிழ் மக்களை படு குழியில் தள்ளும் படு பாதக செயற்பாடுகளில் சம்மந்தன் கோஷ்டி ஏற்கவே இறங்கிவிட்டது. நீங்கள் தாமதாக செயற்படும் ஒவ்வொரு நிமிடமும் தமிழ் பேசும் மக்களி;ன் எதிர்காலத்தை சூனியமாக்கும் நிகழ்வுகளே அரங்கேறிக்கொண்டு இருக்கும்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் டியூ குணசேகரா, திஸவிதாரண, தமிழ் பிரதேசங்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடதுசாரிகள், புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் இடதுசாரிகள் போன்ற இடதுசாரித் தலைவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட ஜனநாக முற்போக்கு ஐக்கிய முன்னணி செயற்பாடுகளில் இறங்கி தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கைகளை விதைத்தiயும் மறுக்கவில்லை. இதில் ஈபிடிபி, பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கம்யூனிஸ்ட்; கட்சிகள் ஒரு மேடையில் அமர்ந்து நம்பிக்கைகளை ஊட்டினர். இது யாழ் வவுனியா மன்னார் என பரந்திருந்தாலும் போதியளவாக இருக்கவில்லை. ஆளணி, பொருளாதாரப் பற்றாக்குறை போன்ற பல காரணிகள் இவர்களின் பரந்துபட்ட செயற்பாடுகளுக்கு முக்கிய இடைஞ்சலாக இருப்பதும் ஒரு முக்கிய காரணியாகும். ஊடகங்களும் போதியளவு முக்கியத்துவம் இவற்றிற்கு கொடுக்கவில்லை மேலும் இவர்கள் தமது செயற்பாட்டை கிழக்கு மாகாணம் நோக்கி விஸ்தரித்திரக்க வேண்டும். கிழக்கில் நிலவும் மயக்க நிலைமைகளை தெளிவடையச் செய்ய இவை பெரிதும் உதவி இருக்கும். இவ்வாறு செயற்பட்டிருந்தால் மேலும் பல ஆயரம் வாக்குகளை மகிந்தாவை நோக்கி திருப்பி இருக்கலாம்.

மாற்றுத் தலமையின் பலத்தையும் இருப்பையும், உண்மைத்தன்மையும், நம்பிக்கைதன்மையையும் மக்களிடம் கொண்டு செல்லும் மகத்தான வேலைகளை செய்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் இன்று வேண்டி நிற்பதெல்லாம் ஒரு புதிய நம்பிக்கையாக முன்னோக்கி தம்மை நகர்த்திச் செயல்லக் கூடிய தலமை. இதில் ஆயுதங்களின் பிரசன்னம் தவிர்கப்பட வேண்டும். இனி யாரிடம் இருந்து பாதுகாக்க ஆயுத பவனிகள். இவற்றை முற்று முழுதாக தவிர்க்க முயல வேண்டும். மக்கள் உங்களை நெருங்கி வந்து பேசும் அந்நியோன்யத்தை ஏற்படுத்த வேண்டும். திறப்பதும், மூடுவதும், சந்திப்பதும், பேசுவதும், அறிவித்தல்விடுவதும், அறிக்கை விடுவதும் ஒருவர் அல்ல பலரால் செய்யப்பட வேண்டும். இது பன்முகப்படுத்தப்பட்ட தலமையை காட்டி நிற்கும். கொள்கை, கோட்பாடு, அர்பணிப்பு ஏதுமற்ற சுயநலக்கூட்டம் சம்மந்தர் கோஷ்டியினால் ‘ஒன்றாக’ நிற்க முடியமானால் ஏன் உங்களால் முடியவில்லை? என்ற கேள்விகள் நியாயமானது தானே.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் மகிந்தாவை ஆதரித்தல் என்ற ஒரு விடயத்திற்காகவேனும் ஓரணியில் திரண்டீர்கள். ஏன் உங்களால் ஒரு மேடையில் தோன்றி ஒரே குரலில் உங்கள் ஆதரவு பிரச்சாரத்தை மேற் கொள்ள முடியவில்லை. இப்படிச் செய்திருந்தால் உங்கள் செய்தி இலங்கை மக்கள் மத்தியில் இன்னும் பலமாக ஒலித்திருக்கும். தமிழ் பேசும் மக்கள் இன்னும் சற்றேனும் அதிகமாக மகிந்த ராஜபக்ஷாவிற்கு வாக்களித்து இருந்திருப்பார்கள். இவ் ஆரொக்கியமான விமர்சனம் உங்கள் காதுகளில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னே மநாகரசபைத் தேர்தல் காலங்களிலும் பலராலும் ஓதப்பட்டதுதானே. வருமுன் காப்போனாக செயற்பட்டிருக்கவல்வா வேண்டும். ஒரு வகையில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் மகிந்தாவிற்கு எதிராக வாக்களித்து எதிர்த்து நிற்கின்றனர் என்பதையும் இனம் காண நீங்களும் ஒரு வகையில் காரணம் ஆகிவிட்டீர்கள். இனிவரும் காலங்களில் இவ் தவற்றை தவிர்த்து செயற்படுவீர்கள் என நம்புகின்றோம்.

இன்மேலும் தனித்து நின்றால் நீங்கள் இல்லாமல் போய்விடும் அளவிற்கு தமிழ் மக்களிடம் செய்திகள் போய் சேரமுடியாமல் போய்விடும். அவசரமாக ஆனால் நிதானமாக ஒரு வெகுஜன பத்திரிகை ஆரம்பிக்கப்பட வேண்டிய கால கட்டம் இது. இது கட்சிகளின் புகழ்பாடும் கட்சிப் பத்திரிகையாக இல்லாமல் வெகுஜன பத்திரிகையாக உருவாக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டு செல்ல ஆவன செய்யப்பட வேண்டும.; இருக்கும் வெகுஜன பத்திரிகைகளிடம் நியாயமான செய்திகளை கொண்டு வருவதற்கான வேலைகளை முன்னெடுத்திருந்தால் இன்னும் கூடுதலான வெற்றியை தமிழ் பிரதேசங்களில் மகிந்தா பெற்றிருக்க முடியும்.

யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் மூன்று பத்திரிகைகளும் உங்கள் தரப்பு செய்திகளையும் வெளிக்கொணர ஆவன செய்தல் வேண்டும் இது போல் கொழும்பு தமிழ் பத்திரிகைகளிலும் செய்திகள் வர ஆவன செய்தல் வேண்டும். தமிழ் பத்தரிகைகளுடன் ஒப்பிடுகையில் சிங்களப் பத்திரிகைகளில் பலதரப்பட்ட செய்திகளை, மாற்றுக் கருத்தக்களை தாங்கி வெளிவரும் ஆரோக்கிய நிலமைகள் உள்ளன. ஆனால் மிக நீண்டகாலமாக தமிழ் பிற்போக்குத் தலைமைகளை தூக்கிப் பிடிக்கும் செய்திகளையும், பிரச்சாரங்களையும் மட்டும் தமிழ் பத்திரிகைகள் பெரும்பாலும் தூக்கிப் பிடிக்கின்றன. ஈழநாடு பத்திரிகையின் அருமையை இன்று எம்மில் பலர் உணர்கின்றோம். அதுவும் திரு சபாரத்தினம் ஆசிரியராக இருந்த அந்த பொன்னான காலம் மீண்டும் வரதா என்று ஏங்கும் நிலையிலே நாம் இன்று உள்ளோம்.

ஈழவிடுதலைப் போராட்டம் கூர்மையடைந்து பலமாக இருந்த காலகட்டங்கள்ல் ஈழநாடு பத்திரிகையின் பங்களிப்பு மகத்தானது. சில விமர்சனங்கள் இருந்தாலும், பிரதேச ஐக்கியத்திற்கான அவர்களின் செயற்பாடுகள் மிகவும் காத்திரமாக இருந்தது. புலிகளின் மிரட்டலுக்கு மத்தியிலும் இவர்கள் சகல தரப்பு செய்திகளை வெளியிடுவதில் ஓரளவேனும் சரியாகவே நடந்தனர்.

தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் மமிந்தாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. இவர்கள் எப்போதும் தமது வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐதேக ஆதரித்து நிற்கின்றன. அதற்கு இவர்கள் தூக்கிப்பிடிப்பதும் தேசியம், பத்திரிகைச் சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவையே. மாற்றுக் கருத்தாளர்கள் தமது கருத்துக்களை கொண்டு செல்ல ஒரு பலமான ஊடகம் இல்லாத நிலையே கடந்த 30 வருடங்களாக நிலவி வருகின்றது. திரிபுபடுத்திய செய்திகளையும், இருட்டடிப்பு செய்திகளையும், பிற் போக்கான செய்திகளை காவுவதில் இவர்களுடன் போட்டிபோட நிச்சயம் ஒரு ஊடகம் தேவை. மேற்படி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இவர்கள் தமது பத்திரிகை சுதந்திரத்தை மறுக்கின்றனர் என்று வேறு கோஷம் போடுகின்றனர்.

ஈபிடிபி தமது அமைப்பிற்குள்ளும், வெளியேயும் ஒரு பரந்துபட்ட பன்முகப்படுத்தப்பட தலைமையை காட்டி நிற்க வேண்டும் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். சம்பந்தன் கூட்டமைப்பில் உள்ள வெற்று வேட்டுக்களுடன் ஒப்பிடும் போது ஈபிடிபி, பத்மநாபா ஈபிஆர்எல்எவ், புளொட் போன்ற அமைப்புக்களில் நல்ல தலைவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை முன்னிலைப்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும் இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் விநாகமூர்த்தி, கிழக்கு முதல்அமைச்சர் சந்திரகாந்தன், ஸ்ரீதரன், சித்தார்தன் போன்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பல பொது நிகழ்வுகளில் இவர்களையும் முன்னிலைப்படுத்தி மக்களுக்கு ஒரு பலமான பன்முகப்படுத்தப்பட்டுள்ள தலைமை எம்மிடம் உண்டு என்பதை நம்பிக்கையூட்டும் விதமாக செயற்படுதல் வேண்டும். எம்மிடம் இருக்கும் நல்லவற்றை முன்னிறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லைவே.

அன்றேல் தமிழ் மக்களை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் ஏதும் இல்லாத சம்மந்தன் கூட்டமைப்பை மட்டுமே மக்கள் காணுகின்ற நிலைமைகள் ஏற்படும். இதனை ஒரு ஆரோக்கியமான விமர்சனமாக சம்மந்தப்பட்டவர்கள் கொள்வார்கள் என நம்புகின்றோம். இந்த நிலமை ஜனாதிபதித் தேர்தலில் பிரதிபலிக்காகததும் மகிந்தாவிற்கு நீங்கள் யாபேரும் அளித்த நிபந்தனையற்ற ஆதரவை வாக்குகளாக மாற்ற முடியாமல் போனதற்கான காரணிகளில் ஒன்றாகும். இதன் பிரதிபலிப்பையும் வடக்கிலும் கிழக்கிலும் மாற்று தமிழ் அமைப்புக்கள் ஆதரித்த மகிந்தாவை தவிர்த்து போர் முரசு கொட்டும் சரத்திற்கு வாக்களித்த செயற்பாடுகள் மூலம் காணக் கூடியதாக இருந்தது.

புலிகளை தற்போது பிரதிநிதித்துவப்படுத்துவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என ‘மாவீரர்’ உறவுகள் நம்புகின்றன. எனவே அவர்கள் காட்டும் நபருக்கு கண்ணை மூடிக்கொண்டு புள்ளடி போடும் முடிவு இதனாலேயே ஏற்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்தை ஆதரித்ததன் மிக முக்கிய காரணம் மாற்று தமிழ் அமைப்புக்கள் மகிந்த முகாமில். அவர்கள் பாஷையில் துரோகக் குழுக்கள் மகிந்த ராஜபக்ஷ ஐ ஆதரிக்கின்றன. எப்படி தாங்கள் அதே முகாமில் ஒன்றாக இருக்க முடியும். எனவே அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. மாற்றுக்கருத்தாளர்கள் யாபேரும் தமது ஆதரவு நிலையை அறிவிக்கும் வரை சம்மந்தர் குழு தமது முடிவை அறிவிக்காமல் காத்திருந்து இதற்காகவும். இதற்கு அடுத்ததாக சரத் வெல்வார் என்ற தமிழ் மாவீரரின் கண்ணோட்ட அடிப்படையும் ஆகும். சரத் பொன்சேகா எப்படியும் வெல்வார். எனவே பதவிகளை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற விடயமும் ஆகும்.

மறுபுறத்தில் மாற்று கருத்து தமிழ் அமைப்புக்கள் தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியினரை வென்றெடுத்துள்ளனர் என்பது உண்மையாக இருந்தாலும் இன்னும் நிறையவே வேலை செய்ய வேண்டியுள்ளது. கூடவே வெற்றி யார் பக்கம் என்பதில் இவர்களுக்கும் சில தளம்பல்கள் இருந்ததினால் ஓடும் புளியம்பழம் போலவும் உறவுகளை பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனரோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவால் பலர் மகிழ்ந்தனர். சிலர் கவலை அடைந்தனர். இதில் இருவர் மிகவும் அக மகிழ்ந்தனர் ஒருவர் மகிந்த ராஜபக்ஷ, மற்றயவர் ரணில் விக்ரமசிங்க முதல்வர் வெற்றியினால் மகிழ்ந்தார். இரண்டாமவர் தோல்வியினால் மகிழ்ந்தார். ஆமாம் சரத் பொன்சேகாவின் தோல்வியினால் மகிழ்ந்தார். இலங்கை அரசியலை ஆழமாக பார்த்தால் இது புரியும். இந்த வகையில் இலங்கையின் இரு பெரும் பிரதான ஆளும் எதிர்கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதித் தேர்தல் முடிவால் மகிழ்ந்த தேர்தல் இதுவாகும்..
(சாகரன்) (மாசி 06, 2010)

11 Responses to “ மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்.. -சாகரன் (கட்டுரை) ”

  1. மக்களை எல்லோரும் குறை கூறும் நிலை ஒன்று தோன்றியுள்ளதை அவதானிக்கமுடிகிறது இதிலிருந்து மீண்டும் ஒருதடவை மக்களுக்காக கட்சிகளோ இயக்கங்களோ இல்லை மக்கள்தான் அவைகளுக்காக தம்மை மாற்றிக்கொண்டு அவா்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றால்போல் ஆடவேண்டும் என்று எண்ணுகின்ற கீழ்தரமான மனோநிலையை அவதானிக்க முடிகிறது.

    ஜனநாயகம் என்றால் தோ்தலில் மக்கள் எதைதெரிவிக்கின்றார்களோ அதை ஏற்றுக்கொள்ளும் தகுதியும் பக்குவமும் உள்ளவா்களே தலைவா்கள், புலிகளின் வீழ்ச்சிக்கு பின்பு கூட தமிழ் கட்சிகளானாலும் இயக்கங்களானாலும் ஒரு குடையின் கீழ் வரமுடியவில்லை என்னும்போது மக்களை குறைகூற இவா்களுக்கு அருகதை இல்லை.

    பொதுவாக தமிழ் மக்கள் இயக்கங்களை ஓட்டுமொத்தமாக மறுதலிக்க முனைகிறார்கள் என்பதை உணராமல் வெறுமனவே அவா்கள் புலி ஆதரவாளா்களாகவே உள்ளனா் என்று புலம்புவது தேவையற்றது கிழக்கு மகாண தமிழா்கள் அந்த 20 வருட முன்னைநாள் புலித்தம்பிகளை நம்பி சோரம் போவதற்கு அவா்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை நன்றாக தெரியப்படுத்தியுள்ளார்கள்.

    ஆழமாக சிந்தித்தால் ராஜபக்ச வென்றுவிட்டதாக விழா கொண்டாடினாலும் உலகத்தின் முன்னே அவரும் அவரது பிராந்திய சேவகா்களும் தமிழா்களின் வாக்களிப்பின் முடிவால் தோற்றுப்போனார்கள் என்றே கூறவேண்டும் இதை உலகம் நன்றாக கவனித்துக்கொண்டிக்கும் என்று நம்புகிறேன்.தமிழா்களை பிரித்தாள முற்பட்டவா்களுக்கு நல்ல சாட்டையடி கிடைத்துள்ளதை ஏற்க முடியாமலும் ஏதோ நல்ல சந்தா்ப்பம் கைநழுவிப்போய்விட்டதாக சிலா் புலம்புவதை இட்டு சிரிப்புத்தான் வருகிறது.

    வாழ்க மக்கள் வாழ்க ஜனநாயகம்!!!!

  2. இராசபக்சே எதை உன்னிடம் பேசி தீர்க்க அழைக்கிறாய்? இழந்த இன்னுயிர்களையா? கற்பையா?பொருட்களையா? எதற்காக இந்த நாடகம்?சர்வதேச சமுதாயத்திடம் கடன் வாங்குவதற்காகவா? அல்லது சர்வதேச சமுதாயம் உன் மீது விசாரணை நடத்தும் என்ற அச்சமா??? இராசபக்சே பகல் கனவு காண்கிறார். வடக்கில் மேம்பாடு என்று சொல்வதெல்லாம் ஏமாற்று. தேர்தலுக்கு முன்னர் மீன்பிடி்க தடையை நீக்கிய இராசபக்சே தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அந்தத் தடைகளை போட்டிருக்கிறார்.வடக்கில் கிழக்கில் மறுவாழ்வுப் பணிகளைச் செய்து வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இராசபக்சே அரசு தடை செய்துள்ளது. வடக்கில் இப்போது நடக்கும் ஒரே மேம்பாடு ஏ9 நெடுஞ்சாலை இரு மருங்கிலும் புத்த சிலைகளும் புத்தவிகாரைகளும் வேக வேகமாகக் கட்டப்படுவதுதான். முன்னர் தமிழர்களின் தாயகம் இராணவமயப்படுத்தப் பட்டது.சிங்களக் குடியேற்றம் மூலம் சிங்கள மயப்படுத்தப்பட்டது. இப்போது பவுத்த மயப்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் இந்தியாவின் துணையோடு செய்யப்படுகிறது..கொலை வெறியர்களுக்குக் கொலை வெறியர்கள் பாராட்டுவதற்கு வாழ்த்துப் பா பாடும் ஆரியர்கள் தமிழ்ப் பெயரில் மறைந்திருந்தாலும் அடையாளம் காணப்படுகிறார்கள். பொன்சேகோ பக்கம் படையணியினர் மாறிப் படைப் புரட்சியில் ஈடுபடக்கூடாது எனச் சிங்கள அரசு படாத பாடு படுகிறது. அதன் ஒரு பகுதியே இந்தப்பாராட்டு மழை. மனித நேயமற்ற ஈவு இரக்கம் இல்லாத கொலைவெறியர்களுக்கு இறைவன் தர உள்ள பாராட்டும் காத்திருக்கிறது. வினை விதைத்தவர்கள் வினையை அறுடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை..இழப்பு ஒன்றும் எமக்கு புதிது அல்ல எல்லாம் எம் மண் விடுதலை அடயும் போது உலகம் சொல்லும் வரலாறு வெல்லும் விழுந்தாலும் வித்துகளாய் மடிந்தாலும் மக்களுக்காய் என்றன்றும் அவர்களே (தலைவரின் சிந்தனை) சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை..சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்துவதையே அமைதி எனக் கூறிக் கொண்டு அரச பயங்கரவாதத்தையே தொழிலாகக் கொண்டு பன்னாட்டு நிதி உதவிக்காகப் பசப்பிக் கொண்டு இந்திய சீனத் துணையுடன் உலகை ஏமாற்றும் சிங்களம் உண்மையிலேயே தன் நாட்டு மக்கள் மீது பற்றுக் கொண்டு இருந்தால் அவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற – ஈழப் போரில் தேவையற்று உயிர் இழக்கதவும் உறுப்புகள் இழக்கவும் செய்த சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க, இலங்கை மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்க வேண்டும். தனித்தனி உரிமையுடைய தமிழ் ஈழ இலங்கைக் கூட்டு ஒன்றியத்தை அமைக்க வேண்டும்.பிற வெல்லாம் வழக்கம் போல நிகழ்த்தும் ஏமாற்றுக் கண்துடைப்பு வேலைகளே. மேலும் இவ்வாறு அறிவிப்பதற்கு யாரையும் பேச வாருங்கள் என்று அழைக்க வேண்டிய தேவையில்லை. இன்னும் ஏழாண்டு ஆளப் போவதாக நம்பியுள்ள் பக்சேவே அறிவித்தால் போதுமானது.அதற்குள் என்னென்ன மாற்றம் நிகழப் போகிறதோ??? வெல்கதமிழ் ஈழம்! வளர்க ஈழ உலக நட்புறவு!..

  3. நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பகுதியை வாக்களிக்க விடாமல் தடுத்தவர்கள், போட்ட வாக்கை மோசடித்தனமான எண்ணிக்கை மூலம் அதை நேராக்கி தம்மை வென்றவராக அறிவிக்கின்றனர். இப்படி இந்த வாக்குரிமை என்பது, எவ்வளவு போலியானது என்பதும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்தின் தூண்டில் என்பதும் வெளிப்டையான ஒரு உண்மையாகி இன்று அம்மணமாகிக் கிடக்கின்றது.தேர்தல் ஆணையாளரின் தனிப்பட்ட மனச்சாட்சி தான், வாக்குக்கு என்ன நடந்தது என்ற உண்மைகளை வெளியுலகின் முன் அம்பலமாக்கி விடுகின்றது. அவர் தன் மீதான கொலை அச்சுறுத்தலையும் மீறி, அதை வெளிக்கொண்டு வந்தார். இந்த ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அதிகார வர்க்க பிரதிநிதியின் தனிப்பட்ட மனச்சாட்சி, நேர்மை உணர்வு கூட, இடதுசாரியம் பேசி திடீர் புரட்சி பேசும் மரமண்டைகளுக்கு கிடையாது.

    யுத்த காலத்திலும் சரி, அதற்கு முன்னும் புலிகளையும், இந்த அரசையும் விமர்சித்து மக்களை வழிகாட்ட முன் வராதவர்கள், மே 18 இன் பின் திடீரென வந்தார்கள். வந்தவர்கள் போராடிய எங்களை மறுத்து அதைக் கொச்சைப்படுத்திய படி, மக்களை வழிகாட்டப் போவதாக கூறி களமிறங்கினர். வெட்கக்கேடு என்னவென்றால், தேர்தலை தவறாக வழிகாட்டியவர்கள், தேர்தலின் பின் நடந்த கூத்துகளை அம்பலப்படுத்தி மக்களை புரட்சியின் பக்கம் வழிகாட்ட முடியாமல் போனது தான். இனி ஆவி தன்னுள் இறங்கும் வரை, இதை அம்பலப்படுத்திப் போராட முன்வர மாட்டார்கள்.
    மே18 இன் பின் அவசரமாக கோவணத்தை இழுத்துக் கட்டியபடி அரசியலுக்கு ஓடி வந்தவர்கள், மக்கள் முன் இன்று நிர்வாணமாக கோமணத்தை கழற்றி எறிந்து விட்டு நிற்கின்றனர். மக்களை உடனுக்குடன் வழிகாட்ட வக்கற்றவர்கள், மக்களை வழிகாட்ட முனைந்தவர்களின் இன்றைய கருத்தை நாளை திருடி, தமக்கு ஏற்ப அதைத் திரித்து முகம் காட்டுவது தான் இவர்கள் திடீர் நடைமுறையாகும்

    – தோற்கடிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசன் .

  4. வணக்கம்
    நன்றி உமது தெளிவான சிந்தனைக்கு kumaar ..

    ஏன் என்றால் நாம் எதிரும் புதிருமாக நின்று கருத்துக்களைப் போட்டாலும் கடைசியில் நாம் தமிழர் அதிலும் நாப்பத்தெட்டில் இருந்து என்பத்திமுன்று வரையும் அடிவாங்கிய இனம் பின்பு என்பத்திமுன்றில் இருந்து இரண்டாயிரத்தெட்டு வரையும் அடிகொடுத்த இனம் ஆனால் இன்று அடிவாங்கும் இனமாக மாறியதற்கு என்ன காரணம் ?? தமிழர்கள் ஒற்றுமையாய் இருக்கவில்லை என்பதே உண்மை

    ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சில தமிழ் கட்ச்சிகள் எமது எதிரிகளான சிங்கள அரசின் கைப்பொம்மைகளாக இயங்கி வந்தன ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் கோபத்துக்கு ஆளாகி இருந்தனர் இவர்களை தமிழர்க்க எப்போதும் திரோகிகள் என்றுதான் கூறிவந்தனர் கூறி வருகின்றனர், ஆனால் இவர்கள் மக்களிடம் இருந்து தப்புவதற்காக சொன்ன வார்த்தை நாம் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் என்று அந்த மாற்றுக் கருத்து என்ன என்பது ?இவர்களிடம் இருந்து எப்பொழுது வரும்???

    விடுதலைப் புலிகள் யார் ?இவர்கள் எந்த தேசத்தைத் சேர்ந்தவர்கள் இவர்களின் போராட்டத்தின் நோக்கம் என்ன ?இவர்களின் போராட்டத்தின் தன்மையும் அதில் அவர்கள் காட்டிய உறுதியும் தமிழ் மக்களையும் உலகத்தையும் எந்தளவுக்கு தெளிவடைய வைத்துள்ளது ??இன்று தமிழர்கள் தனித்து விட்டார்களா ?? அப்படிஎன்றால் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்கள் பலமாக தம் கருத்தை ஓங்கி ஒலித்துள்ளார் இன்று அர்த்தப்படுமா ??அப்படி செய்திருந்தால் ஏன் நாம் இன்று எந்த நிலைக்குத் தள்ளப் பட்டோம் ????

    ஆம் இதற்கும் நான் மேலே கூறியது போல் ஒற்றுமையின்மையே காரணம் ஓம் நான் மீண்டும் சில தமிழ் கட்சிகளின் தெளிவில்லாப் பயணத்தைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், உள்ளேன் என்பதை விட உள்ளோம் என்பது சாலப் பொருந்தும் அது என்ன வென்றால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் போராடியது தமிழரின் விடுதலைக்காக இது உலகம் அறிந்த உண்மை வேண்டும் என்றால் சிலர் தாம் செய்கின்றவற்றை சரி என்பதற்கு விடுதலைப் போராட்டத்தைப் பிழை என்பது ஒரு சுயநலன் சார்ந்தது இவர்களின் கருத்து தமிழர் சார்ந்தது இல்லை ஏன் என்றால் மாற்றுக் கருத்து என்றால் என்ன ??

    விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்கும் தமிழ் மக்களின் விருப்பமாகிய தமிழ் ஈழத்தை அழிப்பதற்கும் இவர்கள் சொல்லும் சொல் தான் மாற்றுக் கருத்தா?? உங்களுக்கு விடுதலைப் புலிகளுடன் கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பதற்காக எப்போதாவது இது நாம் எமக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று எண்ணியுள்ளீர்களா ?? இல்லை ஏன் என்றால் விடுதலைப் புலிகள் கொண்ட கொள்கையில் இருந்து மாறவில்லை அவர்கள் தமிழரின் வாழ்வுக்காக இறுதிவரை போராடியவர்கள் அவர்கள் பதவிகளுக்கு ஆசைப்பட்டு தமிழருடைய விருப்பமாகிய தமிழ் ஈழத்தை அடைய தங்களால் ஆனா முயற்ச்சி எல்லாம் செய்துள்ளனர்,

    இந்தமுறச்சி தான் இன்று ஆயுதப் போராட்டம் நின்றபோதும் எமது அரசியல் போராட்டம் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கின்றது எனவே தமிழ் கட்ச்சிகள் இவ்வளவு காலமும் சொல்லி வந்த பொய்யை மீண்டும் சொல்ல முடியாது, அதாவது மாற்றுக் கருத்து என்னும் முட்டாள்த் தனமான உங்கள் கருத்தை விட்டு விட்டு தமிழர்களாகிய நீங்கள் தமிழ் ஈழத்தை எப்படி நிறுவலாம் என்பதைப் பற்றிக் சிந்தியுங்கள் அதற்க்கு முதல் நீங்கள் ஒரு குடையின் கீள் வரவேண்டும் இல்லாவிடில் சிங்களவன் எமது எதி கால சந்தததிகளையும் தமது கைப்பொம்மைகலாகப் பயன்படுத்துவான்

    நாம் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் தேசியத் தலைவர் மிகவும் நீண்ட பாதையின் பின் இப்படியொரு நல்ல சூழ்நிலையை உருவாகித் தந்துள்ளார் சிங்களத்தை இவ்வளவு காலமும் எதிர்த்து வந்தோம் ஆனால் இப்பொழுது நிலைமை வேறு இது தான் நல்ல சந்தர்ப்பம் தமிழன் எல்லோரும் ஒரு குடையின் கிள் வாருங்கள் புலிகள் ராணுவ முறைமையில் இருந்து பின்தள்ளப் பட்டார்களே தவிர அவர்கள் தமிழருக்கு அரசியல் பாதையை விரிவாக்கித் தான் தந்துள்ளனர் இது யாரும் மறுக்க முடியாது

    இதை நீங்கள் சரியாகப் பயன் படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் தமிழ் அரசியல் கட்ச்சிகளுக்கு தமிழ் ஈழத்தில் வேலை இருக்காது என்றுதான் அர்த்தப்படும் ஏன் என்றால் எத்தைனையோ உயிர்த் தியாகங்களின் பின்பு இப்படி ஒரு சந்தர்ப்பம் கொண்டுவரப்பட்டது அதை ஒரு இனம் சரியாகப் பயன் படுத்தத் தவறின் இந்த இனம் மீள்வதற்கு வேறுவழி கிடைக்கும் என்று நாம் எண்ணவில்லை அதிலும் தமிழன் எப்போது சிங்களவனுக்குப் கைப்பொம்மையாக இருப்பதில் இருந்து விடுபடுகின்றானோ அப்பத்தான் நாம் ஒற்றுமையாய் இருந்து எமது எதிர்ப்புக்களைக் காட்டமுடியும்

    ,எனினும் எமது தேசியத் தலைவர் கூறியது போல் ஆயுதம் ஏந்தித் தான் போராடவேண்டும் என்றில்லை ஆனால் எப்படிப் போராட வேண்டும் என்பதை எதிரியின் பலத்தை வைத்தும் நாம் எந்த இடத்தில் நிற்க்கின்றோம் என்பதை வைத்தும் தீர்மானிக்க வேண்டும் இப்பொழுது நல்ல அரசியல் களத்தில் நிற்கின்றோம் எனவே தமிழர்களாகிய நீங்கள் ஒரு குடையின் கீள் வந்தால் தமிழருக்கு நூறு மடங்கு பலம், இது ஒரு தமிழ் குடிமகனுக்கு இருக்கக் கூடிய உணர்வும் ஏக்கமும்,
    நன்றி
    அன்றும் இன்றும் என்றும்
    உங்கள் pskvannni

  5. இந்தியா தன்னைச் சுற்றிய பிராந்தியங்களில், தன் இராணுவ பொருளாதார செல்வாக்கை தக்கவைக்க, இராணுவம் சார்ந்த ஆட்சி அதிகாரங்களையே இன்று தேர்ந்தெடுக்கின்றது. அதைத்தான் மகிந்த குடும்பம் இன்று முனைப்புடன் முன்தள்ளி முன்னெடுக்கின்றது.மகிந்த குடும்ப சர்வாதிகாரம் ஊடான பாசிசம் கட்டமைக்கும் இராணுவ சர்வாதிகாரம், எதிர் நிலையில் இராணுவ சதிக்கு ஒரு தூண்டுகோலாக இன்று மாறி வருகின்றது. தேசிய இன ஒடுக்குமுறை, எப்படி புலியை உருவாக்கியதோ அதுபோல், இராணுவம் மேலான குடும்ப ஆதிக்கம் சார்ந்த ஒடுக்குமுறை, இராணுவ சதிப் புரட்சியை வெளியில் இருந்து மகிந்த குடும்பம் தூண்டுகின்றது.

    தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச ஆட்டம் போடுகின்றது.

    ஒரு சர்வாதிகார குடும்பத்தின் கீழ் ஒரு குற்றக் கும்பல் தங்கள் குற்றங்களை மூடிமறைக்கவும், கொள்ளையிட்டதை அனுபவிக்கவும் முனைகின்றது. இதனால் எதிர்கட்சி மீதும், ஊடகவியல் மீதும் வன்முறை, கைது, கடத்தல் என்று ஒரு போரையே தொடுத்துள்ளது. அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய பின், அதற்கு ஏற்ப ஆதாரங்களை தேடுகின்றது. இந்த வகையில் சரத்பொன்சேகாவைத் தொடர்ந்து, இராணுவத்தில் பல தலைகளை மகிந்த குடும்ப சர்வாதிகாரம் உருட்டுகின்றது. முன்னாள் இராணுவ அதிகாரிகளை கைது செய்கின்றது. தமது குடும்ப சர்வாதிகாரத்தை ஏற்காத இராணுவ அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புகின்றது. பாரிய களையெடுப்பை இராணுவம் முதல் பல தளத்தில் ஏன் ஊடகவியல் வரை அதை நடத்துகின்றது. மொத்தத்தில் இதன் மூலம் ஒரு இராணுவ ஆட்சியை, மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தங்கள் பாசிச வழியில் இலங்கையில் நிறுவி வருகின்றது.

    புலிகளை அழித்தும், தமிழினத்தை ஒடுக்கியும் சிங்களப் பேரினவாதத்தை பாதுகாக்கவும் போராடி வென்றவர்கள் என்று கடந்த காலத்தில் காட்டப்பட்டவர்கள் தான், இன்று களையெடுக்கப்படுகின்றனர். ஓய்வு பெற்றவர்கள் முதல் இன்று இராணுவத்தில் உள்ளவர்கள் வரை பலர் கைது, கண்காணிப்பு, ஓய்வு என்று திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர்.இதன் மூலம் மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த, இராணுவத்தை எடுபிடி அமைப்பாக்க முனைகின்றனர். அந்த வகையில் தொடங்கிய களையெடுப்பு, இராணுவ புரட்சி பற்றிய மகிந்த சிந்தனையிலான கற்பனையை, மகிந்த குடும்ப சர்வாதிகாரம் பரப்பி வருகின்றது.

    புலிகளை அழித்தும், தமிழினத்தை ஒடுக்கியும் சிங்களப் பேரினவாதத்தை பாதுகாக்கவும் போராடி வென்றவர்கள் என்று கடந்த காலத்தில் காட்டப்பட்டவர்கள் தான், இன்று களையெடுக்கப்படுகின்றனர். ஓய்வு பெற்றவர்கள் முதல் இன்று இராணுவத்தில் உள்ளவர்கள் வரை பலர் கைது, கண்காணிப்பு, ஓய்வு என்று திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர்.

    இது எந்த அடிப்படையில் நடக்கின்றது? சுயாதீனமானதும், சுய ஆளுமையுள்ளவர்களும் இராணுவத்தில் இருந்து கழற்றிவிடப்படுகின்றனர். தமக்கு விசுவாசமானவர்கள், நக்கித் தின்னக் கூடியவர்கள், பொறுக்கித் தின்னக் கூடியவர்களை, இராணுவத்தின் தலைமைக்கு கொண்டு வருகின்றது மகிந்தா குடும்ப சர்வாதிகாரம்.

    தங்கள் மக்களை ஒடுக்கி வாழவும், மக்களை ஒடுக்கும் சிறந்த விசுவாசமான கூலிப் படையாக இராணுவத்தை மாற்றவும், இந்தக் களையெடுப்பு.
    அதாவது ஒரு குடும்ப இராணுவ சர்வாதிகார பாசிச ஆட்சியை, இலங்கையில் வெற்றிகரமாக நிறுவ இராணுவக் களையெடுப்பு நடக்கின்றது. முதலில் இராணுவத் தளபதியான சரத்பொன்சேகாவையே இராணுவத்தில் இருந்து துரத்தினர். இது இவர்களுக்கே எதிரான, போட்டி வேட்பாளராக்கியது. இதன் விளைவால் தங்கள் தேர்தல் தோல்வியை தவிர்க்க, சதிகள் மூலமும், மோசடிகள் மூலமும், தேர்தல் “ஜனநாயக” அதிகார பாரம்பரியங்கள் மூலமும், தம்மைத்தாம் வென்றவர்களாக அறிவித்துக் கொண்டனர்.இராணுவ ஆட்சி பற்றியும், இராணுவ சதி பற்றியும் எந்த ஆதாரத்தையும் மக்கள் முன், சட்டத்தின் முன் வைத்தது கிடையாது. தம்மை கொல்ல சதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும், அது வைத்தது கிடையாது. மாறாக எதிர்தரப்பை கைது செய்து, அதை கண்டுபிடிப்பதாக கூறிக்கொள்கின்றனர்,இந்த அரசு சட்டத்துக்கு புறம்பாக பல ஆயிரம் இளைஞர்களை இரகசியமாக கடத்தி கொன்றது. ஒரு இரகசிய ஒரு கொலைக் கும்பலே, இந்த அரசின் தூண்கள். சரத்தை எப்படி கொல்வது என்பது இந்த கொலைக் கும்பலின் தீராத கவலை.

  6. மலர், நீங்கள் எல்லாம் நினைப்பது -உங்கள் கனவு. நீங்கள் கனவு கொண்டே இருங்கள். அனால் மட்டவர்களையும் உங்களை போல் முட்டாள் கனவு காணும்படி வற்புறுத்த வேண்டாம்.

    உங்கட ஓலங்கள் எல்லாம் உங்கட உங்கட நாட்டில்! இந்த ஓலங்களை முடிந்தால் இலங்கையில் போய் செயுங்கள்! ஏதோ இலங்கை வாழ் மக்கள்,உங்களிடம் கை ஏந்தி பிச்சை கேட்டுக்கொண்டு அலைகிறார்கள் போல் -அலையிரீன்களே!

    மலர்/PSK வன்னி போன்றவர்களை மற்றவர்களும் படிப்பது போல் முழு நேரமாக நின்று எழுதுகிறீர்களே! உங்களுக்கு வேற வேலையே இல்லையா? வீடு வீட சுரண்டின கூட்டங்கள் பல,புலம் பெயர் நாடுகளில் வேலை இல்லாமல் தானம் இருக்கு. சுரண்டி சுரண்டி வயிறு வளர்த்த கூட்டம் தானே!

    இதையும் படியுங்கோ. (tamilnewsweb .com )

    வன்னி மக்களுக்கு புலிகள் சேகரித்த பணத்தில் 10 மில்லியன் பெறுமதியான வைரமோதிரம் றம்பாவுக்கு போடும் புலியை படத்தில் காணலாம்.

    புலிகளுக்கு என சேகரித்த 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இவருடைய பெயரல் கஸ்ரோ கனடாவில் முதலிட்டதாகவும் நோர்வெயில் இருந்தும் ஒருவரை கனடாவுக்கு அனுப்பி இவரை வைத்து ஆயுதங்கள் வாங்கியதாகவும் புலிகளின் கப்பல்களில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் தளபாட வயாபாரம் நடாத்த ஆரம்பத்த 37 வயதான இவர்

    வன்னி மக்களுக்கு புலிகள் சேகரித்த பணத்தில் 10 மில்லியன் பெறுமதியான வைரமோதிரம் றம்பாவுக்கு போடும் புலியை படத்தில் காணலாம்.

    புலிகளுக்கு என சேகரித்த 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இவருடைய பெயரல் கஸ்ரோ கனடாவில் முதலிட்டதாகவும் நோர்வெயில் இருந்தும் ஒருவரை கனடாவுக்கு அனுப்பி இவரை வைத்து ஆயுதங்கள் வாங்கியதாகவும் புலிகளின் கப்பல்களில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் தளபாட வயாபாரம் நடாத்த ஆரம்பத்த 37 வயதான இவர்

    வன்னி மக்களுக்கு புலிகள் சேகரித்த பணத்தில் 10 மில்லியன் பெறுமதியான வைரமோதிரம் றம்பாவுக்கு போடும் புலியை படத்தில் காணலாம்.

    புலிகளுக்கு என சேகரித்த 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இவருடைய பெயரல் கஸ்ரோ கனடாவில் முதலிட்டதாகவும் நோர்வெயில் இருந்தும் ஒருவரை கனடாவுக்கு அனுப்பி இவரை வைத்து ஆயுதங்கள் வாங்கியதாகவும் புலிகளின் கப்பல்களில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் தளபாட வயாபாரம் நடாத்த ஆரம்பத்த 37 வயதான இவர்

  7. Douglas is the hero he will conquer Tamil Eelam

  8. வணக்கம்
    என் அன்பு முட்டாள் பசப்பரதேசி [panchapparathesi ]
    உமக்கு என்ன பிரச்சனை நான் என்னத்தை எழுதினேன் என்று இவ்வளவு கொதிக்கின்றிர் ? ஒரு தமிழன் தான் சுயமாக சிந்திக்க வேண்டும் அடுத்தவன் அப்படி சொன்னான் இப்படி செய்வான் என்பதை விட்டு விட்டு நாம் தமிழுக்காக என்ன செய்தோம் என்ன செய்யப் போறம் என்பதை சிந்திக்காமல் எடுத்ததற்கு எல்லாம் விடுதலைப் புலிகள் பணம் பணம் என்று புலம்புகின்ற நாய்களே ஒரு தடவையேனும் எமது மக்களைப் பிணமாக்கிய சிங்களவனைப் பற்றிப் பேசினியா?? ஓம் விடுதலைப் புலிகள் பணம் இல்லாமல் வைக்கல் கத்தையை வைத்துக் கொண்டா போராடினார்கள் ?

    மற்றது விடுதலைப் புலிகள் என்ன உன்ன மாதிரி தமிழைக் காட்டிக் கொடுத்தா போராடினர் ஓம் அவர்கள் பணம் வாங்கித் தான் போராடினார்கள் யாரோடு போராடினார்கள் இன வெறி பிடித்த சிங்கள அரசோடு போராடினார்கள் ஆனால் நீங்கள் என்ன செய்தநீங்கள் எம் இனத்தை அழித்த சிங்களவனிடம் பணம் வாங்கிப் தமிழனோடு போராடுகின்றிர்கள் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் முட்டாள் எல்லை தமிழனக் காட்டிக் கொடுத்தீர்கள் என்பது உண்மை

    உம்மைப் போன்று சிலர் தமிழனைக் காட்டிக் கொடுப்பது தான் அவகளின் பிழைப்பு இந்த விதமான பிழைப்பை விட ஒரு ஓட்டைச்சிறட்டையில் தண்ணியை விட்டு சாகலாம்
    நன்றி

  9. தமிழனை அதிகமாக கொன்றது தமிழ் புலி!!! சிங்களவன் அல்ல……சிங்களவன் சிங்களவன் என்று சொல்லி நீங்கள் தமிழனை பயமுறுத்தி பிரித்து வைத்து உங்கள் பிஸ்னசை செயுங்கோ வன்னி ……இப்ப உங்கள் கவலை எல்லாம் முந்தின மாதிரி கலக்சன் இல்லை…வெளிநாட்டில் வாழும் சாதாரண தமிழ் மக்களை மிரட்டி காசு கலக்சன் பண்ண ஏலாது……ஆகவே நாட்டில பிரச்னை வாராதா என்று ஏங்கி தூபம் போட்டு கொண்டிரிகிறிங்க……சரத் ஜானதிபதி ஆக வந்தாலும் உங்களுக்கு வெற்றி …சரத்தை கைது செய்தாலும் உங்களுக்கு வெற்றி …பிரபாகரன் இருந்தாலும் உங்களுக்கு வெற்றி (காசு கலக்சன் பண்ணலாம் )பிரபாகரன் செத்தாலும் உங்களுக்கு வெற்றி (கலக்சன் பண்ணிய காசுகளில் வேண்டி விட்ட வீடுகள்,கடைகள் ,பாங்கு அகவுண்டுகள்.சின்ன வீடுகள் ஒன்றுக்கும் கணக்கு காட்ட வேண்டியதில்லை ,எல்லாத்தையும் முழுசா விழுங்கி போட்டு ஏப்பம் விடலாம் )……….என்னவோ செயுங்கோ உங்களுக்கு நிகர் நீங்கள்தான் கலக்சன் பினாமிகளே ……ஆதவன்

  10. வணக்கம்
    ஆதவன்
    aathavan
    நாங்கள் தமிழர்கள் தமிழர்கள் என்றால் நாம் இப்படித்தான் எங்கள் உணர்வுகள் இருக்கும் ஏன் என்றால் சிங்களவனால் நாம் பட்ட துன்பம் கொன்ச்சம் நஞ்சம் இல்லை நான் பல தடவை என்னுடைய கருத்தை ஆணித்தரமாக எழுதியுள்ளேன் இனி தமிழன் வாழவேண்டும் என்றால் தமிழ் ஈழம் அமைய வேண்டும் அப்படி அமையவில்லை என்றால் எமது எனதின் உடல்களை கிணறுகளிலும் குளங்களிலும் ஆறுகளிலும் தான் தேடி எடுக்க வேண்டும் எதுதான் யதார்த்தம் எதை விட்டு விட்டு நீயும் நானும் அடிபடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை,

    இப்படிஇருக்குது இன்றைய சூழ்நிலை புலிகளை அழித்துவிட்டோம் என்று மார்தட்டும் சிங்களமும் அன்று புலியில்லாத போது தமிழர்களையும் தமிழ் கிராமங்களையும் அளித்தது எதற்க்காக ? சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு நாடு அந்த நாட்டின் போக்கிசங்களைப் பாதுகாக்க வேண்டுமேயொழிய அளிக்கக் கூடாது தமிழனின் போக்கிசமாகிய யாழ் நூலகம் எரிக்கப் பட்டது எதற்க்காக என்று உம்மால் விளக்கம் தரமுடியுமா ? நீ வேண்டும் என்றால் கூறலாம் அதை மீண்டும் கட்டித் தந்து விட்டார்கள் தானே என்று ஆனால் நான் கூறுவது கட்டிடத்தை அல்ல தமிழனின் வரலாறு எதுதான் தமிழனை ஈழத்தில் இருந்து அளிக்க போட்ட முதலாவது திட்டம்

    ஒரு இனத்தின் வரலாறு அந்த வரலாற்றுப் பொக்கிசத்தை அளித்து விட்டு சிங்களம் இப்போதமிழன் வந்தேறு குடிகள் என்று அல்லவா கொக்கரிகின்றது வரலாறு என்றால் என்று சிங்களம் வைத்திருக்கும் மாகா வம்சம் அதைப்போல் தமிழனுக்கும் வரலாற்றுப் போக்கிசந்தான் எமது நூலகம் இத்தோடு சிங்களவன் விட்டு வைக்கவில்லை எதுவெல்லாம் தமிழரின் வரலாறைக் குறிக்கின்றதோ அதுவெல்லாம் அளிக்கப் பட்டுள்ளது இதுக்குள் இறங்கினால் எனக்கு நாட்கள் போதாது உமக்கு விளங்கப் படுத்த ,

    அடுத்தது உம்மைப்போன்று இங்கு வந்து காடுறை என்ற பெயரில் தவறான தகவல் எழுதுகின்றவர்களுக்கு இது தெரித்திருக்க வேண்டும் தமிழனின் பாது காப்பை உடைத்த முள்ளிவாய்க்கால் இல்லை போராட்டத்தின் காரணம் முளிவாய்க்கள் தமிழ் இளம் சந்ததிகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே ,

    வெறும் ஜந்து மாதத்தில் மட்டும் தமிழன் நிலைமை இப்படி உருவானது என்று சொல்லி தமிழருடைய போராட்டத்தை குறகிய அரசியல் லாவபம் தேட என்னும் உன்னைப் போன்றவர்கள் தமிழ் மக்கள் கடந்த காலத்தில் எப்படியெல்லாம் சிதைக்கப் பட்டான் என்பதை மறைக்காமல் வெளியில் சொல்ல வரவேண்டும் கடந்த காலத்தில் வடக்கை விட கிழக்கு மாகாணம் நிறைய பாதிக்கப் பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகப் பிரிவின் ஒரு அறிக்கையில் சுட்டிக்காடப்பட்டுளது,

    மீண்டும் நான் சொல்வது சிங்கள அரசின் கீள் தமிழினம் நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாது காரணம் ஏன் என்றால் தமிழன் சிங்களத்தின் ஆட்சியின் கீள் இருக்க வேண்டும் என்றால் சிங்களம் எழுதி வைத்திருக்கும் பொய்யான மகா வம்சத்தைக் கைவிட்டு உண்மையின் பக்கம் மனித நேயத்தோடு நடக்க முற்ப்பட்டால் நாம் அதைப் பரிசீலனை செய்யலாமே ஒழிய அது தான் முடிவென்பது அல்ல ஆனாலும் தமிழ் மக்கள் நின்மதியாய் வாழவேண்டும் என்றால் தமிழ் ஈழத்தைத் தவிர எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை , தொடரம்
    நன்றி

  11. வணக்கம் என் உறவுகளே வங்கம் விரிந்து வளைகுடா சுழண்டு தமிழர் அங்கம் அதன் மேல் மிதந்தாலும் புலி எதிர்ப்பு மண்டை கழண்ட கூட்டம் அங்கம் சிதையாதோ ? தன் மானம் போய் தமிழ் மானம் போய் தமிழன் அழிந்தாலும் இந்த வஞ்சகர் செய்யும் வழிப் பறிக் கொள்ளை முடியாதோ ? இது தான் ஒவ்வோர் தமிழனின் மனதிலும் எழும் குமுறல் ஆனாலும் முந்தையர் செய்த முற்பலன் என்னவோ எம் மண்ணில் வந்து உதித்தான் உத்தம வீரர்

    எனினும் செத்தவன் உடலில் சேறு பூசி சந்தையில் விக்க நினைக்கும் சில தமிழினத் துரோகிகளே ., வழி தவறி வந்தவன் எம்மை வாழ வைப்பானோ ??? இல்லை கூண்டோடு புதிய வைப்பானோ ? செத்தவன் வேறு யாருமில்லை என்தமிழ் ஈழ தேசத்தின் சொத்துக்கள் எனினும் இவர்கள்தான் எம் எதிர் காலத்தின் வித்துக்கள் இந்த சொத்துக்கள் என்றும் எம் முத்துக்கள் எனவே முத்துக்கள் என்றும் முத்துக்கள் தான் நன்

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>