புளொட் ஜேர்மன்கிளையின் அறிவித்தல்..
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம் 6.2.2010அன்று Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்து கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில் வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்கு Germanyயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்திய அமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகால ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. எனவே கடந்தகால ஆதரவாளர்களையும் அங்கத்தவர்களையும எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு பின்வரும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். நன்றி! -தொடர்புகட்கு: 07154181312 (00497154181312), E-Mail: dplfgermany@ymail.com
ஜேர்மன் புளொட் இயக்கத்தினரின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் பாணியில் ஏயை நாடுகளிலும் புளொட் உறுப்பினர்கள் அணிதிரளவேண்டும். புளொட் இயக்கத்தின் போராட்ட பாதேயே தமிழர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை பெற்றுதரக்கூடிய கொள்கை. ஆகவே தலைவர் சித்தார்த்தன் சிறந்ததொரு யதார்த்த அரசியல்வாதி. குடந்தகால தவறுகளுக்கு கூட மன்னிப்பு கோரியுள்ளார். ஆகவே ஒர் வெளிப்படையான தலைவர் வழியில் பின்தொடர்வதே தமிழ்மக்களுக்கு சிறந்ததொரு தீர்வை பெற வாய்ப்பாக அமையும்.
PLOTE , DPLF Jerman Branck ku….
Neengal PLOTE Kuga ulaitha neraiya perai innam kandu avarkalukudan Neengal than thodarpu eduka vendum. Sitharthan MP idam kelungal… Avaruku Theyrium thaney. Vele nadukalil irukum PLOTE mukiyastharkalai Thirumba varavalaithu SriLankavil Arasiyal nadathungal. Ungal sevai engal Naatuku theyvai. Vaalga PLOTE valarga DPLF.
தோழர் வரதன்,
தாங்கள் http://www.google.com/transliterate/ இற்கு சென்று Tamil யை select பண்ணி அடித்தால் அழகான தமிழில் தங்கள் கருத்துக்களை வாசகர்ககளுடன் பகிரலாம்.
கிழே தாங்கள் எழுதியது தமிழில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி!
தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.
PLOTE , DPLF ஜெர்மன் பிராஞ்ச்சுக்கு.….
நீங்கள் PLOTE இக்கு உழைத்த நெறைய பேரை இனம் கண்டு அவர்களுகுடன் நீங்கள் தான் தொடர்பு எடுக்க வேண்டும். சித்தார்த்தன் MP இடம் கேளுங்கள்.… அவருக்கு தெரியும் தானே. வேறே நாடுகளில் இருக்கும் PLOTE முக்கியஸ்தர்களை திரும்ப வரவழைத்து சிறிலங்காவில் அரசியல் நடத்துங்கள். உங்கள் சேவை எங்கள் நாட்டுக்கு தேவை. வாழ்க! PLOTE; வளர்க! DPLF.
தோழர்களே கவனம்! உங்களுக்குள் இலங்கை புலனாய்வுதுறை ஊடுருவி தங்கள் அமைப்பை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம். வேறு நாடுகளில் இவ்வாறான செயல்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிள்த்து விடப்பட்டுள்ளது. கவனம் முன்பு இந்திய அரசு புளொட்டை சீரழித்தது தற்போது இலங்கை அரசு சில தமிழர்களை வைத்து தமிழ் அமைப்புக்கள், கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்துவதில் தீவிரமாய் உள்ளது.