பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு! // பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானம்..
பாராளுமன்றம் கலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடுபிடித்துள்ளன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத்தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்ற வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதேவேளை கடந்த 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்கட்சிகளின் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கு சத்தியாக்கிரம எதிர்ப்பு கூட்டங்கள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்நிலையில் தான் பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலைஞர்கள் விளையாட்டு வீர வீராங்கனைகளை இம்முறை தேர்தலில் களமிறக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது பிரபல்யமானவர்கள் அதிகளவில் வெற்றியை ஈட்டியமை குறிப்பிடதக்கது. நாமல் ராஜபக்ஷ தெற்கில் போட்டியிடவுள்ளதாகவும் பிரதமரின் புதல்வர் விதுர விக்கிரமநாயக்க களுத்துறை மாவட்டத்திலும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர் மேலும் சர்வதேச கீர்த்தியைப் பெற்றுக் கொண்ட பிரபல கிரிக்கட் நட்சத்திரம் ஒன்றை மாத்தறை மாவட்டத்தின் சார்பில் களமிறக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறியவருகிறது.
If they politician they can quickly richer,so they very interest.These Singal mob is not real public servan.