1லட்சம் தொழிலாளர்களின் தொழிலை பாதுகாக்க அரசின் திட்டம் என்ன?- ரவி கருணாநாயக்க எம்பி! // ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் -இலங்கை அரசு
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படவுள்ளதாக தெரிகிறது அவ்வாறெனின் சுமார் 1லட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இலங்கைக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரவி கருணாநாயக்க எம்பி இதுதொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தை நிறுத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது இது மிகவும் அவதானமான நிலைமை என்பதனை குறிப்பிடுகிறோம் இதன்மூலம் எமது நாட்டின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்படலாம் அத்துடன் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம் இவற்றையெல்லாம் விட முக்கியமான விடயமாக சுமார் 1லட்சம்பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலைமை காணப்படுகிறது எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நாங்கள் இலகுவில் கருதிவிடமுடியாது அந்தவகையில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை எமது நாடு இழக்கும் பட்சத்தில் குறித்த 1லட்சம் பேரின் தொழில் வாய்ப்புகளை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனடிப்படையில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற மாற்றுத்திட்டம் என்னவென்று பிரதான எதிர்கட்சி என்ற வகையில் நாங்கள் வினவுகிறோம். 1லட்சம் பேரின் தொழில்வாய்ப்பை பாதுகாப்பதற்கான அரசியன் திட்டம் என்பது தொடர்பில் தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.
நீக்கப்பட்ட ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸின் இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவை மேற்கோள் காட்டிய ஊடக அறிக்கை ஒன்றில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை எதிர்வரும் ஆறுமாத காலப்பகுதியிலேயே நடைமுறைக்கு வரும் எனினும் தற்போது அந்த நிலைமை மாறி இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை முன்வைத்து மீண்டும் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் இவ்வாறான வரிச்சலுகை நீக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் மீண்டும் சலுகையை பெறப்பட்ட நாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் சூழ்நிலை என்பன மாறியுள்ள நிலையில் இதுதொடர்பில் சாதகமான தீர்மானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆராய்வின் அடிப்படையிலேயே இந்த தடைவிதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது அத்துடன் கடந்த காலங்களில் மனித உரிமை தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகளுக்கு இலங்கையில் காணப்பட்ட தேர்தல் இடம்பெயர்ந்தோர் விவகாரம் போன்ற காரணங்களால் சரியான விளக்கமளிப்பு முன்வைப்புகள் இடம்பெறவில்லைஎனவே இனிவரும் காலங்களில் இதுதொடர்பில் சரியான விளக்கமளிப்பை முன்வைத்து அதனை மீண்டும் பெறமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்