மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை அமைப்பாளர் பாரதிதாசன் மனோகணேசனுடன் இணைவு! // அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க தமிழ்மக்கள் நடவடிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் இவ்வாண்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க அங்குள்ள தமிழ்மக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். இம்முறை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத் தரப்பில் இனியபாரதியும், ஈரோஸில் லால் என்பவரும், ரி.எம்.வி.பியும் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்), ஈ.பி.டி.பி, தமிழரசுக்கட்சி என்பன போட்டியிடவுள்ளன. இதேவேளை கடந்த தேர்தலில் 55,553 வாக்குகளைப் பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட 20ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 07பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் அம்பாறை மாவட்டத்தில் ஒருகட்சியின் சார்பில் 10பேர் மாத்திரமே போட்டியிலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை மாவட்ட அமைப்பாளர் பாரதிதாசன் நேற்றையதினம் மனோகணேசன் எம்.பி தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் சிலரும் ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக பாரதிதாசன் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்ட பாரதிதாசனுக்கு அக்கட்சியின் பிரதித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதென கூறப்படுகின்றது. இது தொடர்பாக பாரதிதாசன் கருத்துரைக்கையில், என்னுடைய சேவைக்காக கிடைத்த ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் பதவியை நான் மலையக மக்களுக்காக சரியாக பயன்படுத்துவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>