வன்னியில் கைவிட்ட வாகனங்கள் சொத்துக்களை ஆவணங்களைக் காண்பித்து பெற்று கொள்ள முடியும் -யாழ். ஆயர்! // விடுதலைப்புலி சந்தேகநபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி (இணைப்பு-2)

இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிடமிருந்து இலங்கை கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இலங்கைக்கு சொந்தமான 24கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த விடுதலைப்புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பா ஜானகி ராஜரட்ணநேற்று முன்தினம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கினர் சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 10 கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன எனவும் ஏவுகணை கூடு ஒன்று விடுதலைப்புலிகளின் முகாமொன்றில் இருந்து மீட்கப்பட்டு தற்போது இரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். விடுதலைப்பலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களை கொண்டு வந்ததாக கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு எம்.இராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு ஹெலிகொப்டரை அழித்ததாக தெரிவிக்கப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு குறித்த விவரங்களை நீதிமன்றில் அறிவித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதாக ஒத்துழைப்பு வழங்கிய விடுதலைப்புலிகளை கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி கோரினர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதவான் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைகளின் நிலைமை குறி;த்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
வன்னிப் பிரதேசத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அப்பகுதிகளுக்கு யுத்தத்தின் பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் தெரிவித்துள்ளார். படையினரின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வாகனங்கள் தற்போது அப்பகுதி அரசஅதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியுமென படையினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 Responses to “ வன்னியில் கைவிட்ட வாகனங்கள் சொத்துக்களை ஆவணங்களைக் காண்பித்து பெற்று கொள்ள முடியும் -யாழ். ஆயர்! // விடுதலைப்புலி சந்தேகநபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி (இணைப்பு-2) ”

  1. Dear Thomas Sauthranajagam
    People escaped from army with bare hand,where do people search their document.

  2. Tamilini,
    You are right with knowledge, but, it`s could not simply think by a Bishop.
    who are going to show their document? who have it? they escaped from die without anything.

    but, G.A could find the documents from Vehicle Registering office, however… owners can`t do it.

    0nly Two more months to end A Year of Mullivaikkal massaccre, still no one take any action for develope North and East.

    anyway… one day…. we should get a freedom!!!

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>