நல்லகுட்டியாறு முஸ்லிம் பாடசாலை பெரும்பான்மையின பாடசாலையாக மாறும் ஆபத்து! // வடக்கிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட ஏற்பாடு

வடக்கிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிடுவதற்காக நிதியொதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் திருமதிஎம்.எஸ்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வட மாகாணத்திலுள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
திருமலை மொரவௌ (முதலிக்குளம்) பிரதேச செயலகப் பிரிவின் நாமல்வத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நல்லகுட்டியாறு முஸ்லிம் வித்தியாலயம் பெரும்பான்மையினப் பாடசாலையாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 45முஸ்லிம் மாணவர் கல்விகற்கும் இப்பாடசாலையின் அதிபராக பெரும்பான்மையினத்தவர் நியமிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமென கூறப்படுகிறது. கடந்த 90ம் ஆண்டு இபபகுதி மக்கள் இடம்பெயர்ந்து 2004ம் ஆண்டு முதல் மீள்குடியேறி வருகின்றனர். அண்மையில் இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட வேளையில் பெரும்பான்மையின அதிபரே இங்கு நியமிக்கப்பட்டுள்ளார். அயலிலுள்ள பெரும்பான்மை இன மாணவர்களை இணைப்பதன் மூலம் இதன் உருவம் மாற்றம் பெறும் அபாயமுள்ளதென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>