யாழ் காரைநகர், கசூரினா கடற்கரைக்கு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! // யாழ். வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள்! // யாழ். சாவகச்சேரி 200மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் -வடமாகாண ஆளுநர்
யாழ். வரணியிலிருந்து மந்துவில் ஊடாக யாழ் செல்லும் மினி பஸ்சில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் வைத்தியசாலை பின்புறத்தில் உள்ள டச் வீதியில் இறக்கப்படுவதால் 700மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டச்சு வீதியில்இருந்து வைத்தியசாலைக்கு செல்லும்பாதை புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டதால் தற்போது டச்சு வீதியில் மினி பஸ்சிலிருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளதென்றும், சிகிச்சை பெற்ற நோயாளர்கள் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றே இதே மார்க்கமாக மினி பஸ்சில் பயணிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த மினிபஸ் சேவையை வை;தியசாலைக்கு முன்பாக செல்ல மினிபஸ் சங்கத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்கின்றனர். இதேவேளை கொடிகாமத்திலிருந்து கச்சாய் ஊடாக யாழ். செல்லும் மினி பஸ்களையும் சாவகச்சேரி வைத்தியசாலை ஊடகா செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர், கசூரினா கடற்கரைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் பல நூற்றுக் கணக்கான தென்னிலங்கை பெரும்பான்மையினத்தவர் இங்கு வருகை தருகின்ற பொதிலும் கசூரினா பீச்சிற்கான வீத வழிகாட்டி இன்மையால் இந்த மக்கள் காரைநகரைச் சுற்றி அலைய வேண்டியநிலை காணப்படுகின்றது. அத்துடன் அங்கு அடிப்படை வசதிகள் மிக குறைவாக காணப்படுவதால் அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உல்லாசப் பயணிகளைக் கவரும் இயற்றை அமைப்புடன் காணப்படும் இந்தக் கடற்கரை பகுதிக்கு குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்துவரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கலாச்சார சீரழிவுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
நலன்புரி நிலையங்களில் இருந்து வெளியேறி யாழ். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் இணைந்துள்ள 200மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுமென வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி இல்ல மெய் வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்hளர். அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன், மேலும் 50மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் 150சைக்கிள்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உல்லாசப் பயணிகளைக் கவரும் இயற்றை அமைப்புடன் காணப்படும் இந்தக் கடற்கரை பகுதிக்கு குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்துவரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கலாச்சார சீரழிவுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சபாஷ், இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.