தங்காலை அம்பாந்தோட்டை வீதியில் விபத்து இளைஞர் பலி, யுவதி படுகாயம்! // ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றன-அமைச்சர் டியூ குணசேகர
ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக அரச சாசன அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரச சாசனமொன்றை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய அரசியல் சாசனம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகோலியுள்ளது. ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றன. வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என குற்றம் சுமத்துவதன் ஊடாக இனவாதத்தை விதைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். அதிகளவிலான தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை வெளிப்படையான உண்மை. அரச சாசன அடிப்படையில் இனவாதப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்காலை அம்பாந்தோட்டை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாகனமொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலியாகியதுடன் அதன் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற யுவதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். பொலீஸ் நடவடிக்கைப் பிரிவில் கடமையாற்றிய 21வயதான இளைஞர் ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலயில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர் ஹங்கமவாசியான 21வயது யுவதியென்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்