யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை! // ஊடக அடக்குமுறைகளைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஊடகவிலயாளர்கள்மீதூன அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராக கொழும்பில் இன்றுமதியம் இடம்பெற்றுள்ளது. அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் நேரடியான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சில ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் காணாமற் போயிருந்த லங்கா ஈநியூஸ் ஊடகவியலாளரை விடுவிக்கக் கோரும் கோசங்களும் இதன்போது எழுப்பப்பட்டுள்ளன.
யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காரணத்தினால் கடந்தகாலங்களில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் மிகக் குறைந்தளவு சிங்கள முஸ்லிம் மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பல்கலைக்கழத்தின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், சிங்கள முஸ்லிம் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. சிங்கள முஸ்லிம் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. நிலவும் வெற்றிடங்கள், விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் விருப்பத் தெரிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தீர்மானிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>