ஜெனரல் சரத்பொன்சேகாவும், ஊடகச் செயலரும் இராணுவப் பொலீசாரினால் கைது!! // 14 மூத்த இராணுவ அதிகாரிகள் கடந்தவாரம் ஒரே சமயத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பி வைப்பு
முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் முப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் அவருடைய ஊடகச் செயலாளரான சேனக்க டி சில்வாவும் இன்றிரவு சுமார் 8மணியளவில் இராணுவப் பொலீசாரினால் விசாரணைக்கென கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். (விரிவான செய்திகள் தொடரும்..)
இலங்கையில் முன்னர் ஒருபோதுமில்லாதவாறு 14 மூத்த இராணுவஅதிகாரிகள் கடந்தவாரம் ஒரே சமயத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 05மேஜர் ஜெனரல்கள், 05பிரிகேடியர்கள் உட்பட 14அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர் என இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்த உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் கேர்ணல், கப்டன்தர அதிகாரிகளும் அடங்கியுள்ளனர். 1992ம் ஆண்டின் இராணுவ அதிகாரிகள் விதியின்படி இராணுவத்தளபதி இவர்களைக் கட்டாயஓய்வில் அனுப்பும் முடிவை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தினார் என்றும் அந்த செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு கட்டாயஓய்வில் அனுப்பப்பட்டவர்களில் இராணுவத் தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே, முப்படைகளின் தலைமை அதிகாரியின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஜெனரல் ராஜித டி சில்வா, யாழ் பாதுகாப்புப்படைத் தலைமையகத்தில் பணியாற்றிய மேஜர்ஜெனரல் சமந்தா சூர்ய பண்டார, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிமல் டயஸ் போன்றவர்களும் அடங்குகின்றனர்.
தமிழ் ஈழ தேசிய தலைவர் மேன்மை தங்கிய சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யும் வரை சாகும் வரை உண்ணாவிரதம்….மக்டோனால்ட் ஹாம்பர்கர் புகழ் பரமேஸ்வரன் தலைமையில் உண்ணாவிரதம்…தமிழருக்கு தலைவர் இல்லாத நேரத்தில் வந்த தலைவர் சரத் இன் மீது சிங்கள அரசாங்கம் கை வைத்து விட்டது…..இதை பொறுக்க முடியாது…தமிழர் உலகம் முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணி நடத்த வேண்டும்…சாகும் வரை உண்ணாவிரதம்?? ,TV களில் கலந்து உரையாடல் ,மற்றது மிக முக்கியமானது சரத் நிவாரண உதவி பணம் சேகரிப்பு( கலக்சன் ) செய்ய வேண்டும்…டை கட்டின புத்தி ஜீவிகள் மூக்கை சொரிந்து கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்……ஆனால் சிங்கள அரசாங்கம் கெதில சரத்தை விடுதலை செய்ய கூடாது ….செய்தால் கலக்சன் படுத்து விடும் ….முட் கம்பி வேலி கலக்சன் குஇக்கா படுத்திட்டுது …….மற்றது டை கட்டின புத்தி ஜீவி ஓன்று சரத் பொன்சேக்கா ஒரு தமிழர் .பிழைப்புக்காக கொழும்பு வந்த சரத்தின் மூதாதையர் பொன்னையா என்ற பெயரை பொன்சேக்கா என்று சிங்கள அராஜகத்திற்கு பயந்து மாற்றி வைத்தனர் என்று ஆதாரம் காட்டினார் …..வாழ்க வளமுடன் ……ஆதவன்