நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைய வாய்ப்பு -லக்பிம பத்திரிகை! // தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் நின்று செயல்படுவதே சிறந்தது -புளொட் த.சித்தார்த்தன்!

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிறுபான்மையின கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படுவது அவசியமாகின்றது என புளொட் அமைப்பின் தலைவர் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அதன்மூலமே எமது பலத்தையும் நிரூபித்து பேரம்பேசும் சக்தியாகவும் மாறமுடியும் பலத்தின்மூலம் ஜனாதிபதியுடன் பேசி தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கேனும் தீர்வு காணமுடியும் இது தொடர்பில் தாம் தமிழ்பேசும் கட்சி தலைவர்களுடன் பேசிவருவதாகவும் திரு சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எமது பிரச்சினை தெர்டர்பாக ஜனாதிபதியுடன் பேசியே தீர்க்கப்பட வேண்டும் இந்நிலையில் எமக்கிடையில் ஒட்டுமொத்த ஐக்கியமே அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் நின்று செயல்படுவதே சிறந்தது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டி வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் சில ஆலோசனைகளை முன்வைத்திருந்தது அந்த விடயங்கள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் நாடு திரும்பியதன் பின்னர் இதுதொடர்பான முனைப்புகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆளும் கட்சியில் இணைவதற்கு ஜாதிக ஹெல உறுமய போன்ற கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>