பொலிஸார் மக்கள் மத்தியில் ஆயுதங்கள் கொண்டு செல்லத் தடை! // ஜனாதிபதி தேர்தலில் அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவி;;த்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்கட்சிக்கு ஆதரவான முறையில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் மூலம் குற்றவாளியென நிரூபிக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் இடமாற்ற  உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 208பேரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஒருசிலரே இவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவி;த்துள்ளார். பொலிஸார் அரசியலில் ஈடுபடக் கூடாது எனவும் அவர்கள் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதனை முதன்மை நோக்காக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் ஆயுதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஒருவரை கைது செய்யும் போது அல்லது கலகத்தின் போது மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தநிலை ஏற்படுவதற்கு முன்னைய காலத்தில் பொலிஸார் துப்பாக்கிகளுடன் மக்கள் மத்தியில் செல்லவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இவை தொடர்பில் பொலிஸாருக்கு விஷேட பயற்சிகள் அளிக்கப்பட்டவுள்ளதாகவும் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>