இரத்தினபுரியில் காணாமற்போன இளைஞர் அட்டலன் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு! // பொலீஸ் ஊடகப்பேச்சாளராக பிரசாந்த ஜயக்கொடி நியமனம்!

இரத்தினபுரி காவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமற் போயிருந்த இளைஞர் ஒருவர் அட்டகலன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் காவத்தையில் ஐந்து தினங்களுக்கு முன்பு காணாமற் போன 29வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கொடகாவெல கலகிட்டிய பிரதேசவாசியான இளைஞருடையது என பிரதேசவாசிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலீஸ் பிரிவின் புதிய ஊடகப்பேச்சாளராக பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியை வகித்துவந்த ஐ.எம். கருணாரத்ன பொலீஸ் துறையின் புதிய நியமனங்களை மேற்கொள்ளும் பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். அவரது வெற்றிடத்திற்கே ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். 1987ம் ஆண்டு பொலீஸ் துறையில் சப் இன்ஸ்பெக்டராக காலடி எடுத்துவைத்த பிரசாந்த ஜயக்கொடி அதன்பின் வீரகுல, லக்கல, வவுனியா, மினுவாங்கொட உட்பட பல்வேறு பொலீஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் வவுனியா, முருங்கள் மத்துகம பிரிவுகளில் உதவிப் பொலீஸ் அத்தியட்சகராகவும் பணியாற்றியுள்ளார். 2001முதல் 2008வரை இலங்கைப் பொலீஸ் வித்தியாலயத்தில் பயிற்சிகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளராக புதிய நியமனம் கிடைக்கும்வரை பணியாற்றி வந்துள்ளார். அமெரிக்கா, இத்தாலி, இந்தியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் விசேட பயிற்சி பெற்ற இவர் கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் பழைய மாணவராவார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>