editor

வடமராட்சி கடற்தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளின் செயற்பாடுகளால் பெரிதும் பாதிப்பு! // ஜெனரல் பொன்சேகா முன்னாள் இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தினார் -அரசாங்கம் தெரிவிக்கிறது

வடமராட்சி கடற்தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளின் செயற்பாடுகளால் பெரிதும் பாதிப்பு! // ஜெனரல் பொன்சேகா முன்னாள் இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தினார் -அரசாங்கம் தெரிவிக்கிறது

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவதளபதியாக இருந்த காலத்தில் தமக்கு கீழ் பணிபுரிந்த இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது இந்த தகவலை வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் உரையாற்றிய போது தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஷ்மன் ஹ_லுகல்ல தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ அதிகாரியாக இருந்த காலங்களில் தமது காரியாலயத்தில் வைத்தே இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது அத்துடன் [...]

கூடுதல் விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்குமுன் நிறுத்த இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகை! // எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல -பிரதமர்!

கூடுதல் விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்குமுன் நிறுத்த இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகை! // எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல -பிரதமர்!

எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்டவேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் [...]

அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே அரசியல் எதிராளிகளின்மீது தாக்குதல் நடத்துவது வேடிக்கையாகும் -ரவூப் ஹக்கீம்! // தர்காநகர் மீரிபன்னை முஸ்லிம் வர்த்தகர் படுகொலை!

அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே அரசியல் எதிராளிகளின்மீது தாக்குதல் நடத்துவது வேடிக்கையாகும் -ரவூப் ஹக்கீம்! // தர்காநகர் மீரிபன்னை முஸ்லிம் வர்த்தகர் படுகொலை!

அரசியல் எதிரிகள்மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மன்னாரில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர்மீது அமைச்சரொருவரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியமையினால் மன்னாரில் வர்த்தகர்கள் கடைகளை மூடி எதிர்ப்பு [...]

தமிழர் தமது உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது தவறு -பேராசிரியர் அ.மார்க்ஸ்! // இலங்கைக்கு எதிராக ரோ அமைப்பு செயற்படவில்லை என்கிறது இந்தியா!

தமிழர் தமது உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது தவறு -பேராசிரியர் அ.மார்க்ஸ்! // இலங்கைக்கு எதிராக ரோ அமைப்பு செயற்படவில்லை என்கிறது இந்தியா!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரோ எனப்படும் இந்திய வெளித்தொடர்பு புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக தபால்துறை அமைச்சர் நந்தன குணதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார். ரோ எனப்படும் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகம் மற்றும் வெளித்தொடர்பு புலனாய்வு அமைப்பு என்பன ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை [...]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்திற்காக தமது சம்பளங்களை அர்ப்பணிக்க வேண்டும் -மேர்வின் சில்வா கோருகிறார்! // முல்லைத்தீவு, வவுனியா வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கூட்டம்! // மங்கள சமரவீர உரிமைமீறல் மனுதாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது சம்பளங்களை தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டுமென தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாதத்தில் ஒரேஒருநாள் பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டமைக்காக சம்பளம் கோருவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதத்திற்கான சம்பளத்தை தாம் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனைய அனைவரும் தங்களது சம்பளங்களை தியாகம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.  தம்மை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக் [...]

ஜேர்மனியில் புலி செயற்பாட்டாள்கள் 6பேர் கைதின் பின்னனியில் இலங்கை தூதரகம்! // சுவிஸ்நாட்டில் கறுப்பர்கள் முக்கியத்துவம்பெற கல்வியே காரணம்!  // சீன உயர்ஸ்தானிகர் வவுனியா விஜயம்!

ஜேர்மனியில் புலி செயற்பாட்டாள்கள் 6பேர் கைதின் பின்னனியில் இலங்கை தூதரகம்! // சுவிஸ்நாட்டில் கறுப்பர்கள் முக்கியத்துவம்பெற கல்வியே காரணம்! // சீன உயர்ஸ்தானிகர் வவுனியா விஜயம்!

ஜேர்மனியில் கடந்தவாரம் புலி செயற்பாட்டாள்கள் 6பேர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள இலஙகை தூதரகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக இலங்கைத்தூதரகம் கூறியுள்ளது. ஜேர்மனிக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர்ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார். இலங்கையில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள். இது இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது [...]

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை -ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்! // கபேயின் இணையத்தளம்மீது தடை! // நமது நிறைவேற்றுப் பணிப்பாளரைக் கைதுசெய்யத் திட்டம் -ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!

தமது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.சீ. வெலிமுனவை கைதுசெய்யத் திட்டமிட்டுள்தாக ஆசிய மனிதஉரிமை ஆணைக்குழுவின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரையில் அவ்வாறான எந்தவொரு முனைப்பும் நேரடியாக மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகள் மற்றும் அரச சொத்து துஸ்பிரயோகம் போன்றவை தொடர்பில் தமது அமைப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எமது நிறுவனத்தின் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் [...]

தெல்லிப்பழையில் வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கம்! // கிளிநொச்சி இராணுவ நினைவுத்தூபியில் சரத்பொன்சேகாவின் பெயர் நீக்கம்!

தெல்லிப்பழையில் வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கம்! // கிளிநொச்சி இராணுவ நினைவுத்தூபியில் சரத்பொன்சேகாவின் பெயர் நீக்கம்!

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுப்படை தலைமை அதிகாரி சரத்பொன்சேகாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளுடனான வெற்றியின் போது படைத்தரப்பில் முக்கிய பங்காற்றியவர்களின் பெயர்கள் இந்த நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டிருந்தன அதில் சரத்பொன்சேகாவின் பெயரும் முதல் நிலையில் பொறிக்கப்பட்டிருந்தது எனினும் தற்போது அரசாங்கத்திற்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையிலான முரண்பாட்டை அடுத்து அவரது பெயர் நீக்கப்பட்டு புதிய நினைவு கல்வெட்டுடனான தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது அரசாங்கத்தின் உயர்மட்ட உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள [...]

யாழ். நகர விளம்பர நடவடிக்கைகளால் கைகலப்பு வரை செல்லும் நிலை! // கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்கு வருகை! // பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது!

புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தநிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானநிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமானநிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு [...]

உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் டேவிட் மில்லிபாண்ட் உரையாற்றிய விவகாரம் சூடு பிடிப்பு! // லியொன் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னரே நிபுணர்கள்குழு நியமிக்கப்படும் -ஐ.நா! // ஜனாதிபதி தந்த வாக்குறுதியில் முன்னேற்றமில்லை -பான் கீ மூன்!

கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த வாக்குறுதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு எதுவும் பேசாமல் திரும்பியிருந்தது தெரிந்ததே. இப்போது அந்த வாக்குறுதிகளை கொடுத்து ஒரு ஆண்டு ஆகும்நிலையில் தமக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முன்னேற்றம் எதுவுமில்லை என பான் கீ மூன் விசனம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து தாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் தாம் அமைக்கவுள்ள வல்லுநர் குழுவானது இவ்விடயங்கள் [...]

ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுதலை! // ஜெனரல் சரத்பொன்சேகா உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார் -அனோமா பொன்சேகா! // ஐ.நா தனது உதவிச் செயலரை இலங்கை அனுப்புகிறார்

ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுதலை! // ஜெனரல் சரத்பொன்சேகா உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார் -அனோமா பொன்சேகா! // ஐ.நா தனது உதவிச் செயலரை இலங்கை அனுப்புகிறார்

உண்ணாவிரதமிருந்த ஜெனரல் சரத்பொன்சேகா அதனைக் கைவிட்டுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி ஊடகா இரண்டு மகள்மாருடனும் அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்தே உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11மணியளவில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தனது தொலைபேசியை உபயோகிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் உபாலி சமரவீர இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊவா பரணகம பொலீசாரினால் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று [...]

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் -ஜ.தே.கட்சி! // பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்! // அவசரகால சட்டம் மேலுமொரு காலத்திற்கு நீடிப்பு

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் -ஜ.தே.கட்சி! // பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்! // அவசரகால சட்டம் மேலுமொரு காலத்திற்கு நீடிப்பு

பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். பிரித்தானியாவிற்கும் இலங்கைக்குமிடையில் அண்மையில் நிலவிவரும் முறுகல்நிலைமை குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் அண்மையில் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பினால் நடத்தப்பட்ட மாநாடு ஒன்றில் கலந்து கொண்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பிரித்தானிய இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் [...]

தேர்தல் தொடர்பிலான வன்முறைகள் அதிகரிப்பு! // பம்பலப்பிட்டி கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கடற்படைப் படகு அப்புறப்படுத்தப் பட்டது! // நீண்டகாலமாக நிரந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் விசேட திட்டம்!

கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் நேற்றுமாலை அனர்த்தத்திற்கு உள்ளான கடற்படைப் படகை அந்தப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தி உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 3.30 மணியளவில் படகு அனர்த்தத்திற்கு உள்ளான போது ஐந்து கடற்படை வீரர்கள் கடலில் வீழ்ந்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். கடலில் வீழ்ந்த கடற்படை வீரர்கள் ஐவரும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளனர். படகின் இயந்திரக் கோளாறு காரணமாகவே அனர்த்தம் இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த கடற்படைப் படகு அனர்த்தத்தில் [...]

மனோகணேசன் நாடாளுமன்றத்தில் சுலோகம் ஏந்திப் போராட்டம்! // பொலீஸ் சிறையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு! // தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தனது பிரதான நோக்கமாகும் -ஜனாதிபதி!

பொலீஸ் சிறைக்கூண்டிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். குருநாகல் மாவட்டம் வெல்லவ பகுதியில் இந்த சம்பவம் இன்றுஅதிகாலை இடம்பெற்றுள்ளது. காவலுக்கு இருந்த பொலீசாரைத் தாக்கிவிட்டு துப்பாக்கியொன்றை அபகரித்து சந்தேகநபர்கள் இருவரும் சிறைக்கூண்டின் கூரையின் ஊடாக வெளியேறி முச்சக்கர வண்டியொன்றில் ஏறி தப்பிச் சென்றதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை விரட்டிச் சென்ற பொலீசார் காட்டுப்பகுதியொன்றில் வைத்து நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர்கள் இருவரும் பலியானதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த [...]

அரசியல் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யவும்.. மனோகணேசனுக்கு மல்வத்தை பீடாதிபதி அறிவுரை! // வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரினால் வருமானம் உயர்வடைவு

அரசியல் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யவும்.. மனோகணேசனுக்கு மல்வத்தை பீடாதிபதி அறிவுரை! // வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரினால் வருமானம் உயர்வடைவு

அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே சிறீசுமங்கள தேரர், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கண்டி மல்வத்தை பீடத்திற்கு சென்று மகாநாயக்கரை மனோகணேசன் சந்தித்தபொழுது இந்த கருத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார். இத்தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், உங்களுக்கு எதிராக கண்டி மாநகரத்தில் ஜாதிக ஹெல உறுமய கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததை நானும் அறிவேன். இதுபற்றி நீங்கள் கவலைப்பட [...]

விசேட அடையாள அட்டையில்லாத வேட்பாளர்களுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதியில்லை! // பொதுத் தேர்தலில் 85வீதமான முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளனர்-அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி!

விசேட அடையாள அட்டையில்லாத வேட்பாளர்களுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதியில்லை! // பொதுத் தேர்தலில் 85வீதமான முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளனர்-அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க உள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறான பிரசாரம் காரணமாக முஸ்லிம்கள் எதிர்தரப்பிற்கு வாக்களித்த போதும் இம்முறை மக்கள் உண்மை நிலையை உணர்ந்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, [...]

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம்! // மன்னாரில் இருகட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல், ஒருவர் படுகாயம்! // நூறாவது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாறையில் நிகழ்வுகள்

மன்னாரில் திங்கள் இரவு 8மணியளவில் இருகட்சி ஆதரவாளர்களுக்கிடையில நடைபெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.; காயமடைந்தவர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர் என கூறப்படுகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கிடையில் மன்னார் நகரில் 8 மணியளவில் நடைபெற்ற கைகலப்பு மோதலாக மாறியுள்ளது. இதில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து கூட்டத்தினரை கலைத்துள்ளனர் மன்ன்hரில் குறித்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் பாராளுமன்ற பொதுத் [...]

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தீவிபத்து! // கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் நான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லை -அமைச்சர் மேர்வின் சில்வா

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தீவிபத்து! // கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் நான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லை -அமைச்சர் மேர்வின் சில்வா

கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் தான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லையென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலை வந்தால் தாம் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார். ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி அவசரகால சட்ட பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது குறுக்கிட்டுப் பேசிய போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்கு துரோகமிழைத்த ஜெனரல் சரத்பொன்சேகா குறித்து உரையாற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாதென்றும் [...]

புத்தள பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! // பதுளை இயந்திரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு, இருவர் காயம்! // இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை-

இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த நபர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையிலேயே உயிரிழந்திருப்பதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகாத நிலையில் குருவிட்ட பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை எல்ல ஸ்பிரிங்வெல பிரதேசத்தில் கட்டிடமொன்றில் பணிபுரிந்து [...]

2015ம் ஆண்டாகும் போது வறுமை முற்றாக ஒழிக்கப்படும் -அமைச்சர் ராஜித சேனாரத்ன! // வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது -அமைச்சர் ரிசாத்

2015ம் ஆண்டாகும் போது வறுமை முற்றாக ஒழிக்கப்படும் -அமைச்சர் ராஜித சேனாரத்ன! // வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது -அமைச்சர் ரிசாத்

வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது. அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும், மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டம் கல்பிட்டி தில்லையூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டாகும்போது இலங்கையிலிருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்படும். தற்பொழுது 2வது உலக [...]

புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில்..! // மாத்தறையின் வலஸ்முல்லை பகுதியில் இருகுழு துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்

புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில்..! // மாத்தறையின் வலஸ்முல்லை பகுதியில் இருகுழு துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்

மாத்தறை வலஸ்முல்ல பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகலில் இடம்பெற்றதாக வலஸ்முல்ல பொலீசார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களிடையேயான தனிப்பட்ட பிரச்சினையே இந்த மோதலுக்குக் காரணமென்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்லை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட 78பேர் [...]

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை -ஐ.நா செயலர்! // வன்னி யுத்தகளத்தில் களவாடப்பட்ட ஒருதொகை தங்கநகை கலேவெலவில் கண்டுபிடிப்பு

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை -ஐ.நா செயலர்! // வன்னி யுத்தகளத்தில் களவாடப்பட்ட ஒருதொகை தங்கநகை கலேவெலவில் கண்டுபிடிப்பு

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின்போது இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்த விடயங்களில் உரிய அபிவிருத்தி எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பான் கீமூன் கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருந்தார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் தமக்கு ஆலேசானை வழங்குவதற்காக [...]

ஜே.ஆர் அரசாங்கமே இந்நாட்டில் மிகவும் திறமையாக இயங்கிவந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க வைத்தது -பந்துல குணவர்தன! // ஜீ.சீ.ஈ சாதாரணதர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்! // ஓட்டிசுட்டான் கற்சிலைமடு மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதம்

ஓட்டிசுட்டான் கற்சிலைமடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகாமையில் இருந்த பண்டாரவன்னியன் சிலையும் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1803ம்ஆண்டு மாவீரன் பண்டாரவன்னியன் பிரித்தானிய இராணுவ கப்டன் ஒருவரனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தான். அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களினால் கற்சிலைமடுவில் மாவீரன் தோற்கடிக்கப்பட்டான் என்பதினை நினைவுபடுத்தும் கல் நாட்டப்பட்டு இதில் முக்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. நினைவுக்கல் சேதமாக்கப்பட்டமை வன்னிமக்களின் மனங்களை புண்படுத்தும் செயலாக அமைந்துள்ளது
1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கமே இந்நாட்டில் மிகவும் திறமையாக இயங்கிவந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க [...]

இலங்கைக்கு எதிராக மனித உரிமைமீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயற்சி! // புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் பிரபாகரனைத் தேடி வருகின்றனவாம்..

இலங்கைக்கு எதிராக மனித உரிமைமீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயற்சி! // புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் பிரபாகரனைத் தேடி வருகின்றனவாம்..

விடுதலைப்புலிகளின் ஆதரவான அமைப்புகள் இன்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேடிவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப் படவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவுடன் இவ்விடயம் குறித்து  அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையான்மையையும் பாதுகாக்க விழிப்புடன் செயற்படுவோம் எனவும் நிருபமாராவிற்கு ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பற்றியும் பேசப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைமீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில [...]

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றக் குழு! // குற்றச்சாட்டுக்களின் தொகுப்பறிக்கை! // மகள்மாருடன் பேச மாத்திரமே தொலைபேசி பயன்படுத்தலாம்!

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றக் குழு! // குற்றச்சாட்டுக்களின் தொகுப்பறிக்கை! // மகள்மாருடன் பேச மாத்திரமே தொலைபேசி பயன்படுத்தலாம்!

தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா அவரது மகள்மாருடன் தொடர்புகொள்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் நேற்றுமுதல் அவருக்கு கையடக்க தொலைபேசியை பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இராணுவ தளபதியின் சிறப்புரிமையின் பேரிலேயே சரத் பொன்சேகாவுக்கு கையடக்க தொலைபேசி மகள்மாருடன் மட்டுமே பேசவேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளதே தவிர [...]

மிக நீண்டகாலமாக இருந்துவரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளது -இந்திய வெளியுறவுச் செயலாளர்! // யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியா ஆர்வம்

மிக நீண்டகாலமாக இருந்துவரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளது -இந்திய வெளியுறவுச் செயலாளர்! // யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியா ஆர்வம்

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்வகையில், அங்கு இந்திய தூதரக அலுவலகத்தை அமைக்க, இந்திய அரசு ஆர்வமாக உள்ளது. இது குறித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷயுடன் பேசியபோது, அவர் சாதகமாக பதிலளித்தார். இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, [...]

ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.தே.கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஆளும் கட்சியில் இணைவு! // நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் -நாமல் ராஜபக்ச

ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.தே.கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஆளும் கட்சியில் இணைவு! // நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் -நாமல் ராஜபக்ச

பலமான குடும்ப உறவே பலமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம். இதனைக் கொள்கையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியின் புதல்வரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை சியபோபுர சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மகளிர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்நாட்டில் இளைஞர்கள் படையிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு [...]

யாழ். திருநெல்வேலியில் வர்த்தக நிலையம் தீக்கிரை! // பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடுகிறது! // இலங்கையில் உள் விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது -சம்பிக்க ரணவக்க

யாழ். திருநெல்வேலியில் வர்த்தக நிலையம் தீக்கிரை! // பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடுகிறது! // இலங்கையில் உள் விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது -சம்பிக்க ரணவக்க

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூடவுள்ளார். அவசரகால சட்த்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ள கூட்ட தொடரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தானது இன்று [...]

கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் சந்திப்பு! // ஜெனரல் சரத் பொன்சோகவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்கு தொடரப்படும்- பாதுகாப்பு தரப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் சந்திப்பு! // ஜெனரல் சரத் பொன்சோகவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்கு தொடரப்படும்- பாதுகாப்பு தரப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இன்று சிவனேசத்துரை சந்திரகாந்தனை கொழும்பில் சந்தித்துள்ளார். இதன்போதே இவ்வழைப்பை அவர் விடுத்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்புத் தொடர்பில் அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில், நிருபமா ராவுடனான சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் [...]

ஜனநாயக தேசிய முன்னணி தேசியப் பட்டியல் வேட்பாளர் டிரான் அலஸிடம் விசாரணை! // யாழ். குடாநாட்டில் இருவகைச் சட்டம் நடைமுறையில்.. (இது யாழில் உள்ள படையினரின் கவனத்திற்கு..)

ஜனநாயக தேசிய முன்னணி தேசியப் பட்டியல் வேட்பாளர் டிரான் அலஸிடம் விசாரணை! // யாழ். குடாநாட்டில் இருவகைச் சட்டம் நடைமுறையில்.. (இது யாழில் உள்ள படையினரின் கவனத்திற்கு..)

யாழ். குடாநாட்டில் இப்போது இருவகைச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த இருவகைச் சட்டம் எழுதாத யாப்பாக நடைமுறையில் உள்ளதெனவும், இதனை யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், படையினரும் இதனை எழுந்தமானமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் பொதுமக்களின் பேச்சில் இருந்து தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடமையில் இருக்கக்கூடிய பொலிஸாரும் படையினரும் சிங்களவர்கள், தமிழர்கள் என்ற இனவேறுபாட்டை கடைப்பிடிப்பதாக அங்கு பரவலாக பேசப்படுகின்றது. உண்மையில் புலிகள் அழித்தொழிக்கப்படும் வரையில் அந்த நிலைப்பாடு யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல அனைத்திடங்களிலும் இருந்ததே. எனினும் [...]

சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பல் தொடர்பில் பேசவென லண்டன் காப்புறுதி நிறுவன அதிகாரி விஜயம்! // பிரான்ஸ் கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை 35கடற்கொள்ளையர்கள் கைது

சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பல் தொடர்பில் பேசவென லண்டன் காப்புறுதி நிறுவன அதிகாரி விஜயம்! // பிரான்ஸ் கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை 35கடற்கொள்ளையர்கள் கைது

பிரான்ஸ் கடற்படை கடற் கொள்ளையர்களை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தியதில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 35பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை கடத்தி வருகின்றனர் அவற்றை சிறை பிடித்து செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிக்கின்றனர். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. எனவே ஐரோப்பிய யூனியன் கடந்த 2008ம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது அவர்கள் கடல் [...]

கொழும்பில் நடைபெறவிருந்த தமிழ்த் தின போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன! // நுவரெலியா நகரில் புரதான கட்டிடங்கள் அழிவடைந்து வருவதாக தகவல்! // மத்திய மாகாணசபையின் மூன்று அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் ஏற்பு

கொழும்பில் நடைபெறவிருந்த தேசிய மட்டத்திலான தமிழ்த் தின போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டிற்கான தேசிய மட்ட தமிழ்த் தினப் போட்டிகளை எதிர்வரும் 13ம் 14ம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்போட்டிகள் பிற்போடப் பட்டுள்ளதாகவும், போட்டிகள் நடைபெறும் திகதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென்றும் கல்வித் திணைக்கள தமிழ்ப்பிரிவு பணிப்பாளர் வீ.எஸ்.இதயராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 13ம் திகதி மகா சிவராத்திரி தினம் என்பதால் அன்றையதினத்தில் நடைபெறவுள்ள [...]

ஹெலஉறுமய கட்சியின் எதிர்ப்பு தமக்கு பிரச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது -மனோ கணேசன்! // மகளிரின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது -மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

மகளிரின் அபிமானம், கௌரவம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுக்குத் தடையாக இருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதப் பிடியில் சிக்கி பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்த அனைத்து மகளிரையும் அதிலிருந்து மீட்டு அபிமானமிக்க மகளிர் பரம்பரையாக இலங்கை மகளிர் வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது: எமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக இருந்த [...]

தனிப்பட்ட விரோதம் காரணமாக பொன்சேகா கைது செய்யப்படவில்லை -கோத்தபாய ராஜபக்ஷ! // ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தொலைபேசியில் உரையாட அனுமதி

தனிப்பட்ட விரோதம் காரணமாக பொன்சேகா கைது செய்யப்படவில்லை -கோத்தபாய ராஜபக்ஷ! // ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தொலைபேசியில் உரையாட அனுமதி

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்ட உணவுதவிர்ப்பு போராட்டம் சாகும்வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டமாக உருவெடுத்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் பிரதான செயலாள் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா ஒருமாத காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரது மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. உறவினர்களுடன் அவர் தொலைபேசியூடாக பேசவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது பாரிய மனித உரிமை மீறலாகும். இது தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் எனவும் அவர் [...]

பெண்ணின் பெருமை!	(கவிதை) -வள்ளியம்மை சுப்பிரமணியம்.

பெண்ணின் பெருமை! (கவிதை) -வள்ளியம்மை சுப்பிரமணியம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
திட்டமிட்டுக் குடும்ப நிர்வாகம் நடாத்துவதும்
கட்டுப்பாடாய் இல்லறத்தை கவனமாக உயர்த்துவதும்
எட்டுத்திசை எங்கணுமே பெண்ணின் பெருமையதே!
கருவை உருவாக்கக் காத்திருந்தாள் பத்துமாதம்
அருவருப்புக் கொள்ளாது அனைத்துப் பணிவிடையும்
விருப்பத்துடன் நிறைவேற்றி விளக்கொளியாய்
வலம்வரும் அருமைப் பெண்மையின்
பெருமையைப் போற்றுவோம்!…

அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

மட்டக்குளி களனிப் பாலமருகிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு- கொழும்பு மட்டக்குளி களனிப் பாலத்திற்கு அருகாமையிலிருந்து அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் நேற்று பிற்பகலில் மீட்கப்பட்டுள்ளதாக மோதறைப் பொலீசார் தெரிவித்துள்ளார். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் கட்சி செயலர்கள் சந்திப்பு- தேர்தல் ஆணையாளருக்கும் கட்சி செயலர்களுக்குமிடையில் சந்திப்பொன்று எதிர்வரும் 12ம் திகதி தேர்தல் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரை இடம்பெற்றுள்ள வன்முறைகள் பற்றி [...]

சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)

சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)

சர்வ தேச மகளிர் தினம் இன்று. ஈழவிடுதலைப் போராட்டப் போக்கில் பெண்களின் பங்கு பற்றிய விடயங்களின் அடிப்படையில் இவ்தினத்தை சற்ற பார்ப்போம். இன்று நேற்று மட்டும் அல்ல ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இருந்து இன்றைய ஜனநாக, சோசலிஷ, முதலாளித்துவ சமுதாய அமைப்புகள் வரை நிர்வாகத்தில் சிறந்து விளங்குவது பெண்களே. ஆண் மேலாதிக்க சமுதாயம் இதனை ஏற்காமல் அவளை அடுப்பங்கரையிலும் ஆத்துக்குள்ளும் முடக்கி. அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதுவுமான நிலமைகளே பெண்கள் விடயத்தில் மேலோங்கி இருக்கின்றன. இதனை உடைத்தெறிய புறப்பட் [...]

நீர்கொழும்பு பகுதியில் இரண்டு வீடுகளில் திருடர்கள் கைவரிசை! // நான் வெற்றி பெற்றால் மாத்தறை மக்களைவிட்டு ஓடிவிடமாட்டேன் -சனத் ஜயசூரிய

நீர்கொழும்பு பகுதியில் இரண்டு வீடுகளில் திருடர்கள் கைவரிசை! // நான் வெற்றி பெற்றால் மாத்தறை மக்களைவிட்டு ஓடிவிடமாட்டேன் -சனத் ஜயசூரிய

நான் தேர்தலில் வெற்றி பெற்றதும் மாத்தளை மக்களைவிட்டு ஓடிவிடுவதாக ரணிலின் ஆதரவாளர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர் இதுவெறும் அபத்தம் என்று கிரிக்கட் சாதனை வீரரும் மாத்தறை மாவட்ட ஐ.ம.சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளருமான சனத் ஜயசூரிய கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் மாத்தறையில் பிறந்தவன் நான் மாத்தறை மக்களின் ஆசீர்வாதத்துடன் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி நான் வெற்றி பெற்ற பின்னர் மாத்தறையிலேயே தங்கியிருந்து மாத்தறை பகுதி மக்களுக்கு என்னால் ஆகவேண்டிய அனைத்துச் சேவைகளையும் செய்வேன் என்று [...]

நாடுகடந்த தமிழ்ஈழம், வட்டுகோட்டை தீர்மானம் போன்றவைகளை பற்றி இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அக்கறை கொள்ளவில்லை –புளொட் தலைவர் சித்தார்த்தன்! // மாத்தறை மாநகர முதல்வர் உபுல் நிஷாந்தவுக்கு எதிராக 29 புகார்கள்!

சிறுபான்மை தமிழ்கட்சிகள் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைகளை எடுத்து கூறுவதற்க்காக தனித்துவத்துடன் செயல்பட வேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் கடமை என ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் அக்கட்சியின் வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுதுறை செயலாளர் நிருபாமா ராவ்யை சந்தித்தித்து அம்மக்களின் நாளாந்த தேவைகள் தொடர்பாக எடுத்து கூறியதாகவும் அதனை மிகவும் அக்கறையுடன் செவிமடுத்தாகவும் தெரிவித்த [...]

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ஆட்சி முறைமையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் டியூ குணசேகர! // ஹைகோப் சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ஆட்சி முறைமையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் டியூ குணசேகர! // ஹைகோப் சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ஆட்சி முறைமையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அரசியல் சாசன அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கப் பெற்றால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் அல்லது ஆட்சி அதிகாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றில் ஏதேனுமொன்று மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 7வது பாராளுமன்றத்திற்கென புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறைமையில் மாற்றம் [...]

யுத்தம் நிறைவடைந்த பின் இலங்கையர்கள் ஆஸியில் அடைக்கல் கோருவது தொடர்பில் ஆஸி அதிருப்தி! // போதைப்பொருள் கடத்திய பிரதியமைச்சரின் இணைப்புச்செயலர் ஒருவர் பொலிசாரினால் கைது

யுத்தம் நிறைவடைந்த பின் இலங்கையர்கள் ஆஸியில் அடைக்கல் கோருவது தொடர்பில் ஆஸி அதிருப்தி! // போதைப்பொருள் கடத்திய பிரதியமைச்சரின் இணைப்புச்செயலர் ஒருவர் பொலிசாரினால் கைது

யுத்தத்தின் பின்னர் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் அடைக்கலம்கோரி வருவதாக அவுஸ்திரேலியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. மூன்று தசாப்த காலமாக நீடித்த சிவில் யுத்தத்தின் காரணமாகவே அதிக இலங்கையர்கள் தஞ்சம்கோரி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்படுவதாக அந்நாட்டு பிரதி பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் 66நாட்களில் 20இலங்கையர்கள் புகலிடம்கோரி சட்டவிரோதமான முறையில் படகுகளின்மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம்; இரு படகுகளில் இலங்கையர்கள் அவுஸ்திரேலிய சென்ற நிலையில் மீட்கப்பட்டு கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி [...]

செட்டிகுளம் வைத்தியசாலைகளிலுள்ள சிறுவர் சிகிச்சை விடுதிகள் புனரமைப்பு! // பௌத்த சிந்தனைகள் மூலம் வளர்க்கப்பட்ட, இலங்கை சமூகத்தின் தாய்மைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது -பிரதமர்

செட்டிகுளம் வைத்தியசாலைகளிலுள்ள சிறுவர் சிகிச்சை விடுதிகள் புனரமைப்பு! // பௌத்த சிந்தனைகள் மூலம் வளர்க்கப்பட்ட, இலங்கை சமூகத்தின் தாய்மைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது -பிரதமர்

பௌத்த சிந்தனைகள் மூலம் வளர்க்கப்பட்ட, இலங்கை சமூகத்தின் தாய்மைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள மகளிர்தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் அபிவிருத்திக்கு குடும்ப அலகினுள் காணப்படுகின்றன ஒற்றுமையானது பாரிய பக்கபலமாகும். அதனை விருத்திசெய்து கொள்வதற்காக பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவினை சிறந்த முறையில் பேணி வருவதற்கு தாயிடமிருந்து கிடைக்கப்பெறும் பங்களிப்பானது அளப்பரியதாகும். இரக்கம், கருணை, முதியோருக்கு பணிவிடை செய்தல் போன்ற மனிதாபிமான பண்புகளை குடும்ப [...]

வடக்கு, கிழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுகிறது -நிருபமா ராவ்! // ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளிவிகாரச் செயலர் நிரூபமா ராவ் ஊடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் வெற்றிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் வாழ்த்தைத் தெரிவித்த நிருபாமா, இந்த வெற்றியானது இலங்கை இந்தியா இடையிலான எதிர்கால உறவின் மேம்பாட்டுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முற்கூட்டியே சந்திக்க விரும்புகிறார் [...]

ஐ.தே.கட்சி பட்டியலிலிலிருந்து திஸ்ஸ குட்டியாரச்சியின் பெயர் நீக்கப்பட்டதற்கு விளக்கம் கோரல்..! // ஸ்ரீபதி சூரியாராய்ச்சியின் பாரியார் தில்ருக்சி பசில் ராஜபக்ச சந்தித்து உரையாடல்..

ஐ.தே.கட்சி பட்டியலிலிலிருந்து திஸ்ஸ குட்டியாரச்சியின் பெயர் நீக்கப்பட்டதற்கு விளக்கம் கோரல்..! // ஸ்ரீபதி சூரியாராய்ச்சியின் பாரியார் தில்ருக்சி பசில் ராஜபக்ச சந்தித்து உரையாடல்..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சியின் இல்லத்திற்கு விஜயம் செய்து சிறீபதியின் மனைவி தில்ருக்ஷியுடன் உரையாடியுள்ளார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பசில் ராஜபக்ஷ நேற்றுமாலையே சிறீபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணிக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் திருமதி தில்ருக்ஷி இச்சந்திப்பின் போது பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சி பட்டியலிலிலிருந்து திஸ்ஸ குட்டியாரச்சியின் பெயர் நீக்கப்பட்ட சம்பவம் [...]

பூவரசன்குளம் பிரதேசத்திலிருந்து அதி சக்திவாய்ந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு! // சரத் பொன்சேகாவிற்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது -இராணுவப் பேச்சாளர்

பூவரசன்குளம் பிரதேசத்திலிருந்து அதி சக்திவாய்ந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு! // சரத் பொன்சேகாவிற்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது -இராணுவப் பேச்சாளர்

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தசாமி நகரிலிருந்து அதிசக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த இரு தினங்களாக முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பயனாகவே இவை மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேடுதலின்போது நான்கரை கிலோகிராம் நிறைகொண்ட குண்டு, 06 கிரனேற் கைக்குண்டுகள், ஒன்றரை கிலோ கிராம் மற்றும் ஒரு கிலோவும் [...]

தமிழக முகாம்களிலிருந்து வெளியேறி வெளியிடங்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் விபரம் சேகரிப்பு! // புளொட் தலைவர், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) செயலர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் சந்திப்பு!

தமிழக முகாம்களிலிருந்து வெளியேறி வெளியிடங்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் விபரம் சேகரிப்பு! // புளொட் தலைவர், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) செயலர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் சந்திப்பு!

புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திரு.தி.சிறீதரன் ஆகியோர் நேற்றுமாலை 7மணியளவில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவுடன், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, உதவித் தூதுவர் விக்ரம், அரசியல் செயலர் சியாம் ஆகியோரும் புதுடில்லியிலிருந்து வருகை தந்திருந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது தேர்தல் நிலை சம்பந்தமாகவும், வடக்கில் மீள்குடியேற்றங்கள் மற்றும் அகதி முகாம்களின் நிலைமைகள் தொடர்பிலும் நிருபமா ராவ், [...]

யாழில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுமுக தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டுமென கோரிக்கை! // மீள்குடியேற்றம் மற்றும் யாழ். நிலைமைகளை அறிவதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை!

யாழில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுமுக தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டுமென கோரிக்கை! // மீள்குடியேற்றம் மற்றும் யாழ். நிலைமைகளை அறிவதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை!

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றல், யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை அறிவதற்காக அங்கு செல்ல தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் தடை ஏற்படுத்துவதால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையை அங்கீகரிக்குமாறு எவரும் தமக்கு ஆலோசனைகளை வழங்கவில்லை எனவும் இதனால் செய்தி சேகரிக்க இடமளிக்க முடியாது எனவும் கடற்படைச்சிப்பாய் ஒருவர் கடந்தமாதம் 28ம்திகதி நயினாதீவுப் பிரதேசத்திற்குச் சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இம்மாதம் 1ம்திகதி ஏ-9வீதியின் இரு [...]

மீண்டும் ஒரு ஏகத்துவ அமைப்புக்கு முடிசூட்டி அவர்களது உழுத்துப்போன எதிர்ப்பு அரசியல் கோஷத்திற்கு மயங்கி வாய்ப்புக்களை வீணடிக்கக் கூடாது -புளொட்! // அம்பாறையில் ஈரோசில் போட்டியிடும் தம்பிராஜா ராஜலிங்கம் ஆளும் கட்சியில் இணைவு!

எமது இனத்தின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒரணியில் நின்று போட்டியிட வேண்டுமென ஆரம்பகாலம் முதலே குரல் எழுப்பிவந்த நாங்கள் இத்தேர்தலில் இருகட்சி கூட்டாக போட்டியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது துரவதிஸ்டமானது இவ்வாறு புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எமது தாயகத்தினை சூழ்ந்திருக்கும் ஆரோக்கியமற்ற அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஜனநாயகத் தன்மை நிறைந்த ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தக்கூடிய சகிப்புத்தன்மையும் [...]

சர்வதேச பெண்கள் தினம்!  International Women’s Day! -அலெக்ஸ் இரவி

சர்வதேச பெண்கள் தினம்! International Women’s Day! -அலெக்ஸ் இரவி

“எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’ – பாரதியார்
“Each person must live their life as a model for others”~ Rosa Louise McCauley Parks-February 4, 1913-October 24, 2005, African American Civil rights activist
இன்று நூறாவது சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க வேண்டும். International Women’s Day [...]

சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸ்லாந்திலுள்ள இலங்கை டயஸ்போராவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வொன்று சுவிஸ்லாந்தின் பிரிபெர்க் மாநிலத்தில் நடைபெற்றது. சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் சிங்கள பொதுமக்கள் பகிரங்கமாக ஒன்றுகூடி நடாத்திய கலைநிகழ்ச்சி இதுவாகும். மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டிருந்ததுடன், இதில் பிரதம விருந்தினர்களாக ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றும் திரு.ரி.பி.மடுவகெதர, சுவிஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.சேனகா செனவிரத்ன, பௌத்த மதகுருவான திரு.கோட்டேபாய், மற்றும் [...]