போடியாரின் அலசல்

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-011)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்… (நகைச்சுவை ஆனால் உண்மை)
27.03.2008… 27.03.2008… 27.03.2008… 27.03.2008…..
புலிக் கூத்தமைப்பின்ர மட்டக்களப்பு கூத்தாடி ஜே.ஆனந்தமான மூர்த்தியார் இருக்கிறார் எல்லோ அவர்தான் பாருங்கோ அடுத்த மாமனிதர். ஏன் தெரியுதோ? அவர் சர்வதேச உடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில ஒரு தொகை மக்களை வாக்களிக்க வேண்டாம் என்கிறது அப்பட்டமான மனித உரிமை மீறல் எண்டு சொல்லிப் போட்டார்!! ஆனால் பாருங்கோ புலித்தலைவர் மகிந்த ராசபக்சாவுக்கு ஓர் ஜதார்த்தவாதி என்று பட்டமும் சூடி அவர தேர்தலில வெல்ல வைக்கிறதுக்காக [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-010)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
04.03.2008… 04.03.2008… 04.03.2008… 04.03.2008…..
கிழக்கின்ர மைந்தர்களுக்குள்ள தலைமைக்கான இழுபறி முடிந்து உப்ப புதிசு புதிசா உட்பூசல்கள் உருவாகிறதா தெரிய வருகுது பாருங்கோ. அந்த அமைப்பின்ர ஊடக பேச்சாளர் அசத்திர மௌலானா வுக்கு இலங்கையில இருக்கக்கூடிய மிகவும் சொகுசான கார் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறதாம் உதால மனமுடைந்த அந்த அமைப்பின்ர இராணுவப் பொறுப்பாளர் சிங்கள ஆங்கில பத்திரிகைகளுக்கு தன்ர நிலைமையை படம் பிடித்து அனுப்பி நான் இப்படியான சீமெந்துபூச்சு கூட இல்லாத திறந்த வீடொண்டில வசிக்க அமைப்பின்ர [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-009)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
02.02.2008… 02.02.2008… 02.02.2008… 02.02.2008…..
குதிர கயேந்தி ஒரு புதிய கண்டு பிடிப்பொண்டு கண்டு பிடித்து போட்டார் பாருங்கோ அது என்னெண்டு தெரியுமோ ஐக்கிய நாடுகள் சபை என்கின்ற அமைப்பு அமெரிக்காவின்ர நலனையும் அதின்ர உலகநாடுகள் மீதான வல்லாதிக்கத்தையும் பேணிக் காக்கின்ற ஒர் ஸ்தாபனாமாம் பாருங்கோ. யுhழ்ப்பாணத்து மக்களினால தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதியானவரின்ர கருத்துக்கள் அந்த மக்களின்ர கருத்துக்கு சமமானது பாருங்கோ உதுன்ர விளைவுகள அந்த மக்கள் பாத்து கொள்ளட்டும்.
கடந்த சில காலங்களாக தமிழ் [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-008)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
30.01.2008… 30.01.2008… 30.01.2008… 30.01.2008…..
எலிசபத் மகாராணியாரின்ர இடத்தில இருந்து நடுநிலையான ஊடகத் தொழில் (கூலிக்கு) நடத்துறம் எண்டு சொல்லிக் கொண்டு நாலா பக்கமும் வாங்க கூடிய எல்லாத்தையும் வாங்கி தங்கட மடிய நிரப்பிக் கொண்டு நடு நிலைமையை நடுவில வைத்து மறைத்து கொண்டு ஐயோ ஐயோ இண்டைக்கோ நாளைக்கோ எண்டு ஓடுதெல்லோ ஒரு ஊடகம், அதுல கிழமையில ஒரு ஆனமான நிகழ்ச்சி நடந்ததுங்கோ ஆனால் உப்ப அதுவும் நடக்காதாம், ஏன் தெரியுமோ பணிப்பாளர் புசல்லாவையூரான் [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-007)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
15.12.2007… 15.12.2007… 15.12.2007… 15.12.2007…..
கிழக்கிலன்ர மைந்தர்களுக்க சரியான கெடுபிடியள் நடந்து கொண்டிருக்குதாம் பாருங்கோ உதுக்குள்ள ஐனநாயக்கர்களினர தலைவர் வீணைய கீழ போட்டுட்டு கரப்ப தூக்கி கொண்டு அலைஞ்சு திரியிறாராம் குழம்பின குளத்துக்குள்ள விரால் புடிக்கிறதுக்கு. பாவம் மனிசனுக்கு தெரியாது உது சரியான சகதியுள்ள குளமெண்டு ஆளுமில்லாம கரப்புமில்லாம போற வேலை பாருங்கோ…
நம்மட சபாநாயகருக்கு கெங்கயுங்கோ நல்லது கெட்டுது விளங்கப் போகுது, அரள(?)வேந்தனார் கொஞ்சம் அப்புடி இப்புடி என்டு இந்தியாவோட சுழிக்க புறப்பட.. வன்னியில உள்ள [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-006)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
15.11.2007… 15.11.2007… 15.11.2007… 15.11.2007…..
கரும்புலி தாக்குதலுக்கெண்டு வந்தவங்களில இரண்டு பேர் அனுராஐபுரத்தில ஓழுங்கை ஒண்டுக்குள்ள ஓழிஞ்சி நின்டுத்து போனவையாம்… அந்த ரெண்டு பேரை கொண்டு வந்து வைத்து வேலுப்பிள்ளையின்ர பொடி படம்புடிச்சு விளையாட்டு காட்டினவர் அல்லோ அந்த கொண்டாட்டங்களில கலந்து கொண்டவைக்கு சுனாபானாவுக்கு புடிச்சமான பூநகரி அரிசியும் கறிவகைகளும் பரிமாறப்பட்டதாமுங்கோ. எப்புடி எங்கட தேசியத்தின்ர விளையாட்டு? பாவம் பாவி சுனாபானா கனவிலையும் நினைச்சிருக்க மாட்டார் தனக்குத்தான் உந்த படையல் எண்டு. வைச்சாண்டா தேசியத்தலைவர் ஆப்பு…! [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-005)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
05.11.2007… 05.11.2007… 05.11.2007… 05.11.2007…..
அண்மையில ஓர் ஊடகக்காரரை புடிச்சி விளக்கமறியலில வைத்தவங்க பாருங்கோ. தொடர்ந்தும் மனிசன விளக்கமறியலில வைக்க வேண்டும் எண்டும் அவர பிணையில விடுவித்தா சாட்சிகளுக்கு தொல்லை கொடுப்பாராம் எண்டும் காக்கிச் சட்டைகாரர் அடம் பிடித்தவையாம் அனால் நீதிபதி பாருங்கோ காக்கிச் சட்டைகாரரை கண்டிப்பாக எச்சரித்தவராம் சமுதாயநலன் வேண்டி எழுதுகின்ற எழுத்தாளர்கள காப்பாற்ற வேண்டிய நீங்கள் இந்த மாதிரி நீதமன்றத்தையே தவறான வழிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யிறது தண்டனைக்குரிய குற்றமாகும் எண்டு [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-004)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
21.10.2007… 21.10.2007… 21.10.2007… 021.10.2007…..
கிழக்கின்ர விடிவெள்ளியளுக்குள்ள சரியான விரிசல் ஏற்பட்டிருக்கிறதாகவும் அதால அவங்கட முக்கியஸ்த்தர்கள்ள ஓருவரான பாரதியார் நாட்டை விட்டு ஓடி விட்டதாகவும் கூலிக்கு ஊடகம் நடத்திறவங்கள் பரப்புரை செய்து கொண்டு இருந்தவையள். இந்த செய்தி பாரதியாரின்ர காதில எட்ட அவர் உந்த கூலிக்கு மாரடிக்கின்ற ஆளுட்ட (முன்னைநாள் முஸ்த்தபா) தொலைபேசியில தொடர்பு கொண்டு நான் எங்கேயும் போகேல்ல பாருங்கோ இங்க எங்கட தலமைக் காரியாலயமான மட்டக்களப்பு மீனகத்தில தான் இருக்கிறன் சந்தேகம் என்றால் [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-003)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
10.10.2007… 10.10.2007… 10.10.2007… 10.10.2007…..
உலகத்தில எங்கேயும் மதுபோதையில் வாகனம் ஓட்ட முடியாது மட்டுமல்ல அது தண்டனைக்குரிய குற்றமும் பாருங்கோ. ஆனால் நம்மட லங்காவில அது தலை கீழ் தெரியுமோ? காக்கிச்சட்டை மா அதிபரின்ர உறவுக்காற நபர் ஓருவர் மதுபோதையில வாகனம் ஓடி மாட்டுப்பட்டுப் போட்டார். அவர் மாட்டுப்பட்டது ஏதோ நீதியை நிலைநாட்ட துடிக்கின்ற இளம் காக்கிச்சட்ட பரிசோதகர் ஒருவருட்ட பாருங்கோ. ஆள் பாரபட்சம் பார்க்காமல் சட்டத்த கையில எடுத்து மேலிடத்து உத்தரவையும் மீறி குற்றவாளியை [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்... உண்மை!!! (பகுதி-002)

அதிரடிப் போடியாரின் அலசல்…! *நகைச்சுவை ஆனால்… உண்மை!!! (பகுதி-002)

*******************************************
அதிரடிப் போடியாரின் அலசல்…
03.10.2007… 03.10.2007… 03.10.2007… 03.10.2007…..
இலங்கையில வடகிழக்கில இருந்த தாலிகொடி அம்மளவையும் அறுத்துட்டு போய் இந்தியாவில அஞ்ஞாதவாசம் இருக்கிற மனிசன் சரியான வெப்புசாரத்தில திரியுதுங்கோ, என்ன தெரியுதோ… இதொரு உப்புச்சப்பில்லாத பச்சத்தண்ணி என்றத்த அறிஞ்ச பொறகு அந்த ஆளோட இருந்த பல முக்கியஸ்த்தர்கள் கிழக்கின்ர விடிவெள்ளியளோட போய் சேர்ந்தவங்கள் என்றது எல்லோருக்கும் தெருயும் தானே. அவங்கள் கிழக்கின்ர விடிவெள்ளியளோட நல்லா பின்னி பிணைஞ்சிட்டாங்க எண்டத கண்ட பொறகு ஆளுக்கு இருப்பு கொள்ளுதில்லையுங்கோ, பொறாமை வெடிச்சி [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…!! *நகைச்சுவை ஆனால் உண்மை!!! (பகுதி-001)

*******************************************
01.10.2007… 01.10.2007… 01.10.2007… 01.10.2007…..
ஊடகம் என்றால் அதற்கென்றொரு அது வேணுமுங்கோ, மக்களுக்கு தவறான செய்தி ஒன்றை கொடுத்துப்புட்டா அதற்காக மன்னிப்பு கேட்கின்ற பக்குவமும் வேணுமுங்கோ அத விட்டிற்று நடுச்சாமத்தில தங்களுக்கு வேண்டப்பட்டவங்கள திருப்திபடுத்திறதற்காக செய்தியாம் எண்டு போட்டுற்று பொறகு விடியிறதுக்கு முதல் கழட்டி விடுறது என்ன தர்மமுங்கோ? விளங்குதோ என்னத்தப்பற்றி கதைக்கிறன் எண்டு தூசணம் டொட் கொம்மில புசல்லாவையூரானை திருப்தி படுத்திறதுக்காக அவர் கள்ளக்காட்டு விசயத்தில மாட்டுப்பட்டு கம்பி எண்ணேக்க அந்த வானொலியை நடத்தி சென்ற ஓருவரைப் [...]

அதிரடிப் போடியாரின் அலசல்…!!!

அதிரடி இணயத்தில் “அதிரடிப் போடியாரின் அலசல்”… எனும் புதியபகுதி மிகமிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அதிரடி இணையத்தின் ஆசிரியர்குழுவில் ஒருவரான திரு.பீமன் என்பவரால் எழுதப்படவுள்ள மேற்படிப் பகுதியில் விடுதலைப்புலிகள், ரிஎம்விபி, புளொட், ஈபிடிபி, ஈபிஆர்எல்எப், ரியுஎல்எப், தமிழ்க்கூட்டமைப்பு மற்றும் தென்னிலங்கை அரசியல்கட்சிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரமுகர்கள் அவர்கள் சார்ந்த அமைப்புக்கள் குறித்தும் நையாண்டியாக அதேநேரம் உண்மைகளை எழுதப்படவுள்ளது. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த உண்மையான தகவல்களை எழுதி அதிரடியின் மின்னஞ்சலுக்கு athirady@yahoo.com அனுப்பி வைக்கவும். அதேவேளை சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு [...]