அதிரடிக்கானவாழ்த்த

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -புன்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -புன்னியாமீன்

20ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம், அனைத்து நாடுகளும் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் ‘சிகப்பு நாடா சின்னம்” அல்லது ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்” ஆண்டுதோறும் டிசம்பர் [...]

ஜனாதிபதியையும் விட்டதில்லை.. ஜனநாயகத்தையும் கொன்றதில்லை.. ஆதலினால் அதிரடியே.. ஆறாவது அகவையிலே.. அனைத்தும் பெற்று நீ வாழ்க..! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

ஜனாதிபதியையும் விட்டதில்லை.. ஜனநாயகத்தையும் கொன்றதில்லை.. ஆதலினால் அதிரடியே.. ஆறாவது அகவையிலே.. அனைத்தும் பெற்று நீ வாழ்க..! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

கடல் கடந்து சென்று விட்ட கள்வர் கூட்டமெல்லாம்..
காட்டையும், களவையும் பேசி..
கறுப்புப் பணம் பெறுகையிலே..
நாட்டை விட்டு புறப்பட்டும்..
நம்மக்களுக்காய் அதிரடியாய் உள்ளவரே..
கூலிக்கு செய்ததில்லை..
கூத்துக்கும் சாயவில்லை..
அதிகாரத்திற் கடங்கவில்லை..
அநீதிக்கும் அசையவில்லை..
ஜனாதிபதியையும் விட்டதில்லை..
ஜனநாயகத்தையும் கொன்றதில்லை..
ஆதலினால் அதிரடியே..
ஆறாவது அகவையிலே..
அனைத்தும் பெற்று நீ வாழ்க..
புலிகளையும் புரியவைத்தாய்..
புல்லரிக்க செய்தி போட்டாய்..
அரசினையும் விழித்திட்டாய்..
மண் மக்களுக்காயே அதையும் செய்தாய்..

அதிரடிக்கு எம் வாழ்த்து.. (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடிக்கு எம் வாழ்த்து.. (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அரசின் மடியில் கிடப்பவனே.. அதிரடி பார்..
புலியின் மடியில் வீழ்ந்தவனே.. அதிரடி பார்..
அகதி முகாமில் இருப்பவரே.. அதிரடி பார்..
அரசியல் பற்றி பேசுவோரே.. அதிரடி பார்..
சங்கடப்படும் சமூகவாதியே.. அதிரடி பார்..
அநீதிகளை வார்த்தைகளினால் சுட்டு,
வலிய கரு உருவாக்கத் திணறுவோரே.. அதிரடி பார்..
தேவையானோரை, வாக்குப்பலத்தால்,
தேர்ந்தெடுக்க நினைப்பவரே.. அதிரடி பார்..
என்பது தான் இப்போதுள்ள அறிவுரையாய்..
அதிகமானோர் சொல்லுகிறார்..
ஏனெனில், அதிரடி யாருக்கும் அடிபணியா..
மக்களின் மனதில் பொய் போடா..
அனுபவத்தில் உணர்ந்திட்டோம் அதிரடியே..
ரிஸ்மிலெப்பை –கட்டார்
(இதனை முழுமையாக அதிரடி இணையத்தின் “அதிரடியின் வாழ்த்துக்கள்” பகுதியில் பதிவு செய்துள்ளோம்..)

அதிரடியே.. ஈழத்தில் வாழும் சமாதானத்தையும் பண்பையும் மனிதத்தையும் நேசிக்கும் அன்பர்கள் சார்பில்.. நன்றிகள் உனக்கு..! -கிழக்கான் ஆதம் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடியே.. ஈழத்தில் வாழும் சமாதானத்தையும் பண்பையும் மனிதத்தையும் நேசிக்கும் அன்பர்கள் சார்பில்.. நன்றிகள் உனக்கு..! -கிழக்கான் ஆதம் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அன்பின் அதிரடிக்கு.. வணக்கம் அதிரடி தனது ஐந்து ஆண்டைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி வைக்கிறது வாழ்த்துக்கள்!! இந்த ஐந்து ஆண்டுகள் என்பது சாதாரண ஆண்டுகள் அல்ல இக் காலத்தில் தான் ஈழத்தமிழர்களை பிடித்திருந்த ஒரு மாயப்பேய் விரட்டப்பட்டிருக்கிறது அதற்கு ஆதரவாக அதிரடி போராடியிருக்கிறது! நன்றிகள் உனக்கு.. ஈழத்தில் வாழும் சமாதானத்தையும் பண்பையும் மனிதத்தையும் நேசிக்கும் அன்பர்கள் சார்பில்.! இந்தப் போராட்டம் இலேசானது அல்ல, அதுவும் ஐரோப்பிய நாட்டிலிருந்து என்பது இன்னும் கஷ்டமான விடயம். காரணம் [...]

அடக்கப்பட்டவர்களுக்காயும், அதிகாரங்களுக்கு வார்த்தைகளால் அடிகொடுக்க நினைப்பவர்களுக்காயும்.. நீ வேண்டும் இன்னும் பல நூறாண்டு..! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அடக்கப்பட்டவர்களுக்காயும், அதிகாரங்களுக்கு வார்த்தைகளால் அடிகொடுக்க நினைப்பவர்களுக்காயும்.. நீ வேண்டும் இன்னும் பல நூறாண்டு..! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடியே..
அனைத்து தரப்பினரையும் வசப்படுத்தினாய்..
அண்டப்புழுகு சொல்வோரையும், தலை குனியப் பண்ணினாய்..
வார்த்தை ஒழுங்கு அறியாரை, அவமானப்படுத்தினாய்..
பொய்தனை பரப்புவோரை போக்கிரியாய் செய்திட்டாய்..
மாயை மாமனிதர் பட்டம், தாமாக எடுத்தவரை..
பசுத்தோல் போர்த்திய புலியினரை.. பளிச்செனக் காட்டினாய்..
இன்னும் பல்வேறும் பாங்காகவே பண்ணினாய்..
உந்தன் இந்த சேவைகள்,
இளைய எம் சந்ததிகளின் தேவைகள்..

அதிரடிக்கு எம் வாழ்த்து..!! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடிக்கு எம் வாழ்த்து..!! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

செய்திகளில் செம்மையானதையே..  தருகின்ற அதிரடியே..
உண்மையின் தேவை முன்னமே தெரிந்து விட்டது உனக்கு..
அதனால் காலமும் முன்னமே கனிந்து விட்டது உனக்கு..
எனவேதான், அடைந்ததுவே அகவைகள் ஐந்துனக்கு..
ஆகவே தான், அனுப்புகிறோம் வாழ்த்துனக்கு..
அகவைகள் ஐந்தினைத்தான் கடந்துவிட்ட போதினிலும்,
கடந்துவிட்ட வேகம்தான் தெரியவில்லை எமக்கு..
ஏனெனில், அதிரடியின் ஆதிதனில் இருந்திட்ட விறுவிறுப்பும், துடிதுடிப்பும்
இன்னமும் மின்னுதலே காரணம் அதற்கு..
விறுவிறுப்பும், துடிதுடிப்புமாய் துப்பறிந்த உன்னை,
முளையிலேயே கிள்ளிவிடப் பார்த்தார்கள் ஒரு சிலர்..
பெரும் சிக்கலில் மாட்டிவிடப் பார்த்தார்கள் மிகப் பலர்..
இவர்கள் யாவருமே அதிகாரம் கொண்டவர் தாம்..
அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தான்.
இருந்த போதும் என்ன [...]

அதிரடியாக செய்திகளை வழங்கிய நீ! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடியாக செய்திகளை வழங்கிய நீ! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடியாக செய்திகளை வழங்கிய நீ!
ஆன்மீகத்தை தெளிவுபடுத்திய நீ!
அந்தரங்கமான செய்திகளை பாதுகாத்த நீ!
அரசாங்கத்தின் திறமையை பாராட்டிய நீ!
அழகுக் குறிப்புகளை அழகாய் வழங்கிய நீ!
அலசி ஆராய்ந்து உண்மையை சொன்ன நீ!
ஆறுவருடங்கள் வீரநடைபோட்ட நீ!
இன்னும் இதுபோல் பல வருடங்கள்
உன்னை வாழ வளர வாழ்த்துகிறேன்!…..
திரு.கரிகாலன் -மட்டுநகர்
(இதனை முழுமையாக அதிரடி இணையத்தின் “அதிரடியின் வாழ்த்துக்கள்” பகுதியில் பதிவு செய்துள்ளோம்..)

ஓ அதிரடியே! ஆறாவது ஆண்டிலும் உனது ஆதிக்கமா! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

ஓ அதிரடியே! ஆறாவது ஆண்டிலும் உனது ஆதிக்கமா! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

ஓ அதிரடியே! ஆறாவது ஆண்டிலும்
உனது ஆதிக்கமா!
உரிமையிழந்த தமிழர்களின் உரிமை குரலை
உலகிற்கு எடுத்தோம்பியது நீ!
இலைமறை காய்களாக இருந்த
எமது ஆக்கங்களை சர்வதேச மட்டத்தில் உயர்த்தியதும் நீயே!
நாங்கள் உனக்காக தருகிறோம் ஒரு சிறிய வாழ்த்துமடல்!..
ஆனால் நீயோ எங்களுக்காய் தருகிறாய் சுதந்திர காற்றை!..
தமிழ்பேசும் நெஞ்சங்களின் இணையில்லா இணையம் நீ!
ஓ!.. அதிரடியே! உனது அதிரடியான செய்தியும்
ஆபூர்வமான ஆக்கமுமே எங்களின் நிம்மதி!…
இதுபோல மேலும் பலநூறு வருடங்கள்
உனது பணிதொடர பல லட்சதமிழ்பேசும்
நெஞ்சங்களுடன் எனது இனிய வாழ்த்துக்கள்…
அப்ரத் -புத்தளம்
(இதனை முழுமையாக அதிரடி இணையத்தின் “அதிரடியின் வாழ்த்துக்கள்” பகுதியில் பதிவு [...]

அதிரடி இணைய வலைக்கு.. பொய்மையை பிடித்து, உண்மை வடித்து, உணர்த்தி நிற்கும் ஊடகவலைக்கு.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்! –நிதர்சனம்.நெற் இணையம் (அதிரடிக்கானவாழ்த்து 2009)

அதிரடி இணைய வலைக்கு.. பொய்மையை பிடித்து, உண்மை வடித்து, உணர்த்தி நிற்கும் ஊடகவலைக்கு.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்! –நிதர்சனம்.நெற் இணையம் (அதிரடிக்கானவாழ்த்து 2009)

இணைய தளங்கள் படிப்பவர்கள், பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்…
இணைய தளங்களெல்லாம் பொய் சொல்லுகின்றனவாம்.
இணைய தளங்களெல்லாம் பொய் சொல்லுகின்றன என்று,
அவர்கள் சொல்லுவதே சுத்தப்பொய்.
அதிரடியே.. ஆதாரம் நீ..!
உன்னில் வெளியாகும் அத்தனையுமே உண்மையானவை!!
மற்றவர்களுக்கு கிடைக்காத தகவல்களை, நீ..
ஊடுருவி தேடிவந்து, ஆக்கமதாய் அளித்து விடுவதால்,
அவர்களுக்கு தெரியாதவை அவையாதலால், பொய்யென்று புனைகிறார்கள்.
பின்னரே, தேடுகின்றார்.. திக்குமுக்காடுகின்றார்..
உண்மையை உணர்கின்றார்..
உனைதினம் பார்க்கின்றார்..  எண்ணிலடங்கா வாசகரை..
தன்வசம் கொண்ட நீ..
உண்மைதனை உரைத்தே பெற்றுக் கொண்டனயே..
வேண்டாத குண்டரெல்லாம்.. உனக்கவதூறு பரப்பினரே..
குற்றமனம் கொஞ்சமின்று.. குப்பை அள்ளி வீசினரே..
ஆனாலும், என்னபலன்.. அத்தனையும், அவர் பக்கம் திரும்பியதே.
அவர்களெல்லாம், வீட்டுக்கூரைகளிலும், குப்பை [...]

அகவைகள் ஆறினில் அடிபதிக்கும் அதிரடியே.. அனைத்தும் பெறுவாய்.. அதிரடியே.. -முழக்கம் இணையம்! (அதிரடிக்கானவாழ்த்து 2009)

அகவைகள் ஆறினில் அடிபதிக்கும் அதிரடியே.. அனைத்தும் பெறுவாய்.. அதிரடியே.. -முழக்கம் இணையம்! (அதிரடிக்கானவாழ்த்து 2009)

அதிரடியே.. உனக்கு,
அகவைகள் ஐந்து அகன்று கிடக்கிறது.
ஆனால் இப்போதோ,
அங்கொன்றும், அடுத்தொன்றுமாய்..
இங்கொன்றும், அருகொன்றுமாய்..
புதிய புதிய இணையதளங்கள்,
இளையதளங்களாய் கொட்டிக் கிடக்கின்றன..
மழைக்கு முளைத்த காளானாக,
மக்களிடம் எத்தனை தளம்!!!?
கட்சிக்கொன்று, கயவருக்கொன்று..
ஆபாசத்திற்கொன்று, அரசியல் வாதிகளுக்கொன்று.. என்று
அத்தனையுமே புதிய புதிய பொய்களைப் பிரசவிக்கின்றன.
அடுக்கடுக்காய் அண்டப் புழுகுகளை அலங்கரிக்கின்றன.
ஆனாலோ, அகவைகள் ஐந்தினை கடந்து நிற்கும்
உன்னில் அத்தனையும் உண்மை தானே..

அதிரடியின் ஐந்தாண்டு.. அழகான வளர்ச்சி கண்டு.. வசனங்களால் வாழ்த்துகின்றோம்.. வார்த்தை பரிமாறுகின்றோம்.. -இலக்கு இணையம்! (அதிரடிக்கானவாழ்த்து 2009)

அதிரடியின் ஐந்தாண்டு.. அழகான வளர்ச்சி கண்டு.. வசனங்களால் வாழ்த்துகின்றோம்.. வார்த்தை பரிமாறுகின்றோம்.. -இலக்கு இணையம்! (அதிரடிக்கானவாழ்த்து 2009)

ஆறாவது ஆண்டுதனில்.. அடிவைக்கும் அதிரடியே..
ஐந்தாண்டு காலமதில்.. உனைப் பார்த்து பெற்றுவிட்ட..
உணர்விற்கு நன்கொடையாய்.. எழுந்து நின்று வாழ்த்துகின்றோம்..
எம்கடமை நிறைவேற்றுகின்றோம்..!!
அதிரடியே.. நாமுனக்கு.. ஆதரவு நல்காதிருப்பதுவும்..
உற்சாக உணர்வூட்ட பின்வாங்கி நிற்பதுவும்..
எம்மனதில் கறையென்றே.. உன்னதர்க்கு உணர்த்திக் காட்டும்..
ஆதலினால் வாழ்த்துகின்றோம்.. வாஞ்சையுடன் ஏற்றுக்கொள்ளு..!!
உன்னை புகழ்வதனால்.. கூடவே, வாழ்த்துவதால்.. வழிகெடப் போவதில்லை நீ..
சிலர், தூற்றுவதால், துப்புவதால்.. துப்பாக்கி ஏந்தப் போவதில்லை நீ..
ஆதலினால், வார்த்தைகளால்.. வாழ்த்துகிறோம், ஏற்றுக்கொள்ளு..!!
கொண்ட கொள்கை மாறிடாது.. கோர தாண்டவமும் ஆடிடாது..
கொடும் பாதை க(ந)டந்து வந்த.. நின் பாதை போற்றுகின்றோம்..
அல்லலுறும் மக்களுக்காய் ஆக்கம் தந்து..
அனைவரையும் [...]

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து வரும் அதிரடியே!! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து வரும் அதிரடியே!! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

ஆயிரமாயிரம் செய்திகளையும்
ஆயிரமாயிரம் ஆக்கங்களையும்
ஆழ்ந்த கருத்துக்களையும்
அதிரடியாய் தந்தெமக்கு
ஆச்சரியத்தில் மூழ்கடித்து
எம் மனதில் ஆழப்பதிந்திட்ட
அதிரடி இணையத்தளமே!
ஆண்டுகள் பல கடந்து
ஆறாவது ஆண்டிலும் அயராது – நீ
ஆற்றிவரும் சேவைதனையிட்டு
நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது!..
தூற்றுபவர்கள் தூற்றட்டும்
போற்றுபவர்கள் போற்றட்டும்
நீ செய்யும் செயலை செவ்வனே செய்து
நீ துணிந்து நின்று உன் சேவைதனையாற்றிடு..

தமிழரின் அன்னை மடியே! (அதிரடிக்கானவாழ்த்து 2009)

தமிழரின் அன்னை மடியே! (அதிரடிக்கானவாழ்த்து 2009)

ஆறாவது ஆண்டில் கால் பதிக்கும் அதிரடியே !
இணைய உலகின் அழகிய ரதியே !
தமிழரின் அன்னை மடியே !
தமிழ் சமுகத்தின் மேய்ப்பன் கைத்தடியே !
நானும் உன் வழியே !
காலையில் கண்விழித்ததும்
காப்பியை உதடுகள் உறிஞ்சும்
கண்களோ உன்னை மேயும்
உன்பணி உயர !
வாசகர் உள்ளம் மகிழ !
வாழ்த்து மலர்களை ,
உள்ளப் பூங்காவில் இருந்து தூவுகின்றேன் !
-முதல்மனிதன் இணையம்-
(இதனை முழுமையாக அதிரடி இணையத்தின் “அதிரடியின் வாழ்த்துக்கள்” பகுதியில் பதிவு செய்துள்ளோம்..)

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், இயல்பு வாழ்க்கை என்பவற்றுக்காகவும் 'அதிரடி' தொடர்ந்து செயல்பட வாழ்த்துகிறோம்!  - புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், இயல்பு வாழ்க்கை என்பவற்றுக்காகவும் ‘அதிரடி’ தொடர்ந்து செயல்பட வாழ்த்துகிறோம்! – புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

“அதிரடி” இணையமானது தனது சேவையில் ஐந்தாம் ஆண்டினைப் பூர்த்தி செய்துகொண்டு ஆறாம் ஆண்டில் காலடி பதிக்கின்றதையிட்டு புளொட் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. பல்வேறு தடைகள், சவால்கள் மற்றும் நெருக்குவாரங்கள் என எந்த சூழ்நிலையிலும் செய்திகளை வழங்குவதில் நடுநிலை தவறாத தன்மை, தவறுகளை பாரபட்சம் பாராது உடனுக்குடன் சுட்டிக்காட்டும் துணிச்சல், தமிழ் மக்களின் துன்ப துயரங்களை வெளிக் கொணர்வதில் அக்கறைமிக்க செயற்பாடு என்பவற்றில் “அதிரடி” இணையத்தின் பணியானது பாராட்டத்தக்கதொன்றாகும். “அதிரடி” இணையமானது நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை துல்லியமாக [...]

வாழ்த்துக் கொடிகளை, வார்த்தைகளால் ஏற்றுகின்றோம்.. அதிரடியே.. உனக்காக!! -வாவிமகள் இணையதளம் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

வாழ்த்துக் கொடிகளை, வார்த்தைகளால் ஏற்றுகின்றோம்.. அதிரடியே.. உனக்காக!! -வாவிமகள் இணையதளம் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

  அதிரடியே!
நீ இலத்திரனால், இதயத்தினால் பேசுகின்றாய்..
உரக்கவே பேசுகின்றாய்,
உண்மைகளைப் பேசுகின்றாய்..
கணணியினூடும், கண்ணினூடும்
எம் இதயங்களே அதிரும்படி..
அநீதிகளுக்கெதிராய் பேசுகின்றாய்..
உன்னுடைய ஆக்கங்கள்..
உண்மைகளை உணரச் செய்கின்றன..
உள்ளவற்றையே உணர்த்தி நிற்கின்றன..
நீ.. புலிகளுக்கெதிராகவும், பேசினாய்..
அரசுக்கெதிராகவும் பேசினாய்..
அநீதியை வழிநடத்தும் அத்தனை
தலைவர்கட்கெதிராயும் பேசினாய், பேசுகின்றாய்..
மொத்தத்தில் மக்களுக்காய் பேசுகின்றாய்..
நாங்களுந்தான், பேசுகின்றோம்..
ஆனால், அச்சத்தில் பேசுகின்றோம்..
அடங்கியே பேசுகின்றோம்..

6வது ஆண்டில் காலடி பதிக்கும்

6வது ஆண்டில் காலடி பதிக்கும் “அதிரடி”க்கு எமது வாழ்த்துக்கள்.. — ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் தி.ஸ்ரீதரன் (சுகு) (அதிரடிக்கான வாழ்த்து 2009)

ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் “அதிரடி” இணையத்திற்கு முதற்கண் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் இணைய வடிவமைப்பு பொலிவு பெற்றிருக்கிறது. உள்ளடக்கம் பன்முகப்பட்ட விடயதானங்களை உள்ளடக்கி வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம், அரசியல் அதிகாரப்பகிர்வு என்பன அதிரடியின் குரலின் பிரதான அம்சங்களாக அமைகின்றன. நவீன இணையத் தொழில்நுட்பத்தின் அம்சங்களை இணைப்பதில் ஆர்வம் தெரிகிறது. எனினும் தர்க்கபூர்வமாகவும், ஆழமாகவும், விடயங்கள் இடம்பெற வேண்டும். ஜனநாயகபூர்வமான புரிதலை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். “அதிரடி”யின் பணி [...]

அதிரடியின் சேவை தமிழுக்கு தேவை..!! --பூர்வீகம் இணையத்தளம் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடியின் சேவை தமிழுக்கு தேவை..!! –பூர்வீகம் இணையத்தளம் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

14.10.2009  அன்று ஆறாவது  ஆண்டில் கால் பதிக்க இருக்கும் அதிரடி இனையத்தளத்திற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு  அதிரடி இணையத்தளம் பல இன்னல்களுக்கு மத்தியில் வாசகர்களுக்கு உண்மைச் செய்திகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பக்கசார்புகள் இல்லாமல் நடுநிலையான உண்மை செய்திகளை மாத்திரம் ஐந்து வருடங்களாக  வழங்கி வரும் அதிரடி இணையதளம் எம்மை போன்ற புதிய இனையதளங்களுக்கு இடங்களைத் தந்து நாம் இணையதளங்களை உருவாக்கினால்  அதிரடியை போல் செயற்பட வேண்டும்  [...]

அதிரடிப்பையா! எங்கள் அதிரடிப்பையா! ஆண்டு நீ நூறுவாழி எங்கள் அதிரடிப்பையா!!! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடிப்பையா! எங்கள் அதிரடிப்பையா! ஆண்டு நீ நூறுவாழி எங்கள் அதிரடிப்பையா!!! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடியாய்  நேரடியாய் பேசி
ஆற்றல் வல்லமை கொண்டு
அடியெடுத்துவைக்கும்
ஆறுவயது அதிரடிப் பையா!!!
அழகுகொண்ட அதிரடிப்பையா!!!
அத்திமலர்கள் போல்
அதிசயம் உன் வார்த்தை
அனைத்துமே உண்மையடா
அதிரடிப்பையா!!!
அல்லல் படும் மக்களின்
அவல நிலமைகளை
அகிலத்திற்கு உணர்த்திடும்
அறிவியல் மையமடா
அதிரடிப்பையா -நீ மெய்யனடா
அதிரடிப்பையா!!!
ஆசான் இல்லை உனக்கு
அதிரடிப்பையா.. ஆனால்
அள்ளி வழங்கினாய் ஆக்கங்களை
ஆணவமில்லாது  அதிரடியாய்
அங்கமில்லாம் குளிர்கிறது
அதிரடிபையா!!!….

அனுதினமும் செய்திகளை அடுக்கடுக்காய் நிலைநிறுத்தி.. அதிரடியே  அதிரடியாய்.. -விழிப்பு இணையம்! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அனுதினமும் செய்திகளை அடுக்கடுக்காய் நிலைநிறுத்தி.. அதிரடியே அதிரடியாய்.. -விழிப்பு இணையம்! (அதிரடிக்கான வாழ்த்து 2009)

தடைபல தகர்த்து.. குகைபல நுளைந்து,
உண்மைகளை தமிழருக்காய் உணர்த்தி வரும் அதிரடியே..  
அதிரடியாய் களமிறங்கி.. வாய்மைகளை வழங்கி வைத்து..
அனுதினமும் செய்திகளை அடுக்கடுக்காய் நிலைநிறுத்தி..
அவ்வப்போது ஆக்கங்களை இடையிடையே உட்புகுத்தி..
வாசகர் தம் தீர்ப்பிடவும் வழிகொடுத்து..
ஆர்ப்பாட்டமாய், ஆரவாரமாய்  அகவைகள் ஆறினை,
அதிரடியாய் அடைந்துள்ளாய். 
செய்தி, கவிதை, கட்டுரைகளென்றும்..
ஆய்வு, அலசல், அரசியல், அவதானிப்புக்கள் என்றும்..
நீ.. சுமந்துவரும் அத்தனையும் பிரமாதம்…

எம்மையும் ஊக்கப்படுத்திய

எம்மையும் ஊக்கப்படுத்திய “அதிரடி” இணையத்திற்கு எமது அன்பான வாழ்த்துக்கள்! -தங்க. முகுந்தன் // முஸ்லிம்களுக்காகவும் அத்துடன் ஓட்டு மொத்த கிழக்கு மக்களுக்காகவும் துணிவுடன் குரல் கொடுக்கும் “அதிரடி”க்கு எமது வாழ்த்துக்கள்.. -கலசம் வானொலி

அதிரடி தன் செய்தி மற்றும் தகவற்பணி வழியில்
ஆறாவது ஆண்டை எட்டிப் பிடிக்கிறது என்பதில்
எமக்கும் ஒரு அகமகிழ்வுண்டாகிறது!
பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கைகள் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாது மறுக்கப்படும் போது எமது நியாயமான ஆக்கங்களை அப்படியே பிரசுரித்து எமக்கும் ஒரு கருணை காட்டி – எம்மையும் ஊக்கப்படுத்திய “அதிரடி” இணையத்திற்கு எமது அன்பான வாழ்த்துக்கள்!
நியாயத்தையும், தர்மத்தையும், உண்மை நிகழ்வுகளையும் தொடர்ந்து பிரசுரித்து நூற்றாண்டு காலம் நல்ல பணி செய்துவிட
எளியவனின் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் -
இறைவனிடம் வேண்டுதல்களும் உங்களுக்காக!!
என்றும் அன்புடன்.. -தங்க. முகுந்தன்.
அன்புடைய ஆசிரியர் [...]

அகவை ஆறாவதில் அடியெடுத்து வைக்கும் அதிரடியே! -

அகவை ஆறாவதில் அடியெடுத்து வைக்கும் அதிரடியே! -”இலக்கியா” இணையத்தளம் (அதிரடிக்கான வாழ்த்து 2009)

அதிரடியே! அதிரடியே!
அதிரடியாய் “செய்திகளை” நமக்கு
அள்ளி அள்ளி தருவதில்
அகிலம் முழுவதும் நீ அறிந்தவராயிற்றே!
அகிலம் முழுவதும் அடக்குமுறையில்
ஆண்டாண்டு காலமாய் நம்மினம்
அகப்பட்டு அடங்கி கிடந்த பொழுது
அதிரடியாய் நீ முளைத்து வந்து
அடக்குமுறைக்கு அடங்கிக் கிடந்த தமிழர்களை
அதிரடியாய் தட்டியெழுப்பி அறிவூட்டி விழிக்க வைத்து
அனைவரையும் உன்பால் ஈர்த்தெடுத்தது பெருமைதானே!..

“அதிரடி” இணையமானது ஆறாவது (2009) வருடத்தில் கால்பதிக்கின்றது..!! (அறிவித்தல்)

“அதிரடி” இணையமானது ஐந்துவருட சேவையினைச் செவ்வனே பூர்த்தி செய்து 14.10.2009ல் ஆறாவது வருடத்தில் கால் பதிக்கின்றது. நீண்டகால பல்வேறு நெருக்குவாரங்கள், நிதி நெருக்கடிகள், மிரட்டல்கள், பல்வேறு கருத்து முரண்பாடுகள் போன்ற பலவற்றுக்கும் மத்தியிலும் பக்கச்சார்பின்றி, நடுநிலையாகவும் உண்மைக்குப் பாத்திரமாகவும், நேர்மை, நடுநிலை தவறாமலும், உண்மைத் தகவல்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து லேட்டாக தந்தாலும், லேட்டஸ்டாக தெளிவான செய்திகளாகத் தருவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. அத்துடன் அதிரடியானது தகவல்களை துல்லியமாகக் கணித்து வெளியிட்டு வரும் திறன் யாவரும் [...]

அதிரடியே வாழ்க வளமுடன்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

நான்காண்டு
அகவைதனை கொண்டாடும்
அதிரடியே -நீ
புயலே அடித்தாலும்
பூகம்பமே வந்தாலும்
இடியே இடித்தாலும்
எரிமலையே வெடித்தாலும்
அதிரும் களங்கள் எல்லாம்
அதிரடியாய் நீ உரைத்தாய்!!
படுவான் கரைதனிலே
பகைவர் வெறிச்செயலை
பக்கம் சாராமல்
வாய்மைதனை நீ உரைத்தாய்!

ஐந்தாம் வருடத்தில் பயணிக்க, திடவுறுதியுடன் நின்று ஜனனிக்க.. வாழ்த்துக்கள்!! -இலக்கு இணையம் (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

ஏ…… அதிரடியே…..
புதிய கனவுகளால்,
புதிய நம்பிக்கைகளால்,
புதிய எண்ணங்களால்,
புதிய இலட்சியங்களால்,
மறுபடியும் உனக்கொரு பிறந்தநாளோ!
ஐந்தாம் வருடத்தில் பயணிக்க,
திடவுறுதியுடன் நின்று ஜனனிக்க,
புதிய புதிய தகவல்களைத் தெரிவிக்க,
புதுப் புது தலைவர்களை வருவிக்க,
மீண்டும் உனக்கொரு பிறந்தநாளோ!

இலங்கை.நெற் இணையத்தின் அதிரடிக்கான வாழ்த்துக்கள்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

இலங்கை.நெற் இணையத்தின் அதிரடிக்கான வாழ்த்துக்கள்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

ஊடகத்துறையிலே சிறகு முளைக்காத பிஞ்சுகளாக இருக்கும் இலங்கைநெற் இணையத்தினராகிய நாமும் அதிரடி இணையத்தை வாழ்த்துவதையிட்டு மகிழ்சி அடைகின்றோம். அதிரடி எனப் பெயர் சூடி ஐந்து ஆண்டுகள் வலம் வரும் நீ அதிரடியாகவே உலகில் உள்ள ஒப்பற்ற ஊடகங்களில் ஒன்றாக பரிணமிக்க வாழ்த்துகின்றோம். –இலங்கை.நெற்
நன்றி.. இலங்கை.நெற் இணையம்! (அதிரடிக்கான வாழ்த்துக்களை அதிரடி இணையத்தின் வலதுபக்கத்தில் உள்ள “அதிரடிக்கான வாழ்த்து“ பகுதியில் முழுமையாகப் பதிவு செய்துள்ளோம்.)

அதிரடி இணையதளம் ஐந்தாம் ஆண்டில் காலடி பதிப்பதையிட்டு புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி- (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடி இணையதளம் ஐந்தாம் ஆண்டில் காலடி பதிப்பதையிட்டு புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி- (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடி இணையதளமானது தனது சேவையில் நான்காம் வருடத்தினை பூர்த்தி செய்து கொண்டு ஐந்தாம் வருடத்தில் காலடி பதிப்பதையிட்டு புளொட் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நடுநிலையான செயற்பாடு, தவறுகளை அஞ்சாது சுட்டிக்காட்டும் துணிச்சல், அனைத்துச் சமூகங்களின் பிரச்சினைகளை அலசி ஆராயும் தன்மை, மக்களின் துன்ப துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் விதம் என்பனவற்றில் அதிரடி இணைதளமானது மிகவும் வித்தியாசமான அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. அனைத்து தரப்புக்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அதிரடி இணையதளம் களம் அமைத்து [...]

உன்னை ஆதரிப்பவர்களிலும் பார்க்க எதிர்ப்பவர்களே அதிகம் இருப்பர். அதிலும், மறைந்திருந்து தாக்குபவரே அதிகமிருப்பர்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

உன்னை ஆதரிப்பவர்களிலும் பார்க்க எதிர்ப்பவர்களே அதிகம் இருப்பர். அதிலும், மறைந்திருந்து தாக்குபவரே அதிகமிருப்பர்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அன்பான என் அதிரடியே.. அகவை ஐந்தில் காலடி எடுத்து வைக்கும் உனக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். அதிகம் எழுதி வாழ்த்த ஆசை இருந்தும் நேரம் என்ற சதிகாரன் என்னை வேட்டையாடுகிறான். வேலைப்பழு ஒரு புறம், இருந்த போதும் உன்னை மனமாற வாழ்த்தித் தான் ஆகவேண்டும், காரணம் அதிக விமர்சனங்களைத் தாங்கி வரும் ஒரே இணையத்தளம் நீதான்! அதனால், உன்னை ஆதரிப்பவர்களிலும் பார்க்க எதிர்ப்பவர்களே அதிகம் இருப்பர். அதிலும், மறைந்திருந்து தாக்குபவரே [...]

உண்மைகள் உறங்கிய போது உயிர்த்தெழுந்த அதிரடியே..!! - கருணாஅம்மான் குடும்பத்தினர் (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

உண்மைகள் உறங்கிய போது உயிர்த்தெழுந்த அதிரடியே..!! – கருணாஅம்மான் குடும்பத்தினர் (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

உண்மையை உரக்கச் சொல்லி
உலகை வியக்க வைத்த அதிரடியே
உண்மைகள் உறங்கிய போது
உயிர்த்தெழுந்த அதிரடியே
“ரிஎம்விபி”யின் பரிமாண வளர்ச்சியின்
பங்காளி அதிரடியே
கருணாஅம்மான் பல சவால்களை
சந்தித்த போது
தோளோடு தோள் நின்ற
தடம்புரளாத அதிரடியே..

நிதர்சனம் நெற் இணையதளத்தின் அதிரடிக்கான வாழ்த்துக்கள்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடி இணையதளம் தனது சேவையில் ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைப்பதையிட்டு நிதர்சனம் நெற் இணைய தளத்தினராகிய நாம் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். அதிரடி இணையதளம் விறுவிறுப்பான செய்திகளை தருவதில் நிகரற்ற தன்மையுடன், புதுமை படைத்து வருகின்றது. செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஆற்றல், அவற்றை தெளிவாக எடுத்துச் சொல்லும் விதம் அனைவரையும் ஈர்த்து வருகின்றது. விறுவிறுப்பான செய்திகளை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து தெளிவுபடுத்தும் விதமே தனி. உண்மைகளை உடனுக்குடன் சாட்சியங்களுடன் முன்வைப்பதில் அதிரடி இணையதளம் வக்கீலையும் [...]

சிறந்ததொரு ஊடக பண்பாட்டிற்கு வழி சமைத்திட வேண்டும்!! -ஈபிஆர்எல்எப் பொதுச்செயலாளர் தி.சிறீதரன் (சுகு) அவர்களின் அதிரடிக்கான வாழ்த்து! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

சிறந்ததொரு ஊடக பண்பாட்டிற்கு வழி சமைத்திட வேண்டும்!! -ஈபிஆர்எல்எப் பொதுச்செயலாளர் தி.சிறீதரன் (சுகு) அவர்களின் அதிரடிக்கான வாழ்த்து! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடி இணையம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் முக்கிய மாற்று குரலாக இணைய வலையமைப்பில் அது உலா வந்து கொண்டிருக்கிறது. ஏகபிரதிநிதித்துவ குரல்களுக்கு அப்பால் மாற்றுக் குரல்கள் ஒலிப்பது என்பது உள்ளுரிலும் சரி புலம்பெயர் தளத்திலும் சரி சவாலான ஒரு பணியாகும். ஆனால் தற்போது பல நு}ற்றுக்கணக்கான மாற்று இணையங்கள் அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் தலைது}க்கியுள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினை பல்வேறு நிலைகளில் விவாதிக்கப்படுகிறது. இலங்கையின் பிரதான ஊடகங்கள்; என அழைக்கப்படுவனவற்றால் இருட்டடிப்பு செய்யப்படும் அல்லது [...]

பொய்மை வென்று மெய்யாய் புலர்வாய்!! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

பொய்மை வென்று மெய்யாய் புலர்வாய்!! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

உலகத்தை வலம் வந்து
உண்மைகளை உருவெடுத்து
பொய்மைகளை வென்றெடுத்து
புலரும் உதயம் உன் செய்திகள்!
தேசத்து நிஜங்கள் சொல்லி
தேடி எம்மை படிக்கத் தூண்டும்
காலமதை கணக்கெடுத்து
கண்ணாடியாய் காட்டி விடும்
கருத்துக் களம் உன் கட்டுரைகள்!

அதிரடியின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்!! த.வி.கூ தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் அதிரடிக்கான வாழ்த்து! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடியின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்!! த.வி.கூ தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் அதிரடிக்கான வாழ்த்து! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடி இணையம் நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்துகிறது. எமது மக்களின் உண்மையான பிரச்சினைகளை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதோடு ஆக்கபூர்வமாக அதிரடி இணையம் செயற்பட்டு வருகிறது. இங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் உலகம் வாழ் தமிழ் மக்கள் அறியச் செய்வதோடு பேட்டிகள், கட்டுரைகள் ஊடாகவும் அது ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கிறது. இங்குள்ள பிரதான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் உண்மை நிலைகளை வெளியிட தயங்கும் போது இத்தகைய இணையங்கள் [...]

வாழ்க.. வாழ்க.. வாழ்கவே! --திரு.செல்வபாரதி -மட்டக்களப்பு (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

வாழ்க.. வாழ்க.. வாழ்கவே! –திரு.செல்வபாரதி -மட்டக்களப்பு (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

நான்காண்டை கடந்து விட்டிருக்கும் அதிரடியே!
நீ நீடுழி வாழ்க! நீ பல்லாண்டு வாழ்க!
நீ சிறப்புடன் வாழ்க! நீ சீராக வாழ்க!
பல்லாண்டு வளம் பெற்று வாழ்க!
பொய்களுக்குள், உண்மை தரும் அதிரடியே, -வாழ்க நீ.
புதிய புதிய பொய்கள் பிறப்பெடுத்து,
அவையே புண்ணியமிக்க பிரச்சாரங்களாகி,
மக்கள் உள்ளங்களைப் புண்படுத்திக் கொண்டிருக்கும்,
-இக்காலத்தில்,
அதிரடியே! நீயே உள்ளதை உள்ளபடி,
உண்மையாய் உணர்த்தித் தருகிறாய்…

அகவை ஐந்தை எட்டிய அதிரடிக்கு எமது நல் வாழ்த்துக்கள் -ஜீவேந்திரன் -ரிஎம்விபி (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அகவை ஐந்தை எட்டிய அதிரடிக்கு எமது நல் வாழ்த்துக்கள் -ஜீவேந்திரன் -ரிஎம்விபி (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

பொய்மைக்கு அடிபணியா அதிரடியே.. உண்மையின் தர்மம் காப்பாய் நீயே..
தமிழ் மக்களின் அறிவுரகளையும் அபிலாசைகளையும் கருத்து மூலமாய் உலகுக்கு வெளிப்படுத்தும் இனையத்தளமென்றால் “அதிரடி” தான்! இவ் இணையத்தளத்தின் அளப்பரிய சேவைகளையும், ஆற்றல்களையும் அவதூறான கருத்துக்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் ஓர் எடுத்துக் காட்டாய் முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் கருத்துக்களுக்கும் அதிரடி நிருவாத்தினருக்கும் என் முதல் வாழ்த்துக்கள்.. மற்றும் ஐந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கும் அதிரடிக்கு என் இனிய வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்.. -ஜீவேந்திரன் (ரிஎம்விபி) கொழும்பு மாவட்ட அரசியல் தலமைக் [...]

அச்சமின்றி அதிரடியாய்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அச்சமின்றி அதிரடியாய்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அச்சமின்றி அதிரடியாய்
நீ தந்த செய்திகள் தான்…
நான்கு வருடங்களில் நீ சாதித்தவை
ஐநூறு வருடங்களை
ஒத்தசாதனைகள்…
இடியாய், சரவெடியாய்
பலருக்கு அதிரடியாய் நீ அமைந்தாய்..
இதுபோல் உன்வளர்ச்சி
மெம்மேலும் வளர வாழ்த்துகிறேன்..
வாழ்த்துபவன்.. இஸ்ரி -புத்தளம்..

அதிரடி இணையத்திற்கு எமது வாழ்த்துக்கள்!!! -முழக்கம் இணையம்! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடி இணையத்திற்கு எமது வாழ்த்துக்கள்!!! -முழக்கம் இணையம்! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அள்ளி வாழ்த்துகிறோம்…….
நான்காம் ஆண்டு பிறந்த நாளைக்
கொண்டாடிக் கொண்டிருக்கும்,
எங்களினிய நண்பன் அதிரடியே..
நீ வாழவேண்டும் பல்லாண்டு…
நாம் உன்னை அழுக்குப் படிந்த
இதயத்தோடும், வாடிய முகத்தோடும்,
வேண்டா வெறுப்போடும் வாழ்த்தவில்லை.
உள்ளமதில் அகமகிழ்ந்து,
மகிழ்ச்சியின் திருவுருவாய் வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களை உனக்கு அள்ளிச் சொரிகிறோம்.
அள்ளிச்சொரியும் உனக்கே அள்ளிச்
சொரிவதில் ஆனந்தம் கொள்கிறோம்.
அர்த்தமுடன் வாழ்த்துகிறோம்.
உன்னால் முடியும்,
எங்கள் இதயங்களில் புதையுண்டு
கிடக்க உன்னால் முடியும்.
உன்னுடைய எழுத்துக்கள்
எங்களைப் பற்றியது என்பதால்,
எங்களுள் புதையுண்டு கிடக்க
உன்னால் முடியும்.
தினம் தினம் உன்னுடைய
அங்கமாயுள்ள செய்திகளிலேயே
எமது கண்கள் உறங்கி, விழிப்பதால்
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்க
உன்னால் முடியும்.
வாழ்க நீ பல்லாண்டு!
புது மெருகுடன் வளர்க நீ பல்லாண்டு.
-முழக்கம் இணையம்..

அகவை ஐந்தில் தடம் பதிக்கும் ஆற்றலின் படைப்பான அதிரடிக்கு எமது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அகவை ஐந்தில் தடம் பதிக்கும் ஆற்றலின் படைப்பான அதிரடிக்கு எமது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!! (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

நடுநிலை உண்மையை நாயகனாய்
சுமந்து வரும் அதிரடியே..
நாளுக்கு நாள் நன்மைதரும் உன்
படைப்புக்களோ.. நவோதயம்!
நீ தடம் பதிக்கும் அகவை ஐந்தில்
தயவோடு உன் பணி தொடர
என் வாழ்த்துக்கள்
நேர்மைக்கு ஒப்பாய் நியாயத்தை
வெளிப்படுத்தி தமிழரின் ஜனநாயக
குரலை தன்னிறைவாய் உலகெங்கும்
ஒலிக்கச் செய்த ஆற்றல் மிகு
படைப்பாளி அதிரடி என்றால் மிகையாது
சுவையாக சுவைக்க சுமந்து வரும்
சுடச் சுடச் செய்திகளும் ஆங்கங்களும்
கட்டுரைகளும் தேனிலும் இனியவையே..

அதிரடி இணையத்தளத்திற்கு எனது இனிய நல் வாழ்த்துக்கள் - கருணாஅம்மான் (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடி இணையத்தளத்திற்கு எனது இனிய நல் வாழ்த்துக்கள் – கருணாஅம்மான் (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அடக்குமுறை அன்று இருந்ததன் விளைவாகவே தமிழர்கள் ஆயுதமேந்தத் தலைப்பட்டார்கள் அந்தப் புனிதப் பயணத்தில் சர்வாதிகார சிந்தனைப் போக்குத் தென்பட்டதன் விளைவாகவே ஆயிரக்கனக்கான இளைய தலையமுறையினர் மற்றும் தலைவர்கள் அழித்தொழிக்கப் பட்டார்கள் இந்த வரலாற்றுப் பாவம் தமிழினத்திற்கே சாபமாகி எமது உயிரைப் போராட்டத்தைப் பின்நோக்கி நகர்த்தியது இதன் உண்மைத் தன்மைகளை உணர்ந்திருந்தும் அறிந்திருந்தும் எத்தனையோ ஊடகங்கள் இனையத்தளங்கள் கண்டும் கானாதவர் போன்றும் அறிந்தும் அறியாதவர் போன்றும் செயற்பட்டு சர்வாதிகாரப் போக்கை நியாயப் படுத்தவும் ஊக்கப் படுத்தவுமே முற்பட்டுள்ளது இதற்கெல்லாம் [...]

அதிரடியை வாழ்த்துகிறேன்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அதிரடியை வாழ்த்துகிறேன்.. (அதிரடிக்கான வாழ்த்துக்கள் -2008)

அ - அகிலம் போற்றும் இணையத்தளம்
தி - திகைப்பூட்டும் உண்மைகள்
ர - ரம்மியமிக்க ஆக்கங்கள்
டி - அப்பாவி மக்களுக்கு “டிமிக்கி” கொடுப்பவருக்கு நீ ஒரு நெத்தியடி..
தமிழ் இனி மெல்ல வாழும் உன்னால் என்றும் எம்மோடு எமக்குள் இருக்கும் அதிரடியே! உன்வயது ஐந்தில் தவழ ஆரம்பிக்கும் உன்னை இன்னும் ஐநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்……..
தனிப்பட்ட ஏட்டில் எழுதியிருந்த என்னை “வெப்சைட்டில்” உலகம் வரவைத்தவன் நீ தனி நான்கைக் கடந்தாய் உலகமே உன்னை வியக்குது ஐயா!
எது உண்மை, பொய் என்று தெரியாத [...]

மூன்று ஆண்டுகளைக் கடந்து அதிரடி இணையத்தளம் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது –ஈபிஆர்எல்எப் பொதுச்செயலாளர் தி.சிறீதரன்(சுகு)

(அதிரடி இணையதளத்திற்கு ஈபிஆர்எல்எப் பொதுச்செயலாளர் திரு.தி.சிறீதரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி)
மூன்று ஆண்டுகளைக் கடந்து அதிரடி இணையத்தளம் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மாற்று இணையங்களில் அதிரடி பரவலாக இணைய வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் இணையமாகும். தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியினால் எமக்கு நிகழ்ந்த மாற்றம் மாற்றுக்குரல்கள் பரவலாக ஒலிப்பதற்கான களம் அமைந்தது தான். பல்வேறு தரப்பு கருத்துகளையும் மக்கள் அறிவதற்கான வாய்ப்பு இங்கு முக்கியமானது. கொலை ஆயுதங்கள் வழியாக உருவாக்கப் பட்டிருக்கும் [...]