MP for Kopay Mr. Allalasunderam & MP for Uduvil Mr. Tharmaligham killed today: 25 years
http://www.lankanewspapers.com/news/2006/9/8428_10.html
கிளிநொச்சி பரந்தன் உமையாள் புரத்தில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்பு..!
கிளிநொச்சி பரந்தன் உமையாள் புரத்தில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்பு..!
கிளிநொச்சி பரந்தன் உமையாள் புரத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிராதேசம் மீள்குடியேற்ற கிராமமாகும். அங்கிருக்கும் வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்தே சனிக் கிழமை மாலை இவை மீட்கப்பட்டுள்ளன. கிணறு நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
முன்னாள் புலி உறுப்பினர்கள் 500பேர் குடும்பத்துடன் இணைப்பு..!
புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் 500பேர் எதிர்வரும் [...]
ஐ.நா நிபுணர்குழு செப்டம்பரில் கூடி ஆராய்வு // யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் நிறுவ நடவடிக்கை..!
ஐ.நா நிபுணர்குழு செப்டம்பரில் கூடி ஆராய்வு..!
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் கூடி ஆராயவுள்ளது. இந்த நிபுணர்கள் குழு நியூயோர்க்கில் கூட உள்ளதாகவும், அமர்வுகள் நடைபெறவுள்ள இறுதித் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலைமாதம் 19ம்திகதி முதல்தடவையாக இந்த நிபுணர்கள்குழு இலங்கை விவகாரம் குறித்த அமர்வுகளை நடத்தியிருந்தது. நான்கு மாதங்களுக்குள் [...]
இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனை..!
இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனைகளையும் கொள்கைகளையும் விதிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்;மானித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல்.கே.ருகுணுகே தெரிவித்துள்ளார். பணிப்பெண்களை நியமிக்குமுன் இந்த நிபந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் மேற்படி நாடுகள் இணக்கம் தெரிவிக்க வேண்டுமென்றும், பணிப்பெண்களின் பாதுகாப்பை குறித்த நாடுகளின் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் பஸ் நிலையத்தில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முனைந்தோர் கைது // இந்திய அரச உதவியுடன் யாழ். பல்கலையின் விஞ்ஞானபீடம் விரிவாக்கம்..!
மன்னார் பஸ் நிலையத்தில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முனைந்தோர் கைது..!
மன்னார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 15வயது சிறுமியை பலவந்தமாக அருகில் இருந்த மலசலகூடத்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த சம்பவமொன்று இன்றுமாலை 4.30க்கு இடம்பெற்றுள்ளது. இதனுடன் தொடர்புபட்ட நால்வரை பொலீசார் கைதுசெய்துள்ளனர். பலவந்தமாக குறித்த இடத்திற்கு அழைத்துச்சென்ற சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர்கள் அதனை கையடக்கத் தொலைபேசியில் படமெடுக்கவும் முயன்றுள்ளனர். கைதானவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சிறுமி மன்னார் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரச [...]
அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது // ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சு பதவிகளை வழங்க தீர்மானம்..!
அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது..!
அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 2 தினங்களில் எடுக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது அவசர சட்டமூலம் என்ற அடிப்படையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியுடன், ஆளும் [...]
எஸ்- பி-திசாநாயக்கா செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம் // நாட்டை ஒன்றாக இணைத்த போதும் மக்கள் இன்னமும் ஒன்றிணையவில்லை – டியூ.குணசேகர..!
எஸ்- பி-திசாநாயக்கா செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம்..!
உயர்கல்வி அமைச்சர் எஸ்- பி-திசாநாயக்கா செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகெர்ள்வதுடன் கல்வித்திணைக்கள சிரேஸ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலையும் நடத்துவார் அன்று பிற்பகல் வவுனியாவிற்கு வரும் அமைச்சர் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக நிர்வாகத்தினருடன் வளாக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெறும் அத்துடன் பம்பைமடுவில் உள்ள வளாக கட்டிட நிர்மாணப்பணிகளையும் நேரில் சென்று பார்வையிடுவார் என வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் [...]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் // வவுனியா ஆச்சிபுரக்கிராமத்துக்கு மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றது..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள பொதுச் சபைக் கூட்டத்திற்கான இலங்கை இராஜதந்திரிகள் குழுவிற்கு ஜனாதிபதி தலைமை தாங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெக்ஸிக்கோ மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு [...]
நிரூபமா ராவ் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் // வடக்கிலுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி..!
நிரூபமா ராவ் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்..!
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் ஏனைய விடயங்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு முன்னோடியாக நிரூபமா ராவ் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [...]
இந்திய இராணுவக் குழு இலங்கை வரவுள்ளதுடன், 20000 இந்திய தொழிலாளர்களும் வரவுள்ளனர் // முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!
இந்திய இராணுவக் குழு இலங்கை வரவுள்ளதுடன், 20000 இந்திய தொழிலாளர்களும் வரவுள்ளனர்..!
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடி க்கப்பட்ட விதம் குறித்து கற்பதற்காக இந்திய இராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர் பங்களாதேஸின் ராணுவக்குழு ஒன்று இலங்கை வந்திருந்ததாக, இராணுவ த்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக பயன் படுத்தப்பட்ட வியூகங்கள் [...]
நிருபமராவ் செட்டிகுள நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்வார் // இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது – ஜே.வி.பி விசனம்..!
நிருபமராவ் செட்டிகுள நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்வார்..!
கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமராவ் செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவிற்கு வரவுள்ளார் இத் தகவலை வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி எம் எஸ் சாள்ஸ் தெரிவித்தார் வவுனியா வரவுள்ள இவர் செட்டிகுளத்தில் உள்ள வன்னியிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோர் வசிக்கும் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் ஆராயும் பொருட்டு இந்திய வெளிவிவகார [...]
ஆசியாவிலேயே வலுவான நாடாக இலங்கை உள்ளது – ஜனாதிபதி // சித்திரவதைக்குள்ளான பெண்ணுக்கு 4 மணிநேர சத்திரசிகிச்சை..!
ஆசியாவிலேயே வலுவான நாடாக இலங்கை உள்ளது – ஜனாதிபதி..!
ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் தெரிவித்தார். “நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். நீங்கள் மக்கள் சேவைக்காக நியமனம் பெற்றிருக்கும் பிரதிநிதிகள். நாமெல்லோரும் மக்கள் சேவையாளர் களன்றி பொது மக்களை நிர்வகிக்கும் அதிகாரிகளல்லர் என்றும் ஜனாதிபதி கூறினார். ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கத்தின் 28 வது வருடாந்த பொதுக் கூட்டம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு [...]
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவிகளை வழங்க வேண்டும் – ஐ.தே.கட்சி // யாழ்ப்பாணத்திலிருந்து 36 பெண் சாரணர்கள் இன்று மலேசியா பயணம்..!
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவிகளை வழங்க வேண்டும் – ஐ.தே.கட்சி..!
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவிகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு இந்தியா ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதாகவும், அனைத்து [...]
இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளனர் – ஐக்கிய நாடுகள் செயலகம் // வெள்ளிமுள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு..!
இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளனர் – ஐக்கிய நாடுகள் செயலகம்..!
இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளதாக அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களே யுத்தம் முடிவுற்றபின் இவ்வாறு மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றனர் என ஐ.நா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தென்னிந்தியாவில் [...]
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் // செட்டிக்குளத்தில் மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது..!
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்..!
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இலங்கையின் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அரசியல் உயர்பீடத்தின் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஜனாதிபதி ஒருவர் 3 முயை ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு புதிய அரசியலமைப்பு வழிசெய்யவுள்ளது. ஏற்கனவே அரசியலமைப்பு மாற்றத்திற்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பற்றாக்குறையாக இருந்த நிலையில் 6 ஆசனங்களை நாடாளுமன்றில் கொண்டுள்ள சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்க [...]
ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ரிஎன்ஏ பத்திரிகைகளில் வீரவசனம். மறைவில் அரசாங்கத்திடம் தங்கட அலுவல்கள் கேட்பார்கள்” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்..!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நிர்வாக அலகான வவுனியா நகரசபை தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது பற்றியும் அந்நகரசபையில் இடம்பெற்ற நிதி நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் விரிவான ஒரு அறிக்கை வவுனியா நகரசபையின் சர்வகட்சி உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டு வெளியாகி இருந்தது. இவ்வறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான முன்னாள் வவுனியா மேயரும் தற்போதைய வவுனியா நகரசபையின் புளொட் அமைப்பின் உறுப்பினருமான ஜி ரீ லிங்கநாதன் ஓகஸ்ட் 2ல் ‘தேசம்நெற்’க்கு வழங்கிய நேர்காணல்.
வவுனியா நகரசபை தொடர்பாக ‘தேசம்நெற்’இல் [...]
தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் – புளொட் தலைவர் சித்தார்த்தன் // மன்னாரில் இனம்தெரியாத சடலமொன்று பொலிஸாரினால் மீட்பு..!
தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் – புளொட் தலைவர் சித்தார்த்தன்..!
தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றியமான தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் நடைபெறவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற 5ஆவது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர 8 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் எதிர்வரும் 11ஆம் திகதி 6ஆவது அரங்கம் இடம்பெறவுள்ளது.
மன்னாரில் [...]
இலங்கையர்கள் 5000 பேருக்கு கொரியாவில் வேலை வாய்ப்பு // இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது – டபிள்யூ.ஏ.சீ பெரேரா..!
இலங்கையர்கள் 5000 பேருக்கு கொரியாவில் வேலை வாய்ப்பு..!
இம்முறை கொரியாவில் வேலைவாய்ப்புப் பெறுவதற்காக 5000 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. நாடு முழுவதிலுமிருந்து கொரியா வேலை வாய்ப்புக்காக கிடைக்கப்பெற்றுள்ள 29732 விண்ணப்பங்கறில் இருந்து குறிப்பிட்ட 5000 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொரியாவில் பணியாற்றுவதற்காக கடந்த 3 நாட்களில் நாடு முழுவதிலுமிருந்து பல மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகமானோர் கொரியாவில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய [...]
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ‐ ஜாதிக ஹெல உறுமய // பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு மது விற்பனை அனுமதி வழங்கப்படவில்லை..!
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ‐ ஜாதிக ஹெல உறுமய..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக குமரன் பத்மநாதனின் சொத்துக்களைப் பயன்படுத்துவதனை விடவும், புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்ப்பது மிகவும் இன்றியமையாததென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவும் பிள்ளையானும் பிளவடைந்து வந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பின்பற்றிய அதே [...]
எதிர்வரும் மாதத்தில் மூன்று நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது // மரமுந்திரிகை உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை..!
எதிர்வரும் மாதத்தில் மூன்று நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது..!
முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர். டி சில்வா தலைமையிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு எதிர்வரும் மாதத்தில் கிளிநொச்சியில் விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் மூன்று நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது. செப்படம்பர் மாதம் 17ம், 18ம் மற்றும் 19ம் திகதிகளில் கிளிநொச்சியில் மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.எம். சமரக்கோன் தெரிவித்துள்ளார். ஒன்றுகூடலைப் போன்று தகவல்கள் [...]
தம்புள்ளை தொழிற்பயிற்சி நிறுவனத்தக்கு ஜனாதிபதி தடீர் விஜயம் // எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வரையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது..!
தம்புள்ளை தொழிற்பயிற்சி நிறுவனத்தக்கு ஜனாதிபதி தடீர் விஜயம்..!
தம்புள்ளை தொழிற்பயிற்சி நிறுவனத்தக்கு தடீர் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாணவர்களுடன் கலந்துரையாடினார். தம்புள்ளை ரஜ மகா விகாரையில் இயங்கும் பிரஸ்தாப தொழிற்பயிற்சி நிறுவனம் ஜனாதிபதி தொழில் அமைச்சராக இருந்தபொத 1995 இல் அவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேர ர்மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் பெரேரா ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி [...]
சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத்தயார் – பாலித கொஹணே // ஜனாதிபதி நிதியத்துக்கு கடந்த மூன்று மாதத்தில் அபிவிருத்தி லொத்தர் சபை 254 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது..!
சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத்தயார் – பாலித கொஹணே..!
சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத்தயார் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்த அனுபவங்களையும் திறமைகளையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கடற்கொள்ளையர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையின் கடற் பரப்பு பாதுகாக்கப்பட்டு [...]
வெளிநாடுகளின் உதவிகளுடனேயே இலங்கையில் இருந்து அதிக அளவிலான அகதிகள் வெளியேறுகின்றனர் // எம். வி. சன். கே. கப்பல் மூலம் கனடா சென்றுள்ள தமிழர்களுக்கு இலவச தொலைத் தொடர்பு வசதி..!
வெளிநாடுகளின் உதவிகளுடனேயே இலங்கையில் இருந்து அதிக அளவிலான அகதிகள் வெளியேறுகின்றனர்..!
வெளிநாடுகளின் உதவிகளுடனேயே இலங்கையில் இருந்து அதிக அளவிலான அகதிகள் செல்வதாக, கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து அதிகள் சட்டவிரோதமாக வெளியேராத வகையில், இலங்கையின் கடற்படையினர் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையில் இருந்து சட்ட ரீதியான ஆவணங்களுடன் வெளிநாடு ஒன்றுக்கு பயணித்து, வெ ளிநாட்டு முகவர் ஒருவரின் உதவியுடனேய அகதிகளாக படகில் அல்லது கப்பலில் பயணிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் [...]
முன்னாள் போராளிகளுக்கு களுத்துறையில் கைத்தொழில் பயிற்ச்சி..!
முன்னாள் போராளிகளுக்கு களுத்துறையில் கைத்தொழில் பயிற்ச்சி..!
புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் போராளிகளுக்கு தொழில் பயிற்ச்சியை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கடந்த புதன் கிழமை களுத்துறை பயாகல கைத்தொழில் பயிற்ச்சி நிலையத்தில் 60 ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்ச்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப் பயிற்ச்சி நெறி இரண்டு வாரகாலமாகும்.மேசன் தச்சன்,வெல்டின் மற்றும் மின்சார வேலைகள் சம்மந்தமாக சித்தாந்தம் மற்றும் செய்கைப்பயிற்ச்சியும் வழங்ப்படும். வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் அனுசரனையுடன் வழங்கி வரும் இப்பயிற்ச்சி நெறியின் முடிவில் [...]
9ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் : சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்)
என் நண்பனின் தாயார் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் சார்பாக “சகல அடக்குமுறை தனை உடைத்தெறிவோம்” என்று தன் தகப்பனார் கே.ஏ. சுப்பிரமணியம் வளர்ப்பில்… சந்ததியாரை அரசியல் ஆசானாகக் கொண்டு… 1976 இலில் மாணவப் பராயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியை முதன்மைப் படுத்தி தன் சகோதரர்கள், தோழர்கள் துணைகொண்டு “சிறுபொறி” கையெழுத்து பத்திரிகையை வெளியிட்டு… மாணவ தோழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி… புதியபாதை சுந்தரம் வழியில்… அடக்கப்பட்ட மக்களின் விடியலுக்காகப் புறப்பட்டு… இலங்கை இராணுவத்தினால் சிறை பிடிக்கப்பட்டு… என் நண்பன் சத்தியராஜ் யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து எனது கல்வி ஆசானும், “சிறுபொறி” கையெழுத்து பத்திரிகையின் ஆசிரியர் குழுவை சேர்ந்த தோழரை மணமுடித்த தன் அன்புச் சகோதரியின் [...]
ஜனாதிபதிக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் விசேட சந்திப்பு சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது // நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிகள் – ஜயந்த தனபால..!
ஜனாதிபதிக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் விசேட சந்திப்பு சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடான சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் கடசியின் அதி உயர் பீடத்திற்கு தெரியப்படுத்தப்படும் என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு குந்தகம் ஏற்படாத எந்தவொரு யோசனைத் திட்டத்தையும் தமது கட்சி எதிர்க்காது என அவர் [...]
மற்றுமொரு கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை – கனடா // மீள்குடியேற்றப் பணிகள் குறித்து இந்தியா திருப்பதி – பசில் ராஜபக்ஷ..!
மற்றுமொரு கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை – கனடா..!
இலங்கை சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை தாங்கிய மற்றுமொரு கப்பல் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான சாட்சியங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என கனடா அறிவித்துள்ளது. எம்.வீ சன் சீ கப்பலின் மூலம் கனடாவில் புகலிடம் கோரிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மற்றுமொரு கப்பல் கனடாவை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைச செய்யப்பட்டவர்கள் எதனையும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் பயணித்த [...]
வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி முதல் கட்டமாக 1000 வீடுகள் மூன்று மாதத்துக்குள் கையளிக்கப்டும் // பணிப்பெண் சித்திரவதை தொடா;பில் விசாரணைகள் ஆரம்பம்!
வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி முதல் கட்டமாக 1000 வீடுகள் மூன்று மாதத்துக்குள் கையளிக்கப்டும்..!
இலங்கையில் கடந்த 30 அண்டுகளாக நடை பெற்ற பயங்கரவாத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடமாகான மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றி அவர்களது பிரதேசங்களில் 51000 வீடுகள் அமைத்துக் கொடுத்து இயல்பு வாழ்கையை மேன்படுத்துவதற்க்கு தேவையான பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக முற்றாக வீடுகளை இழந்த காணிகள் அற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த [...]
எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் – ஜனாதிபதி // எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்த 492 இலங்கைத் தமிழர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு – இலங்கை உயர்ஸ்தானிகர்..!
எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் – ஜனாதிபதி..!
நாட்டில் இவ்வளவு காலம் இடம்பெற்ற அரசியலுக்குத் தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாநகர சபை உறுப்பினர்களை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,”இனிவரும் காலங்களில் இவ்வாறான அரசியலை மேற்கொள்ள நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.அரசியலிலிருந்து வேறுபட்டு மனிதாபிமான ரீதியில் கடமையாற்றுவோருக்கே எதிர்காலத்தில் நாட்டு மக்கள் ஆதரவளிப்பர். [...]
18 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரன உயர் தர பரிட்சைக்கு தோற்றும் வாய்ப்பு // வெரலகம குடிநீர் விநியோகத் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்
18 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரன உயர் தர பரிட்சைக்கு தோற்றும் வாய்ப்பு..!
கடந்த ஆண்டு முடிவுக்குக் கொன்டு வந்த மனிமபிமான படைநடவடிக்கையின் போது எல்ரிரிஈ இயக்க முன்னாள் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 12000 பேர் அரசாங்த்திடம் சரணடைந்தனர். இவர்களில் 3000 பேர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.பலவந்தமாகவும் தவறான வழிநடத்தலினாலும் இயக்கங்களில் இவ்வாறு இணைக்கப்ட்டதனால் தமது எதிர்கால கல்வியைத்த தொடர முடியாது இடைநடுவில் கைவிட்ட கல்வியை மீட்டும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் ஏற்பாடு [...]
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கை – கிளிநொச்சி அரசாங்க அதிபர் // எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்துள்ளோர் எவ்வித கடத்தல்களையும் மேற்கொள்ளவில்லை – கனடா பாதுகாப்புப் பிரிவினர்..!
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கை – கிளிநொச்சி அரசாங்க அதிபர்..!
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கும் வாகனங்களின் உhpமையாளா;கள் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவா; குறிப்பிட்டாh;. கடந்த [...]
வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி // வடக்கு உட்பட 5 மாவட்டங்களில் நீர்ப்பாசன வசதிகள்..!
வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி..!
வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள குறித்த உத்தியோகத்தர் முயற்சி மேற்கொண்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் அனுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 45 வயதான குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர், தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிப்யைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த இந்த உத்தியோகத்தரின் தாடைப் [...]
மன்னார் மாவட்டத்தில் 145 குடும்பங்களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன – பசில் ராஜபக்ஷ // தம்புள்ள விகாரைக்கு ஜனாதிபதி விஜயம்..!
மன்னார் மாவட்டத்தில் 145 குடும்பங்களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன – பசில் ராஜபக்ஷ..!
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரில் மேலும் 145 குடும்பங் களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்தின் போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் இதுவரை 12,180 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மேலும் 145 குடும்பங்களே மீள் குடியேற்றப்படவுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் திகதியிலிருந்து மீள் [...]
தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது- ஜனாதிபதி // நெடுங்கேணி பலநோக்கு கூட்டுறவுச்சங்க பஸ் வண்டிகள் ஒலுமடு–நெடுங்கேணி– வவுனியா சேவையில்..!
தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது- ஜனாதிபதி..!
தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் வேறு எந்த மாற்றங்களும் தற்போதைக்கு ஏற்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் தவணைக்காலத்தை நீடிப்பது குறித்த யோசனைத் திட்டம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளிடம் [...]
சுவிஸில் மறுபடியும் பணவேட்டையில் புலிப்பினாமிகள்!!! பொது மக்களுக்கும் புலிப்பினாமிகளுக்கும் – கைகலப்பு..!
சுவிஸில் மறுபடியும் பணவேட்டையில் புலிப்பினாமிகள்!!! பொது மக்களுக்கும் புலிப்பினாமிகளுக்கும்: கைகலப்பு!!!!
சுவிஸ் பேர்ன் மானிலத்தில் schwarzenburg எனும் கிராமத்தில் 22.08.2010 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் புலிப்பினாமிகளுக்கும் பொது மக்களுக்கும் கைகலப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது பலவருடங்களாகவும் முக்கியமாக சென்ற வருடம் முற்பகுதியில் புலிப்பினாமிகள் பொது மக்களிடம் இறுதிப்போர் நடாத்த போவதாக அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணங்களை பெற்றதை உலகம் அறியும் இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் கடுமையான தாக்குதலை முகம்கொள்ளமுடியயாத பிரபாகரனும் அவர்களின் சாகாக்களும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து படுவீழ்ச்சியடைந்த சாதாரண புலிகள் [...]
சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) சித்திறெஜினா..!
சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) சித்திறெஜினா..!
மீண்டும் ஒரு இறந்த காலத்திற்குள் என் சிந்தனைகள் விரிகின்றன.. காலம் என்னும் படகில் ஏறி அந்த கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கி பயணித்தால் அங்கே பல அதிர்ச்சிகளும்.. வேதனைகளும்.. ஆச்சரியங்களும் நிறைந்த பல சம்பவங்களுடன்.. மறைக்கப்பபட்டு காலத்தால் அழிக்கப்பட்ட பல உண்மைகளையும் சந்திக்க நேரிடும்.. அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் சுமார் 91 வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாகாணத்திலுள்ள அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அருகாமையிலுள்ள “யூலியன்வாலா” பூங்காவில் பிரிட்டிஸ் இராணுவத்தால் [...]
etamil???
etamil???
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியம் – அமைச்சர் பெசில் ராஜபக்ஷ // சகல பல்கலைக்கழகங்களிலும் அடுத்தாண்டு முதல் ஆங்கில மொழி மூலமே போதனைகள் – கல்வி அமைச்சர்..!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியம் – அமைச்சர் பெசில் ராஜபக்ஷ..!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியமானதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சில விடயங்களில் முறுகல் நிலை காணப்பட்டாலும் உலக அமைப்பு என்ற ரீதியில் இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக [...]
இந்தியப் பிரதிநிதி அடுத்த மாதம் இலங்கை வருவார் – நிருபமா ராவ் // வடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர்..!
இந்தியப் பிரதிநிதி அடுத்த மாதம் இலங்கை வருவார் – நிருபமா ராவ்..!
இலங்கையில் போரினால் பாதிக்பப்பட்ட தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதி அடுத்த மாதத் துவக்கத்தில் இலங்கை செல்லவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார். இலங்கையில் [...]
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை – ஒஸ்ரின் பெர்னாண்டோ // கண்ணிவெடி அகற்றும் பணிகளை இந்தியா தொடரும் – அசோக் கே.காந்தா..!
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை – ஒஸ்ரின் பெர்னாண்டோ..!
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்து வது சாத்தியமில்லையென்றும் ஆனால், இராணுவ நிலைகளை மீள ஒழுங்கமைக்க வேண்டுமென்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இராணுவத்தை கொழும்புக்கு மீளப் பெற முடியாதென்றும், வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் படையினர் அவசியமென்றும் தெரிவித்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, இது விடயத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்குத் தாம் உடன்படுவதாகவும், கற்றுக் [...]