செய்திதுணுக்குகள்

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

ஆரம்ப காலங்களில் புலிகள் வெளிநாடுகளில் பயிற்சிபெற்று இலங்கைக்குள் வந்தது போன்ற ஊடுருவல்கள் மீண்டும் ஏற்படாதவாறு தடுக்கப்படவேண்டுமென தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிரந்தர படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வன்னியிலுள்ள 61ஆவது படையணித் தலைமையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் படையினர் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மையிலிருக்கும் மக்களை வெளியேறுமாறு படையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேறிய மக்கள் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

திருகோணமலை கந்தளாய் சேருவெல மீகஸ்கடல்ல பகுதியில் நேற்று முன்தினமிரவு படைவீரர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவ லெப்டினென்ட் மற்றும் பொதுமகன் ஆகியோர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இராணுவ வீரர் தப்பியோடியதுடன், இன்றுகாலை காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
தனுன திலகரட்ணவின் தாயார்மீது சட்டமா அதிபரினால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மாணவி பூசாதடுப்பு முகாமில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. கடந்த நவம்பர்மாதம் முதல் ராசய்யா துவரகா என்ற பேராதனைப் பல்கலைக்கலைக் கழக மாணவியை காணவில்லையென முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியால் மாணவியைப் பார்வையிட பெற்றோர்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ளோர்க்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைள் 85சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதித் தபால்மா அதிபர் ஆர்.டீ.பி. காமினி தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களுக்கான வாக்காளர் அட்டை [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 17பேர் இன்றைய தினம் விடுதலை- முன்னாள் புலி இயக்க உறுப்பினர்கள் 17பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப் பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் அனைவரும் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று திரள வேண்டும்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச- எதிர்வரும் 27ம் திகதி நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

இறுதி யுத்தத்தின் போது சரத் பொன்சேகா நாட்டில் இருக்கவில்லை -விமல் வீரவன்ச- யுத்தத்தை தாமே முடிவுக்கு கொண்டு வந்ததாக பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்து வருகிறார், எனினும் இறுதி யுத்தத்தின்போது அவர் நாட்டில் இருக்கவில்லையென தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தின்போது சீனா சென்றிருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அவரின் கருத்து படம் காட்டுவதாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் நுணாவிலில் வாகனவிபத்து, ஒருவர் பலி அறுவர் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

தனிநபரான ஆளுநருக்கு பெருந்தொகை நிதியொதுக்கீடு -ஜே.வி.பி குற்றச்சாட்டு- மாகாணமொன்றில் முதலமைச்சருக்கே பொறுப்புகள் கூடுதலாக இருக்கும்போது தனிநபரான ஆளுநருக்கே பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிறேமசிறி மானகே இந்தக் குற்றச்சாட்டினை இன்று பாராளுமன்றில் முன்வைத்தார். ஆளுநரான தனிநபருக்கு 3மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருக்கோவில் பகுதியில் வன்முறையற்ற விதத்தில் தேர்தலை நடத்தும் வகையில் புத்திஜீவிகள் செயற்பட வேண்டும் -கிழக்கு ஆளுநர்.. அம்பாறையின் திருக்கோவில் பிரதேசத்தில் எந்தவொரு தேர்தல் வன்முறைகளுமின்றி தேர்தலை நடத்தும் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

மதுரையை அண்மித்த தேனீ மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் கைது- மதுரையை அண்மித்த தேனீ மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவரை பொலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தேனீ மாவட்டம் கம்பம் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றிருந்த பொலீசார் சந்தேகிக்கப்படும் படியாக நின்றிருந்த இரு இளைஞர்களை விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது.
தேர்தல் காலத்தின் போது அரச ஊழியர்களை அரசாங்கம் இடமாற்றம் செய்து வருவதாக [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

கல்குடா கடற்பகுதியில் நீராடச் சென்றவரைக் காணவில்லை.. மட்டக்களப்பு கல்குடா கடற்பகுதியில் நீராடச் சென்றிருந்த இளைஞர் ஒருவர் காணாமற் போயுள்ளார். குறித்த கடற்பகுதிக்கு நேற்றுபிற்பகல் நீராடச் சென்றிருந்த இளைஞனே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமற்போனவர் 34வயதுடைய இளைஞர் என கூறப்பட்டுள்ளது. கல்குடா பொலீசார் காணாமற் போன இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோட்டார் வாகன திருட்டில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர் இருவர் கைது.. குருநாகல் இப்பாகமுவ மற்றும் கோகரல்ல பகுதிகளில் மோட்டார் வாகனத்திருட்டுகளில் ஈடுபட்ட இருவரைப் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

காத்தான்குடி பிரதேசத்தில் கைக்குண்டுடன் ஒருவர் கைது மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் வெளிநாட்டு தயாரிப்பிலான கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கல்லடி, நாவலடி வீதியைச் சேர்ந்த 39வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் காத்தான்குடியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடனும், மிரட்டி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் பலவற்றுடனும் தொடர்புடையவர் என பொலீசார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கிடையில் எட்டுவயதுக் குழந்தையொன்று தவற விடப்பட்டது! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கிடையில் எட்டுவயதுக் குழந்தையொன்று தவற விடப்பட்ட சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலிய றுவனெலிய புனித அந்தோனியார் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

ஐ.தே.கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பிணையில் செல்ல அனுமதி.. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று குருணாகல் ஹெட்டிப்பொல நீதிமன்றினால் 1லட்சம் ரூபா சொந்தபிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் ஆதரவாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிணை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் ஜனவரி 11ம்திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா உடப்புசல்லாவை விபத்தில் ஒருவர் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

நீர்கொழும்பு பகுதியில் லொறியொன்று ஆட்டோ ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு- நீர்கொழும்பு ஏத்துக்கால் பகுதியில் லொறியொன்று ஆட்டோ ஒன்றுடன் மோதிக்கொண்டதில் லொறியில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியின் பின்னால் இருந்து பயணம் செய்து கொண்டிருந்த இவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்தவர் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் இடம்பெறும் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு புதிய சட்டம்- தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் இடம்பெறும் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு புதிய [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

மாத்தறை, சிலாபம், எஹலியகொட, பண்டாரகமவில் விபத்துகள், நால்வர் பலி- மாத்தறை, சிலாபம், எஹலியகொட மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வௌ;வேறு வாகன விபத்துக்களில் நால்வர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஐ. எம். கருணாரட்ன தெரிவித்துள்ளார். மாத்தறை திஹகொடயில் டிபர்வண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இருந்தவர் கீழே விழுந்துள்ளதுடன் பின்னால் வந்த லொறி மோதி உயிரிழந்துள்ளார். சிலாபத்தில் வானுடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை எஹலியகொட பிரதேசத்தில் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

அனுராதபுரம் மிகிந்தலைப் பகுதியில் 13வயது மாணவர் காணாமற் போனமை தொடர்பில் விசாரணை- அனுராதபுரம் மிகிந்தலைப் பகுதியில் 13வயது மாணவர் ஒருவர் காணாமற் போனமை தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த மாணவர் கடந்த பத்தாம் திகதியிலிருந்து காணாமற் போயிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமற் போன மாணவரின் பெற்றோர் இது தொடர்பாக மிகிந்தலைப் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த மாணவன் இறுதியாக நடமாடிய இடங்கள் பற்றி ஆராய்ந்து வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
பிறந்து மூன்று [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்கள் விடுதலை- இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்தமாதம் தமிழகம் நாகபட்டிணம் கடற்பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்பின்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் நாட்களில் இலங்கை வந்தடையலாமென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு- களுத்துறை அளுத்கம பிரதேசத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

கண்டி போகம்பறை சிறைக்கைதிகள் மூன்றாவது நாளாகவும் கூரைமீதேறி போராட்டம்- கண்டி போகம்பறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 சிறைக்கைதிகள் மூன்றாவது நாளாகவும் கூரைமீதேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தம்மை விடுதலை செய்யக் கோரியே இந்தக் கைதிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஆண், பெண்களின் ஆயுட்காலம் உயர்வடைந்துள்ளது.. இலங்கையின் ஆண் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் உயர்வடைந்து உள்ளதாக உலகவங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுட்காலம் அதிகரிப்பதற்கான [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

எம்பிலிப்பிட்டிய குளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு- இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா குளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது இன்றுமுற்பகல் மீட்கப்பட்டதாக எம்பிலிப்பிட்டிய பொலீசார் தெரிவித்துள்ளனர். பொலீசாருக்குக் கிடைக்கபெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கெல்மடுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கண்டி போகம்பரை சிறைக்கைதிகள் கூரையில் ஏறிநின்று ஆர்ப்பாட்டம்- கண்டி போகம்பரை சிறைக்கைதிகள் இன்று சிறைக்கூடத்தின் கூரையில் ஏறிநின்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். அந்த சிறையில் இருந்த பலர் பிணையில் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

குருநாகல் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது- குருநாகல் மாவட்டத்தின் திஹல பிரதேசத்தில் துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக குருநாகல் பொலீசார் தெரிவித்துள்ளனர். பொலீசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 19 ரவைகள் உள்ளிட்ட யுத்த உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெகிவளை உயர் தொழில்நுட்பக் கல்லூரி மோதலைத் தொடர்ந்து 38மாணவர்கள் கைது- கொழும்பு தெற்கு தெகிவளை உயர் தொழில்நுட்பக் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

சூரியசக்தி மையமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க ஜப்பான் முன்வருகை-
இலங்கையில் சூரியசக்தி மையமொன்றை நிர்மாணிப்பதற்கு ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்காக சுமார் 1பில்லியன் ரூபாய்களை இலங்கைக்கு ஜப்பான் வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது-
தொழில் வாய்ப்பற்ற நிலையில் ஆயுர்வேத பட்டதாரிகள் கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் சுழற்சி முறையில் மேற்கொண்டுவந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அரசாங்கத்தினால் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான தொழில்வாய்ப்பு அளிப்பது குறித்து இன்றைய அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதையடுத்தே [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா நாடு திரும்பினார்-
இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா நாடு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜெனரல் சரத்பொன்சேகா முக்கிய பல இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
108கிலோ கடலட்டைகளுடன் இந்திய மீனவர்கள் மூவர் கைது-
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 108கிலோ கிறாம் உலர்த்தப்பட்ட கடல் அட்டைகளுடன் அந்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கைக் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

கிழக்கு முதலமைச்சர் தலைமையிலான குழு பா.உ பசில் ராஜபக்ஷ சந்திப்பு-
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழு நேற்று ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியுள்ளது. இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்களுக்கு இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையில் நிரப்பப்படாது இருக்கும் போனஸ் ஆசனத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த பூ.பிரசாந்தன் என்பவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
மேல் மாகாண வாக்காளர் இடாப்புகளில் 80ஆயிரம் இரட்டைப் பதிவுகள்-
மேல் மாகாணத்தின் வாக்காளர் இடாப்புகளில் கிட்டத்தட்ட 80ஆயிரம் இரட்டைப் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

அண்டார்ட்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி நகர்வு-
அண்டார்ட்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி, அதிலிருந்து பிரிந்து நியூசிலாந்து நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. அவற்றில் ஒன்றின் உயரம் 98 அடி ஆகும். இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் கப்பல்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளன. இந்த பனிப்பாறைகள் கடலில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு 700கிலோ மீட்டர் பரப்பளவில் மிதந்து வருகின்றன. பனிப்பாறைகள் கடலில் பயணிப்பது செய்மதிமூலம் தெரியவந்து உள்ளது.
கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட 72ஆசிரியர்கள் தற்காலிகமாக கிழக்குப் பாடசாலைகளில் இணைப்பு-
வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துகெட்டிகமவுக்கு பிடியாணை-
தென் மாகாணசபை ஆளும்கட்சி உறுப்பினர் நிசாந்த முத்துகெட்டிகமக்கு காலி, உடுகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உடுகம நீதிமன்ற நீதிவான இந்தப் பிடியாணையை இன்று பிறப்பித்துள்ளார். தென் மாகாணசபைத் தேர்தல் காலத்தில் நபரொரவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சந்தேகத்தின்பேரிலும், பிறிதொரு நபரைக் கடத்திய சந்தேகத்தின்பேரிலும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பணித்திருந்தது. இதற்கு சமூகமளிக்காமையால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
தேர்தல்களைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லையென ஜனாதிபதி-
தேர்தல்களைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று கொழும்பில் தற்பொழுது நடைபெறுகின்றது. மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200ற்கும் அதிகமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதன்போது பாதையின் இரு மருங்கிலும் ஜனாதிபதியை வாழ்த்தி வாசகங்கள் காண்பிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் பெரிதும் வரவேற்பினைத் தெரிவித்துள்ளனர்.
கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் கிளையொன்று யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்படும் -பிரதிக் கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன்
யாழ். கல்விச் சமூகத்தின் நன்மைகருதி [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இலங்கையின் ஊடாக மலேசியாவுக்கு போலிக் கடவுச்சீட்டுக்களுடன் அனுப்பப்படவிருந்த இருவர் சென்னையில் கைது.. இலங்கையின் ஊடாக மலேசியாவுக்கு போலிக் கடவுச்சீட்டுக்களுடன் அனுப்பப்படவிருந்த இருவரை சென்னை விமானநிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறியே இவர்கள் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி எல்பிட்டிய வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக மூவர் கைது-
காலி எல்பிட்டிய வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எல்பிட்டிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் நேற்றிரவு [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

பெண்ணொருவர் கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டு படுகொலை-
கம்பஹா மாவட்டம் தொம்பே பிரதேசத்தில் நேற்றுமாலை பெண்ணொருவர் கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றநபர் 06நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்பு-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நபர் கடந்த 06நாட்களுக்குப் பின்னர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 14ம்திகதி படகொன்றில் இரண்டு பேர் கடலுக்குச் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் புதிதாக ரயில் நிலையம் ஒன்றை அமைக்கத் தீர்மானம்-
சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் புதிதாக ரயில் நிலையம் ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். வடக்கின் நண்பன் திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள 30வது ரயில்நிலையமாக நல்லூர் ஆலய நிலையம் அமையும். உத்தேச ரயில்நிலையத்தின் மூலம் கந்தசாமி பெரியகோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறந்தசேவையும் வசதியும் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
துறைமுக ஊழியர்கள் சகலருக்கும் 2500 ரூபா கொடுப்பனவொன்று [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-5)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-5)

மொறட்டுவை கடும் காற்றினால் 200முதல் 250வீடுகள் சேதம்-
கொழும்பு புறநகரான மொறட்டுவையின் கொரவலவெல்ல பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 200முதல் 250வீடுகள் வரையில் கடும் சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனால் எவருக்கும் காயங்களோ பாதிப்புக்களோ ஏற்படவில்லையென்றும் கூறப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடக இணைப்பாளர் எச்.டீ பத்திரன இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி கடல் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலீசார் இடைநிறுத்தம், பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்-
கொழும்பு பம்பலப்பிட்டி கடற்பரப்பில் தாக்கியதால் மூழ்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரின் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-4)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-4)

களுத்துறை நாகொட பகுதியில் இன்று முற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது-
களுத்துறை நாகொட பகுதியில் இன்று முற்பகல் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.  கைது செய்யப்பட்டவரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்று கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவரிடம் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹற்றன் டிக்கோயா வர்த்தகர் கொலை தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் பொலீசில் சரண்-
நுவரெலியா ஹற்றன் டிக்கோயா குளியாவத்தைப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)

கூட்டுப்படைகளின் பிரதானியின் ஓய்வுபெறும் விண்ணப்பம் ஜனாதிபதியால் ஏற்பு-
முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜென்ரல் சரத் பொன்சேகா கடமையிலிருந்து ஓய்வுபெறுவதாக ஜனாதிபதியிடம் கையளித்த வின்ணப்பக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஹற்றன் குளியாவத்தை மக்கள் வர்த்தகர் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-
நுவரெலியா ஹற்றன் குளியாவத்தைப் பிரதேச மக்கள் இன்று முற்பகல் 10.30முதல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான இரு பிள்ளைகளின் தந்தை சிலரால் கடந்த 10ம் திகதி தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

வெலிக்கடைச் சிறையில் தமிழ்-சிங்கள கைதிகளிடையே கைகலப்பு-
கொழும்பு 09, தெமட்டக்கொடையில் அமைந்துள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் இன்றுகாலை தமிழ்-சிங்கள கைதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதி நீதியமைச்சர் வி.புத்திரசிகாமணி இதுபற்றி தகவல் தருகையில், பெரிதாகப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என்றும் கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையில் முக்கிய அதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவுகள்-
காவல்துறையில் முக்கிய அதிகாரிகளில் சிலருக்கு உடனடியாக அமுலக்கு வரும்வகையில் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. புதிய பொலிஸ் மா அதிபராக மஹிந்த பாலசூரிய [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

தமிழக அகதி முகாம்களின் சீர்திருத்தப் பணிகளுக்காக 100கோடி இந்திய ரூபாய்
தமிழக அகதி முகாம்களின் சீர்திருத்தப் பணிகளுக்காக 100கோடி இந்திய ரூபாய்களை ஒதுக்குவதற்கு தமிழக அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்த 115 இலங்கை அகதிகள் வசிக்கும் முகாம்களை அபிவிருத்தி செய்யவும் அம்மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கவுமே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் 21ம் திகதியை கறுப்பு தினமாக தமிழக மீனவாகள் அனுஸ்டிக்கவுள்ளனர்
எதிர்வரும் 21ம் திகதியை கறுப்பு தினமாக தமிழக மீனவாகள் அனுஸ்டிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவில் இலங்கைக் கடற்படையினரால் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கட்அவுட்டுக்கள் அகற்றுமாறு உத்தரவு? -ஐ.தே.கட்சி குற்றச்சாட்டு-
முப்படைகளின் பிரதான ஜெனரல் சரத் பொன்சேகாவின் புகைப்படங்களைத் தாங்கிய கட்அவுட்டுக்கள் மற்றும் பானர்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றுமாறு அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. எனினும் இந்த உத்தரவு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
240குடும்பங்களைச் சேர்ந்த 863பேர் கிளிநொச்சியில் மீள் குடியமர்வு-
நலன்புரி நிலையங்களிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 240குடும்பங்களைச் சேர்ந்த 863பேர் கிளிநொச்சிப் பகுதியில் இன்று [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

ஏறாவூர் பிரதேச வர்த்தக நிலையங்களில் கொள்ளை-
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் நேற்றிரவு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களின் கதவுகளை உடைத்து அவற்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அதிலிருந்து ஒருதொகைப் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். ஏறாவூர் பொலீசார் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டோர்க்கு லயன்ஸ் கழகம் உதவி-
லயன்ஸ் கழகத்தின் யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரிவு, இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை வன்னிக்கான விஜயம்-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கும் அவர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர்புகை பிரயோகம்-
வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பு கோட்டையில் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அலரிமாளிகைக்கு மகஜர் ஒன்றினை கையளிக்க வந்தபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வேலையற்ற [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அமைச்சர்கள் குழு தமிழக முகாம்களில் ஆராய்வு-
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அமைச்சர்கள் குழு இலங்கையர்கள் தங்கியுள்ள தமிழக அகதி முகாம்களின் நிலைவரங்களை ஆராய்ந்து வருகின்றனர். இதேவேளை குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்கள் தமது அறிக்கைகளை விரைவில் தமிழக அரசின் ஊடாக மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது-
பதுளை எல்ல பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து 99குடும்பங்களைச் சேர்ந்த 272பேர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
படுகொலைச் சந்தேகநபரான மகன் இலங்கைக்கு தப்பிச் செல்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின்பேரில் 41வயதுடைய இலங்கைப் பெண்ணொருவருக்கு டுபாய் நீதிமன்றம் 6மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. குறித்த பெண்ணின் மகன் தமது கள்ளக் காதலியின் கணவனைக் கொன்ற குற்றச்சாட்டில் டுபாயில் வழக்கு இடம்பெறுகிறது. இந்நிலையில் அவர் தப்பிச் செல்வதற்கு கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்தாரென்றே தாய்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விமானத்தின் நான்கு உதிரிப் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

யாழ். கைதடி நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 254குடும்பங்களைச் சேர்ந்த 665பேர் நேற்று முன்தினம் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வடபகுதி மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் 08லட்சத்து 50ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. அத்துடன் மீனவப் பெண்களை ஊக்குவிக்கவென வவுனியா மன்னாரில் 425பெண்களுக்கு சுயதொழில் பயற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஒரு பகுதியினருக்கு வழங்கப்படவில்லையென்று தெரியவந்துள்ளது. எந்தவருமானமும் அற்ற இவர்கள் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இலங்கையில் அனைத்துத் தமிழர்களுக்கும் கௌரவமான வாழ்க்கைச் சூழல் -அ.இ.அ.தி.மு.க
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் அனைத்துத் தமிழர்களுக்கும் கௌரவமான வாழ்க்கைச் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நோர்வூட் நகரில் வீடொன்றில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-
நுவரெலியா மாவட்டம் ஹற்றம் நோர்வூட் நகரிலுள்ள பௌத்த விகாரைக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7மணியளவில் இடம்பெற்றதாக நோர்வூட் பொலீசார் [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-1)

கண்டியில் வாகன விபத்து பதினொருபேர் படுகாயம்-
கண்டி மடவெல பிரதேசத்தில் அமைந்துள்ள மதினா பாடசாலைக்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று இன்றுகாலை விபத்துக்குள்ளானதில் பதினொருபேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்டி மடவெல மதினா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஓடையொன்றுக்குள் விழுந்தே குறித்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதாக மடவெல பொலீசார் தெரிவித்துள்ளனர்.
பொலநறுவையில் புதையல் தோண்டிய ஏழுபேர் கைது, உபகரணங்கள் மீட்பு-
பொலநறுவை சோமாவதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். [...]

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)

நிந்தவூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடற்கன்னி நல்லடக்கம்-
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இறந்த நிலையில் கடற்கன்னியொன்று கரையொதுங்கியுள்ளது. நேற்றையதினம் கரையொதுங்கிய இக்கடற் கன்னியில் மனித முகமும் மீனின் வாலும் காணப்பட்டதாகவும், இந்த கடற்கன்னியை மக்கள் பார்வையிட்டபின் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்பு-
முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும், கிளைமோர் குண்டுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்து. இவற்றில் ஆர்.சி.எல், [...]