பிள்ளையானைப் போன்று பிரபாகரன் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் -அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் விருப்பம் இது..
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீலிக்ஸ் பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விஷேட வர்த்தக பண்டமாற்று சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இவர் இதுதொடர்பாக மேலும் கூறியதாவது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் புலிகளுடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அவர் இப்போது அப்போராட்டத்தை கைவிட்டு தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகியுள்ளார். அதேபோல் [...]
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் எம்பி ஒருவரின் மடியில் மீது மற்றைய எம்பி ஏறி இருப்பதா? (இது எப்படியிருக்கு?)
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் எம்பிக்கள் இருவருக்கும் நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா? அங்கு ஒரு எம்பியின் மடியில் இன்னொரு எம்பி ஏறி இருக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லா எம்பிக்களுக்கும் ஆளுக்கொரு கதிரை கொடுக்கப் பட்டிருக்கிறது ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் இரு எம்பிக்களுக்கு மாத்திரம் பொதுவாக ஒருகதிரை போடப்பட்டிருந்ததாம் அதனால் இருவரும் ஒருவரின் மடியில் இன்னொருவர் ஏறி உட்காருவதா? என்று சபாநாயகரிடம் கேட்டிருக்கின்றனர் (இருவரிலும் ஒருவர் ஆண் மற்றையவர் பெண் என்பது குறிப்பிடதக்கது) ஐக்கிய [...]
நாடாளுமன்ற விவகாரங்களில் பொலிஸார் தலையிடுகின்றனராம் -ஐ.தே.கட்சி சபையில் சிறப்புரிமை பிரச்சினை
ஐக்கிய தேசிய கட்சி எம்பி பாலித ரங்கே பண்டார கிழக்கில் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றுமுன்தினம் ஆற்றிய உரையின் முழு விவரங்களையும் நாடாளுமன்றப் பொலிஸார் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று சபாநாயகருக்கு முறைப்பா செய்தார் இந்த விடயத்தில் நாடாளுமன்ற பொலிஸார் தலைமையின் மூலம் பாலித ரங்க பண்டாரவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்றும் இதுதொடர்பாக சாபநாயகர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் [...]
அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள் (பகுதி-4)
***கண்டி மல்வத்தை பீட மாகாநாயக்க திப்பட்டுவாவே சிறீசுமங்கள தேரரின் தலைமையிலான குழுவின் வடக்குவிஜயம் பாதுகாப்பு காரணங்களால் இரத்துச் செய்யப் பட்டுள்ளதாக சிறீ தலதா மாளிகையின் தியவதன நிலமே திலங்க தேல பண்டார தெரிவித்துள்ளார்.
****மன்னார் முன்னரங்கில் நேற்றுக்காலை 8.40மணியளவில் இடம்பெற்ற வெடி விபத்தொன்றில் இரு படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.
****வவுனியா பாண்டியன்குளத்தில் நேற்றுக்காலை 8மணி அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில ஒன்பதுபேர் காயமடைந்துள்ளனர். இதன்போது படைவீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
****வவுனியா நாவற்குளத்தில் நேற்று முற்பகல் 11அளவில் புலிகளுக்கும் [...]
அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள் (பகுதி-3)
வெலிஓயா கிரிபன்வௌ பிரதேசத்தில் நேற்றுக்காலை 8அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது புலிகள் தரப்பினில் எண்மர் காயமடைந்துள்ளனர். இதன்போது புலிகளின் பதினைந்து பதுங்கு குழிகள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. படையினர் அங்கு தேடுதல் நடத்தியதில் ரி56 ரவைகள் 3200, தொலைத்தொடர்பு கருவி 01, ஹெல்மெட் 01, சப்பாத்து 01சோடி, புலி சீருடை 04, டோர்ச் லைட் பற்றரிகளுடன் 12, மிதிவெடி 338 என்பவற்றை மீட்டுள்ளனர்.
வெலிஓயா கிரிபன்வௌ பகுதியில் நேற்றுமுற்பகல் 11.25அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் [...]
வவுனிக்குளம் மோதலில் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் 2வது தலைவரான பல்லவன் உட்பட புலிகளின் பொறுப்பாளர்கள் உயிரிழப்பு
இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் 2வது தலைவரான பல்லவன் என்பவரும், புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவருமான அன்பு என்பவரும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகின்றது. முல்லைத்தீவு வவுனிக்குளம் வடக்கில் இராணுவத்தினரால் நேற்றிரவு நடத்தப்பட்ட பாரிய தாக்குதல்களின்போதே இவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் மேலும் 32புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்தள்ளது. நேற்றுக்காலை வவுனிக்குளம் வடக்கினை இராணுவத்தினர் புலிகளிடமிருந்து கைப்பற்றியது தெரிந்ததே. ஆயினும் அப்பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் புலிகள் மேற்கொண்ட [...]
சிலாவத்தையில் புலிகளின் மூன்று அதிவேக தாக்குதல் படகுகள் மூழ்கடிப்பு
முல்லைத்தீவுக்கு தெற்கே இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சிலாவத்தை கடற்பரப்பை நோக்கி நேற்று மாலை 6.30மணியவில் வந்து கொண்டிருந்த புலிகளின் தாக்குதல் படகுகள்மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின்போது புலிகள் 03 தாக்குதல் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும், சில படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சிலாவத்தை கடற்கரையை நோக்கி நேற்று மாலை புலிகளின் 10படகுகள் வந்து கொண்டிருந்ததை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து பின்னர் அவற்றின்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் [...]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை பிரபல ஹிந்தி நட்சத்திரம் ஷாருக்கான் நிராகரித்து உள்ளார்
15வது சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை பொலிவூட்டின் பிரபல ஹிந்தி நட்சத்திரம் ஷாருக்கான் நிராகரித்துள்ளார். இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக தாம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதென ஷாருக்கான் அறிவித்துள்ளார். ஷாருக்கானைக் குறித்த கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ள வைப்பதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியையும் சார்க் கலாச்சார நிகழ்வு ஏற்பாட்டுக்குழு நாடியிருந்ததாக தெரிவிக்கப் படுகிறது. மேலும் ஜனாதிபதியின் இணைப்பதிகாரி சஜித் வாஸ் குணவர்தன சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளை [...]
கிளிநொச்சி மாவட்டச் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும், பூநகரி பிரதேசத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் படுகொலை
கிளிநொச்சி மாவட்டச் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும், பூநகரி பிரதேசத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான மதன் என்கிற சாந்தலிங்கம் விமலகுமார் வயது 34, வன்னியில் இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாங்குளம் ஏ9 பாதையில் இன்று காலை 6.15க்கு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த விமலகுமார் இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு வவுனியா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள் (பகுதி-2)
வெலிஓயா ஜனகபுர வடக்கில் நேற்றுமாலை 4.30அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது படைத்தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து கம்பிகள் மூலம் தலைமன்னாருக்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்று தெரிவித்துள்ளார்.
வெலிஓயா ஜனகபுர வடக்கில் நேற்றுமுற்பகல் 1030முதல் மாலை 4மணிவரை புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற இரண்டு மோதல் சம்பவத்தின் போது புலிகள் தரப்பினில் நால்வர் கொல்லப்பட்டதுடன் பத்துப் புலிகள் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு அரியமாங்கேணி பகுதியில் நேற்று பிற்பகல் 3.30அளவில் படையினர் [...]
சார்க் பிராந்திய நாடுகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்
சார்க் பிராந்திய நாடுகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகளில் உள்ள வளங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பவற்றை ஒன்றிணைத்து உணவு உற்பத்தியை அதிகரித்தல், உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் தொழில் நுட்பத்தைப் பெற்றுக் கொள்ளல், சார்க் நாடுகளுக்கிடையே தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சார்க் நாடுகளுக்கிடையே மேலதிகமான உணவுகளை சேமித்து வைத்துக் கொள்ளுதல் என்பன இத்திட்டத்திற்கான நோக்கங்களாகும். அண்மையில் [...]
யாழ்ப்பாண குடா நாட்டுக்கான பொருட்களை கொண்டு செல்வதில் அனைத்து வர்த்தகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடு
யாழ்ப்பாண குடாநாட்டுக்கான பொருட்களை கொண்டு செல்வதில் அனைத்து வர்த்தகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்லும் வர்த்தகர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் எதிர்காலத்தில் அரச கப்பல்களில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வர்த்தகர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களின் விபரங்களையும் கப்பலில் தங்களுக்கு தேவையான இட அளவையும் முன்கூட்டியே எழுத்து மூலமாக யாழ். [...]
சாய்ந்தமருது, மாளிகைக் காட்டில் சுகாதார சீர்கேடு
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசங்களில் அமைந்திருக்கும் பாலங்களுக்கு அருகாமையில் குப்பைகளும், மிருகக் கழிவுகளும் கொட்டப்படுவதனால் பொதுமக்கள் பாரிய சுகாதாரப் பிரச்சினைக்கு உள்ளாகி வருகின்றனர். குப்பை கூழங்கள் கொட்டப்படுவதனால் நீர் நிலைகள் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்புகளின்; பெருக்கமும் அதிகரித்துள்ளன. குப்பை கூழங்கள் நாளடைவில் பாலங்களுக்குக் கீழ் சென்று நீரோட்டத்தை தடை செய்வதால் மழைக் காலங்களில் நீர்வடிந்தோட முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக குப்பை, கூழங்களை பொது இடங்களில் போட வேண்டாமென்று பலமுறை பிரதேச [...]
எண்ணெய் அகழ்வு தொடர்பான டென்டர் கோரல் அமைச்சரவையிலும் சட்ட மா அதிபரினதும் அனுமதியுடனேயே மேற்கொள்ளப் பட்டுள்ளது-அமைச்சர் பௌசி விளக்கம்
எண்ணெய் அகழ்வு தொடர்பான டென்டர் கோரல் அமைச்சரவையிலும் சட்ட மா அதிபரினதும் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படின் இது தொடர்பான விபரங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தவும் தயாரென அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று விமல் வீரவன்ச எம்.பி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேற்படி டென்டர் கோரல் இன்டர்நெட் மூலமும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச எம்.பி தமது கேள்வியில், எண்ணெய் அகழ்வு தொடர்பான [...]
அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள் (பகுதி-1)
மன்னார் வண்ணாங்குளம் பகுதியில் புலிகளுக்கும் படையினருக்குமிடையிலான மோதலைத் தொடர்ந்து நேற்றிரவு படையினர் நடத்திய சோதனையின்போது புலிகளின் 33 சடலங்களை மீட்டுள்ளனர். அத்துடன் பெருந்தொகையான ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் இதன்போது படையினர் மீட்டுள்ளனர்.
வெலிஓயா ஜனகபுர வடக்கில் நேற்றுக்காலை 9.45முதல் முற்பகல் 10.55வரை புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற இரண்டு மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது படைவீரர் ஒருவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வெள்ளைவேன் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தற்காப்பு கருதி பொதுமக்கள் தாக்குதல் நடத்தலாம். [...]
காணாமற் போன மீனவர்களைத் தேடும் பணிகளில் பாதுகாப்புத் தரப்பினர்
நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று முன்தினம் வீசிய கடும் காற்று காரணமாக காணாமற் போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கடும் காற்றினால் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்த பன்னிரண்டு மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து காணாமற் போனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கடலில் கொந்தளிப்பு நிலை [...]
சிறுவர் துஸ்பிரயோ கங்களைக் கண்டித்து கல்முனையில் ஊர்வலம்
சிறுவர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற துஸ்பிரயோக செயற்பாடுகளை கண்டித்து அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சமாதான பாலர் படாசலைகள் இணைந்து நடாத்திய சிறுவர் துஸ்பிரயோக எதிர்ப்பு ஊர்வலமும், வீதி நாடகமும் நற்பிட்டிமுனைக் கிராமத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வல, வீதி நாடகத்தில் நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு முஸ்லிம், தமிழ் கிராமங்களில் இயங்கும் சமாதான பாலர் பாடசாலைகளை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மாணவ சிறார்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர். நற்பிட்டிமுனை பிரதான வீதியில் உள்ள சட்டம்பியார் வீதி சந்தியில் [...]
இந்தியாவிலிருந்து படகில் வந்த எட்டு பொதுமக்கள் கடற்படையினரால் கைது
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி படகு மூலம் வந்து கொண்டிருந்த எட்டு இலங்கை பொதுமக்கள் தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வவுனியா மற்றும் மன்னார்ப் பகுதிகளைச் சேர்ந்த இவர்களில் நான்கு ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவதாகவும், மோதல்கள் காரணமாக இவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் கடல் மார்க்கமாக இந்தியா சென்றிருந்ததாகவும், இந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. மன்னார் பகுதியை படையினர் தற்போது கைப்பற்றியுள்ள நிலையில் இப்பகுதியிலிருந்த புலிகளுக்குப் பயந்து சென்ற [...]
கல்முனை தமிழப்பிரிவு சமுhத்தி மகாசங்கத்தில் 23லட்சரூபாய் நிதிமோசடி அம்பலம், அதிகாரி தலைமறைவு
அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி மகா சங்கத்தில் இருபத்திரண்டு இலட்சத்து அறுபத்தையாயிரத்து தொலாயிரம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சமுர்த்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு பணிப்பாளர் எம்.நடேசராசா தெரிவித்துள்ளார். இம்மகா சங்கத்தின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரே இம்மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த உத்தியோகத்தர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இவ்வருடம் இம்மாதம் வரை இம்மோசடியில் ஈழுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்முனை தமிழ் [...]
நீர்கொழும்பில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை
கடந்த 22ம் திகதி நீர்கொழும்பு கடற்பரப்பில் வீசிய கடும் காற்றினால் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற் போயுள்ளனர். காணாமற் போன மீனவர்களை கண்டு பிடிப்பதற்காக கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலுக்கு சென்ற ஐந்து மீன்பிடிப் படகுகள் எவருமின்றி மறுநாள் காலையில் நீர்கொழும்பு, கம்மல்துறை மற்றும் குடாப்பாடு ஆகிய கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளன. இதனால நீர்கொழும்பு பிரதேச மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தேடுதல்கள் தொடர்கின்றன.
புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தின் மீது தனக்கு நம்பிக்கையில்லை-ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ்
புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும் புலிகளின் வரலாற்றில் இதுபோன்ற யுத்தநிறுத்தங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு வருவதும் இராணுவ ரீதியிலான தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக சாதகமாக அக்கால கட்டத்தைப் புலிகள் பயன்படுத்தி வருவதும் யாவரும் நன்கறிந்த விடயமாகுமென்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் கடந்த 22ம் திகதி அமைச்சர் டக்ளசை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர். அமைச்சர் டக்ளஸ் [...]
சார்க் மாநாட்டை முன்னிட்டு முப்படையினருடன் 12ஆயிரம் பொலீசார் பாதுகாப்புக் கடமையில்
கொழும்பில் நடைபெறவுள்ள 15வது சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்றுத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென முப்படையினருக்கு மேலதிகமாக 12ஆயிரம் பொலீசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டை முன்னிட்டு நான்கு முக்கிய பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 15வது சார்க் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறுவதை முன்னிட்டு [...]
புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் விமானத் தாக்குதலை நிறுத்தம் எண்ணம் கிடையாது- ஊடகத்துறை அமைச்சர்
புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் விமானத் தாக்குதலை நிறுத்தம் எண்ணம் கிடையாது என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் வகையில் விமானத் தாக்குதல்களை நிறுத்தப் போவதாக பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளதாக அறிகிறோம். இதில் உண்மை உள்ளனவா என செய்தியாளர் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கில் புலிகளின் இலக்குகளை நன்கு கண்டறிந்த பின்னரேயே தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. படையினர் தமது மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாக புலிகளின் தளங்களை [...]
இராஜாங்கனை குண்டுவீச்சில் ஒருவர் படுகாயங்களுடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இராஜாங்கனை பதினோராம் வட்டாரத்தில் வீடொன்றில் நேற்று முன்தினம் அதிகாலை 430மணியளவில் வீசப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் படுமோசமாக காயங்களுக்கு உட்பட்ட இருபத்தாறு வயதுடைய வாலிபர் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் ஜன்னல் ஊடாக கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இராணுவத்தை விட்டு தப்பியோடியவர் என்று குறிப்பிடும் நபர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையை உடனடியாக மறுசீரமைப்பது மிக அவசியம்-பிரதமர் ரத்ணசிறி விக்கிரமநாயக்க
வன்முறைகளுக்கு துணைபுரியக் கூடிய தற்போதைய தேர்தல் முறைமையை உடனடியாக மறுசீரமைப்பது மிக அவசியமென பிரதமர் ரத்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று தெரிவித்துள்ளார். அதேநேரம் விருப்பு வாக்கு முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில், 2005ம் [...]
கொம்பனிவீதி குடியிருப்புக்களை அகற்றுவதற்கான தடையுத்தரவு நீடிப்பு
கொழும்பு கொம்பனிவீதி கிளென்னி ஒழுங்கை குடியிருப்புகளை அகற்றுவதற்கான தடையுத்தரவை உயர் நீதிமன்றம் எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் நீடித்துள்ளது. தமது குடியிருப்புக்கள் அகற்றப்படுவதை எதிர்த்து கொம்பனிவீதி மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை மீண்டும் நேற்று நடைபெற்றபோதே உயர்நீதிமன்றம் தடையுத்தரவை நீடித்துள்ளது. நீதிமன்ற உத்தரவையும் மீறி மேற்படி குடியிருப்பில் 46வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்குள்ள குடியிருப்புக்களை தகர்க்க வேண்டாமென ஏற்கனவே கடந்த 19ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கெதிராக பொலீசாரும் [...]
மகனை இடைப்பட்டியால் அடித்து கொடுமைப் படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்
தனது எட்டு வயது மகனை இடைப் பட்டியால் அடித்து கொடுமைப்படுத்திய ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலி மிலிதுவை என்ற இடத்தைச் சேர்ந்த முகமது உசைன் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது சட்டைப் பையிலிருந்த இருபது ரூபாவை மகன் தன்னைக் கேளாமல் எடுத்தார் என்ற காரணத்தினால் இவர் தனது மகனை இடைப்பட்டியால் கடுமையாக அடித்து காயப்படுத்தியுள்ளார். குறித்த நபர் மகனை அடித்துக் கொடுமைப்படுத்துவதை அவதானித்த அயலவர்கள் தொலைபேசிமூலம் காலி பொலீஸ் நிலையத்திற்கு [...]
தோசம் நீங்க யானையின் கீழ் புகுந்த யுவதி சிக்கினார்
யானையின் கீழ் புகுந்து வந்தால் தன்னைப் பிடித்துள்ள தோசம் நீங்குமென நம்பிய யுவதியொருவர் யானையின்கீழ் புகுந்து வர முயன்ற வேளையில் அது கலவரமடைந்து வெகுண்டடித்ததில் யுவதி யானையின் வயிற்றின்கீழ் சிக்கித் திணறிய சம்பவம் கண்டி நாகதேவாலய வளவில் இடம்பெற்றுள்ளது. தோசம் பிடித்தால் அதிலிருந்து விடுபட யானையின் வயிற்றின் கீழ் பக்கமாக நுழைந்து மறுபுறமாக வந்தால் அது நீங்குமென்ற நம்பிக்கை சிலரிடையே இருந்து வருகிறது. இதற்கு ஏற்பவே யுவதியும் இவ்வாறு நுழைய முற்பட்டு யானையின் வயிற்றின் கீழ் சிக்கியுள்ளார். [...]
சார்க் மாநாட்டின் போது இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது -இராணுவத் தளபதி
சார்க் மாநாடு காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாதென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டுக் பாதுகாப்புக் கடமைகளுக்காக வடக்கிலிருந்து எந்தவொரு படையணியும் கொழும்பிற்கு அழைக்கப்பட மாட்டாதென அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில் தற்போது நிலை கொண்டுள்ள படையினர் சார்க் மாநாட்டுப் பாதுகாப்பு கடமைகளை மெற்கொள்வர் என அவர் தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் போது இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக் கடமைகளை இந்தியப்படையினர் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனவும் பிரதேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை படையினர் [...]
காலியில் கனிஸ்ட பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் இரு மாணவிகளை வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு விளக்கமறியல்
காலி மாவட்டம் யக்கலமுல்லையிலுள்ள கனிஸ்ட பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் இரு மாணவிகளை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்த பொலீசார் அந்த இளைஞனை பத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பத்து மற்றும் பதினொரு வயதுகளையுடைய இரு மாணவிகள் காட்டு வழியாக பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த சமயம் குறித்த இளைஞர் அவர்களுக்கு ரம்புட்டான் பழமும், பணமும் கொடுத்து காட்டிற்குள் அழைத்துச் சென்று இருவர்மீதும் குற்றம் புரிந்துள்ளார். இதன்பின் [...]
அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள்… (பகுதி-5)
வவுனியா புதுக்குளத்தில் நேற்றுபிற்பகல் 2மணியளவில் மிதிவெடியில் சிக்கி படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா கரமேட்டுவேம்பு பகுதியில் நேற்றுப்பகல் 12அளவில் மிதிவெடியில் சிக்கி படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழ் கோப்பாயில் நேற்றுபிற்பகல் 1.00மணி அளவில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா முன்னரங்கில் நேற்றும் இன்றும் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் ஒன்பதுபேர் பலியானதுடன் பதினொருபேர் காயமடைந்துள்ளனர். புலிகளின் பங்கரொன்றும் இதன்போது அழிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் பதவியேற்றது முதல் 22காவல்துறை அதிகாரிகள் கிழக்கில் பலி
கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்றது முதல் 22 காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கபண்டார குறிப்பிட்டுள்ளார். மேலும் 19காவல் துறை உத்தியோகத்தர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பிரதிக் காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இதனை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காவல்துறையினரின் [...]
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறைக்கைதி கடத்தல்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் 23ம் வாட்டில் அனுமதிக்கப்பட்டு பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை கூரிய ஆயுதங்களுடன் வார்ட்டுக்கு நுழைந்த மூவர் இன்று பிற்பகல் 1.30அளவில் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த அதிகாரியை தாக்கி காயப்படுத்தி விட்டே மேற்படி கைதியைக் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. கைதியைக் கடத்தியவர்களை பின்தொடர்ந்த காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து மருதானை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிறைக் கைதிகளுக்கு இடையில் அண்மையில் [...]
முல்லைத்தீவில் விமானத் தாக்குதல்
முல்லைத்தீவு துணுக்காய் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விடுதலைபுலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமான படையினர் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விமானத்தாக்குதல்கள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் இடத்தின் மீது நடத்தப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெர்வித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது
பிரான்சில் துப்பாக்கி சூடு! இலங்கை தமிழ் இளைஞர் ஆபத்தான நிலையில்.. ஈரோஸ் குகன் தலைமறைவு!!
பிரான்ஸின் புறநகர் பகுதியான சார்ஷல் எனுமிடத்தில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த தாஸ் எனப்படும் தமிழ் இளைஞர் ஒருத்தர் வயித்தில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.. மேற்படி பிரதேசத்தில் உள்ள பூங்காவொன்றில் மதுபானம் அருந்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவர்களிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்ததாகவும் அதைத் தொடர்ந்து பலராலும் ஈரோஸ் குகன் என அறியப்பட்ட [...]
அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள்… (பகுதி-4)
வெலிஓயா ஜனகபுர வடக்கில் நேற்றுக்காலை 7.30முதல் பிற்பகல் 4.30வரைபுலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் நால்வர் பலியாகியுள்ளனர். இதன்போது புலிகளின் ஆறு பங்கர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
வெலிஓயா ஆனைவிழுந்தகுளம் பகுதியில் நேற்றுப்பகல் 12.15அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் புங்கண்டல்மடு பகுதியில் நேற்றுமாலை 3.15அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் ஒருவர் பலியாகியுள்ளார்.
வெலிஓயா ஜனகபுர வடக்கில் நேற்றுபிற்பகல் 1.40அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது [...]
வவுனிக்குளம் படையினரிடம் வீழ்ச்சி கண்டுள்ளது, நிலைகளை பலப்படுத்தும் படையினர்..
இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள இராணுவத்தினர் இன்று காலை தொடங்கி மதியம் வரை மேற்கொண்ட படை நடவடிக்கையின் போது வவுனிக்குளம் அணையை கைப்பற்றி இருப்பதாகவும் தற்போது நிலைகளை பலப்படுத்தி வருவதாகவும் இராணுவ வட்டாரங்களின் செய்திகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்போது மேற்படி பகுதியிலிருந்து கனரக ஆயுதங்கள் 03, 120மி.மீற்றர் ரக மோட்டார் 01, நவீனரக ஆயுதங்கள் என்பவற்றையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது புலிகள் தரப்பில் 25ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், புலிகளின் ஏழு உடலங்களை தாம் கைப்பற்றியிருப்பதாக [...]
நாவலப்பிட்டியில் சார்க் நட்புறவுக் கிராமம்
கொழும்பில் நடைபெறவுள்ள 15வத சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு கண்டி நாவலப்பிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் சார்க் நட்புறவு கிராமம் எதிர்வரும் 27ம் திகதி வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுமென்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள மஹவிலவத்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கிராமத்தில் நு}று வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ர தலைமையில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள அங்குரார்ப்பண வைபவத்தில் ஜனாதிபதி [...]
அதிரடியின் இன்றைய செய்தித் துணுக்குகள்… (பகுதி-3)
வவுனியா இளமருதங்குளத்தில் நேற்றுப்பகல் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் ஒருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா நவ்வியில் நேற்றுமுற்பகல் 1.45முதல் பிற்பகல் 6.30வரை புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் நால்வர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். இதன்போது படைத்தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் புங்கண்டல்மடு பகுதியில் நேற்றுபிற்பகல் 2.45அளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது புலிகள் தரப்பினில் மூவர் பலியானதுடன் படைத்தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா நவ்வி பகுதியில் நேற்றுமாலை 6.30அளவில் புலிகளுக்கும் [...]
உடுவிலைச் சேர்ந்தவர் வெள்ளவத்தையில் கடத்தல்
யாழ்ப்பாணம் உடுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் மஸ்கன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு குழந்தையின் தந்தையுமான 29வயதான குமரகுருபரன் சேந்தன் என்ற இளம் குடும்பஸ்தர் சிவிலுடையில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போயிருப்பதாக வெள்ளவத்தைப் பொலீஸ் நிலையத்திலும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஸ்ணனிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு 7மணியளவில் வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் வைத்தே ஜீப்பில் வந்த இருவரால் இவர் அழைத்துச் செல்லப்பட்டாரென்று அவரது மனைவி தயாளினி தெரிவித்துள்ளார். இவ்விடயம் [...]