கழுதை(K) தேய்ந்து புலியானது(P).. (சிறுகவிதை)
கழுதை(K) தேய்ந்து புலியானது(P)
அண்ணனொடு திண்ணையும் காலியானது
தலைமை அந்தரத்தில் கேள்வியானது
புலிக்கூத்தோ தரங்கெட்டுக் கேலியானது
கமுதை தேய்ந்து எலியானது
சமயம்பார்த்து பொந்தினுள் தலைவனானது
எரியும்வீடு எலிக்கண்னுக்கு தாலியானது
புலிக்கூட்டம் எலிக்கு வேலியானது
எலியோ பயிர்மேயும் வேலியானது.
கண்மூடி பாலருந்த கலியானது
மலேசியாவில் எலிப்பொறிக்குப் பலியானது
பணந்திண்ணிக்கு தலையே வலியானது
பிணந்திண்ணிக்கு தலையே விதியானது.
–சிலாபத்தூரான்
பிரிவுகள் நிரந்தரமில்லை.. (சிறுகதை)
அதிகாலை வழமைப் போல் கோழிகூவ பால்காரன் சூரியஉதயம் இவற்றோடு இன்றும் எழுகிறாள் கீதா இன்று ஞாயிறு விடுமுறை என்றாலும் கூட பழக்க தோஷம் விடிவதற்குள் எழுவதும் சட்புட்டென்று காலைக்கடமைகள் அத்தனையும் முடித்து டீ கோப்பையோடு ஹாலில் அமர்ந்தாள். கீதா பேருக்கேற்ற அழகு அதிக அறிவு. தனியார் கம்பனி ஒன்றில் உதவி முகாமையாளராக மாதம் 25-30 சம்பளம் எல்லாம் அமைந்திருக்க வயது முப்பதையும் தாண்டி செல்கிறது வரன் பார்க்காத இடமில்லை பார்த்தால் என்ன பார்க்கா விட்டால் என்ன இவளுக்கு [...]
“அக்காளும்… நானும்…” (சிறுகதை பாகம்-1 & பாகம்-2)
மேற்படி சிறுகதையின் இரண்டாவது (இறுதி) பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்மா எங்கு சென்றாலும் என்னைதான் கூட்டிச்செல்வாள், அக்காளை வீட்டில் இருக்கும்படி சொல்லி விடுவாள். அவள் யன்னலின் ஓர் ஓரத்தில் நின்று நாம் இருவரும் போய் மறையும்வரை பார்துக் கொண்டு நிற்பாள். அக்காவை பார்ப்பதற்கே எனக்கு பாவமாக இருக்கும். நான் அம்மாவிடம் பலமுறை ஏன் அக்காளையும் நம்முடன் அழைத்து போவதில்லை? எனகேட்பேன். அவள் பெரிய மனுசியாக விட்டாள் என்பாள் எனக்குத்தான் ஒன்றும் புரிவதில்லை. அம்மா எப்பொழுதுமே வெள்ளை புடவை [...]
ஊர்மிளா… நாம் ஓடிவிடலாமா…? (சிறுகதை)
ஊர்மிளா உனது வீட்டில் பேசி விட்டாயா? நான் சொன்னதை நீ பாடமாக்கி எழுதி உன் தங்கையிடம் கொடுத்து இதை உனது அப்பா, அம்மாவிடம் கொடுக்கும்படி கொடுத்து விட்டு, நாளை நீ பள்ளி செல்லும் போது என்னுடன் ஓடி வந்துவிடு. நாம் வாழ்ந்து பார்போம் வாழ முடியாவிட்டால் வீழ்ந்து மடிவோம். வரம்புகள் நம்மை பிரித்து விட்டாலும் அதன் வாய்கால்களினால் நாம் ஓடி விடுவோம். என்ன? நான் சொல்வது உனக்கு விளங்குகின்றதா? ஏன் மௌனமாக இருக்கின்றாய்! என்னில் என்ன [...]
கவிதா என் இனியவள்… (சிறுகதை)
‘கவிதா..நீ என்னை விரும்புகிறாயா?
இல்லை சந்துரு,… நான் உன்னை விரும்பவில்லை. அதனால் தான் உன்னோடு இவ்வளவு நெருக்கமாக இருந்து கொண்டிருக்கறன்…! முட்டாள் தனமாக பேசாதே சந்துரு…
நாம காதலிக்க வெளிகிட்டு இரண்டு வருடமாச்சு, இன்னும் நீ என்னை இப்படியொரு கேள்வி கேட்டு தெலைக்கிறாயே?
‘ஐ ஆம் வெறி சொறி கவிதா…”
சொறி என்கிறாய் எங்க கடிக்குது என்று சொன்னால்தானே..? நான் சொறிவதற்கு..!
சரி தெரியாம சொல்லிவிட்டேன் மன்னித்துக்கோ.
அப்படி தமிழில் கதையுங்கோ,
ஆமா இவா பெரிய தமிழ் பண்டிதை எனக்கு சொல்லவாறா..?
நீங்க சொன்னாலும் சொல்லா விட்டாலும் நான் [...]
மாற்றான் தோட்டத்து மல்லிகை.. “அமுதா” எனக்குரியவள்… (சிறுகதை பாகம்- 2)
சைக்கிளை நிறுத்தி அவளை விடுவித்து நான் வாங்கிய மல்லிகை பூவை அவளின் கைகளில் தினித்தேன். ஏன் எனக்கு தருகிறீர்கள் கவிதாக்காவுக்கு வேண்டாமா..? என்றாள். இல்லை நீ வைத்துக்கோ அவளுக்கு நாளைக்கு வாங்கி கொடுக்கிறேன் என்றேன். அவள் அதைவாங்க மாட்டாள் என்றுதான் நினைத்தேன். வாங்கிகொண்டு, நன்றி எனச்சொல்லி.. வாஞ்சையுடன் ஓர் புன்னகையையும் உதிர்தாள். எனக்கு முன்னாலேயே தன் தலையில் அதை சூட்டியும் கொண்டாள். பிறகும் எனைப்பார்த்து ஓர் சிரிப்பொன்றை உதிர்தாள். என்மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் அத்தனையும் பட்டாம் பூச்சியாய் [...]
மாற்றான் தோட்டத்து மல்லிகை.. “அமுதா” எனக்குரியவள்… (சிறுகதை பாகம்- 1)
அமுதா……. ‘அவள் பெயரை உச்சரிக்கும் போதே மனதுக்குள் இனிக்கின்றது. குழிவிழும் கன்னங்கள், குண்டாய் அவள் மார்பகங்கள், குரலில் ஓர் இனிமை, நடக்கும் போது.., அவள் சிரிக்கும் போது…, அவள் கதைக்கும் போது அழகு, அழகு அவளின் ஒவ்வொரு அசைவுகளும் அற்புதமானவைகள்! வார்த்தைகளில் அவைகள் வர்ணிக்க முடியாதவைகள் இன்னும் நான் என்ன சொல்ல வேண்டும்? இ…
முதல் காதல் உள்ளத்தின் ஓர்மூலையில்… (சிறுகதை)
பருவம் எய்யாத பதினாறு வயதில்
பவானியுடன் பரீச்சியமானேன்.
அவள் எங்கள் வீட்டுக்கு பக்கத்து
வீட்டுக்கு பக்கத்து வீடுதான்.
நானும் அவளும் ஒரே பள்ளியில் தான்
படித்துக் கொண்டிருந்தோம்.
அதுவும் எனக்கு பக்கத்து வகுப்பில் தான்
அவள் படித்துக் கொண்டிருந்தாள்.
பாடசாலை போய் வரும் போதும் இருவரும்
ஒன்றாய்தான் சேர்ந்து சென்று போய் வருவோம்.
அவளின் உடை, நடை, பாவனை, சிரிப்பு, என எல்லாமே
என்னை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
ஒருவிடயத்தை தவிர்ந்து…..
அதாவது அவளுக்கும் எனது வயதாக இருந்தாலும்
அவள் என்னுடைய வகுப்பில் படிக்கவில்லை
காரணம் ஒருவகுப்பில் சித்தி அடையாமல் போய் விட்டாள்
படிப்பில் அவள் என்னைவிட குறைந்த தகுதியுடையவளாகவே
காணப்பட்டாள். [...]